Verified Web

இன்றைய உலகில் முஸ்லிம்களின் நிலை

2018-07-04 04:54:43 Administrator

ஆங்­கி­லத்தில்:
Dr.முஸ்­தபா முஹம்மட் தஹான் (குவைட்)

தமிழில்:
‘நாவல்­நகர்’ ‘ஏயாரெம்’

பரஸ்­பர புரிந்­து­ணர்­வுக்­கான கலந்­து­ரை­யாடல் ‘கருத்து வேறு­பா­டுகள் தவிர்க்க முடி­யா­தவை’

இந்த விடயம் சம்­பந்­த­மாக ‘நமது தூதும் பணியும்’ என்ற தலைப்பில் இமாம் ‘ஹஸன் அல் பன்னா’ ஒரு விளக்கம் எழு­தி­னார். அது பின்­வ­ரு­மாறு, மார்க்­கத்தின் அடிப்­ப­டை­யில்­லாத துணை அம்­சங்­களில் கருத்து வேறு­பாடு ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­த­வொன்று என்­பதை நாம் நம்­பு­கிறோம். இப்­ப­டிப்­பட்ட இரண்டாம் தர அம்­சங்­களில் அபிப்­பி­ராய பேதப்­ப­டு­வ­தையும், மத்­ஹபு சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­களில் கருத்து வேறு­பாடு கொள்­வ­தையும் பல கார­ணங்­க­ளினால் நாம் ஒன்­று­ப­டுத்த முடி­யா­தென்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இவற்றில் அறிவுநிலை சார்ந்த தன்­மை­க­ளை­யு­டைய வேறு­பா­டுகள் உள்­ளன. அவை ஆழ­மாக  சிந்­தித்து, ஆராய்ந்து அல­சிப்­பார்க்க வேண்­டிய தன்­மை­யி­லுள்ள பலத்­தையும் அல்­லது பல­வீ­னத்­தையும் பொறுத்து ஏற்­ப­டு­கின்­றது. மேலும்,  அதன் உட்­க­ருத்­துக்­களை அறிந்து அதன் யதார்த்­தங்­களை புரிந்து  கொள்­ளும்­போதும் இக்­க­ருத்து வேறு­ப­டு­கி­றது. உண்­மையில் மார்க்­க­மென்­பது அல்­குர்­ஆனின் வச­னங்­க­ளிலும் ஹதீஸ் போத­னை­க­ளிலும் தங்­கி­யுள்­ளது. அர­பு­மொழி மற்றும் அதன் சட்ட திட்­டங்­க­ளுக்­குட்­பட்ட எல்­லை­க­ளுக்குள் அறிவு ரீதி­யான விளக்கம், தீர்ப்பு என்­ப­வற்­றிற்­கி­ணங்க அவை மாறு­ப­டு­கின்­றன. இதனால் எழு­கின்ற  வேறு­பா­டு­களின் நிமித்தம் மக்கள் வாதப்­பி­ர­தி­வா­தங்­களில் மூழ்கி விடு­கின்­றனர். இவற்றில் செறிந்த அறிவும், குறைந்த அறிவும் இரு கார­ணி­க­ளாக இருக்­கின்­றன. ஒரு­வ­ருக்குக் கிடைக்­காத அறிவு இன்­னொ­ரு­வ­ருக்குக் கிடைத்­தி­ருக்கும். மற்­று­மொரு நபரும் இவ்­வா­றான தர்ம சங்­க­ட­மான நிலைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருப்பார். அபூ­ஜா­பீரைப் பார்த்து இமாம் மாலிக் கூறினார்; இறைத்­தூ­தரின் தோழர்கள் பல இடங்­க­ளுக்கும் பிரிந்து சென்­று­விட்­டார்கள். ஒவ்­வொரு குழு­வி­ன­ருக்கும் அவ­ர­வர்­க­ளுக்­கு­ரிய அறிவுத் தடா­கங்­க­ளாக இருக்­கின்­றனர். நீங்கள் குறிப்­பிட்ட ஓர் அபிப்­பி­ரா­யத்தை ஏற்­றுக்­கொள்­ளும்­படி வற்­பு­றுத்­தினால் அதனால் பெரும் உட்­பூ­சலும் குழப்­பமும் ஏற்­பட்­டு­விடும். “சூழ்­நிலை வேறு­பா­டு­களும் இக்­கா­ர­ணி­களில் உள்­ள­வை­யாகும். எனவே வேறு­பட்ட சூழ்­நி­லையின் தன்­மைக்­கேற்ப பொருந்தும் தன்­மையும் மாறு­ப­டு­கின்­றது. இமாம் ஷாபீஈ அவர்கள், ஈராக்கின் பழைய “ரிஸாலா தஃவ­தினா” இமாம் ஹஸன் அல் பன்னா பக் 48 – 52 வெளி­யீடு ‘IFFSO’ ‘KUWAIT’ முறைக்­கி­ணங்­கவும், எகிப்தின் புதிய முறைக்­கி­ணங்­கவும் சட்ட ஆலோ­ச­னைகள் வழங்­கி­யி­ருப்­ப­தையும் நீங்கள் பார்க்­கலாம். ஒவ்­வொரு விஷ­யத்­திலும் தனக்கு எது மிகத் தெளி­வா­கவும் புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவும் இருக்­கின்­றதோ அதற்­கி­ணங்­கவே அவர் செயல்­ப­டக்­கூ­டி­ய­வ­ராக இருந்தார். எந்த விஷ­யத்­திலும் உண்­மையை வெளிக்­கொ­ணர்­வ­தற்கு அப்பால் அவர் செயற்­ப­ட­வில்லை. ஒரு ஹதீஸ் அறி­விப்பைப் பெற்­றுக்­கொண்­ட­தற்­கி­ணங்க அதன் உட்­க­ருத்தின் தகை­மைக்கும் நிலை­மைக்­கு­மேற்ப வேறு­பா­டுகள் தோன்­று­வதும் இதில் அடங்­கு­கின்­றன. ஒரு ஹதீஸின் குறிப்­பிட்ட ஓர் அறி­விப்­பா­ளரை ஆதார பூர்­வ­மா­ன­வ­ராக ஒரு குறிப்­பிட்ட இமாம் கரு­தலாம். அவரைப்பற்றி பூரண திருப்­தியும் கொள்­ளலாம். முழு மன­துடன் அவரை ஏற்றும் கொள்­ளலாம். ஆனால் இன்­னொரு இமா­மினால் அவர் தவ­றா­ன­வ­ராகக் காணப்­ப­டலாம்.

இது ஒவ்­வொ­ரு­வரும் அவரைப் புரிந்­து­கொண்ட தன்­மை­யி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றன. எடுத்­துக்­காட்­டாக; மொத்­தத்தில் மக்கள் எல்­லோ­ரி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற ஒரு செய­லுக்கு தனி­ந­பரின் நலனை விட பொது­ந­ல­னுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்­டு­மென ஒருவர் கரு­தலாம். அதே­வேளை இன்­னொ­ருவர் அவ­ருடன் ஒத்துப் போகா­ம­லி­ருக்­கலாம். பிறி­தொ­ருவர் வேறு ஒரு கருத்தைக் கொண்­டி­ருக்­கலாம். மார்க்­கத்தின் சிறி­ய­தொரு விளக்­கத்­தி­லி­ருந்து பொறுக்­கி­யெ­டுக்­கப்­பட்ட ஓர் உப விதி­யி­லுள்ள பிரச்­சி­னையில் கூட கருத்­தொ­ரு­மித்த தன்மை முற்­றிலும் சாத்­தி­ய­மற்­ற­தொன்­றாகும் என இந்தக் கார­ணிகள் நம்மை நம்ப வைத்­தி­ருக்­கின்­றன. மட்­டு­மன்றி மார்க்­கத்தின் தன்­மைக்கும் இது முரண்­பட்­ட­தாக இருக்­கின்­றது. ஏனெனில், இந்த தீன் எனும் மார்க்கம் மாத்­தி­ரமே நிலைத்­தி­ருக்க வேண்­டு­மென்றும் காலா­காலம் நீடித்து வாழ­வேண்­டு­மென்றும் அல்லாஹ் விரும்­பு­கின்றான். இக்­கா­ர­ணத்தில் தான், எளிமை, வளைந்து கொடுக்கும் தன்மை, மித­மான போக்கு, தீவி­ர­மின்மை, மாறாத தன்­மை­யின்மை என்­பன காணப்­ப­டு­கின்­றன”

மனி­தனின் தன்­மை­யையும் வாழ்க்­கை­யையும் பற்­றிய தெளி­வான புரிந்­து­ணர்­வையும் ஆழ­மான அறி­வையும் கொண்டு இமாம் அல்­பன்னா வேறு­பா­டு­களும், முரண்­பட்ட அபிப்­பி­ரா­யங்­களும் இயற்கை அம்­சங்கள் என கூறி­னார். அவை முஸ்லிம் உள்­ளங்­க­ளுக்­கி­டையில் நெருங்­கிய தொடர்­புக்கும், அன்­பையும் இரக்­கத்­தையும் பரி­மாறிக் கொள்­வ­தற்கும், நல்ல உறவை வளர்த்­துக்­கொள்­வ­தற்கும் தடைக் கற்­க­ளாக அமை­த­லா­காது என அவர் உறு­தி­யாகக் கூறி­னார். இத்­த­கைய வேறு­பா­டுகள் சிறப்­பு­மிக்க இஸ்­லா­மிய வட்­டத்­திற்குள் இருந்து செயற்­ப­டவும், பரந்த அள­வி­லான இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவப் பண்­பு­களை கடைப்­பி­டித்­தொ­ழு­கவும், இஸ்­லாத்தின் புனி­தத்­தன்மை வெளிப்­ப­டு­வ­தற்கும் தடை­யாக அமை­யக்­கூ­டாது. நாம் அனை­வரும் முஸ்­லிம்கள் இல்­லையா? நமது உள்­ளங்­களில் அமை­தியை உண்­டு­பண்ணும் தீர்­வு­கள்தான் வேண்­டு­மென்று நாம் விரும்­பு­கின்றோம் இல்­லையா? அவர்­க­ளு­டைய விருப்­பமும் அது­வன்றோ! நாம் விரும்­பு­வ­தையே நமது சகோ­த­ரர்­க­ளுக்கும் விரும்ப வேண்­டு­மென நாம் வேண்­டப்­பட்­ட­வர்­க­ளாக இல்­லையா? பின்னர் ஏன் நமக்கு மத்­தியில் கருத்து வேற்­றுமை?

இமாம் ஹஸன் அல்­பன்னா முன்­வைத்த இவ்­வ­ழ­கான  கருத்­தி­னை­யே அவர் தோற்­று­வித்த இயக்­கத்தின் அடிப்­படைக்  கோட்­பா­டாக அவர் ஆக்­கினார். இவ்­வ­ழ­கிய கருத்­தினை சங்­கை­மிக்க நபி வழியின் முன் மாதி­ரி­யி­லி­ருந்து அவர் வடித்­தெ­டுத்­தார். மேலும், இக்­கோட்­பாட்­டிற்கு வலு­வூட்டி அதில் நம்­பிக்­கை­யற்­றோ­ருக்கு நம்­பிக்­கையை உண்­டு­பண்ணும் விதத்தில் இதோ நபி வழி வர­லாற்­றி­லி­ருந்து பொறுக்­கி­யெ­டுத்த சில நிகழ்­வு­களைத் தரு­கிறோம்.

பத்­ரின் போர்க் கைதிகள்

பத்ர் யுத்தம் முடிந்­த­வுடன் சிறை பிடிக்­கப்­பட்ட கைதி­களை என்ன செய்­வது என்­பது பற்றி நபி­ய­வர்கள் ஸஹா­பாக்­க­ளிடம் ஆலோ­சனை கேட்­டார்கள். “அல்­லாஹ்வின் திருத்­தூ­தரே, அவர்­களோ சிறிய -– பெரிய தந்­தை­யரின் பிள்­ளை­க­ளா­கவும், உற­வி­னர்­க­ளா­கவும் நெருங்­கிய இன பந்­துக்­க­ளா­கவும் உள்­ளனர். ஆகவே, அவர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு தொகையைப் பெற்­றுக்­கொண்டால் காபிர்­க­ளு­ட­னான யுத்­தங்­க­ளுக்கு அது எமக்கு தக்க உத­வி­யாக அமையும் என நபி­தோழர் அபூ­பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் தனது ஆலோ­ச­னையை முன் வைத்­தார்கள். அவர்கள் நேர்­வழி பெற்று எமக்கு தக்க பல­மாக அமை­வ­தற்கும் இம்­மு­டிவு கார­ண­மாக அமையும் என்றும் கூறினார். உமர்(ரழி) கூறி­னார்கள்; நான் அபூ­பக்கர் (ரலி) அவர்­க­ளி­லி­ருந்தும் வேறு­ப­டு­கின்றேன். குறிப்­பிட்ட இன்ன கைதி­களை என்­னி­டத்­திலும், அலி(ரலி)களி­டத்­திலும், ஹம்ஸா (ரலி) விடத்­திலும் ஒப்­ப­டைக்க வேண்டும். அவர்­களின்  தலை­களை வெட்டி விட வேண்­டு­மென நான் கரு­து­கிறேன். நிரா­க­ரிக்கும் காபிர்­களின் தலை­வர்­க­ளா­கவும் தள­ப­தி­க­ளா­கவும் இருந்த இந்தக் கைதிகள் மீது நமது உள்­ளங்­க­ளுக்கு எந்த இரக்­கமும் இல்­லை­யென்­பதை அல்லாஹ் நன்கு அறிவான்.”

இந்த விஷ­யத்தில் அபூ­பக்கர் (ரலி) க்கும், உமர் (ரலி) க்குமி­டையே இருந்த கருத்து வேறு­பாடு இரு பக்­கத்­தி­லி­ருந்தும் எந்தப் பாவத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ட­வில்லை. இரு­வரும் தமது தனிப்­பட்ட கருத்தில் உறுதி பூண்­டி­ருந்­தார்கள். இதில் உண்­மையும் நியா­யமும் பொது­மக்­களின் நலனும் தங்­கி­யி­ருக்­கின்­ற­தெ­னவும் அவர்கள் இரு­வரும் நம்­பி­னார்கள்.

உஹத் யுத்­தத்­திற்­கான ஏற்­பாட்­டின்­போது…

உஹத் யுத்­தத்­திற்­கான ஏற்­பாட்­டின்­போது முஸ்­லிம்கள் மதீனா நகரை விட்டு வெளியே செல்­லாது தடை­களை ஏற்­ப­டுத்தி அர­ணிட்டு தமது நிலை­களை பலப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென்­பது இறைத்­தூதர் (ஸல்) அவர்­களின் கருத்­தாகும். இப்­படிச் செய்­யும்­போது காபிர்கள் தமது கூடா­ரங்­க­ளி­லேயே வீணாக தங்­கி­யி­ருக்க வேண்­டி­வரும். அல்­லது அவர்கள் மதீனா மீது தாக்­குதல் தொடர்ந்தால், முஸ்­லிம்கள் பாதை தடை­க­ளி­லி­ருந்து கொண்டே அவர்­களை எதிர்த்துப் போரா­டலாம். பெண்­களும் தமது வீட்டுக் கூரை­க­ளி­லி­ருந்து கொண்டே தாக்­குதல் நடத்­தலாம் எனவும் இறைத்­தூதர் (ஸல்) கருத்துத் தெரி­வித்­தார்கள்.

ஆனால் ஸஹாபாத் தோழர்­களில் ஒரு குழு­வினர் முஸ்­லிம்கள் மதீ­னாவை விட்டு வெளியே சென்று போர்க்­க­ளத்தில் எதி­ரி­களைச் சந்­திக்க வேண்­டு­மென விடாப்­பி­டி­யாக நின்று இறைத்­தூதர் (ஸல்) அவர்­களை வலி­யு­றுத்­தி­னார்கள். பெரும்­பான்­மை­யான தோழர்­களின் வாக்­க­ளிப்பின் மூலம் இறைத்­தூதர் (ஸல்) அவர்­களின் அபிப்­பி­ராயம் தோற்­க­டிக்­கப்­பட்­டது. தமது தலை­வரின் கருத்­தி­லி­ருந்து தமது கருத்து வேறு­ப­டு­வதை வெளிப்­ப­டை­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்தும் அவர்­களை எந்த சக்­தியும் தடுத்து நிறுத்­த­வில்லை.

 

பனூ­கு­றைலா யுத்­தத்­தின்­போது…..

இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோழரை அழைத்து மக்­க­ளுக்கு பின்­வ­ரு­மாறு கூறு­மாறு கட்­ட­ளை­யிட்­டார்கள். ‘உங்­களில் செவி­ம­டுப்­போரும், கீழ்ப்­ப­டி­வோரும் அஸர் தொழு­கையை பனூ­கு­றை­லாவில் தொழ வேண்டும்’. முஸ்­லிம்கள் உட­ன­டி­யாக இறைத்­தூதர் (ஸல்) அவர்­களின் இக்­கட்­ட­ளையை நிறை­வேற்ற  முற்­பட்­டார்கள். அவர்கள் போர்க்­க­ளத்தை நோக்கி அணி வகுத்துச் செல்­கின்­ற­போதே இடை­வெ­ளியில் அஸர் தொழு­கை­யு­டைய நேரம் வந்து விட்­டது. “நமக்குக் கட்­ட­ளை­யி­டப்­பட்­டி­ருப்­பது போன்று நாம் பனூ குறைஸா என்ற இடத்தில்தான் ‘அஸர்’ தொழுகையை நிறைவேற்றுவோம் என சிலர் கூறினார்கள்.” அவர்களில் சிலரோ இஷா தொழுகையின் நேரம் முடிந்ததன் பின்புதான் ‘அஸர்’ தொழுகையை தொழுதார்கள். “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டிருக்கவில்லை. நம்மை எவ்வளவு சீக்கரமாகப் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் போகும்படி செய்வதற்காகவே அவர்கள் இப்படி கூறினார்கள்” என்பதாக மற்றொரு சாரார் கருதினார்கள். ‘அர்ரஹீகுல் மஹ்தூம்’ (ஸபியுர் ரஹ்மான் முபாரக்பூரி பக்.32) அவர்கள் போகும் வழியிலேயே அஸர் தொழுகையை நிறைவேற்றினார்கள். ஆனால் இவ்விரு பிரிவினரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களினால் குற்றஞ்சாட்டப்படவில்லை. ஏனெனில் அவர்கள் இரு சாராருமே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து தாம் புரிந்துகொண்ட விதத்திற்கேற்ப அதனை அமுல்படுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இப்பிரச்சினை சமர்ப்பிக்கப்பட்டபோது அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இரு பிரிவினர்களின் செயல்களையும் சரி கண்டார்கள். பிற்காலத்தில் வந்த சன்மார்க்க அறிஞர்களும் இத்தீர்ப்பையே வலியுறுத்தியுள்ளார்கள்.

தொடரும்...
-Vidivelli