Verified Web

அதிசய பானம் தாய்ப்பால்

2018-07-03 04:45:33 Administrator

ஹாருன் யஹ்யா

"நாம் மனி­த­னுக்கு தன் பெற்றோர் (இரு­வ­ருக்கும் நலம் செய்ய வேண்­டி­யது) பற்றி வஸிய்­யத்துச் செய்(து போதித்)தோம்.

அவ­னு­டைய தாய் பல­ஹீ­னத்தின் மேல் பல­ஹீனம் கொண்­ட­வ­ளாக (கர்ப்­பத்தில்) அவனை சுமந்தாள்.

இன்னும் அவ­னுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வரு­டங்கள் ஆகின்­றன.

ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்­றோருக்கும் நன்றி செலுத்­து­வா­யாக¢ என்­னி­டமே உன்­னு­டைய மீளுதல் இருக்­கி­றது." (குர்ஆன் 31:14)

அல்­லாஹ்­வினால் படைக்­கப்­பட்ட ஈடு இணை­யற்ற தாய்ப்­பா­லா­னது குழந்­தை­க­ளுக்கு அவ­சி­ய­மான சக்­தியை பூர்த்தி செய்­யக்­கூ­ய­தா­கவும் குழந்­தை­களை நோயி­லி­ருந்து காப்­பாற்­றக்­கூ­டி­ய­தா­கவும் காணப்­ப­டு­கி­றது.

தாய்ப் பாலில் காணப்­படும் சத்­துகள் சரி­யான அளவில் காணப்­ப­டு­வதால் குழந்­தையின் வளர்ச்­சி­ய­டை­யாத உட­லுக்கு ஏற்­ற­தாக காணப்­ப­டு­கி­றது. அதே­நேரம் தாய்­ப்பாலில் சத்­துகள் நிறைந்து காணப்­ப­டு­வதால் அவை மூளை செல்­களின் வளர்ச்­சியை அதி­கப்­ப­டுத்தி நரம்பு தொகு­தி­யையும் வளர்ச்­சி­ய­டைய செய்­கி­றது.

ஒரு மனி­தனால் தற்­கால தொழி­நுட்­பத்தை கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­களால் இந்த அதி­சய உணவை ஈடு­செய்ய முடி­ய­வில்லை.

தாய்­ப்பாலால் குழந்தை பெற்று கொள்ளும் நன்­மை­களின் பட்­டியல் அன்­றாடம் நீண்டு கொண்டே போகி­றது. தாய்ப் பால் ஊட்­டப்­பட்ட குழந்­தைகள் சமி­பாடு மற்றும் சுவாச தொகு­தி­களில் ஏற்­படும் தொற்­று­நோய்­க­ளி­லி­ருந்தும் பாது­காக்­கப்­ப­டு­வ­தாக சமீ­பத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. அதற்கு காரணம் தாய்­ப் பா­லி­லுள்ள எதிர்ப்பு சக்­திகள் தொற்று நோய்­க­ளுக்கு எதி­ராக நேர­டி­யான பாது­காப்பை வழங்­கு­கி­றது.

தாய்ப்­பா­லி­லுள்ள மற்ற நோய் எதிர்ப்பு கார­ணிகள் கேடு விளை­விக்க கூடிய பக்­டீ­ரியா, வைரஸ்­க­ளுக்கு எதி­ராக தடுப்பு அமைப்­ப­துடன் நல்ல பக்­டீ­ரி­யாக்­க­ளான நோமல் புளோரா அனு­ம­திப்­ப­தற்­கான சிறந்த சூழலை ஏற்­ப­டுத்­து­கி­றது. மேலும் தாய்ப் பாலில் காணப்­படும் சில கார­ணிகள் தொற்று நோய்க்கு எதி­ராக நோய் எதிர்ப்பு கார­ணி­யாக தயார்­ப­டுத்­து­வ­துடன் அதை முறை­யாக தொழிற்­பட உத­வு­வ­தாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன.

தாய்ப் பால் விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளதால் அவை மிக இல­கு­வாக சமி­பா­ட­டை­ய­கூ­டிய உண­வாக காணப்­ப­டு­கி­றது. அவை சத்து நிறைந்து காணப்­ப­டுவது மட்­டு­மல்ல அவை குழந்­தையின் மிக மென்­மை­யான சமி­பாட்டு தொகு­தியில் இல­கு­வாக சமி­பாடு அடை­கி­றது. குழந்­தைகள் சமி­பாட்­டிற்­காக குறைந்­த­ளவு சக்­தியே செல­வி­டு­வதால் அந்த சக்­தியை கொண்டு உடலின் மற்ற செயல்­க­ளுக்கும் மற்ற பாகங்கள் வளர்ச்­சி­ய­டை­யவும் பாவிக்­கப்­ப­டு­கி­றது.

குறை­மாத குழந்­தை­களை ஈன்ற தாய்­மார்­களின் பாலா­னது குழந்­தையின் தேவை­களை ஈடு­செய்யும் முக­மாக கொழுப்பு - புரதம் - சோடியம் - குளோரைட் மற்றும் இரும்பு சத்­து­களை அதி­க­ள­வாக கொண்டு காணப்­படும். உண்­மையில் தாய்ப்பால் ஊட்­டப்­பட்ட குறை­மாத குழந்­தையின் கண் வளர்ச்­சி­யா­னது சிறப்­பாக இருப்­ப­தோடு அவைகள் சிறந்த சிந்­தனை ஆற்றில் சிறப்­பாக இருப்­ப­தாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்கு மேலும் பல ஆற்­றல்கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பிறந்த குழந்­தைக்கு தாய்ப்பால் அத்­தி­ய­வ­சி­ய­மா­ன­தாக இருப்­ப­தற்கு காரணம் அதில் ஒமேகா-3 ஒயில் அல்பா லினோலிக் அசிட்கள் இருப்­ப­தா­லே­யாகும். அவை மனித மூளை மற்றும் கண்­வி­ழித்­தி­ரைக்கு தேவை­யான பொரு­ளாக இருப்­ப­தோடு புதி­தாக பிறந்த குழந்­தையின் பார்­வையில் அவை மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. ஒமேகா-3 கரு­வுற்ற கால­கட்­டத்­திலும் குழந்­தையின் ஆரம்ப கால­கட்­டங்­க­ளிலும் மூளையும் நரம்பும் சாதா­ர­ண­மாக வளர தேவைப்­ப­டு­கி­றது. விஞ்­ஞா­னிகள் ஒமேகா-3 இயற்­கை­யா­கவும் சிறந்த சேமிப்பு கிடங்­கா­கவும் தாய்ப்பால் இருப்­பதால் அதை மிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றார்கள்.

மேலும் பிரிஸ்டல் பல்­க­லை­கழ விஞ்­ஞா­னிகள் மேற்­கொண்ட ஆய்வில் தாய்ப்­பாலின் நீண்ட கால நன்­மையின் கார­ண­மாக அவை இரத்த அழுத்தம் கட்­டுப்­ப­டுத்­து­வ­துடன் இதயம் சம்­பந்­த­மான பாதிப்­பு­களை குறைக்­கி­றது. ஆய்வு குழுவின் அறிக்கை தாய்ப்­பாலின் பாது­காக்கும் தன்மை அது கொண்­டுள்ள சத்­தி­லி­ருந்து வரு­வ­தாக கூறு­கி­றது. தாய்ப் பால் கொடுக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு இதயம் சம்­பந்­த­மான நோய்கள் வரு­வது குறைவு என்று மருத்­துவ அறிக்கை கூறு­கி­றது. தாய்ப் பாலில்லோன்ங் செயின் பொலி­அன்­செ­டு­ரே­டட்­பெட்டி அசிட்கள் காணப்­ப­டு­வ­தால்-­இவை நரம்­புகள் இறுக்­க­ம­டை­யாமல் காப்­பாற்­று­கி­றது.- அதை போன்று தாய்ப் பால் ஊட்­டப்­பட்ட குழந்­தைகள் சோடி­யத்தை குறை­வாக பெற்­றுக்­கொள்­வதால் -இவை இரத்தம் அழுத்தம் ஏற்­பட கார­ண­மாக குறைக்­கப்­ப­டு­கி­றது. அதன் கார­ண­மாக அவை நிறை அதி­க­ரிக்­கச் செய்வதால் தாய்ப்பால் இத­யத்­திற்கு பய­ன­ளிக்­கி­றது.

மருத்­துவர் லிசா மார்டின் தலை­மையின் கீழ் அமெ­ரிக்­கா­வி­லுள்ள சின்­சி­னாட்டி குழந்தை மருத்­து­வ­ம­னையின் மருத்­துவர் குழு மேற்­கொண்ட ஆய்வில் தாய்ப் பாலில் அடி­பொ­னக்டின் என்று அறி­யப்­பட்ட புரத ஹோமோன்கள் அதி­க­மாக காணப்­ப­டு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அடி­பொ­னக்டின் அளவு இரத்­தத்தில் அதி­க­மாக காணப்­பட்டால் இத­யத்தில் ஏற்­படும் ஆபத்­துகள் குறை­கி­றது. உடல் பரு­ம­னா­ன­வர்­க­ளிலும் மார­டைப்பு ஆபத்­துள்­ள­வர்­க­ளி­டமும் அடி­பொ­னக்­டினின் அளவு குறைந்து காணப்­ப­டு­கி­றது. இதன் மூலம் பரு­மனான குழந்­தை­களில் ஹோமோன் குறை­வ­தற்கும் தொடர்பு இருப்ப­தாக நிரூ­பிக்­கப்ட்­டுள்­ளன. மேலும் அவர்­களின் ஆய்வின் போது தாய்ப்­பாலில் காணப்­படும் லெப்டின் என்ற மற்­றொரு ஹோமோ­னுக்­கும் பெட் மெட­போ­லிசம் தொட­ர்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. உடலில் கொழுப்பு இருப்­பதை தெரி­விக்கும் சாத­ன­மாக லெப்டின் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மருத்­துவர் மார்னெனின் கூறு­வ­தா­வது தாய்ப்­பாலின் மூலம் பெறப்­பட்ட இத்­த­கைய ஹோமோன்கள் அள­வுக்கு அதி­கமாக பரு­ம­னா­வது -இரண்டாம் நிலை சக்­கரை வியாதி- இன்­சு­லினை எதிர்­ப்பது போன்ற நோய்­களால் ஏற்­படும் ஆபத்தை குறைக்­கி­றது.

"பசு­மை­யான உணவை" பற்­றிய உண்­மைகள்

தாய்ப்­பாலின் நன்­மைகள் இத்­துடன் முடி­வ­டைந்து விடு­வ­தில்லை. குழந்­தையின் ஆரோக்­கி­யத்தில் அதன் பங்­கா­னது அந்த குழந்தை கடக்கும் ஒவ்­வொரு கால­கட்­டத்­திற்கு ஏற்ப அந்த உணவு முறைகள் மாற்­ற­ம­டை­வ­துடன் அந்த குறிப்­பிட்ட கால­கட்­டத்­திற்கு ஏற்ப பாலின் உள்­ள­டக்­கமும் மாற்­ற­ம­டை­கி­றது. எல்லா நேரத்­திலும் தகுந்த வெப்­ப­நி­லையில் தயா­ராக காணப்­படும் தாய்ப்­பா­லா­னது மூளை வளர்ச்­சியில் பெரும் பங்கு வகிக்­கி­றது. ஏனெனில் அது கொண்­டுள்ள சீனி மற்றும் கொழுப்­பு­மாகும். மேலும் கல்­சியம் போன்­ற­வைகள் குழந்­தையின் எலும்பு வளர்ச்­சியில் பெரும் பங்கு வகிக்­கி­றது.

இதை பால் என்று அழைக்­கப்­பட்ட போதிலும் இந்த அதி­ச­ய­மான பானத்தின் பெரும்­ப­குதி தண்­ணீ­ராகும். இது முக்­கிய பண்­பாக காணப்­ப­டு­கி­றது ஏனெனில் உணவை தவிர்­ந்து குழந்­தை­க­ளுக்கு தண்ணீர் என்ற வகையில் திரவம் தேவைப்­ப­டு­கி­றது. தாய்ப்­பாலை தவிர்ந்து வேறு எந்த உண­விலோ அல்­லது தண்­ணீ­ரிலோ முழு சத்­து­க­ளையும் காண­மு­டி­யாது. இருப்­பினும் தாய்ப்­பாலில் -90 வீதம் தண்ணீர் காணப்­பட்­ட­போ­திலும் அது குழந்­தையின் தண்ணீர் தேவையை சுகா­தார முறையில் பூர்த்தி செய்­கி­றது.

தாய்ப்­பாலும் அறிவும்

மற்ற குழந்­தை­களை விட தாய்ப் பாலூட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு வளர்ச்சி அதி­க­மாக இருப்­பதை விஞ்­ஞான ஆய்­வுகள் காட்­டு­கின்­றன. தாய்ப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­க­ளையும் பால்மா ஊட்­டப்­பட்ட குழந்­தை­க­ளையும் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­திய கெண்­டகி பல்­க­லை­க்க­ழ­கத்தை சேர்ந்த ஜேம்ஸ் அன்­டர்சன் என்­பவர் மற்ற குழந்­தை­களை விட தாய்ப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­களின் அறிவு திறன் 5 புள்­ளிகள் அதி­க­மாக இருப்­பதை நிரூ­பித்தார். 6 மாதம் வரை தாய்ப்­பா­லுட்­டப்­பட்ட குழந்­தையின் அறிவு மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் 8 வாரங்­க­ளுக்கு குறை­வாக பாலூட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு எவ்­வித அறிவில் எவ்­வித முன்­னேற்­றமும் இல்­லாமல் இருப்­பது இந்த ஆய்வின் முடி­வாக இருக்­கி­றது.

தாய்ப்பால் புற்­று­நோயை கட்­டுப்­ப­டுத்­து­கி­றதா?

பல ஆய்­வுகள் நடத்­தப்­பட்டு பல கட்­டு­ரைகள் வெளி­யி­டப்­பட்­ட­வைகள் அனைத்தும் தாய்ப்­பா­லா­னது குழந்­தை­களை புற்­று­நோ­யி­லி­ருந்து காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருப்­பதை நிரூ­பித்­துள்­ளன. இந்த செயல்­முறை இன்னும் முழு­மை­யாக புரிந்து கொள்­ளப்­ப­ட­வில்லை. சோதனை கூடங்­களில் உரு­வாக்­கப்­பட்ட கட்டி செல்­களை தாய்ப்­பாலில் காணப்­படும் புர­தங்கள் மற்ற ஆரோக்­கி­ய­மான செல்­க­ளை­விட்டு விட்டு அழிப்­பதை விஞ்­ஞா­னிகள் பெரும் சக்தி இருப்­பதாக சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள். சுவீ­ட­னி­லுள்ள லுன்ட் பல்­க­லை­க்க­ழகத்தின் தொற்­றுநோய் சம்­பந்த­மான பேரா­சி­ரியர் கத­ரீனா சவன்போ என்பவரின் தலை­மையின் கீழுள்ள ஆராய்ச்சி குழு தாய்­பா­லி­லுள்ள அதி­ச­யமான இர­க­சி­யங்­களை கண்­டு­பி­டித்­தது.

இந்த லுன்ட் பல்­க­லை­க்க­ழ­கத்தின் குழு தாய்ப்­பா­லா­னது பல­வ­கை­யான புற்று நோய்­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பை வழங்­கு­வதை அதி­ச­ய­மான கண்­டு­பி­டிப்பு என கூறு­கி­றது.

முதலில் ஆராய்­ச்சி­யா­ளர்கள் புதி­தாக பிறந்த குழந்­தை­யி­லி­ருந்து எடுத்த குடல் முகாஸ் செல்­களை தாய்ப்­பா­லோடு சேர்த்து பரி­சோ­தித்­தனர். நிமோ­னியா என்ற னும­கோகஸ் பக்­டீ­ரி­யா­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதிப்­பு­களை தாய்ப்­பா­லா­னது மிக சிறந்த முறையில் தடுத்து நிறுத்­தி­யதை கண்­ட­றிந்­தார்கள். மேலும் தாய்ப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு புட்­டிப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­களை விட குறைந்­த­ளவு கேட்டல் சம்­பந்­த­மான குறை­பா­டு­களும் சுவாச தொற்று நோய்­களும் ஏற்­ப­டு­கி­றது.

பல ஆய்­வு­க­ளுக்கு பிறகு தாய்ப்­பா­லா­னது குழந்­தை­க­ளுக்கு புற்று நோய் ஏற்­ப­ட­வதை தடுக்­கி­றது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. மேலும் தாய்ப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­களை விட புட்­டிப்பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு குழந்தை பரு­வத்தில் புற்று நோய் வரு­வது 9 வீதம் அதிக வாய்­ப்பி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த பெறுபேறுகள் மற்ற புற்றுநோய் வகைகளுக்கும் பொருந்தும். தாய்ப்பாலானது புற்றுநோய் செல்களை சரியாக இனங்கண்டு அவற்றை அழிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாய்ப்பாலில் அதிகமாக காணப்படும் அல்பாலக் (அல்பாலக்டல்புமின்) என்ற பொருள் புற்றுநோய் செல்களை இனங்கண்டு அவற்றை அழிக்கிறது. பாலில் காணப்படும் சுகர் லக்டோஸ் உருவாக்க பயன்படும் புரதத்தாலேயே அல்பா-லக் உருவாக்கப்படுகிறது.

இந்த இணையற்ற அருள் அல்லாஹ்வின் பரிசாகும்

இந்த தாய்ப்பாலின் இன்னொரு அற்புதம் அது இரண்டு ஆண்டுகள் ஊட்டப்படுவதாகும்  இந்த முக்கியமான தகவல் விஞ்ஞானத்தால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த உண்மையை குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னே கூறிவிட்டது.

'தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்' (குர்ஆன் 2:233)

அதைப் போன்று தாயானவள் பாலை உற்பத்தி செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. ஆதரவற்ற குழந்தைக்கு தேவையான சத்துகளை பட்டியலிடுவதுமில்லை. அது தேவைகளை நன்கு அறிந்து எல்லாவற்றுக்கும் அருள் செலுத்துகின்ற ஆற்றல்மிக்க அல்லாஹ் தான் தாயின் உடலில் குழந்தைக்கு தேவையான பாலை உருவாக்குகிறான்.
-Vidivelli