Verified Web

விஜயகலாவின் பேச்சும் தெற்கின் புலிப் பீதியும்

2018-07-06 04:39:09 SNM.Suhail

எஸ்.என்.எம்.ஸுஹைல்

பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­துக்­கட்­டிய தென்­னி­லங்­கைக்கு இன்னும் புலிப்­பீதி ஒழி­ய­வில்லை என்­பதை விஜ­ய­கலா நிகழ்த்­திய உரையின் பின்­ன­ரான அதிர்­வ­லைகள் மூலம் தெரி­ய­வந்­தது. என்­றாலும், குறித்த அதிர்­வ­லை­யா­னது திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மீதான நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை சுமத்­தி­யி­ருக்கும் குற்­றச்­சாட்டை மறைப்­ப­தற்­காக மஹிந்த சார்­பானோர் கடு­மை­யாக நடந்­து­கொண்­ட­தா­கவும் ஐ.தே.க.வினர் தமது வாக்கு வங்­கியைப் பாது­காத்­துக்­கொள்ள நாட்­டுப்­பற்றை வெளிக்­காட்­டவே இவ்­வாறு உணர்ச்­சி­வ­சப்­பட்டு செயற்­பட்­டனர் என்றும் குற்­றச்­சாட்­டு­களும் இல்­லா­ம­லில்லை.

எது எப்­ப­டியோ விஜ­ய­க­லாவின் உரையில் பாஸி­ஸ­வா­திகள் மீண்டும் உரு­வெ­டுக்க வேண்­டு­மென்று அவர் கூறி­யதை வன்­மை­யாகக் கண்­டிக்க வேண்டும். அத்­தோடு அவர் அவ்­வாறு கூறு­ம­ள­விற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு மோச­மான நிலைக்கு திரும்­பி­யி­ருக்­கி­றது என்­ப­தையும் புரிந்­து­கொண்­டே­யாக வேண்டும்.

விஜ­ய­கலா அப்­படி என்ன பேசினார்

மகளிர் விவ­காரம் மற்றும் சிறுவர் அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அப்­படி என்­னதான் பேசினார் என்று இனி பார்ப்போம்.

கடந்த திங்­கட்­கி­ழமை யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற மக்கள் நட­மாடும் சேவை நிகழ்­வின்­போது, ''நாம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திக­திக்கு முதல் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் காலத்தில் எப்­படி வாழ்ந்தோம் என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் உணர்­வு­பூர்­வ­மாக உணர்­கின்றோம். உண்­மை­யி­லேயே இன்­றைய நிலையில் நாம் உயி­ருடன் வாழ வேண்­டு­மானால் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும். பாட­சா­லைக்கு செல்லும் எமது பிள்­ளைகள் மீண்டும் வீடு திரும்ப வேண்­டு­மானால் வடக்கு, கிழக்கில் புலி­களின் கை ஓங்க வேண்டும் என்று நாம் எண்ணும் நிலை உரு­வா­கி­யுள்­ளது'' என்றார். இந்த வச­னங்­களே கடந்த இரண்டு நாட்­க­ளாக தெற்கில் புலிப்­பீதி ஏற்­படக் கார­ண­மா­யிற்று.

தொடர்ந்தும் விஜ­ய­கலா தனது குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கிக்­கொண்டு செல்­கிறார்.

எமது இளைஞர், யுவ­திகள் வேலை வாய்ப்­பின்றிப் போராடி வரு­கின்­றனர். வேலை­வாய்ப்­புக்கள் இன்­மையால் மது­போ­தைக்கு இளை­ஞர்கள் அடிமை­யாகி வரு­கின்­றனர். 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அன்­றைய அர­சாங்­கமே போதைப் பொருள் பாவ­னையை வடக்கு, கிழக்கில் அமுல்­ப­டுத்­தி­யது. அர­சி­யல்­வா­தி­களின் வாக­னங்­களின் ஊடா­கவே போதை­வஸ்து விநி­யோ­கிக்­கப்­பட்­டது. போதை­வஸ்தின் ஆதிக்­கத்­தினால் இன்று சீர்­கே­டுகள் இடம்­பெ­று­கின்­றன.

ஜனா­தி­பதி மீதான குற்­றச்­சாட்டு

முன்­னைய காலத்தில் எமது பெண்கள் கையேந்­திய வர­லா­றுகள் இல்லை. 12,500 போரா­ளி­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி நிரா­க­ரித்­துள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதற்­கான காரணம் என்ன? முன்னாள் போரா­ளிகள் மனி­தர்கள் இல்­லையா? இந்த பத்­தி­ரத்தை ஏன் நிரா­க­ரிக்க வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் தலையால் நடந்து ஜனா­தி­ப­தியை பத­விக்கு கொண்­டு­வந்தோம். ஆனால், இன்று அன்­றைய தேர்­தலில் அவ­ருக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­களை ஜனா­தி­பதி அமைச்­சர்­க­ளாக நிய­மித்­துள்ளார். இத­னைத்தான் அவர் வடக்கு மக்­க­ளுக்கு செய்­தி­ருக்­கின்றார். இதனை சொல்­லவே வெட்­க­மாக இருக்­கின்­றது என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தெற்கின் அதிர்­வலை

கடந்த திங்­க­ளன்று இரவு விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரையின் எழுத்து வடி­வமும் ஒளி, ஒலி வடி­வமும் தெற்கில் தீவி­ர­மாகப் பர­வி­யது. இத­னை­ய­டுத்து சிங்­கள தீவி­ர­வா­த­போக்­கு­டைய அமைப்­பு­களும் அர­சி­யல்­வா­தி­களும் இதனை தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு ஆடத்­தொ­டங்­கினர். விஜ­ய­க­லாவின் கருத்­துகள் மேலும் மெரு­கூட்­டப்­பட்டு விஷமப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

''ஓவர் நைட்டில் ஒபா­மாவை ஓவர்டேக் பண்­ணிட்ட அக்கா'' எனும் அள­வுக்கு ஒரு இர­வி­லேயே விஜ­ய­கலா நாட்டில் பிர­ப­ல­ம­டைந்­து­விட்டார். சம­கா­லத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் குற்­றச்­சாட்­டுக்கு மஹிந்த அதி­ருப்தி வெளி­யிட்­டி­ருந்­த­மைக்கு அப்­பத்­தி­ரிகை பதில் வழங்­கி­யி­ருந்­தது. இவ்­வி­டயம் விஜ­ய­க­லாவின் புலி விஸ்­வ­ரூப கதையால் மங்­கிப்­போ­னது.

கைது­செய்யக் கோரிக்கை

இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன்  தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் அவரை உட­ன­டி­யாகக் கைது செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கடந்த செவ்­வா­யன்று இரு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அலு­வ­ல­கத்தில்  இவ்­விரு முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டன. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய மற்றும் சட்­டத்­த­ர­ணி­களை உள்­ள­டக்­கிய உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு என்­பன இவ்­வாறு முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தன. அத்­தோடு பொது­பல சேனா அமைப்பு உள்­ளிட்ட கடும்­போக்கு அமைப்­பு­களும் கடந்த ­கா­லங்­களில் இன­வாதக் கருத்­து­களை முன்­வைத்த சில அர­சி­யல்­வா­திகள் பலரும் அதி­ருப்தி வெளி­யிட்­டி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்று அதிர்ந்­தது

மறுநாள் செவ்­வா­யன்று பாரா­ளு­மன்ற தொடர் ஆரம்­ப­மா­னது.

சம்­பி­ர­தாய நிகழ்­வு­க­ளை­ய­டுத்து பாரா­ளு­மன்ற கேள்வி நேரம் ஆரம்­ப­மா­னது. இதன்­போது கல்வி அமைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பிக்­கொண்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார், இறு­தி­யாக மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் உரு­வாக்க வேண்டும் என்ற கருத்­தினை முன்­வைத்­ததை இந்த அர­சாங்கம் தனது கருத்­தாக கூறு­கின்­றதா? அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடா என்­பதை கூற வேண்டும் என கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் அகில, இந்தக் கருத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் கருத்து அல்ல. அர­சாங்­கத்தின் கருத்­து­மல்ல. இந்தக் கருத்து குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­கவும் அர­சாங்­க­மா­கவும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். எனினும் அவர் இருந்த மன­நி­லையில் அவ்­வா­றான ஒரு வார்த்­தையை வெளி­யிட்­டுள்ளார் எனக் குறிப்­பிட்டார். இதே­போன்று தான் ஏனையோர் ஹிட்லர் போன்ற ஒருவர் வேண்டும் என்றும் விஜ­ய­கலா பிர­பா­கரன் வேண்டும் என கூறு­கின்றார், அனைத்தும் ஒரு வித­மான கருத்­தா­கவே உள்­ளது எனக் குறிப்­பிட்டனர்.

இதனை சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்ட கூட்டு எதி­ர­ணி­யினர் அடுத்­த­டுத்து ஒழுங்குப் பிரச்­சி­னையை கிளப்பி தமது வீர­வ­ச­னங்­களை கட்­ட­விழ்த்­து­விட்­டனர்.

விமல் வீர­வன்ச: விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கருத்­தா­னது நாட்டில் பயங்­க­ர­வ­தத்தை மீண்டும் போஷிக்கும் கருத்­தாகும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர், அமைச்சர் என்ற தகு­தி­களில் இருந்­து­கொண்டு அவர் கூறிய கருத்தின் மூல­மாக அர­சி­ய­ல­மைப்­பினை மீறியும் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்குப் பாத­க­மேற்­படும் வகை­யிலும் செயற்­பட்­டு­விட்டார் என்றார்.

தயா­சிறி ஜய­சே­கர: பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­படும் ஒரு நபர் தான் அர­சி­ய­ல­மைப்­பினை மீற­மாட்டேன் என்ற சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்து செயற்­படும் வேளையில் இவ்­வாறு பயங்­க­ர­வாதம் வேண்­டு­மெனக் கூறி­யுள்­ள­தா­னது ஜன­நா­ய­கத்தை அழிக்கும் செயற்­பா­டாகும். ஆகவே அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரைக் கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றார்.

ரோஹித அபே­கு­ண­வர்­தன: விஜ­ய­கலா மகேஸ்­வரன் அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வியில் உள்ளார். பொறுப்­புடன் செயற்­பட வேண்­டிய ஒருவர் இவ்­வாறு கூறு­கின்றார். விஜ­ய­க­லாவின் கண­வரை விடு­தலைப் புலிகள் கொன்­றனர். ஆனால் அதைக்­கூட மறந்து மீண்டும் புலிகள் வர­வேண்­டு­மென விஜ­ய­கலா கூறி­யுள்­ளதன் மூல­மாக பல கேள்­விகள் எழு­கின்­றன எனக் குறிப்­பிட்டார்.

இந்த வரி­சையில் ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் இணைந்­து­கொண்­டனர்.

அஷோக பிரி­யந்த: ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்சர் ஒருவர் இவ்­வாறு கூறி­யது பார­தூ­ர­மா­னது. ஆகவே அவரை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்­டு­மென்­பதே எமதும் நிலைப்­பாடு எனக் குறிப்­பிட்டார்.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய: குறித்த காரணி தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நான்  வலி­யு­றுத்­து­கின்றேன் எனக் குறிப்­பிட்டார். இதன்­போது கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் கூச்­ச­லிட்டு உட­ன­டி­யாக  இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் சபைக்கு வர­வேண்டும். உரிய பதிலை முன்­வைக்க வேண்­டு­மெனத் தெரி­வித்­தனர். கடும் கூச்­சலை அடுத்து சபா­நா­யகர் சபையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முயற்­சித்த வேளையில் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, தயா­சிறி ஜய­சே­கர, ரோஹித அபே­ய­கு­ண­வர்­­தன, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, பிர­சன்ன ரண­வீர உள்­ளிட்ட உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யாக ஒழுங்குப் பிரச்­சினை கோரிக்கை விடுத்த நிலையில் சபா­நா­யகர் அதனை நிரா­க­ரித்தார்.

தொடர்ச்­சி­யாக சபையை குழப்­பிய கூட்டு எதி­ர­ணி­யினர் தகாத வார்த்தைப்பிர­யோ­கங்­களை முன்­வைத்தும் கூச்சல் எழுப்­பினர். இத­னை­ய­டுத்து நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்த சபா­நா­யகர் பாரா­ளு­மன்­றத்தை நேரம் குறிப்­பி­டாது  ஒத்­தி­வைத்தார்.

இதன் பின்னர் கட்­சித்­த­லை­வர்கள் மாநாட்டை சபா­நா­யகர் நடத்­தினார்.  அங்கு இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் பற்றி சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கூறு­கையில், கட்சித் தலை­வர்­க­ளு­டனும் பிர­த­ம­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். இந்தப் பிரச்­சினை குறித்து உரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுப்போம் என்றார்.

இதன்­போது மீண்டும் ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­வன்ச, உட­ன­டி­யாக இரா­ஜாங்க அமைச்­சரை பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யி­யி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை எடுங்கள். நீங்கள் எவ­ரையும் காப்­பாற்ற வேண்டாம். புலி­களை மீண்டும் உரு­வாக்க முயற்­சிக்கும் நபர்­களை பாரா­ளு­மன்­றத்தில் அனு­ம­திக்க முடி­யாது என கூச்­ச­லிட்டு சபா­நா­ய­க­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார். கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் சிலரும் கூச்­ச­லிட்டு தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர்.

இதற்குப் பதி­ல­ளித்த சபா­நா­யகர், விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கருத்து குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெனத் தெரி­வித்­துள்ளேன். பாரா­ளு­மன்­றத்­திற்கு குண்டு வைக்க வேண்டும், தீ வைக்க வேண்­டு­மெனக் கூறிய நபர்­களும் இந்த சபையில் உள்­ளீர்கள். அதனை மறந்­து­விட வேண்டாம் எனக் குறிப்­பிட்டார்.

இதன் போது ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி. அது­ர­லியே ரதன தேரர், பாரா­ளு­மன்­றத்­திற்கு தீ வைப்­பது, அல்­லது குண்டு வைப்­பது என்ற கருத்தும் அமைச்சர்  விஜ­ய­கலா முன்­வைத்த கருத்தும் ஒன்­றல்ல. அமைச்­சர்கள் இருவர் முன்­னி­லையில் அரச நிகழ்வில் அவர் இந்தக் கருத்­தினை கூறி­யுள்ளார். ஆகவே இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என குறிப்­பிட்டார்.

மீண்டும் குழப்பம்

இதன்­போது மீண்டும் சபையில் கூச்­ச­லிட்ட கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் சபா­நா­யகர் சர்­வா­தி­கா­ர­மாக நடந்­து­கொள்­வ­தா­கவும் கூறி­ய­துடன் மீண்டும் சபை நடுவே வந்து கூச்­ச­லிட்­டனர்.

இத­னை­ய­டுத்து ஆளும், எதிர்த்­த­ரப்­பினர் மத்­தியில்  கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. சபை முதல்வர், அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் எதி­ரணி உறுப்­பி­னர்­களை சமா­தா­னப்­ப­டுத்த முயற்­சித்­தனர். எனினும் கூட்டு எதி­ர­ணி­யினர் ஆவே­ச­மாக தமது வார்த்­தை­களை பயன்­ப­டுத்­திய நிலையில் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, பிர­சன்ன ரண­வீர ஆகியோர் சபை படைக்­கல சேவி­தர்­களை  மீறி சபா­நா­ய­கரை நெருங்­கவும் செங்­கோலை அப­க­ரிக்­கவும் முயற்­சித்­தனர்.

வாக்­கு­வா­தமும் குழப்­பமும்  நீடித்த நிலையில் பிர­சன்ன ரண­வீர படைக்­கல சேவி­தர்­களை  மீறி செங்­கோலை பறித்து கையில் எடுத்­துக்­கொண்­ட­துடன் சபைக்கு வெளியில் கொண்­டு­செல்ல முயற்­சித்தார். இதனை அடுத்து சபை  மறுநாள் புதன்­கி­ழமை வரையில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

சட்­டமா அதி­ப­ரிடம் ஆலோ­சனை

விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் பல­ம­டைய வேண்டும் என்ற இரா­ஜாங்க அமைச்சர் விஜே­கலா மகேஸ்­வ­ரனின் உரைய அர­சி­ய­ல­மைப்பை மீறும் வகை­யி­லுள்­ளதா என்­பது தொடர்பில் விசா­ரணை நடத்தி இது­கு­றித்து உரிய சட்ட நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

பிர­த­மரின் விசேட கூற்று

இத­னி­டையே நேற்று முன்­தினம் புத­னன்று விசேட கூட்­ட­மொன்றை கூட்டி  உரை­யாற்­றிய பிர­தமர், விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரையை நான் கேட்­ட­வுடன் இது தொடர்­பாக ஆராய்ந்து பார்த்தேன். இது தொடர்­பாக எமது கட்­சியின் அர­சியல் குழு நேற்று (செவ்­வா­யன்று) கூடி­யது. அவர் மீதான விசா­ரணை தொடர்­பாக தீர்­மானம் எடுத்­துள்ளோம். விஜ­ய­கலா மகேஸ்­வரன் சுக­வீ­ன­முற்று யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­தா­கவும் இன்­றைய தினம் (புதன்) வரு­வ­தா­கவும்  அவர் எனக்கு அறி­வித்தார்.

நான் அவரை இன்று (புதன்) சந்­திப்பேன். அதன் பின்னர் விசா­ரித்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன். 

நாட்டை பிள­வு­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்­றத்தை வலு­வில்­லாமல் செய்­வதே விடு­தலைப் புலி­களின் பிர­தான நோக்­க­மாக இருந்­தது. நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்­றத்தில் கூச்­ச­லிட்டு குழப்­பி­ய­டித்­தனர். எனினும்  இது தொடர்­பாக யார் கூச்­ச­லி­டு­கின்­றனர். 600  பொலி­ஸாரை கொலை செய்த கருணா அம்­மானை அழைத்து சுதந்­திரக் கட்­சியின்  உப­த­லை­வ­ராக்­கி­விட்டு, பிரபாகரனுக்கு பணம் வழங்கி ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டுவிட்டு, விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவ தளபதியை சிறையில் அடைத்து விட்டு தற்போது வந்து விஜயகலாவின் உரை தொடர்பாக எப்படி  இவர்கள் கூச்சலிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.   

பதவி விலகத் தீர்மானித்த விஜயகலா

நேற்றுமுன்தினம் புதன் கிழமை மாலை விஜயகலாவை அழைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை நடத்தியிருந்தார். அந்தக் கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்துள்ளார்.

பதவி விலகலுடன் மாத்திரம் விஜயகலா நின்றுவிடக்கூடாது. தான் வெளியிட்ட கருத்தின் பாரதூரத்தை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்தோடு, கடந்த விடுதலை புலிகளின் காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பதற்றத்துடன் இருந்ததையும் அவர் மீட்டிப்பார்க்க வேண்டும். அத்தோடு வடக்கிலிருந்து முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் இனச்சுத்திகரிப்பு செய்தமையை யாரும் இலகுவில் மறந்துவிடப்போவதில்லை. அன்று தெற்கில் விடுதலை புலிகளால் வைக்கப்பட்ட குண்டுகளின் சத்தங்கள் இன்னும் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அது மாத்திரமின்றி கிழக்கு, பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பிரதேசங்களில் ஓடவிடப்பட்ட இரத்த  ஆறு  இன்னும் காயவில்லை. அத்தோடு கொடிய யுத்தத்தால் வடக்கில் அநாதையாக்கப்பட்ட பிள்ளைகளையும் கணவனை தொலைத்த மனைவியரையும் கொஞ்சம் விஜயகலா நினைத்துப்பார்க் வேண்டியது அவசியமே...
-Vidivelli