Verified Web

இயலாமை 2018

2018-07-05 04:39:02 Administrator

-எம்.எம்.ஏ.ஸமட்

இந்நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் இருப்­புக்கும், உரி­மை­க­ளுக்கும்  திரை­ம­றை­விலும், நேர­டி­யா­கவும் வர­லாற்று நெடு­கிலும் நெருக்­க­டிகள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. இதன் தொடரில் 2015 ஜன­வரி ஆட்சி மாற்­றத்­திற்கு  முன்­னரும் ஆட்சி மாற்­றத்­திற்குப் பின்­ன­ரு­மான காலங்­களில் முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட அழுத்­தங்­களும் தாக்­கு­தல்­களும் பல்­வேறு பாடங்­களைக் கற்றுக் கொடுத்­தி­ருக்­கி­ன்றன.

கற்­றுக்­கொண்ட பாடங்­களை மீள் வாசிப்­புக்­குட்­ப­டுத்தி சமூ­கத்தின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கல்வி, சமய, கலா­சாரம் உட்­பட அனைத்து விட­யங்­க­ளையும்  ஒரு தலை­மைத்­துவ சபையின் கீழ் ஒன்­றி­ணைக்க  வேண்­டிய தேவை­யி­ருந்தும் அத்­தே­வையை நிறை­வேற்­று­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளி­னாலும், இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளி­னாலும் 2018இலும்  இய­லா­ம­லி­ருப்­பது மென்­மேலும்  முஸ்­லிம்­களை நோக்கி அழுத்­தங்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும், உரிமை மீறல்­க­ளையும் ஏற்­ப­டுத்­துத்தும் என்றும் சமூகக் கூறு­க­ளையும் பல­வீ­னப்­ப­டுத்தும் என்றும் முஸ்லிம் அர­சியல் ஆய்­வா­ளர்­க­ளினால் கட்­டியம் கூறப்­ப­டு­வதை மறு­த­லிக்க இய­லாது.

ஜன­நா­யகத் தேச­மொன்றில் வாழும் ஒரு தனித்­துவ இன­மென்ற ரீதியில் முஸ்­லிம்கள் குறித்த ஏனைய சமூ­கத்­தி­லுள்ள தவ­றான சமூ­கப்­பார்வை களை­யப்­ப­டு­தற்கும், தனித்­துவ அடை­யா­ளத்­துடன் வாழ்­வ­தற்கும், வாழ்­வு­ரி­மைக்கு எதி­ரான சவால்கள் வரு­கின்­ற­போது அவற்றை ஒன்­றி­ணைந்து முறி­ய­டிப்­ப­தற்கும் முறை­யான பொறி­மு­றையின் கீழ் முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது என்ற சிந்­தனை சமூக சிந்­த­னை­யா­ளர்கள் மத்­தியில் காலத்­திற்குக் காலம் எழுந்­தாலும், அச்­சிந்­தனை எழுச்சி பெறாது தேக்­க­ம­டை­வதால்  முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களும் சமூ­கத்தின் எதிர்­கால நன்­மைக்­காக ஓர­ணியில் இணை­வது என்­பது இந்த 2018 நடுப்­ப­குதி வரை இய­லா­ம­லா­கவே காணப்­ப­டு­கி­றது

ஓர­ணியின் அவ­சியம்

முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்­டு­மாயின், முஸ்­லிம்கள் குறித்த தவ­றான வாதப்­பி­ர­தி­வா­தங்­களும், போலிப்­பி­ர­சா­ரங்­களும் களை­யப்­பட வேண்­டு­மாயின், முஸ்­லிம்­களின் நீண்­ட­கால, சம­கால மற்றும் அடிப்­படைப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்­டு­மாயின், முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கு­கின்ற சவால்கள் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக முறை­யான பொறி­மு­றை­க­ளி­னூ­டாக வெற்­றி­கொள்­ளப்­பட வேண்­டு­மாயின்,  ஒரு சமூ­கத்தின் எழுச்­சிக்கும், வீழ்ச்­சிக்கும் அச்­சா­ணி­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற அர­சியல் பலம் சக்­தி­மிக்­க­தாக்­கப்­பட வேண்டும்.

ஏனெனில், பல்­லின சமூ­கத்தில் வாழும் ஒரு தனித்­துவ இனம் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அச்­ச­மூ­கத்­திற்­கான அர­சியல் பலம் உறு­தி­யாக இருக்க வேண்டும் என்­ப­தோடு ஆன்­மீக வழி­காட்­டல்கள் இன்­றி­ய­மை­யா­தது என்­பது இந்­நாட்டு முஸ்­லிம்­களின் கடந்த கால வர­லா­றுகள் கற்­றுத்­தரும் படிப்­பி­னை­க­ளா­க­வுள்­ளன.

அர­சியல், சமூக, சமய, பொரு­ளா­தார ரீதி­யி­லான அழுத்­தங்­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் விடு­விக்­கப்­பட்டு இந்­நாட்டில் நிம்­ம­தி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாழ வேண்டும். அவ்­வா­றான வாழ்­த­லுக்­கான உரி­மையை உரி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து அர­சியல் அதி­கா­ரங்­க­ளி­னூ­டாக சமூ­கத்­திற்குப் பெற்­றுக்­கொ­டுப்­பதை இலக்­காகக் கொண்டே முஸ்லிம் சமூ­கம்சார் அர­சியல் கட்­சிகள் தோற்­று­விக்­கப்­பட்­டன.

அவ்­வா­றுதான் மக்­களை இறை­வ­ழியில் நல்­வ­ழிப்­ப­டுத்தி, நல்­ல­வற்றை புரி­யும்­படி ஏவி, வாழ்­நாட்­களில் இறை­வ­னுக்கு மாறு செய்­யாது, மனி­த­னுக்கு அநீ­தி­யி­ழைக்­காது மனிதப் புனி­தர்­க­ளாக வாழ வைப்­ப­தற்­கா­கவே இஸ்­லா­மிய இயக்­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

ஆனால், அர­சியல் கட்­சி­க­ளி­னதும், இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளி­னதும் இவ்­வி­லக்­குகள்  சுக­போ­கங்­க­ளுக்­காகப் பல்­வேறு பெயர்­களில் அர­சியல் தலை­மை­க­ளி­னாலும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளி­னாலும் அடகு வைக்­கப்­ப­டு­கின்­றன என்ற விமர்­ச­னங்­களை அண்மைக் கால­மாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

இலக்­கு­களை அடைந்­து­கொள்­வ­தற்­காக மக்­களை ஓர­ணியில் ஒன்­று­தி­ரட்டி செயற்­பட வேண்­டிய முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களும் அவற்­றிற்கு மாற்­ற­மாக செயற்­பட முற்­பட்­டதன் விளைவு பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கும் மற்றும் கேளிக்­கை­க­ளுக்கும்  முஸ்லிம் சமூ­கத்தை  முகம்­கொ­டுக்கச் செய்­தி­ருப்­பது நிஜ­மா­னதே..

இந்­நாட்டில் இரண்டாம் நிலை சிறு­பான்மை சமூ­க­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு வாழும் இச்­ச­மூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள பல­ருக்கு சமூகம் சார்ந்த விட­யங்­களில் இறந்த காலம் எதைக் கற்­றுத்­தந்­தது, நிகழ்­காலம் எதைக் கற்­றுத்­தந்து கொண்­டி­ருக்­கி­றது, எதிர்­காலம் எதைக் கற்­றுத்­த­ரப்­போ­கி­றது, எத்­த­கைய ஆபத்­துக்­களை எதிர்­நோக்­க­வுள்­ளது, வாழ்­வு­ரிமை எந்­நி­லையை அடை­யப்­போ­கி­றது என்ற உணர்­வில்­லா­த­வர்­க­ளாக,  அவை குறித்து சிந்­திக்­கா­த­வர்­க­ளாக சுய­தே­வை­களை அடைந்­து­கொள்ளும் இலக்­கு­க­ளுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்லிம் சமூ­கம்சார் இலக்­கு­க­ளையும்,  நோக்­கங்­க­ளையும் அடைந்து கொள்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களும், அவற்றின் இலக்­கு­க­ளையும், நோக்­கங்­க­ளையும் மறந்து குடும்பிச் சண்­ட­டையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

 நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி  சபை­க­ளுக்­கான தலை­வர்­களை தெரிவு செய்­து­கொள்­வதில் முஸ்லிம் அர­சியல்  கட்­சி­க­ளுக்­கி­டையே இடம்­பெற்ற குத்­து­வெட்­டுக்­களும், நம்­பிக்கைத் துரோ­கங்­களும், வாக்­கு­றுதி மீறல்­களும் அவற்­றுடன் கடந்த நோன்புப் பெரு­நாளை கொண்­டா­டுவ­தற்­கான பிறை­பார்த்து அறி­விக்கும் விட­யத்தில் இஸ்­லா­மிய இயக்­கங்­களும், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கமும், பிறைக்­கு­ழுவும் முரண்­பட்டுக் கொண்­ட­தையும் இரு தினங்­களில் பெரு­நாளை முஸ்­லிம்கள் கொண்­டாட நேர்ந்­த­தையும் இவற்­றிற்கு உத­ார­ணங்­க­ளாக சுட்­டிக்­காட்­டலாம்..

சமூகம் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற ஆபத்­துக்­க­ளி­லி­ருந்து இச்­ச­மூ­கத்தை எப்­படிக் காப்­பாற்ற முடியும், அதற்­காக எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை ஒன்­று­பட்டு முன்­னெ­டுக்க வேண்டும் என்று சிந்­திக்­காமல் அதற்­காகக் கால நேரங்­க­ளையும், செல்­வங்­க­ளையும், செல்­வாக்­கு­க­ளையும் பயன்­ப­டுத்­தாமல் அதற்­காக ஒன்­று­ப­டாமல், பத­வி­க­­ளுக்­கா­கவும், தனி­நபர் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­கா­கவும், கட்சி அர­சி­ய­லுக்­கா­கவும், கொள்கை விருத்­திக்­கா­கவும் ஒரு­வரை ஒருவர் விமர்­சித்­துக்­கொண்டும், காட்­டிக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டும், அசிங்­கங்­களை அரங்­கேற்­றிக்­கொண்டும்,  வெற்று அறிக்­கை­களை விடுத்­துக்­கொண்டும்  செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்தை ஆரோக்­கி­ய­மான வழியில் இட்டுச் செல்­லாது. இவை முஸ்­லிம்­களை ஓர­ணியில் இணைப்­பதில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளி­னதும் இய­லா­மையைப் புடம்­போ­டு­கின்­றன.

இய­லா­மை­களின் வெளிப்­பா­டுகள்

பிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்­கு­களை அடைந்து கொள்ள எத்­த­கைய வியூ­கங்­களை வகுத்து செயற்­பட முடி­யுமோ அவற்றை சாணக்­கி­ய­மாக செய்­து­மு­டிப்­பதில் அர­சியல் கட்­சி­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களும், சமூக அமைப்­புக்­களும் காட்டும் அக்­கறை, சம­கால மற்றும் எதிர்­கால அர­சியல் நகர்­வுகள் எத்­த­கைய நெருக்­க­டி­களை முஸ்­லிம்­களை எதிர்­கொள்ளச் செய்யும்,  அவற்­றிற்கு எவ்­வ­கையில் முகம்­கொ­டுக்க முடியும் என்­பதை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி செயற்­பட முடி­யா­ம­லாக்­கி­யி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்­தச்­சட்டம் முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மெனப் பல­முறை அர­சியல் ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தும், இச்­சட்­ட­மூ­லத்தை ஆத­ரித்து வாக்­க­ளிக்க வேண்­டா­மென சமூ­கத்தின்  பல்­வேறு தரப்­பு­க­ளி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டும்­கூட அர­சியல் தலை­மை­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சமூ­கத்தின் குரல்­களை பொருட்­டாகக் கொள்­ள­வில்லை.

இத்­தி­ருத்­தச்­சட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எல்­லோரும் கைகளை உயர்த்தி சட்­ட­மூலம் நிறை­வே­று­வ­தற்கு ஆத­ர­வ­ளித்­து­விட்டுப்  பின்னர் ஒரு­வரை ஒருவர் குற்­ற­மும்­சாட்­டினர். அவ்­வாறு குற்­றஞ்­சாட்டி அறிக்­கை­க­ளையும் ஊட­கங்­க­ளி­னூ­டாக வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் முன்­வைத்­து­விட்டு மாகாண சபைத் தேர்­தலை நடாத்­து­வது குறித்துப் பேசப்­படும் இத்­த­ரு­ணத்தில் புதிய முறை­மையில் தேர்­தலை நடாத்­து­வது முஸ்­லிம்­க­ளுக்குப் பாத­க­மா­னது என தற்­போது விடாப்­பி­டி­யாக நிற்­பது எந்­த­ளவில் வெற்­றி­ய­ளிக்­கு­மென்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, இவை முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் சாணக்­கி­ய­மற்ற முடி­வு­க­ளையும், அர­சியல் இய­லா­மை­யையும்  வெளிப்­ப­டுத்­து­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ள­தாகப் பேசப்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

புதிய அர­சியல் நகர்­வு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற மாற்­றங்கள் எத்­த­கைய சாதக, பாதக நிலை­களை சிறு­பான்மை சமூ­கங்­களில் ஒன்­றான முஸ்­லிம்­களை எதிர்­நோக்கச் செய்யும்? எந்­த­வ­கையில் பாதிக்கும்? அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்று ஏற்­பட்டால் அவற்­றி­னூ­டாக உரு­வாக்­கப்­படும் அதி­காரப் பகிர்­வுகள் முஸ்­லிம்­க­ளுக்கு சாத­க­மாக அமை­யுமா? அல்­லது பாத­க­மாக அமை­யுமா? என்ற பல கேள்­விகள்  முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் எழு­கின்­றன

இக்­கேள்­வி­க­ளுக்கு விடை­காண்­ப­தற்­காக தங்­க­ளுக்குள் கூடி ஆரோக்­கி­ய­மாக ஆராய வேண்டிய நேரத்தில், அவை தொடர்பில் சமூ­கத்தை விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டிய தரு­ணத்தில் அர­சியல் கட்­சி­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களும், அவற்றின் செயற்­பாட்­டா­ளர்­களும், ஆத­ர­வா­ளர்­களும்  தின­சரி சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் அறிக்கை சமர் புரிந்­து­கொண்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

தனி­நபர் நிகழ்ச்சி நிரல்­களின் அடிப்­ப­டையில் சமூ­கத்தைக் கூறு­போ­டு­வ­தற்­காக அர­சியல் கட்­சி­களும் அதன் தலை­மை­களும் இஸ்­லா­மிய இயக்­கங்­களும் செயற்­ப­டு­வதும், அதன் விளை­வாக ஏற்­படும் கசப்­பான சம்­ப­வங்­களும் சமூ­கத்தைக் கேவ­ல­மா­ன­தொரு நிலைக்குத் தள்­ளி­யி­ருப்­ப­தோடு  இன­வா­தி­களின் வெறுப்புப் பேச்­சுக்­க­ளுக்கு ஆத­ர­வான நிகழ்­வு­க­ளா­கவும் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மொத்­தத்தில் முஸ்லிம் சமூகம் ஒற்­றுமை என்ற கயிற்றை இறுக்கிப் பிடிப்­ப­தற்குப் பதி­லாக அவற்றை அறுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இவைகள் சமூ­கம்சார் அர­சியல் மற்றும் இஸ்­லா­மிய இயக்­கங்­களின் இய­லா­மை­களின் வெளிப்­பா­டு­க­ளாகும் என்­பதை மறுக்­க­வி­ய­லாது.

இந்­நி­லையில், முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் அதன் தலை­மை­களும் இயக்­கங்­களும் சுய­வி­சா­ரணை செய்ய வேண்­டி­யதும் சம­கால மற்றும் எதிர்­கால சமூ­கத்தின் தேவை கருதி ஒன்­று­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

கூட்டுத் தலை­மைத்­துவ சபை

தேர்தல் திணைக்­க­ளத்­தினால் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­பட்­டுள்ள கட்­சி­களில் முஸ்லிம் சமூ­கத்தைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் பிர­மு­கர்­களைத் தலை­வர்­க­ளா­கவும் செய­லா­ளர்­க­ளா­கவும் கொண்டு பதி­வா­கி­யுள்ள கட்­சிகள் சில­வற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள்  தேசிய மற்றும் பிராந்­திய அளவில் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு பெற்ற கட்­சி­க­ளாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவற்­றுடன் தேசிய ஐக்­கிய முன்­னணி, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகி­ய­வையும் அர­சியல் கட்­சி­க­ளாகப் பதி­வா­கி­யுள்­ளன.

இத­ன­டிப்­ப­டையில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் சமூ­கம்சார் கட்­சி­க­ளோடு புதி­தாகப் பதிவு செய்­யப்­பட்­டுள்ள தேசிய ஐக்­கிய முன்­னணி மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய இரு கட்­சி­க­ளையும் சேர்த்து ஐந்து அர­சியல் கட்­சி­களை முஸ்லிம் அர­சியல் கொண்­டி­ருக்­கி­றது.

இவற்­றுடன் இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட இஸ்­லா­மிய பேரி­யக்­கங்­க­ளாக விளங்கும் தப்லீக் ஜமாஅத், இலங்கை ஜமாஅதே இஸ்­லாமி மற்றும் தௌஹீத் ஜமாஅத் ஆகிய இஸ்­லா­மிய இயக்­கங்­களும் முஸ்­லிம்­களை கொள்­கை­களின் அடிப்­ப­டையில் இஸ்­லா­மிய வழி­காட்டல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் அர­சி­யலில், முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் அபி­லா­ஷைகள் அடை­யப்­ப­டு­வ­தற்கும், உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கும், சமூக இருப்பின் ஆரோக்­கியம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கும், எதிர்­கால சமூகம் நிம்­ம­தி­யாக இந்­நாட்டில் வாழ்­வ­தற்கும் செயற்­பாட்­டி­லுள்ள முஸ்லிம் அர­சியல் கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

கடந்­த­கால முஸ்லிம் அர­சி­யலின் சிதைவும், பல­வீ­னமும் முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­களில் பௌத்த பேரி­ன­வாதம் மூக்கை நுழைக்­கவும் சந்­திக்­கி­ழுக்­கவும் முயற்­சித்­தி­ருக்­கி­றது என்­பதை மறுக்­க­மு­டி­யாது. முஸ்லிம் சமு­தா­யத்தின் பலமும் பல­வீ­னமும் சம­கால முஸ்லிம் அர­சி­யலின் பலத்­திலும், பல­வீ­னத்­தி­லுமே தங்­கி­யி­ருக்­கின்­றன என்­பதை கடந்­த­கால அர­சியல் வர­லாறு நமக்குப் புடம்­போட்டுக் காட்­டு­கின்­றன.

கடந்­த­கால மற்றும் நிகழ்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சதித்­திட்­டங்­களின் விளைவு பல இழப்­புக்­களைச் சந்­திக்கச் செய்­துள்­ளது. இவற்­றுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை இரா­ஜ­தந்­திர ரீதி­யா­கவும், சாத்­வீ­க­மா­கவும் முன்­னெ­டுக்க வேண்­டு­மாயின்  முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள அர­சியல் தலை­மை­களும், இஸ்­லா­மிய இயக்­கங்­களின் தலை­மை­களும் ஒன்­றி­ணைந்து தலை­மைத்­துவ சபை அல்­லது கூட்டுத் தலை­மைத்­து­வத்தை  உரு­வாக்­கு­வது அவ­சி­ய­மாகும். அதற்­கான  அழைப்­புக்­களும் பல்­வேறு தரப்­புக்­க­ளி­லி­ருந்து விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இருப்­பினும், இக்­கூட்டுத் தலை­மைத்­துவ சபை உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்குப் பதி­லாக புதிய கட்­சி­களை ஸ்தாபிக்­கவும் இஸ்­லா­மிய வழி­காட்டல் இயக்­கங்­களை உரு­வாக்­கவும் முயற்­சிப்­ப­தா­னது மேலும் சமூ­கத்தை பல­வீ­னப்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்­நி­லையில், கடந்த மார்ச் மாதம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு 30 நாட்­க­ளுக்குள் தீர்வு தரப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றாக கையொப்­ப­மிட்டு ஜனா­தி­ப­திக்கும், பிர­ம­ருக்கும் கடிதம் எழுதி­யிருந்­தனர் ஆனால், அதற்குக் கிடைத்த தீர்வு என்ன என்ற கேள்வி இப்­போது எழு­கி­றது.

மக்கள் மத்­தியில் எழும் கேள்­வி­க­ளுக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் சர்­வ­தே­சத்­தி­டமும், மக்கள் மத்­தி­யிலும் எடுத்­து­ரைக்­கின்ற கூற்­றுக்கள் விடை­யாக அமை­வ­தையும் காண முடி­கி­றது.

“சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டக் கட­மைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக செயற்­பட்­டி­ருந்தால் அம்­பாறை, கண்டி இனக்­க­ல­வ­­ரங்­களை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். இன­வாத வன்­செ­யல்­க­ளுக்கு துணை­போ­ன­தாகக் கூறப்­பட்ட பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களை சுட்­டிக்­காட்டி அவர்­களை இட­மாற்றம் செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்­த­போதும் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை. அத்­துடன் வெறுப்­பூட்­டக்­கூ­டிய பேச்­சுக்­களை தடை­செய்­வ­தற்­கான சட்­டமும் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது” என இலங்கை வந்த ஐ.நாவின் இடைக்­கால வதி­விடப் பிர­தி­நிதி ரெரன்ஸ் டி ஜோன்­ஸிடம் அமைச்சர் ஹக்கீம் எடுத்­து­ரைத்­துள்ளார்.

அவ்­வாறு  “நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இன்னும் பதி­னெட்டு மாதங்­களே எஞ்­சி­யுள்­ளன. இக்­காலப் பிரிவில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். அல்­லா­த­வி­டத்து அடுத்த தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்கள்” என அமைச்சர் ரிஷாட் வரக்காபொலயில் நடைபெற்ற வைபவமொன்றில் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளினால் எடுத்துரைக்கப்படும் கூற்றுக்கள் தங்களது அரசியல் அதிகாரங்களினால் சமூகம்சார் விடயங்கள் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதையும் அரசியல் இயலாமையின் தொடர் என்பது இன்னும் தொடர்கின்றது என்பதையும் புடம்போடுவதாகவே அமைகிறது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்

இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் தலைவிதியைத்  தீர்மானிக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேவையெனக் கருதி, மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்கள், சமூக அக்கறையுடையோர், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு துறைசார்ந்தோரையும் உள்ளடக்கியதான கூட்டுத் தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபை உருவாக்கப்பட வேண்டுமெனவும், அத்தலைமைத்துவத்தினூடாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சமூக, சமயப் பிரச்சினைகளுக்கான தீர்வை பெறவேண்டுமென்பதும் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் அதிகாரங்களின் தொடரான இயலாமையும், இஸ்லாமிய இயக்கங்களின் வழிகாட்டலிலும், முடிவுகளிலும் மற்றும் தலைமைத்துவ முன்னெடுப்புக்களிலும் காணப்படும் தொடர்ச்சியான முரண்பாடுகளும் பிளவுகளும் ஒன்றிணைந்த தலைமைத்துவ சபை உருவாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சமூகத்தின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார, சமய நலன்களைக் கருதி இத்தலைமைத்துவ சபை உருவாக்கத்திற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், இவை இயலாததொன்றாகவே தொடர்ந்துள்ளன. இத்தொடரானது 2018இன் ஆறு மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்நாட்டு முஸ்லிம்களை ஓரணியில் திரட்டி சவால்களை வெற்றிகொள்வதற்கான கூட்டுத் தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபை உருவாக்கமானது 2018இலும் இயலாமலாகிவிடுமா என்பதே முஸ்லிம் சமூக சிந்தனையளர்களின் சமகால வினாவாகும்.
-Vidivelli