Verified Web

புத்தளம் தொகுதி மக்களை கண்டுக்கொள்ளாத கட்சிகள்

2018-07-02 22:34:21 Administrator

அபூ நிதால் 

புத்­தளம் மாவட்­டத்தில் அமைந்­துள்ள ஆன­ம­டுவ, சிலாபம், புத்­தளம், வென்­னப்­புவ, நாத்­தாண்­டிய ஆகிய தேர்தல் தொகு­தி­களில் முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் ஒரு தேர்தல் தொகு­தியே புத்­தளம் தேர்தல் தொகு­தி­யாகும். சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்  வாக்­கா­ளர்கள் புத்­தளம் தொகு­தியில் வாழ்ந்து வந்­தாலும் விருப்பு வாக்கு தேர்தல்  முறை  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் புத்­தளம் தொகு­திக்­காக, ஏன் புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்­காக ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரைக் கூட பெற்றுக் கொள்ள முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் வேட்­பா­ளர்கள் பிர­தான கட்­சி­க­ளிலும் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளிலும்  பிரிந்து போட்­டி­யி­டு­வதும் அதன் கார­ண­மாக முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள்

சித­ற­டிக்­கப்­படுவதும் புத்­த­ளத்­திற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கிடைக்­காது போவ­தற்கு  பிர­தான கார­ண­மாகும்.

1947 ஆம் ஆண்டு நடை­பெற்ற இலங்­கையின்  முதலா­வது பாரா­ளு­மன்ற தேர்­தலின்  போது, இலங்­கையின்   முத­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பெயரை புத்­தளம் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஹூம் எச்.எஸ். இஸ்­மாயில் பெற்றுக் கொண்டார்.  முத­லா­வது பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­காக வேட்­பு­மனு கோரப்­பட்­ட­போது புத்­தளம் தொகு­தியில் போட்டி வேட்­பாளர் யாரும் இல்­லாத நிலையில் இலங்­கையின் முத­லா­வது எம்.பி. புத்­தளம் தொகு­திக்கு கிடைக்கப் பெற்றார். இதன்­மூலம் புத்­தளம் தொகுதி  மக்கள் தமது ஒற்­று­மையைப் பறை­சாற்றி இலங்­கையின் முதலாவது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வர­லாற்று சான்­றினை பதித்துக் கொண்­டனர். அந்த ஒற்­றுமை இல்­லாத நிலை­யி­னா­லேயே புத்­தளம் முஸ்­லிம்கள் தமக்­கென ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரைக் கடந்த மூன்று தசாப்த கால­மாக இழந்து தவித்து வரு­கின்­றனர்.

தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை மூலம்  மர்ஹூம் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் புத்­தளம்  தொகு­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக  இருந்­ததன் பின்னர்  புத்­தளம் மாவட்­டத்தில் எந்த ஒரு முஸ்லிம் வேட்­பா­ளரும் வெற்றி பெற்று எம்.பியா­க­வில்லை. 1994 இல் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் புத்­தளம் டாக்டர் ஐ.எம். இல்­லி­யாஸை யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யிடச் செய்து  எம்.பியாக்­கினார். அதன் பின்பு முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பட்­டியல் மூலம் கே.ஏ. பாயிஸை புத்­த­ளத்­திற்கு எம்.பியாக்­கினார்.  இறு­தி­யாக அமைச்சர் ரிஷாத் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மூலம் நவ­வியை  தேசிய பட்­டியல் மூலம்   எம்.பியாக்­கினார்.  அந்தப் பாரா­ளு­மன்ற பத­வியும் நவ வி­யி­ட­மி­ருந்து  பெறப்­பட்டு  தற்­போது  அம்­பாறை மாவட்­டத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் கூடு­த­லாக வாழ்ந்து வரும் புத்­தளம் தொகு­தியை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர வேண்டும் , தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற விட­யத்தில் பெரும்­பான்மை அர­சியல் கட்­சி­க­ளாக இருக்­கட்டும் சிறு­பான்மை கட்­சி­க­ளாக இருக்­கட்டும் எந்த ஒரு கட்­சியும் பெரி­தாக அக்­கறை காட்­டு­வ­தாக இன்று வரை தெரி­ய­வில்லை. 

முன்­னைய காலங்­களில்   புத்­தளம் தொகு­திக்­காக பெரும்­பான்மை கட்­சி­க­ளினால் அமைப்­ப­ாளர்கள் நிய­மிக்­கப்­பட்ட போது புத்­த­ளத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒரு­வ­ரையே கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளாக நிய­மித்­தனர். . அதுவும் புத்­தளம் தொகு­திக்­காக ஒரே­யொரு அமைப்­பா­ளரே நிய­மிக்­கப்­பட்டார். அந்த நிலைமை காலப் போக்கில் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது.

புத்­தளம் தொகுதி  ஐ.தே. கட்சி அமைப்­பா­ள­ராக மர்ஹூம் எம்.ஐ. பிஸ்ருல் ஹாபியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எம்.எச்.எம். நவ­வியும்   நீண்­ட­கா­ல­மாக செயற்­பட்­டனர். பிஸ்­ருல்­ஹாபி கால­மான பின்னர் புத்­தளம் தொகு­திக்கு நிரந்­த­ர­மாக ஒரு முஸ்லிம் அமைப்­பாளர் கட்­சி­யினால் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அதே­வேளை புத்­தளம் தொகு­தியை இரண்­டாகப் பிரித்து புத்­த­ளத்­திற்கு ஒரு அமைப்­ப­ளரும்  கற்­பிட்டி பிர­தே­சத்­திற்கு மற்­று­மொரு அமைப்­பா­ளரும் ஐ.தே. கட்­சி­யினால் நிய­மிக்­கப்­பட்டு இன்று வரையும் புத்­தளம் தொகு­திக்கு இரண்டு அமைப்­பா­ளர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  அதுவும் புத்­தளம் நக­ர­சபை முன்னாள் தலைவர் எம்.என்.எம். நஸ்மி கற்­பிட்டி அமைப்­பா­ள­ரா­கவும் சிலாபம் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி புத்­தளம் பிர­தேச ஐ.தே. கட்சி அமைப்­பா­ள­ரா­கவும் தற்­போது செயற்­பட்டு வரு­கி­ன­்றனர்.

அதே­போன்று எம்.எச்.எம். நவ­வியின் பின்னர் புத்­தளம் தொகு­திக்­காக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­காக நிரந்­தர முஸ்லிம்  அமைப்­பாளர் ஒருவர் இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போ­தைய புத்­தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் சிறிது காலம் புத்­தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைப்­பா­ள­ராக செயற்­பட்டார். அக்­காலப் பிரிவில் புத்­தளம் தொகு­தியை இரண்­டாகப் பிரித்து புத்­த­ளத்­திற்கு ஒரு அமைப்­பா­ளரும் கற்­பிட்டி பிர­தே­சத்­திற்கு  ஒருஅமைப்­பா­ளரும் நிய­மிக்­கப்­பட்­டனர். சிலாபம் தொகுதி முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பினர் விக்டர் புத்­தளம் பிர­தேச ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைப்­பா­ள­ரா­கவும் வடமேல் மாகாண சபை உறுப்­பினர் என்.டீ.எம். தாஹிர் கல்­பிட்டி பிர­தேச அமைப்­பா­ள­ரா­கவும் தற்­போது செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வாறு ஒரு தொகு­தியை இரண்­டாகப் பிரித்து இரண்டு அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தவிர்த்து மாகாண சபை, பொதுத் தேர்தல் காலங்­களில் பல்வகை­யான சிக்­கல்­களை உரு­வாக்கி வரு­கின்­றது. புத்­தளம் தொகு­திக்கு இரண்டு அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டதன் மூலமும் பெரும்­பான்மை கட்­சிகள் தமது செல்­வாக்­கினை ஏதோ வகையில் இழந்­துள்­ளது என்றே கூற வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவும் புத்­தளம் தொகுதி முஸ்லிம் வாக்­கா­ளர்கள் பிரிந்து செயற்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.  

புத்­தளம் தொகு­திக்கு புத்­தளம் தொகு­தியைச் சேர்ந்த ஒருவர் கட்சி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டாது புத்­தளம் தொகு­திக்கு வெளி­யே­யுள்ள ஒருவர் அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் குறிப்­பாக  புத்­தளம்  முஸ்­லிம்கள் மத்­தியில் ஒரு குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இந்த விடயம் தொடர்­பாக கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டப்­பட்ட போதும் அதற்கு இன்­று­வரை தீர்வு கிடைக்­க­வில்லை. இவ்­வா­றான செயற்­பாடும் புத்­தளம் தொகுதி மக்­களை அர­சியல் கட்­சிகள் கண்டு கொள்­ள­வில்­லையா என்று கேட்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.  

பெரும்­பான்மை அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டுகள் இவ்­வாறு இருக்கும் நிலையில் சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின்  செயற்­பா­டு­களும் புத்­தளம் முஸ்­லிம்­களை நூறு வீதம் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக  அமை­ய­வில்லை.  விகி­தா­சார தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்தப்பட்ட பின்னர்  புத்­தளம் மாவட்­டத்­திற்கு ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்­லாத நிலையில் சிறு­பான்மை கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியோ, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியோ புத்­தளம் முஸ்லிம் மக்­களின் மனங்­களை நிரந்­த­ர­மாக வென்­றெ­டுக்கும் செயற் திட்­டங்­களை செய்­தி­ருப்பின் பெரும்­பான்மை  அர­சியல் கட்­சி­க­ளினை நம்பி இருக்கும் நிலை­யி­லி­ருந்து புத்­தளம் முஸ்­லிம்கள் வில­கி­யி­ருப்பர். அவ்­வா­றான நிரந்­தர அர­சியல் ஸ்திரத்­தன்­மை­க­ளையும்  இந்த இரு சிறு­பான்மை கட்­சி­களும் செய்­ய­வில்லை.  முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக புத்­தளம் மாவட்­டத்­திற்கு அமைப்­பா­ளர்கள் மாத்­திரம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். முஸ்லிம் கட்­சிகள் என்­பதால் முஸ்லிம் அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது புத்­தளம் முஸ்­லிம்­க­ளுக்கு சற்று ஆறு­த­லாக உள்­ளது.

2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில்  ஐ.தே. கட்­சியில் போட்­டி­யிட்ட முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பாளர் கே.ஏ. பாயிஸ் முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் தேசிய பட்­டியல்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டார். அதன் பின்பு 2015 இல் நடை­பெற்ற தேர்­தலின் போது ஐ.தே. கட்­சியில் புத்­தளம் மாவட்­டத்தில்  போட்­டி­யிட்ட எம்.எச்.எம். நவவி அகில இலங்கை  மக்கள் காங்­கிரஸ் மூலம் தேசிய பட்­டியல்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டார். அந்த  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி நவ­வி­யி­ட­மி­ருந்து  கடந்த மாதம்  பெற்றுக் கொள்­ளப்­பட்­டது.

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் . காணப்­ப­டு­கின்­றனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்   மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்   காணப்­பட அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது ஐந்து   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  காணப்­ப­டு­கின்­றனர். மன்னார் மாவட்­டத்­திற்கு  இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  இருக்கும் அதே­வேளை,   கண்டி மாவட்­டத்­திற்கு இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  காணப்­ப­டு­கின்­றனர்.  அதே­வேளை கேகாலை மாட்­டத்­திற்கு ஒரு எம்.பியும்  அனு­ரா­த­புர மாவட்­டத்­திற்கு ஒரு  எம்.பியும் காணப்­ப­டு­கின்­றனர்.  கொழும்பு மாவட்­டத்தில் நான்கு  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  காணப்­ப­டு­கின்­றனர்.  இவர்­களில் தேர்தல் மூலம் தெரி­வாகி பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்கள் 15 பேர், தேசிய பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்கள்  6 பேர். மொத்தம் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் காணப்­ப­டு­கி­ன­றனர்.

இலங்கை முஸ்­லிம்­களில் 1 / 3 வீத­மான முஸ்­லிம்கள் வாழ்­வது கிழக்கு மாகா­ணத்­தி­லாகும். இவர்­க­ளுக்­காக  தேசிய பட்­டியல் மூலம் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வழங்­கப்­பட்­டுள்­னர்.  கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே  வாழும்  2 / 3 வீத­மான முஸ்லிம் மக்­க­ளுக்­காக 10 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   காணப்­ப­டு­கின்­றனர். ஆனாலும் வடமேல் மாகா­ணத்­தி­லுள்ள குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்ட மக்­க­ளுக்­காக ஒரு முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கூட இல்­லா­தது ஒரு  பரி­தாப நிலை­யாகும் 

எனவே, இவ்­வா­றான நிலையில் புத்­தளம் மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் வாக்­கா­ளர்­களை அர­வ­ணைத்து செல்லும் வேலைத்­திட்­­டத்­தினை முஸ்லிம் காங்­கி­ரஸும் , அகில இலங்கை  மக்கள் காங்­கி­ரஸும்  மேற்­கொள்­ளலாம். பெரும்­பான்மை கட்­சி­க­ளினால் வெறுப்­ப­டைந்­துள்ள புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்­களை சிறு­பான்மை கட்­சிகள்  தமது கட்­சிக்குள் வைத்துக் கொள்­ளலாம்.

ஏனெனில், இறு­தி­யாக நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில்  ஐ.தே. கட்­சிக்கு பெரும் வெற்­றியை பெற்றுக் கொடுத்த புத்­தளம் தொகு­திக்கு பெரி­தாக எதுவும் கிடைத்­த­தாக தெரி­ய­வில்லை. ஆகக் குறைந்­தது நிறு­வ­னங்­களில் தலைவர்  பத­விகள் கூட புத்­தளம் தொகு­திக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான பத­விகள்  கிழக்கு மாகா­ணத்­திற்கு போதி­ய­ளவு வழங்­கப்­பட்­டுள்­ளன.

வட­மா­காண முஸ்­லிம்கள் அவர்­களின் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட போது அவர்கள் தேடி வந்­தது புத்­தளம் மாவட்­டத்­தையே . அவர்­க­ளுக்­காக புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்கள் பல தியா­கங்­களை செய்­துள்­ளனர். அதே­போன்று நாட்டில் எந்தப் பாகத்தில்  இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­பட்­டாலும்  புத்­தளம் மக்கள் இன, மத பேதங்­க­ளுக்கு அப்பால் தம்மால் இயன்ற அனைத்து உத­வி­க­ளையும் செய்­வதில் பின் நிற்­க­மாட்­டார்கள்.

புத்­தளம் தொகு­தியைப் பொறுத்­த­வரை எதிர்­கால தேர்­தல்­க­ளுக்கு சிறு­பான்மை கட்­சி­களே பொருத்தம் என்ற நிலைப்­பாட்­டினை. புத்­தளம் முஸ்­லிம்கள் எடுத்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இதனை நிரூ­பிக்கும் வகையில் புத்­தளம் நகர சபை தேர்தல் அமைந்­துள்­ளது.  

அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­காக புத்­தளம் மாவட்­டத்தில் முஸ்லிம் வாக்­கா­ளர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருந்து  தேர்தலை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட மீண்டும் எம்மிடம் இல்லாத பரிதாப நிலை உருவாகியுள்ளது.  நவவியிடமிருந்து பெறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிகூட கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு மேலும்  மேலும் எம்.பி. பதவிகளை வழங்கி  அப் பிரதேச மக்களினை திருப்திபடுத்த வேண்டிய அவசியம்தான் என்ன  ?     மூன்று தசாப்த காலமாக புத்தளம் மக்களுக்காக ஒரு முஸ்லிம் எம்.பி. இல்லாத நிலையை போக்கும் விதமாக பெரும்பான்மை கட்சிகளோ சிறுபான்மை கட்சிகளோ புத்தளம் தொகுதிக்கென்று ஒரு தேசியப் பட்டியல் எம்.பியை வழங்குவதன் மூலம் புத்தளம் மக்களின் மனங்களை வெல்வதே மிகப் பொருத்தமான செயற்பாடாகும்.

எனவே, தொடர்ந்தும் புத்தளம் தொகுதி மக்களினை  கண்டுகொள்ளாத நிலையை அரசியல் கட்சிகள் மாற்றியமைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மிக அவசரமாக புத்தளம் தொகுதிக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்குமாறு புத்தளம் மக்கள் வேண்டுகோள் விடுக்கினறனர்.  பெரும்பான்மை கட்சிகளை விட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கே இந்தப் பாரிய பொறுப்பு பொருத்தமாக அமையும்
-Vidivelli