Verified Web

துருக்கி தேர்தல் முடிவுகளும் முஸ்லிம் உலக அரசியல் எதிர்காலமும்

2018-07-02 04:43:22 Administrator

ஸகி பவ்ஸ்

துருக்­கி­யி­னு­டைய ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் ஒரே தினத்தில் நடை­பெற்று நிறை­வ­டைந்­துள்ள நிலையில், தேர்­தல்­க­ளுக்கு முன்னர் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்துக் கணிப்­பு­களை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்தில் புதிய ஜனா­தி­ப­தி­யாக அர்­து­கானும்,  பார­ளு­மன்­றத்தில் புதிய ஆளும் கட்­சி­யாக நீதிக்கும் அபி­வி­ருக்­திக்­கு­மான கட்­சியும் மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இறுதி முடி­வு­க­ளின்­படி,  நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சி­யி­னு­டைய ஜனா­தி­பதி வேட்­பாளர் ரஜப் தையப் அர்­துகான் 52 வீத­மான வாக்­கு­க­ளையும் , நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி 293  பாரா­ளு­மன்ற ஆச­னங்­க­ளையும் பெற்றுக் கொண்­டன. இந்தப் பின்­பு­லத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடி­வு­க­ளி­னு­டைய பிராந்­திய மற்றும் தேசிய விளை­வுகள் தொடர்­பு­பட்ட  சில முக்­கி­ய­மான அவ­தா­னங்­களை இக்­கட்­டுரை தொகுத்­த­ளிக்­கி­றது.

துருக்­கி­யி­னு­டைய அர­சியல் வர­லாற்றில் முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக மீண்டும் அர்­துகான்  தெரி­வா­னதன் நேரடி  பிராந்­திய அர­சியல் தாக்­கங்­களை புரிந்­து­கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். ஏனெனில், பிராந்­திய அர­சி­யலில் அதன் முடி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­போகும் தாக்­கங்­களின் விளை­வா­கவே சர்­வ­தேச  மீடி­யாக்­க­ளது கடும் கவ­ன­யீர்ப்­பையும், தீவிர அக்­க­றை­யையும் இத்­தேர்­தல்கள் பெற்றுக் கொண்­ட­தாக  சில ஆய்­வா­ளர்கள் விவா­திக்­கி­றார்கள். இன்­னொரு வச­னத்தில் சொன்னால், சிக்­க­லான சமன்­பா­டு­க­ளுடன் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்ள மத்­திய கிழக்­கி­னு­டைய அர­சியல் களம் தொடர்­பான அர்­து­கா­னு­டைய நிலைப்­பா­டு­களும் , நகர்­வு­க­ளுமே ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­ரித்த சர்­வ­தேச கவ­ன­யீர்ப்பை துருக்­கி­யி­னு­டைய ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்­ததே தவிர, அவ­ரது உள்­நாட்டு கொள்­கை­களும் , தீர்­மா­னங்­களும் மட்­டு­மல்ல. இந்தப் பின்­ன­ணி­லேயே, சர்­வ­தேச மற்றும் பிராந்­திய மட்­டத்தில் தேர்­தல்­க­ளு­டைய முடி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­போகும் விளை­வு­களை விரை­வா­கவும் , அவ­ச­ர­மா­கவும் உணர்ந்­து­கொள்ள முடி­யு­மென சில அர­சியல் நோக்­கர்கள் எழுதிச் செல்­கி­றார்கள்.

அந்­த­வ­கையில், ட்ரம்ப் நிர்­வா­கத்­தி­னு­டைய 'புதிய மத்­திய கிழக்கு'  திட்­டத்­தினை எதிர்ப்­ப­திலும், அதற்­கெ­தி­ரான கூட்­ட­ணியை ஒன்­று­தி­ரட்­டு­வ­திலும் பிர­தான கதா­பாத்­தி­ர­மொன்றை துருக்கி வகித்து வரு­கி­றது. அத்­திட்­டத்தை ஆத­ரிக்கும் மத்­தி­ய­கி­ழக்கு நாடு­களும் கூட, துருக்­கியின் அதி­கார வீச்­சைத்தான் பிர­தான சவா­லாகக் கரு­து­கின்­றன. அடுத்து,  சவூதி அரே­பியா மற்றும் ஈரான் என்ற இரு பிராந்­திய சக்­தி­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார மோதல்­க­ளுக்கு மத்­தியில் துருக்கி என்ற மூன்றாம் சக்­தி­யி­னு­டைய நுழை­வா­னது, பிராந்­திய அதி­கார மோதலை 'ஓர­ளவு' சம­நி­லைப்­ப­டுத்தும் கார­ணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்த முடியும். மேலும், கடந்த சில ஆண்­டு­க­ளாக  'ஷியா-ஸுன்னி மோதல்' என்ற அடிப்­ப­டை­யி­லேயே  பிராந்­திய அர­சியல் முரண்­பா­டுகள் பேசப்­பட்­டன; முன்­வைக்­கப்­பட்­டன. இத்­தோற்­றப்­பாடு  மெல்­ல­மாக நீங்கி, இரண்டு பிராந்­திய நோக்­கு­க­ளுக்­கி­டையில் நடை­பெறும் 'நலன்­களை மையப்­ப­டுத்­திய அர­சியல் முரண்­பா­டு­க­ளாக (Interest and Balance of Power Politics)  வடிவம் பெறத் துவங்­கி­யுள்­ளன. அதில் ஒரு பிராந்­திய நோக்கை வழி­ந­டாத்தும் கூட்­ட­ணியை சவூதி அரே­பி­யா­வையும் , இன்­னொரு பிராந்­திய நோக்கை தலைமை தாங்கும் தேச­மாக துருக்­கி­யையும் அர­சியல் ஆய்­வா­ளர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றார்கள். அரபு வசந்­தத்­திற்கு முன்னர் ஸ்திர­ம­டைந்­தி­ருந்த அதி­கா­ர­பீட நலன்­க­ளையும், ஒழுங்­கையும் சூழ முஸ்லிம் உலகை வடி­வ­மைக்கும் முயற்­சியில் முதலாம் அணி­யினர் தொழிற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அதே­வேளை, அரபு வசந்­தத்­திற்குப் பிந்­திய சமூக அபி­லா­ஷை­களை உள்­வாங்­கிய நிலையில் புதி­ய­தொரு பிராந்­திய ஒழுங்­கிற்கு முஸ்லிம் உலகம் நக­ர­வேண்டும் என்ற கோஷத்­துடன் இயங்­கு­கி­றது இரண்­டா­வது அணி. இதுதான், இன்­றைய முஸ்லிம் உல­கி­னு­டைய அர­சியல் முரண்­பா­டு­க­ளது மொத்­த­மான காட்சி (Big Picture) ஆகும்.

இதுதான் பிராந்­தி­யத்தில் துளிர்­விடும் புதிய தள­மாற்­ற­மாகும். இதனை நுணுக்­க­மாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். ஏனெனில், இதற்கு முன்பு பிராந்­திய முரண்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்ட 'ஷியா-ஸுன்னி' கண்­ணோட்­டத்­துடன் ஒப்­பிட்டு நோக்கும் போது,  புதிய தள­மாற்­றத்தை வர­வேற்­கத்­தக்க ஒரு அபி­வி­ருத்­தி­யாகக் கருத முடியும். இந்­நிலை மாற்­றத்தை சாத்­தி­யப்­ப­டுத்­தி­யதில்  துருக்­கி­யி­னு­டைய பிராந்­திய நகர்­வுகள் மற்றும் அது கொண்­டுள்ள சக்திச் சம­நிலை காத்­தி­ர­மான பங்­க­ளிப்பைச் செய்­துள்­ளன. காரணம்,  சவூதி அரே­பி­யா­வையோ அல்­லது ஈரா­னையோ தனது இருப்­புக்­கான அச்­சு­றுத்­த­லாக (Existential treat) துருக்கி கரு­த­வில்லை. மாறாக, பிராந்­திய ஆதிக்­கத்­திற்­கான ஏனைய போட்­டி­யா­ளர்­க­ளா­கவே அவ்­விரு நாடு­க­ளையும் அர்­துகான் அர­சாங்கம் நோக்­கு­கி­றது. இந்தப் பின்­ன­ணியில் ஷியாஸுன்னி வாதம் என்ற கறுப்பு -வெள்ளை நோக்கை சந்­தைப்­ப­டுத்தி பிராந்­தி­யத்தை வடி­வ­மைக்க நினைக்கும் நாடு­களை சம­நி­லைப்­ப­டுத்­து­வ­தற்கும் மற்றும் ஷியாஸுன்னி  முரண்­பாட்டைத் தாண்­டிய பிராந்­திய ஒழுங்­கொன்­றுக்­கான ஏற்­பு­ட­மையை வழங்­கு­வ­தற்­கு­மான தேவை­யான அர­சியல் உள்­ளீ­டுகள் துருக்­கி­யி­னு­டைய பிராந்­தியக் கொள்­கையில் மட்­டுமே கண்­டு­கொள்ள முடியும்.

  இவ்­வாறு, அகன்ற பின்­ன­ணியில் நின்று பகுப்­பாய்வு செய்­யும்­போது , ஏற்­க­னவே மேலே கலந்­து­ரை­யா­டப்­பட்ட அங்­கா­ரா­வி­னு­டைய பிராந்­திய முன்­ன­கர்­வு­க­ளது வீரி­யத்­தையும்,  உத்­வே­த­கத்­தையும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதிப் பதவி அதி­க­ரிக்கச் செய்யும் மறை­க­ர­மாக இருக்கப் போகி­றது. குறிப்­பாக, சிரியா, கட்டார் மற்றும் குர்திஷ் விவ­கா­ரங்­களை  முகாமை செய்தல் மற்றும் துருக்கி முன்­மொ­ழிந்­துள்ள பிராந்­திய நோக்கை பாது­காத்தல் போன்ற இரு முனை­க­ளிலும் நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதிப் பத­வியின் தாக்­கங்கள் வெளிப்­ப­டலாம். ஏனெனில், இதற்கு முன்னர் பிராந்­திய அர­சியல் சார்ந்த நிலைப்­பா­டு­களை எடுக்கும்போது உள்­ளக பொது அபிப்­பி­ராயம் அதற்­கெ­தி­ராக எப்­படித் துலங்கப் போகி­றது என்ற சந்­தேகம் கொள்கை வகுப்­பா­ளர்­களை தொடர்ந்தும் தடு­மாற்­றத்­திற்கு உட்­ப­டுத்­திய விட­ய­மாகும். இனி, தன்­னு­டைய பிராந்­திய நோக்­கையும், நிலைப்­பா­டு­க­ளையும் மக்கள் ஆத­ரிக்­கி­றார்கள் என்­றுதான் புதிய தேர்தல் முடி­வு­களை  அர்­துகான் தலை­மை­யி­லான அர­சாங்கம் புரிந்­து­கொள்ளப் போகி­றது. எனவே, முன்­னைய அர­சாங்­கத்­துடன் ஒப்­பி­டும்­போது சற்று 'உறு­தி­யான மனோ­நி­லை­யுடன்' (Confidence) பிராந்­திய அர­சியல் நகர்­வு­களை புதிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கலாம். அதே­போன்று, சமீ­பத்­திய சர்­வ­தேச அர­சியல் இலக்­கி­யங்கள் மற்றும் ஆய்­வு­களில் எவ்­வாறு உல­கி­னு­டைய அர­சியல் போக்­குகள் சர்­வ­தேச சக்­திகள் என்ற இடத்­தி­லி­ருந்து பிராந்­திய சக்­திகள் என்ற தளத்தை நோக்கி முன்­னேறிச் செல்­கின்­றன என்­ப­தனை அவை கோடிட்டுக் காட்­டு­கின்­றன. அதா­வது அதி­க­ரித்து வரும் பிராந்­திய சக்­திகள் (Increasing Role of Regional powers) என்ற புதிய தோற்­றப்­பா­டா­னது சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் பேரம் பேசும் நிலையை நோக்கி தள­மாற்­ற­ம­டைந்து வரு­வ­தாக அவை வாதிக்­கின்­றன. இந்தக் கண்­ணோட்­டத்தில் நோக்­கும்­போதும் ஒரு பிராந்­திய சக்­தி­யாக துருக்­கியின் வகி­பா­கத்தை புதிய அர­சியல் மாற்­றமும், நிறை­வேற்று ஜனா­தி­பதிப் பதி­வியும் அதி­க­ரிக்கச் செய்யும் என்­பதில் சந்­தே­மில்லை.  என்­றாலும் கூட, அர்­துகான் அர­சாங்­கத்­தி­னு­டைய பிராந்­திய நகர்­வு­க­ளது சாதக , பாத­கங்­களை தனி­யாக விவா­திக்க வேண்டும். 

அதே­வேளை,  ஓரிரு வரு­டங்­க­ளாக  தளம்பல் நிலையில் இருக்கும் அமெ­ரிக்க மற்றும் ஜரோப்­பிய நாடு­க­ளு­ட­னான அங்­கா­ரா­வி­னு­டைய உறவு ஒர­ளவு சுமுக நிலையை  அடை­வ­தற்கு அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன. கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்­பெற்று தோல்­வியில் நிறை­வ­டைந்த இரா­ணுவப் புரட்­சியின் பின்னர் நாட்­டி­னு­டைய ஸ்திரத்­தன்மை தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­வி­களும் , விவா­தங்­களும் அது தொடர்­பான ஜரோப்­பிய நாடு­க­ளது எதிர்­மறை நிலைப்­பா­டு­களும் இணைந்­துதான் அமெ­ரிக்கா மற்றும் ஜரோப்­பிய நாடு­க­ளுக்கும் துருக்­கிக்கும் இடை­யி­லான முறுகல் நிலையை தோற்­று­வித்­தன. மட்­டு­மன்றி, இந்தப் புள்­ளி­யி­லி­ருந்­துதான் துருக்கி அர­சாங்­கத்­தி­னு­டைய மனித உரிமை மீறல்கள் தொடர்­பான  உரை­யாடல் சர்­வ­தேச கவ­ன­யீர்ப்பை பெற்­றது. அத­னோ­டி­ணைந்த வகையில், நாட்­டி­னு­டைய அதி­கார மோதல்­க­ளையும் , பிராந்­திய சூழ­லையும் பயன்­ப­டுத்தி மேற்­கு­லக நாடுகள் துருக்­கியில் ஆட்சி மாற்­ற­மொன்றை நிகழ்த்­தலாம் என்ற சந்­தே­கத்­தையும் ஆளும் கட்சி வட்­டா­ரங்­களில் அது ஏற்­ப­டுத்­தி­யது. என்­றாலும், நடந்து முடிந்த தேர்­தல்­க­ளுடன் நாட்­டி­னு­டைய போக்கு, ஸ்திரத்­தன்மை மற்றும் அதி­கா­ரங்கள் தொடர்­பான விவாதம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கின்­றது. மறு­புறம், ஜரோப்­பிய மற்றும் அமெ­ரிக்க கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்கு முன்­னாலும் அர்­துகான் ஓர் இன்­றி­ய­மை­யாத தெரி­வாக மாறி­விட்டார். தேர்­தல்கள் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­ட­வுடன், ஜரோப்­பிய நாட்டுத் தலை­வர்கள் வெளி­யிட்ட வாழ்த்துச் செய்­தி­களில் சுமு­க­மான உறவை மீட்டிக் கொள்­வ­தனை உணர்த்தி நிற்கும் மொழி­ந­டையே (Conciliatory Approach) மேலோங்கி இருந்­தனை அவ­தா­னிக்­கலாம். விளை­வாக, இரு தரப்­பி­னரும் ஓர்  உடன்­பா­டான தளத்­திற்கு மெல்­ல­மாக நகர்ந்து செல்­லக்­கூ­டிய சாத்­தி­யப்­பா­டுகள் இருக்­கின்­றன.

அத­னோ­டி­ணைந்த வகையில், பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களை   நீதிக்கும் , அபி­வி­ருத்தி கட்சி பெற்றுக் கொள்­ள­வில்லை. அதனால், தேசி­ய­வாத கட்­சி­யுடன் இணைந்து பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையை அது தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. உண்­மையில், துருக்­கியின் எல்­லை­களை முகாமை செய்யும் விட­யத்­திலும், குர்திஷ் இட­து­சாரி ஆயுதக் குழுக்­களை கட்­டுப்­ப­டுத்தல், உள்­ளக ஸ்திரத்­தன்மை உறு­திப்­ப­டுத்தல் போன்ற விவ­கா­ரங்­களில்  தேசி­ய­வாதக் கட்­சிக்கும் (MHP), நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சிக்கும் இடை­யி­லான உடன்­பா­டுதான் குறித்த கூட்­ட­ணியின் தொடர்ச்­சியை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் மூல­மந்­திரம் எனலாம். இன்னும் ஓரிண்டு வரு­டங்­க­ளுக்கு மேலே தொட்­டுக்­காட்­டப்­பட்ட சவால்கள் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யப்­ப­டுதான் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. எனவே, நீதிக்கும் அபி­வி­ருத்திக்­கு­மான கட்­சிக்கும், தேசி­ய­வாதக் கட்­சிக்­கு­மி­டை­யி­லான கூட்­ட­மைப்பு இன்னும் சில காலங்­க­ளுக்கு சுமு­க­மாக நகர்ந்து செல்லக் கூடு­மென ஊகிக்­கலாம்.

ஆனால், துருக்கி அர­சியல் குறுக்கு வெட்டு முகத்தை (Political Landscape) சிதைத்­துள்ள மதச்­சார்­பற்­ற­வாதம், குர்திஷ் தேசி­ய­வாதம் மற்றும்  துருக்­கியத் தேசி­ய­வாதம் போன்ற பிளவுக் கோட்­பா­டு­க­ளுக்கு அப்பால் நின்று தேசிய வேலைத் திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆற்­றலும் , கருத்­தியல் பின்­பு­லமும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சிக்கு மட்­டுமே இருக்­கி­றது. ஆனால், பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்தை தனிக்­கட்­சி­யாக நீதிக்கும், அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி பெற்றுக் கொள்­ளாத நிலையில், மேற்­கூ­றப்­பட்ட தேசியக் கொள்­கை­களை வகுப்­பதில் நியா­ய­மான சிக்­கல்­களை புதிய அர­சாங்கம் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும். ஒரு கூட்­டணி அர­சாங்­க­மாக ஒரு தேசிய வேலைத்­திட்­ட­மொன்றை சாத்­தி­யப்­ப­டுத்திக் கொள்­வது கஷ்­ட­மா­னது. என்­றாலும் கூட, குறு­கிய தேசி­ய­வா­தங்­க­ளுக்கு அப்பால் சகல சமூ­கங்­க­ளுக்­கு­மான தேசிய வேலைத் திட்­டமொன்;றை நோக்கி நாட்­டினை நகர்த்திச் செல்­வது அவ­சி­ய­மா­னது; அவ­ச­ர­மா­னது. அந்த இலக்கை நோக்கி நகர்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் தவறும் பட்­சத்தில், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி எவ்­வாறு அதனை அடைந்து கொள்வார்? என்­பதே நுணுக்­க­மாக பகுப்­பாய்வு செய்­யப்­பட வேண்­டிய கேள்­வி­யாகும். வழ­மை­போன்று தற்­போ­தைய தேசி­ய­வாதக் கட்­சி­யு­ட­னான (MHP) கூட்­ட­ணியின் மீதான தேவை நிறை­வ­டையும் போது, வேறு கூட்­ட­ணி­க­ளுக்கு ஊடாக ஏனைய  பல­தே­சிய சவால்­களை அடைந்து கொள்­வ­தற்கு நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி முயற்­சிக்­குமா? என்­ப­த­னையும் பொறுத்­தி­ருந்­துதான் அவ­தா­னிக்க வேண்டும். மொத்­தத்தில், நீண்ட எதிர்­கா­லத்தில் துருக்­கி­யி­னு­டைய அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் புதிய அர­சாங்­கத்தின் முன்­னு­ரிமைப் பட்­டி­யலில் இடம்­பெற வேண்­டிய சீரி­ய­ஸான விவ­கா­ர­மாகும்.

இறு­தி­யாக, ரஜப் தையப் அர்­துகான் நிறை­வேற்று  அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதிப் பத­வியை வெற்றி கொண்­ட­தற்­கூ­டாக  சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கித்  துருக்­கியை கொண்டு செல்­கிறார் என்­றொரு விமர்­ச­னமும் இருக்­கின்­றது. உண்­மையில், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி என்­பது தன்­ன­ளவில் தவ­றல்ல. அமெ­ரிக்­காவில் , பிரான்ஸில் இருப்­பதும் அதுதான். பிராந்­திய அர­சியல் அபி­லா­ஷை­க­ளுடன் நகரும் எந்த நாட்டுக்கும் “நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி” என்பது அடிப்படையான தேவை. ஆனால், ஜனநாயகத்தின் ஏனைய கூறுகள் வளர்ச்சியடையாத பிராந்தியங்களில் 'நிறைவேற்று ஜனாதிபதி' முறை என்பது சிக்கலானது. இந்தப் புள்ளியில் தான் அர்துகான் விமர்சிக்கப்படுகிறார். உதாரணமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாடுகளில் தீவிர ஊடக சுதந்திரம் காணப்பட வேண்டும். சுறுசுறுப்பான சிவில் சமூக அமைப்புகள் காணப்பட வேண்டும். இந்த சமநிலைப்படுத்தல்களுடன் கூடிய நிறைவேற்றதிகாரம் என்பதே ஆரோக்கியமானது. இந்தக் கலாசாரத்திற்கு அமெரிக்கா நல்லதொரு உதாரணம். ட்ரம்புக்கு எதிரான அமெரிக்க ஊடகங்களது பாய்ச்சலிலிருந்து அதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எந்த அமெரிக்க சிவில் அமைப்பும், ஊடகங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ட்ரம்பை ஜனநாயக வழிமுறைகளுக்கு வெளியே சென்று பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் அழைப்பு விடுப்பதில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தை சூழ இருக்க வேண்டிய தன்மையாகும். துரதிஷ்டவசமாக, அர்துகான் விடயத்தில் ஜரோப்பிய ஊடகங்கள் இந்த அழைப்பை விடுக்கின்றன. அதன் ஒரு வடிவமே அவருக்கு எதிரான தோல்வியில் நிறைவடைந்த இராணுவப் புரட்சி என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய பின்புலங்களே அர்துகானின் கடுமையான சில நிலைப்பாடுகளுக்கு வழிவகுத்தன என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கடந்த தேர்தல்களுடன் அது தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே, சுறுசுறுப்பான சிவில் சமூக செயற்பாடுகளையும், ஊடக சுதந்திரத்தையும்  இனி அர்துகான் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.
-Vidivelli