Verified Web

முறை தவறிச் செல்லும் பிறை விவகாரம்

2018-07-03 00:45:57 M L Faisaal

 

நோன்புப்  பெருநாள் தினத்­தினை  தீர்­மா­னிப்­பதில்   மீண்டும்  ஒரு முறை  பிரச்­சினை ஒன்­றினை பிறைக் குழுவும் ஜம்­இய்­யதுல் உலமா சபையும் எதிர் கொண்­டதன்  மூலம் எதிர்­கா­லத்தில் பிறை­பற்­றிய தீர்க்­க­மான முடிவின் தேவை­யினை  உணர்த்­தி­யுள்­ளது.

இலங்­கையில்  மாதாந்தம்  பிறைக்­குழு மூல­மாக  பிறை தீர்­மா­னிக்­கப்­பட்டு  விட­யங்கள் முன்­னெ­டுக்கப் படு­கின்­றமை  நடை­மு­றையில் உள்­ளது.   ஆனால்  ரமழான் மற்றும் ஹஜ் காலங்­களில் காணப்­படும் பிறை  பலரின் எதிர்­பார்­புக்­களைப்  பெறு­வ­தனால்   அதன் முக்­கி­யத்­து­வத்­தினை அறி­யலாம்.

பின்­வ­ரு­வன  போன்ற சில  ஆதா­ரங்கள் பிறை பற்­றிய ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அல்­குர்­ஆனில்   "உங்­களில் எவர் அம்­மா­தத்தை அடை­கி­றாரோ, அவர் அம்­மாதம் நோன்பு நோற்க வேண்டும்;" (2:185)

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள், நீங்கள் பிறையைக்  கண்டு நோன்பு நோற்றுக் கொள்­ளுங்கள், பிறையைக்   கண்டு  நோன்­பினை விடுங்கள், உங்­க­ளுக்கு மேகக்  கூட்­டங்கள் மூல­மாக பிறையைப்  பார்க்க முடி­யாமல் போனால்  “ஸஃபான்” மாதத்­தினை 30 ஆக  பூர்த்­தி­யாக்கிக் கொள்­ளுங்கள்.  (நூல் :அஹமத்)

ரம­ழானின் இறுதி  நாளில் மனி­தர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் அபிப்­பி­ராய பேதங்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தார்கள்.  அப்­போது (அயல் கிரா­மத்­தி­லி­ருந்து) இரு அர­பிகள் நபி  (ஸல்) அவர்­க­ளிடம்  வந்து நேற்று மாலை பிறை  கண்­ட­தாகத் தெரி­வித்­தனர். இதனை ஏற்றுக்கொண்ட  நபி­ய­வர்கள்    நோன்­பினை விடு­மாறும்  மற்றும்  மறு நாட்­காலை தொழும்  இடத்­திற்கு செல்­லு­மாறும் மனி­தர்­களை ஏவி­னார்கள். ஆதாரம்: அஹமத், அபூ­தாவூத்)

இது போன்ற பல ஆதா­ர­பூர்­வ­மான ஹதீஸ்கள் காணப்­ப­டு­கின்­றன. மேலே கூறிக் காண்­பிக்­கப்­பட்­டுள்ள  ஹதீஸ்­களை விளங்­கி­யதன்  அடிப்­ப­டையில் ஆரம்ப கால இஸ்­லா­மிய “ஷரீஆத்”  துறை அறி­ஞர்கள் மத்­தியில் ஒரு நாட்டில் காணப்­பட்ட பிறை ஏனைய  நாடு­களும் பின்­பற்ற வேண்டும் என்­பதில் சில கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தனர் என்­ப­தையும் பின்னர் பிராந்­தி­யங்­க­ளாக பிர­தே­சங்­களை வரை­யறை செய்­வதில் சிலர்  முடி­வு­க­ளுக்கும் வந்­துள்­ள­தையும்   அறி­யலாம்.

இருப்­பினும் பிறை பற்­றிய  அறி­விப்பை    இஸ்­லா­மிய நாடு­களின்  ஆட்­சி­யா­ளர்­களே உத்­தி­யோக பூர்­வ­மாக முன்­னெ­டுப்பர்.

உலகில் மூன்று அடிப்­ப­டை­களில் ஒன்றை பின்­பற்றி பிறை தீர்­மா­னிக்­கப்­பட்டு நடை­முறைப் படுத்­தப்­ப­டு­கின்­றது.

01.உள்­நாட்டு பிறையின் அடிப்­ப­டையில்.

 2.சர்­வ­தேச பிறையின் அடிப்­ப­டையில்.

03.வானிலை அல்­லது ஹிஜ்ரி கணிப்­பீட்டின் மூலம்.

இலங்­கையின்  பிறையைத்  தீர்­மா­னிப்­பதில் உள்­நாட்டுப் பிறை முக்­கியப் படுத்தப்படு­கின்­றது. பிறைக் குழு­வுடன் இணைந்து   ஜம்­இய்­யதுல் உலமா சபையும் மற்றும் முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளத்தின் பிர­தி­நி­தி­களும்    கூட்­டாக உள்­நாட்டு பிறை பற்­றிய தீர்­மா­னத்­தினை மக்­க­ளுக்கு கடந்த பல தசாப்­தங்­க­ளாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்புச் செய்­வதை   சகல முஸ்­லிம்­களும் ஏற்று நடை முறைப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றனர்.

மேலும் இலங்­கையில் காணப்­படும்  ஜமா­அத்­க­ளான  தப்லீக், ஜமா­அத்தே இஸ்­லாமி,  தெளஹீத் ஜமாஅத், தரீக்கா  அமைப்­புக்கள் மற்றும் மேமன் சமூகம் போன்ற சகல “ஜமா­அத்”­களும் தேசிய பிறைக்  குழுவின் தீர்­மா­னத்­தினை ஏற்று நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மிகப் பெரிய வெற்­றி­யாகும் .

இவ்­வாறு உள்ள நிலையில் சர்­வ­தேச மற்றும் கணிப்­பீட்டு முறை­களைப்  பின்­பற்றி பெரு­நாளை தீர்­மா­னித்து  நடை­றைப்­ப­டுத்தும் சில குழுக்­களும்  அல்­லது குறிப்­பிட்ட அமைப்­புக்­களும்  இல்­லா­மலும் இல்லை .

இவர்கள் எந்த அடிப்­ப­டை­யினை பின்­பற்றி  பிறையை தீர்­மா­னித்­தாலும்   தமது  அடிப்­ப­டை­யினை   பின்­பற்­று­மாறு  கோஷங்­களை திணிக்­காது   தமது ஆய்­வுக்­குட்­பட்ட வகையில் அதனை முன்­னெ­டுக்­கின்­றனர். குறிப்­பாக சர்­வ­தேச பிறையின் அடிப்­ப­டையில் உள்­ள­வர்கள்  தேசிய பிறையின்  பக்கம் தமது மூக்­கினை நுழைப்­பதும் இல்லை அத்­தீர்­மா­னத்­தினை வேண்டி நிற்­பதும் இல்லை.

இந்­நி­லையில் 98 வீத­மான முஸ்­லிம்கள் உள்­நாட்டுப் பிறை சார்ந்து கரு­ம­மாற்றும் போது பிறை விவ­கா­ரத்தில் அவ்வப் போது சில பிரச்­சி­னைகள் எழா­மலும் இல்லை.

எடுத்துக்காட்­டாக பின்­வரும் சில வர­லாற்றுத்  தக­வல்­களை சுட்டிக் காட்ட முடியும்.

1992 ஆம்  ஆண்டு காலப் பகு­தியில் தென்­பட்ட பிறையை  அறி­விப்புச் செய்­வதில்  பிரச்­சினை ஏற்­பட்ட பொழுது அன்­றைய அமைச்சர் மர்ஹூம்  எம்.எச்.முஹம்மத்  தலை­யிட்டு பெருநாள் என அறி­விப்புச்  செய்­தமை, IPKF இலங்­கையில் பணி  புரிந்த 1988/1990 காலப்  பகு­தியில் புல்­மோட்டைப்  பிர­தே­சத்தில் காணப்­பட்ட பிறை  “போலீஸ்” அதி­கா­ரிகள் மூலம் உறு­திப்­ப­டுத்தி அறி­விக்­கப்­பட்டும் ஏற்றுக் கொள்­ளாமை, 2000ஆ ம் ஆண்டு காலப் பகு­தியில்  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் முன்னாள்  பொதுச்  செய­லாளர்  மர்ஹூம் எம்.ஜே.ரியாழ் மௌலவி 18 நிமி­டத்­திற்குள்  தென்­பட்ட பிறையை  ஏற்றுக் கொண்டு அறி­வித்தார் என அவர்  தாக்­கப்­பட்­டமை, 2001ஆம்  ஆண்டு காலப் பகு­தியில்  முஸ்லிம் கலா­சார அமைச்­ச­ராக இருந்த அமைச்சர்  ரவூப் ஹக்கீமின் விசேட அறி­வு­றுத்தல் மூலம் நோன்பு பிடிக்கும் நேரத்தில் பெருநாள் என்று விசேட அறி­விப்புச்  செய்­தமை, 2003/2004 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் பேரு­வளை பிர­தே­சத்தில் கண்ட பிறையை  ஏற்றுக்கொள்ள சந்­தர்ப்பம் கொடுக்கப் படாமை, அதே போன்று 2013 ஆண்டு கிண்­ணி­யாவில் தென்­பட்ட பிறையை  அங்­குள்ள உல­மாக்கள் உறுதிப்படுத்­தியும் ஏற்றுக்கொள்ள மறுத்­தமை போன்ற சில தக­வல்­களை படிப்­பி­னைக்­காகக்  கொள்­ளலாம்.

இவ்­வாறு பிரச்­சி­னைகள் காலத்துக்குக் காலம் ஏற்­ப­டு­வதை  உணர்ந்த உலமா சபை பிறையைத்  தீர்­மா­னிப்­ப­தி­லுள்ள பிரச்­சி­னை­களைக்   கவ­னத்திற் கொண்டு பிறைக் குழுவில் அங்கம் வகிக்கும் சக­லரின் பங்­கு­பற்­று­த­லுடன் 2011 ஆம் ஆண்டு கொழும்பு ரண்­முத்து “ஹோட்­டலில்” பின்­வரும் ஷர்த்­துக்­களின் அடிப்­ப­டையில் தலைப்­பி­றையை   ஏற்றுக் கொள்ளல் என்ற   தீர்­மானம் ஒன்­றினை வெளி­யிட்­டது.

1. உள்­நாட்டில் காணப்­படும் பிறையின் அடிப்­ப­டையில் தீர்­வுக்கு வரல்.

2. வெற்றுக் கண்­களால் பார்­க்கப்­படும் பிறையை மாத்­திரம்  ஏற்றுக் கொள்ளல்.

3. சாட்­சி­களைக் கொண்டு உறு­திப்­ப­டுத்­துதல்.

04. வானிலை அவ­தா­னிகள் மூலம் குறிப்­பிட்ட நாளில்  பிறை பார்க்க முடி­யாது என்று அறி­வு­றுத்தி இருந்தால்  அதனைக்  கவ­னத்திற் கொள்ளல்.

05. பிறை உறுதிப்படுத்தப்படாத போது அதனைக் கண்­டவர்  மாத்­திரம் நோன்­பினை நோற்­காது  அடுத்து  வரும் நாளில்  பெரு­நாளை எல்­லோ­ருடன் சேர்ந்து கொண்­டா­டுதல்.   

இவ்­வாறு இருந்தும் 2011 ஆம் ஆண்­டிற்குப் பிறகு பல பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட வண்­ணமே இருக்­கின்­றன என்­பது கவ­லையே .

பிறையைத் தீர்­மா­னித்து அறி­விப்புச்  செய்­வதில் பெரியபள்­ளி­வா­சலின்

பங்­க­ளிப்பு

கடந்த பல தசாப்த கால­மாக  தொடர்பு சாதன வசதி இல்­லாத காலத்­தி­லி­ருந்து நாட்டு மக்­களின் மார்க்க கட­மை­யினை சிறப்­பாக முன்­னெ­டுப்­ப­தற்­காக வேண்டி பிறையைத் தீர்­மா­னித்து பொறுப்­புடன் அறி­விக்கும்  பணி­யினை  பெரிய பள்­ளி­வாசல் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா நிறு­வன ரீதி­யான பங்­க­ளிப்­பு­களை ஆரம்­பத்தில் செய்யாவிட்­டாலும்   எமது நாட்டின்  புகழ் பூத்த ஆலிம்­களின் தலை­மையின்  கீழ் பிறை பற்­றிய தீர்­மானம் எடுக்­கப்­பட்டு சிறு­பான்­மை­யாக வாழும் எமக்கு  மார்க்க விவ­கா­ரங்­களை முன்­னெ­டுக்கும்  செயற்­பாட்­டினை மேற்­கொண்டு வரு­கின்­றமை முக்­கி­ய­மான விட­ய­மாகும், பின்னர் ஜம்­இய்­யத்துல் உலமா இவ்­வி­ட­யத்தில்  தமது பிர­தி­நி­தி­க­ளையும்  அனுப்பி அதனை மார்­க்க­ரீ­தி­யான வழி­காட்­டு­த­லுடன் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மை­யினை அறி­யலாம்.

இத்­த­னைக்கும் பெரிய பள்­ளி­வாசல் பிறை பற்­றிய அறி­விப்­பினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மேற்­கொள்ள சட்­ட­ரீ­தி­யான உரி­மத்­தினை  பெற்­றுள்­ள­தாகத்  தெரி­ய­வில்லை . இருப்­பினும் நீண்ட காலம் அப்­ப­ணி­யினை  அவர்கள் முன்­னெ­டுப்­ப­தனால் பெரிய பள்­ளி­வா­ச­லினை மைய­மாகக் கொண்டே அப்­பணி நடை­பெற்று வரு­கின்­றமை நாட­றிந்த உண்­மை­யாகும்.

பிறையைத்  தீர்­மா­னிப்­பதில் உள்ள

பிரச்­சி­னைகள் என்ன ?

கடந்­த­கால அனு­ப­வங்­களை பார்க்கும்  போது நான்கு பிரச்­சி­னை­களை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்

01.சாட்­சி­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லுள்ள சிக்­கல்கள்.

02.குறிப்­பிட்ட நேரத்­திற்குள் பார்க்­கப்­பட்­ட­தாக தகவல் இல்­லாமை.

 03.தக­வல்கள் தூரப் பிர­தே­சங்­களில் இருந்து வரு­வ­தற்கு முன்பு பிறைக்­குழு கத­வினை மூடி­விடல்.

04. சாட்­சிகள் ஒரு ஜமா­அத்­தினை அல்­லது குழுவினை சேர்ந்­த­வர்கள்  என்ற பாகு­பாடு  அல்­லது சந்­தேகம்.

பிறையைக்  கண்ட சாட்­சி­களை உறு­திப்­ப­டுத்­துவதி­லுள்ள இஸ்­லா­மிய ஒழுங்கு விதிகள்;

 பிறையைக் கண்டு  நோன்பு நோற்றுக் கொள்­ளுங்கள் மேலும் பிறையைக் கண்டு  நோன்­பினை விடுங்கள்  என்ற ஹதீஸ் சக­ல­ரையும் பொதுமைப்படுத்தி கூறப்­பட்­டாலும் சிலர் அதனைக் கண்டு  அறி­விப்­பதன் மூலம் எல்­லோ­ருக்கும்  பொது­மை­யாக கொள்­ளப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் கண்­ட­வர்­களின் சாட்­சி­களை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

இதற்கு நபி­ய­வர்­களின் வாழ்வில் இருந்து படிப்­பினை பெறலாம்.  

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்   மனி­தர்கள் பிறையைக் கண்டு கொண்­டனர் பின்னர்   நபி (ஸல்) அவர்­க­ளிடம் பிறையைக்  கண்­ட­தாக  நான் அறி­வித்தேன்   அதனை ஏற்றுக் கொண்ட  நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்று பிற­ரையும் நோன்பு நோக்­கு­மாறு ஏவி­னார்கள். (ஆதாரம்: அபு தாவூத்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்

 நபி­யவர்­க­ளிடம்  நாட்டுப்புற அரபி ஒருவர்   தான்  இரவு பிறை கண்­ட­தாக கூறினார் அதற்கு நபி­ய­வர்கள் நீர் அல்­லாஹ்­வையும் அவ­னது தூத­ரையும் சாட்சி பகர்­கின்­றீரா? என வின­வி­னார்கள்  அதற்கு அவர் ஆம்  என பதில் உரைத்தார். பின்னர் பிலாலே!  நாளை  நோன்பு  நோற்­கு­மாறு மக்­க­ளுக்கு அறி­விக்­கவும் என்று கூறி­னார்கள் (ஆதாரம்: அபூ தாவூத், திர்­மிதி)

இவ்­விரு ஹதீஸும் பிறை பற்­றிய செய்தி வரும்  போது எவ்­வாறு நபி­ய­வர்கள்  அதனை உண்மைப்படுத்­தி­னார்கள் என்­பதை தெளி­வாக சொல்­லு­கின்­றன, முஸ்­லி­மாக இருப்­பது என்­பதே நீத­மா­னவன்  என்­ப­தற்கு  சிறந்த ஆத­ர­மாகும். 

2018 ஆம் ஆண்டு  “ஷவ்வால்”  பிறை  தீர்­மா­னிப்­பதில் ஏற்­பட்ட பிழை என்ன?

ரமழான் பிறையை  ஆரம்­பத்தில் கணிக்கும் போது   சில வேளை  கால நிலை சரி­யாக இல்­லா­த­தனால் பிழை நடந்­தி­ருக்­கலாம் எனக் கரு­திய   ஜம்­இய்­யதுல் உலமா  “ஷவ்வால்”  பிறை நோன்பு  28 இல் தென்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு  இருப்­ப­தனால்  பிறை பார்க்கும்படி கோரி­யுள்­ள­துடன் அதற்­கான சட்ட ஏற்­பா­டு­க­ளையும் உலமா சபை மிகத் தெளி­வாக  முன்­கூட்டி விப­ரித்­தி­ருந்­தது .

இந்த அறி­விப்பின் பின்னர்  பெரிய பள்ளி நிரு­வாகம்   அதனைத்  தீர்­மா­னிக்கும் பொறுப்பு எங்­க­ளுக்கே உரி­யது  ஏனை­ய­வர்கள் சொல்­வது போன்று   விடயம் கவ­னத்திற் கொள்­ளப்­பட முடி­யாது என்ற கருத்­துப்­பட   அறி­வித்­தி­ருந்­தது. இவ்­வ­றி­விப்­பா­னது  உலமா சபைக்கும்  பெரிய  பள்ளி   நிரு­வா­கத்­திற்கும் இடையில் பிறை பற்­றிய விவ­கா­ரத்தில் கருத்தொற்­றுமை அற்ற  நிலை இருப்­ப­தாகத்  தோன்­றி­யது. இது மக்கள் மத்­தியில் பாரிய சந்­தே­கத்­தி­னையும்  ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

குறிப்­பிட்ட  மணி நேரத்­திற்குள்  பிறை கண்ட  செய்தி  கிடைக்­காத  போது   அடுத்­தநாள் பிறை பார்க்­கு­மாறு கூட்­டாக அறிக்கை விட்டு 7.30 மணிக்கு  பிறைக்­கு­ழு­வினர் கலைந்து   சென்று விட்­டனர்.

இவ்­வ­றிக்கை  வெளி­யா­னதன் பிறகே  பல இடங்­களில் பிறை காணப்­பட்ட  செய்தி சாட்­சி­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட்டும்  பள்­ளி­வாசல்  கடிதத் தலைப்­புக்­களில் உறு­திப்­ப­டுத்­தியும், பிறை  கண்­ட­வர்கள் நேரில் வந்து விட­யத்­தினை கூறியும்  நின்­றனர். மாத்­தி­ர­மல்மால்,  சமூக வலைத்­த­ளங்­களின்  உத­வி­யுடன்   அறிக்­கை­களை  வெளி­யிட்டு  பிறையைக் கண்­ட­வர்கள் சாட்சி பகர்ந்தும்  கொண்­டி­ருந்­தனர்.

இருப்­பினும் பிறைக்  குழு­வி­னரால் பிறை ஏற்றுக் கொள்­ளப்­படவில்லை.

இவ்­வாறு உள்ள நிலையில் சாட்­சி­க­ளுடன் பெறப்­பட்ட  தக­வல்­களை ஏற்று சில கிரா­மங்கள் நோன்பு நோற்­காது அடுத்த நாள் எல்­லோ­ருடன் சேர்ந்தும், இன்னும் சில கிரா­மங்கள் அதே தினத்­திலும் பெருநாள்  கொண்­டா­டின. இன்னும் சில ஜமா­அத்கள்   தமது அங்­கத்­த­வர்­களை நோன்பு நோற்­காது அடுத்த நாள் எல்­லோ­ருடன் சேர்ந்து பெருநாள் கொண்­டா­டு­மாறும்  அறி­வு­றுத்­தியும்  இருந்­தன. 

பின்னர் பிறை ஏற்றுக் கொள்­ளப்­பட முடி­யா­மைக்­கான கார­ணங்­களை உலமா சபைத் தலை­வரின் “குத்பா” உரையில் இருந்து பின்­வ­ரு­மாறு அறிய முடிந்­தது. 

01. சவூதி அரே­பியா  தமது நாட்டில்  பிறை கண்ட செய்­தி­யினை  அறி­வித்­ததன் பிறகே இலங்­கை­யிலும்  பிறை  தென்­பட்ட தாக செய்தி வந்­தமை.

02. குறிப்­பிட்ட ஒரு குழு­வினர் அல்­லது அமைப்­பினர்  கண்ட தாக அறி­வித்­தமை.

3. பிறை கண்ட நேரங்­களில்  ஒழுங்­கீனம். 

4. பெண்­களின் “ஷஹா­தத்”­தினை ஏற்க   முடி­யாமை.

இதே­வேளை  உலமா சபையின் செயற்­குழு உறுப்­பி­னரும் அதன்  சமூக சேவை செய­லா­ள­ரு­மான மெள­லவி  நௌபர் (கபூரி) அவர்­களின் “குத்பா” உரை வித்­தி­யா­ச­மான பாங்கில் காணப்­பட்­டது.

பிறைக் குழு­விற்கு  தலைமை வகிப்­ப­வர்கள் சாட்­சி­யங்­களை ஏற்க மறுத்து விட்­டனர் என   குற்றம் சுமத்­தினார் .

இந்த அறிக்­கை­களை பார்க்கும் போது பிறையை   தீர்­மா­னிப்­பதில் ஒருமித்த கருத்து உலமா சபை­யி­டமும் மற்றும் பெரிய பள்ளி வாச­லி­டமும் காணப்­ப­ட­விலை   என்று  கருதத்  தோன்­று­கின்­றது.

2013 ஆம்  ஆண்டு கிண்­ணியா உலமா சபை  உறுதிப்படுத்­தியும் கூட அதனை ஏற்க மறுத்த அதே காரணம்   இம்­மு­றையும் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி என்றால் பிறையை  தீர்­மா­னிப்­ப­தற்கு வேறு ஏதும் கார­ணிகள் உண்டா? அல்­லது  வானியல் தக­வல்­களை மைய­மாகக்  கொண்டு மறை­மு­க­மாக செயற்­ப­டு­கின்­றார்­களா? அல்­லது  பிறை பற்­றிய “ஷஹா­தத்”­தினை கிளை உலமா சபை  மற்றும் பள்­ளி­வா­சல்கள்  ஏற்று அறி­வித்தும் ஏற்க மறுப்­பது  பிறைக்  குழு­வினர் மட்டும் தான்  நீத­மா­ன­வர்­களோ? அல்­லது வேறு ஏதும் கார­ணி­களை நபி­ய­வர்கள் காட்டிச்  சென்ற வழிக்கு அப்பால் வைத்­துள்­ள­னரா? முஸ்லிம்  மற்றும்  முஃமின்  என்­பதை விட ஏதும் ஜமா­அத்தின் உறுப்­பு­ரி­மை­யும்  நிபந்­த­னை­யாக இருக்­குமோ?

பெண்­களின் சாட்­சி­யத்­தினை பெரும்­பா­லான அறி­ஞர்கள் ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பெண்­கள்தான் பிறையை  கண்­டார்கள்  என்­ப­தற்­காக அதனை உதா­சீனம் செய்­யவும்  முடி­யாது அவர்­களின் “சஹா­தத்”­தினை ஏற்றுக்  கொள்­வ­தற்கு இஸ்­லாத்தில் நிறைய  வழி­காட்­டு­தல்கள் உள்­ளன.

இலங்­கையில் காணப்­படும் 4 இஸ்­லா­மிய “தஃவா” அமைப்­புக்­களை உலமா சபை ஏற்றுக் கொண்­டுள்ள நிலையில் அதில் அங்­கத்­துவம் பெறும் ஒருவர் பிறை பற்றி அறி­விப்புச்   செய்தால் குறிப்­பிட்ட ஒரு அமைப்­பி­னரே அச்­செய்­தி­யினை சொன்­னார்கள் என்று பிறை பற்­றிய சாட்­சியம் மறுக்­கப்­பட்டால் தாங்கள் அங்­கத்­துவம் பெறும் அமைப்­பினர் சாட்சி பகரும்  போது மாத்­திரம்  ஏற்றுக் கொள்­வீர்­களோ? இந்­நிலை தொடர்ந்தால் ஒவ்­வொரு அமைப்­பி­னரும் தமக்­கான பிறைக்  குழு­வினை நிறுவ வழி­காட்­டு­கின்­றீர்­களா?

இந்­நிலை தொட­ரக்­கூ­டாது, முஸ்லிம் உம்மா பிரி­வினைப்  பட்டு பல­வீன­மாகக்  கூடாது. கடந்த காலங்­களில் நடை­பெற்ற சம்­ப­வங்­களை வைத்து புதிய உபா­யங்­களை நிறுவி பிறையைத்  தீர்­மா­னித்து   நடை­மு­றைப்­ப­டுத்த  எல்­லோரும்  முன்­வரல் வேண்டும்.

பிறையைத்  தீர்­மா­னிப்­பதில் எதிர்­கா­லத்தில் கருத்திற் கொள்­ளப்­பட  வேண்­டிய முக்­கி­ய­மான சில  ஆலோ­ச­னைகள்:

01.பிராந்­திய பிறைக்  குழுக்­களை  கிராமம் மற்றும்  மாவட்­டங்கள் தோறும்  அமைத்தல்.

02.பள்­ளி­வாசல்  மற்றும் உலமா சபை பிர­தி­நி­திகள் அக்­கு­ழுக்­களில் இடம்­பெறல்.

03.இதற்­காக கிளை உலமா சபை­களை பயன்­ப­டுத்த முடியும் .

04.பிறை தென்­பட்ட செய்­தி­யினை பிராந்­திய பிறைக் குழுக்கள் சாட்­சிப்­ப­டுத்தி  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  தேசிய பிறைக் குழு­விற்கு தெரி­யப்­ப­டுத்தும்  செய்­தி­யி­னையே அறி­வித்தல்.

05.நேர­டி­யாக தேசிய பிறைக்குழு செய்தியினை பெறும் இடத்து அதனை கிளைக்  குழுவிற்கு அறிவித்து அதன் மூலம் உறுதிப்படுத்தியதன்  பிறகே  முன்வைத்தல்.

06. நேரகாலத்துடன் காரியாலயத்தினை மூடிவிடாது குறைந்தது 9.00 மணிவரை பிறை பாரர்க்கும் தினத்தில் காரியாலயம் திறந்திருத்தல்.

07. வெற்றுக் கண்களால் பார்ப்பதை விடவும் கருவிகளால் பிறை  பார்ப்பதை சில நாடுகள்  பின்பற்றுவதிலுள்ள அனுபவங்களை பெறுவது பற்றி எதிர்காலத்தில் ஆலோசித்தல்.

08. பிராந்திய ரீதியாக உள்ள நாடுகளுடன் சேர்ந்து பிறையை  தீர்மானிபதிலுள்ள சட்ட ஏற்பாடுகளை மீள் பரிசீலனை செய்தல்.

09. பெரிய பள்ளிவாசலினை தலைமையகமாகக்  கொண்டு தேசிய பிறைக்  குழு செயற்படும் அதேவேளை    அதன் தலைமை உலமா சபைத் தலைவர் அல்லது உலமா சபை பிரதிநிதியாக இருத்தல்.

10. தேசிய பிறைக் குழுவில் உலமா சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜமாஅத்களின் தலைவர்களும் அங்கம் வகித்தல்.

11. முஸ்லிம் கலாசார அமைச்சும், திணைக்களமும் ஆலோசகர்களாக இருப்பதே சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும் .

இஸ்லாம் இலகுவானது, மார்க்க  விடயத்தினை மிகவும் இலகுவாகவும் புத்திசாதுர்யமாகவும் முதன்மைப்  படுத்தி செயற்படுத்துவது எம்மீதுள்ள கடமையாகும். எமது நாட்டில் வாழும் எமது   எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கவேண்டிய பொறுப்பு எம் எல்லோர் மீதும் உள்ளது.

அல்லாஹ் எம் அனைவரையும் அவனது மார்க்கத்திற்கு பணி புரிந்தவர்கள்  கூட்டத்தில் சேர்ப்பானாக. 
-Vidivelli