Verified Web

முஸ்லிம் எம் பி க்கள் முற்றாக எதிர்க்க முன்வர வேண்டும்

2018-07-06 05:12:32 Administrator

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில்  மாகா­ணத்­தொ­குதி  எல்லை  நிர்­ணயம் தொடர்­பாக பரிந்­து­ரை­களை வழங்க ஜனா­தி­ப­தி­யினால்  நிய­மிக்­கப்­பட்ட  எல்லை  நிர்­ண­யக்­கு­ழுவின்  அறிக்கை இன்றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

எனினும் இந்த  அறிக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மான  பல அம்­சங்கள் உள்­ளதாலும் இதன் மூலம் முஸ்லிம்  பிர­தி­நி­தித்­து­வம் அரைவாசியாகக் குறைவடையும் என்பது தெட்டத் தெளிவாக நிரூபணமாகியுள்ளதாலும் இந்த அறிக்கையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஏகோபித்து நிராகரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய ஷூரா சபை '' புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையுமென அஞ்சுகிறோம். மேற்படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு தேசிய ஷூரா சபையினாலும் நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்களாலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன.  எனவே  அரசினால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் சட்டமூலங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவளிப்பது குறித்து கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மீள்பரிசீலனை செய்தல் வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், குறித்த அறிக்கையை சகலரும் முற்றாக நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளது. ''மாகாண  தொகுதி எல்லை நிர்­ண­யக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் சிதறி வாழும்  சிறு­பான்மை  சமூ­கத்­தி­ன­ருக்கு குறிப்­பாக  முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மான பல அம்­சங்கள்  உள்­ளன. முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம்  தற்­போ­தை­விட கணி­ச­மாகக் குறைந்­து­விடும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது'' என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை தாம் முற்றாக நிராகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை நாம் முறியடிப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று மாகாண சபை தேர்தலை புதிய முறையிலன்றி பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என தாம் இன்றைய தினம் பாராளுமன்றில் வலியுறுத்தவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிய முறையில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தரப்புகளால் எதிர்க்கப்படும் இந்த மாகாண தொகுதி நிர்ணய அறிக்கையை சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகோபித்து நிராகரிக்க முன்வர வேண்டும். முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு முஸ்லிம் எம்.பி.க்களும் இதுவிடயத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்துக்கு சாவுமணியடிக்கும் இந்த அறிக்கை மற்றும் புதிய தேர்தல் முறைக்கு ஆதரவளிப்பது எமது எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்குவதற்கான ஆரம்பப்படி என்பதை முஸ்லிம்கள் எம்.பி.க்கள் சகலரும் உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli