Verified Web

ஹஜ் 2018 என்ன நடக்கிறது

2018-07-01 22:45:13 ARA.Fareel

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி­விட்­டது’ என கதை­யொன்று கூறப்­ப­டு­வதை நாம் கேட்­டி­ருக்­கிறோம். இந்­தக்­கதை மாற்­றப்­பட்­டு­விட்­ட­தாக சிலர் கூறு­கி­றார்கள்.

‘ஹஜ் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி­விட்­டதாம்’ இதில் உண்மை இருப்­ப­தா­கவே தெரி­கி­றது.

சமூ­க­வ­லைத்­த­ளங்கள் சில­வற்றின் பதி­வேற்­றங்கள் சமூ­கத்தை சிந்­திக்கத் தூண்­டி­யுள்­ளன. ‘ஹஜ்ஜில் ஏன் இந்தக் கொலை­வெறி, ஏன் பொய்ப் பிர­சா­ரங்கள், ஹஜ் முக­வர்­க­ளுக்கு ஏன் இந்தக் கொலை­வெறி’ என்று பல­வா­றான கருத்துப் பரி­மாற்­றங்கள் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஓர் புனித பணிக்­காக எம்­ம­வர்கள் நீதி­மன்­றப்­படி ஏறி இறங்­கு­வது சந்தி சிரிக்கச் செய்­துள்­ளது. சில ஹஜ் முக­வர்­களின் இந்த நட­வ­டிக்­கைகள் ஹஜ்ஜை ஒரு வர்த்­தகப் பொரு­ளாக மாற்­றி­யுள்­ள­மையை உறுதி செய்­கி­றது. அவர்கள் ஹஜ்ஜை வர்த்­தகப் பண்­ட­மாக்கி இலா­ப­மீட்டிக் கொள்­வ­தையே நோக்­கா­கக்­கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள்.

நேற்று எனது பல்­க­லைக்­க­ழக மாற்­று­மத நண்பர் ஒரு­வரை தலை­ந­கரில் சந்­தித்தேன். அர­சியல், ஞான­சார தேரர் எனும் விட­யங்கள் தொடர்பில் நீண்ட எமது உரை­யா­ட­லின்­போது அவர் என்­னிடம் இப்­படி ஒரு கேள்­வியைக் கேட்டார்.

ஹஜ் வந்­த­னாவே மொன­வத பிரஸ்னே? கட்­டியக் ஜனா­தி­பதி தூஷன விமர்­சன ஏக­க­யட பெமிலி கர­லா­தி­ய­­னவா னேத?

ஹஜ் யாத்­தி­ரையில் என்ன பிரச்­சினை? சிலர் ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரிவில் முறை­யிட்­டுள்­ளார்கள். அல்­லவா?

‘ஆம் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சில முக­வர்­களை நிரா­க­ரித்­துள்­ளார்கள். அதனால், வந்­த­வினை என்று நான் பதி­ல­ளித்தேன்.

2012 ஆம் ஆண்டு முதல் நீதி­மன்­றத்­திலும் சமூ­கத்­திலும் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரும் ஹஜ் ஏற்­பா­டு­களும் கோட்டா பகிர்வு முறையும் இவ்­வ­ரு­டமும் தலை நிமிர்ந்­துள்­ளன. ஹஜ் முக­வர்கள் சிலர் ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரி­வுக்குச் சென்று ஹஜ் கோட்டா பகிர்வில் அநி­யாயம் நிகழ்ந்­துள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து சட்­டத்­துக்கு முர­ணாக பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா வீதம் அற­வி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் வாக்­கு­மூலம் அளித்­துள்­ளனர்.

நீதி­மன்றப் படி­களில் ஹஜ்

ஹஜ் குழு­வுக்கும் ஹஜ் முக­வர்­க­ளுக்கும் இடையில் 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு வந்­துள்­ளன. ஹஜ் முக­வர்கள் கோட்டா பகிர்வு முறையை எதிர்த்­தார்கள். ஹஜ் முக­வர்கள் நிய­ம­னங்­களில் ஊழல்கள் நில­வு­வ­தாக குற்றம் சுமத்­தி­னார்கள். 2012 ஆம் ஆண்டு ஹஜ் முக­வர்கள் சிலர் உயர்­நீ­தி­மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தார்கள்.

வழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட உயர் நீதி­மன்றம் 2012 ஆம் ஆண்டு தீர்ப்­பினை வழங்­கி­யது. FP/ FR/ 500/ 2012  என்ற இலக்­கத்தைக் கொண்ட வழக்கில் உயர்­நீ­தி­மன்றம் ஹஜ் குழு­வுக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென ஹஜ் வழி­மு­றைகள் (Guide Lines) வழங்­கி­யது. அந்த வழி­மு­றையில் ஹஜ் கோட்டா எவ்­வாறு பகி­ரப்­ப­ட­வேண்டும், எந்த அடிப்­ப­டையின் கீழ் ஹஜ் முகவர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது பற்றி விரி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஹஜ் வழி­மு­றை­களை முழு­மை­யாகப் பின்­பற்றும் படியும் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது. இந்தத் தீர்ப்பு உயர்­நீ­தி­மன்­றத்­தினால் 2013 ஆம் ஆண்டே வழங்­கப்­பட்­டது.

தொடர்ந்தும் 2013, 2014, 2015, 2016, 2017 என ஹஜ் முகவர் நிலை­யங்கள் சில ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவும் வழக்­குத்­தாக்கல் செய்­தன. 2015 ஆம் ஆண்டு நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களை முழு­மை­யாகப் பின்­பற்­றும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டது. 2016 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்­கெ­தி­ரான வழக்கு தொடர்ந்தும் விசா­ர­ணையின் கீழ் இருந்து வரு­கி­றது.

புதிய கோட்டா பகிர்வு முறை

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதும் நீண்­ட­கா­லத்­துக்குப் பின்பு முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யாக அமைச்­சொன்று நிறு­வப்­பட்­டது. அமைச்­ச­ராக எம்.எச்.ஏ.ஹலீம் நிய­மிக்­கப்­பட்டார். அமைச்சர் ஹலீம் ஹஜ் ஏற்­பா­டு­களில் பல மாற்­றங்­களை மேற்­கொண்டார்.

அதிக உச்­சத்­தி­லி­ருந்த ஹஜ் கட்­ட­ணத்தில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வதும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணத்­தில் சிறந்த சேவை­யினைப் பெற்றுக் கொடுப்­பதுமே அமைச்­சரின் இலக்­காக இருந்­தது. அது­வரை காலம் ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் முக­வர்­களின் ஆதிக்­கமே மேலோங்­கி­யி­ருந்­தது. முக­வர்கள் தாம் விரும்­பிய கட்­ட­ணங்­களை அற­விட்­டனர். இந்­நி­லையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த விரும்­பிய அமைச்சர், ஹஜ் கோட்­டாவை திறந்த சந்­தைப்­ப­டுத்தும் வகை­யி­லான முறை­மை­யொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்யும் உரிமை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. வரு­டாந்தம் நேர்­முகப் பரீட்சை மூலம் நிய­மிக்­கப்­படும் முக­வர்­களின் பெயர், விப­ரங்­களை மற்றும் அவர்­க­ளது ஹஜ் கட்­ட­ணங்கள் பத்­தி­ரிகை வாயி­லாக விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. இதனால் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் சிறந்த சேவை­யினைப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய குறைந்த கட்­டணம் வசூ­லிக்கும் முக­வர்­க­ளையே நாடிச் சென்­றனர்.

ஹஜ் முக­வர்­க­ளுக்கு கோட்டா பகிர்ந்து வழங்­கப்­பட்­டாலும் இவ்­வா­றான புதிய முறை­மை­யினால் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் சில ஹஜ் முக­வர்­களை நிரா­க­ரித்­தனர்.

12 முக­வர்கள் நிரா­க­ரிப்பு

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முக­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டன. 106 பேர் இவ்­வ­ருட ஹஜ் முகவர் நிய­ம­னத்­திற்­காக விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். இவர்­களில் 95 பேர் நேர்­முகப் பரீட்­சையின் பின்பு நிய­மனம் பெற்­றனர். இந்த 95 முக­வர்­க­ளுக்கும் இவ்­வ­ருடம் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது.

ஆனால், இவர்­களில் 12 முக­வர்­களை யாத்­தி­ரி­கர்கள் நிரா­க­ரித்­தனர். ஹஜ் பய­ணத்தை இவர்கள் ஊடாக மேற்­கொள்­வ­தற்கு எவரும் முன்­வ­ர­வில்லை. இதனால் ஆத்­தி­ர­முற்ற குறிப்­பிட்ட ஹஜ் முக­வர்கள் கோட்டா பகிர்வு முறையை எதிர்த்­தனர். அமைச்­ச­ருக்கு  எதி­ரா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரா­கவும் ஹஜ் குழு­விற்கு எதி­ரா­கவும் செயலில் இறங்­கினர்.

ஊடக மாநாடு

கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ஐக்­கிய ஹஜ் ஏஜன்ஸீஸ் ஸ்ரீ லங்கா எனும் முகவர் அமைப்பு கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் ஹஜ் குழு­விற்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டு­க­ளுக்கும் எதி­ராக ஊடக மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அம்­மா­நாட்டில் ஹஜ் குழு­வுக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் எதி­ராக பல குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. அகில இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் உப தலைவர் எம்.எஸ்.எச். முஹம்மட் இந்த குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்தார்.

குற்­றச்­சாட்­டுகள்

2012 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்ட வழக்கில் நீதி­மன்றம் ஹஜ் வழி­மு­றைகள் (Guide lines) சில­வற்றை வழங்­கி­யி­ருந்­து. கோட்டா பகிர்வு உட்­பட ஹஜ் ஏற்­பா­டுகளில் இவ்­வா­றான வழி­மு­றை­களே பின்­பற்­றப்­பட வேண்­டு­மென தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அந்­த­ வழிமுறைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பதே முக்­கிய குற்­றச்­சாட்­டாக இருந்­தது.

கோட்டா பகிர்வு முறையில் நீதி­மன்ற வழி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரிவு முறை­யாக இடம்­பெ­ற­வில்லை. யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தாம் பய­ணிக்கும் முகவர் நிலை­யங்­களைத் தெரிவு செய்­வ­தற்கு உரி­ய­கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பன உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

குற்­றச்­சாட்­டுகள் நிரா­க­ரிப்பு

கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் ஐக்­கிய ஹஜ் ஏஜன்ஸீஸ் ஸ்ரீ லங்கா எனும் ஹஜ் முக­வர்கள் அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊடக மாநாட்டில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் அரச ஹஜ் குழு மறு­தி­னம் மறுத்­தது. குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதி­ல­ளிக்கும் வகையில் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டது.

இவ்­வ­ருடம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஒரு­சில ஹஜ் முக­வர்­களே ஹஜ் ஏற்­பா­டுகள் குறித்து உண்­மைக்குப் புறம்­பான கருத்­து­களைப் பரப்பி வரு­கி­றார்கள். கோட்டா பகிர்வில் புதி­ய­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பு ஹஜ் கட்­ட­ணத்தில் வீழ்ச்­சி­யேற்­பட்­டுள்­ளது. முக­வர்­களைத் தேர்ந்­தெ­டுக்கும் உரிமை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஒருசில ஹஜ் முக­வர்­களின் குற்­றச்­சாட்­டு­களை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கிறோம் என அரச ஹஜ் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அரச ஹஜ் குழு­வுக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அரச ஹஜ் குழு விளக்­க­மாகப் பதில் வழங்­கி­யுள்­ளது.

கடந்த வருடம் இலங்­கைக்கு இறுதி சந்­தர்ப்­பத்தில் கிடைக்கப் பெற்ற 600 மேல­திக ஹஜ் கோட்டா தொடர்பில் முஸ்­லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 8 கோடி 64 இலட்சம் ரூபா அற­விட்டு அப்­ப­ணத்­திற்கு பற்­றுச்­சீட்­டுகள் வழங்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் அப்­பணம் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பப்­பட்­ட­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு பொய்­யா­ன­தாகும். இதற்கும் திணைக்­க­ளத்­துக்கும் தொடர்­பில்லை.

600 மேல­திக கோட்­டா­வுக்­கான கட்­ட­ணத்தை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து சம்­பந்­தப்­பட்ட முக­வர்­களே அற­விட்­டார்கள். ஹஜ்­ஜுக்­கான ஏற்­பா­டு­களை 4 ஹஜ் முக­வர்கள் சவூ­தியில் தங்­கி­யி­ருந்து மேற்­கொண்­டார்கள். இலங்­கையில் 600 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­பட்ட பணம் சவூ­தியில் தங்­கி­யி­ருந்த 4 முக­வர்­க­ளுக்கும் இலங்­கை­யி­லி­ருந்து முக­வர்­க­ளி­னா­லேயே அனுப்பி வைக்­கப்­பட்­டது. சவூ­தியில் தங்­கி­யி­ருந்த 4 முக­வர்­க­ளுமே 600 யாத்­தி­ரி­கர்­களின் ஹோட்டல், தங்­கு­மிட வசதி மற்றும் போக்­கு­வ­ரத்து வச­தி­களை சவூ­தியில் ஏற்­பாடு செய்­தார்கள்.

சவூதி அரே­பி­யாவில் 600 ஹஜ் யாத்­தி­ரி­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் செலுத்­தப்­பட்­டுள்­ளன என்­பதை திணைக்­களம் அறியும். கட்­ட­ணங்­க­ளுக்­கான பற்­றுச்­சீட்­டுகள் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்­க­ளி­டமே உள்­ளன. சவூ­தியில் ஒரு ஹஜ் யாத்­தி­ரி­க­ருக்கு 337.5 சவூதி ரியால்கள் கட்­ட­ண­மாக செலுத்­தப்­பட்­டன. இத்­தொகை 600 ஹஜ் யாத்­தி­ரி­க­ளுக்கும் செலுத்­தப்­பட்­டன. இலங்கை நாண­யத்தில் செலுத்­தப்­பட்­டுள்ள தொகை 8 கோடி 40 இலட்­சத்து 846 ரூபா­வாகும்.

2013 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றைகள் (Guide lines) கடந்த மூன்று வரு­டங்­க­ளாக மீறப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரிகர் தெரிவு, முக­வர்கள் தெரிவு என்­ப­ன­வற்றில் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள வழி­மு­றைகள் பின்­பற்­றப்­பட்­டுள்­ளன. ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்கு விசா­ரணைக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென்­பதும் பின்­பற்­றப்­பட்­டுள்­ளது.

ஹஜ் முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சையின் பின்பே தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். அவர்கள் பெற்றுக் கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டை­யி­லேயே கோட்டா பகி­ரப்­ப­டு­கி­றது. ஆனால் முக­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய கோட்­டாவின் எண்­ணிக்கை உயர்­நீ­தி­மன்ற ஹஜ் வழி­மு­றையில் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களின் பய­ணத்தை உறுதி செய்து கொள்­வ­தற்­காக அவர்­க­ளி­ட­மி­ருந்து மீள கைய­ளிக்கக் கூடிய கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா திணைக்­க­ளத்­தினால் அற­வி­டப்­ப­டு­கி­றது. அதற்­கான பற்­றுச்­சீட்டும் வழங்­கப்­ப­டு­கி­றது.

ஹஜ் கட­மைக்­காக 20 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்து விட்டு காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்கும் குற்­றச்­சாட்டில் எவ்­வித உண்­மை­யு­மில்லை. இவ்­வ­ருடம் 3400 பேரே ஹஜ் பய­ணத்தை 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்தி உறுதி செய்­துள்­ளார்கள். அதனால் 400 பேரே மேல­தி­க­மாக ஹஜ்­ஜுக்கு காத்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வ­ருடம் 3000 கோட்­டாவே கிடைத்­தது. ஹஜ் யாத்­தி­ரிகர் ஒரு­வ­ருக்­காக 4000 ரூபா சேவைக் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது. 2000 ரூபாவே அற­விட வேண்­டு­மென உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். நிர்­வாக செலவு அதி­க­ரிப்பு, பண வீக்கம் கார­ண­மா­கவே 4000 ரூபா அற­வி­ட­வேண்­டிய நிலைமை எமக்­கேற்­பட்­டது.

ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்­கெ­தி­ராக உயர்­நீ­தி­மன்றில் வழக்­கொன்று விசா­ர­ணை­யின்கீழ் உள்­ளது. இதே­வேளை நீதி­மன்றம் புதிய கோட்டா பகிர்வு முறைக்கு எவ்­வித தடையும் விதிக்­க­வில்லை. ஏனென்றால் இம்­மு­றை­யினால் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்  பேணப்­ப­டு­கி­றது. ஹஜ் கட்­ட­ணத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. முன்­னைய காலங்­களில் 7 இலட்சம் ரூபா­வாக காணப்­பட்ட ஹஜ் கட்­டணம் தற்­போது 4 1/2 , 5 இலட்சம் ரூபா­வாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது என அரச ஹஜ்­குழு தனது பக்க நியா­யங்­களைத் தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணை பிரிவு கோரிக்கை

ஹஜ் முக­வர்கள் சிலரின் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முக­வர்கள் சிலரின் வாக்­கு­மூ­லங்­களை ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரிவு பதிவு செய்­தது. இத­னை­ய­டுத்து இவ்­வ­ருடம் முக­வர்கள் தெரிவு செய்­யப்­பட்ட முறை, கோட்டா பகிர்வு முறை மற்றும் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து பதிவுக் கட்­டணம் அற­விட்­டமை தொடர்­பான விப­ரங்­களை ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரிவு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக்­கிடம் கோரி­யுள்­ளது.

இந்தக் கோரிக்­கையை ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பாளர் ரூபன் விக்­கி­ர­மா­ரச்சி விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நாங்கள் தயார்

ஜனா­தி­பதி ஊழல் விசா­ரணைப் பிரிவு கோரி­யுள்ள அனைத்து விப­ரங்­க­ளையும் தாம­த­மின்றி வழங்­கு­வ­தற்குத் திணைக்­களம் தயா­ரா­க­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்­துள்ளார். ஹஜ் ஏற்­பா­டுகள் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள வழி­மு­றை­க­ளுக்­கேற்ப மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் ஹஜ் விவ­கா­ரத்­தில தற்­போது உரு­வா­கி­யுள்ள நிலை­மை­யினால் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டா­தெ­னவும் அவர் கூறி­யுள்ளார்.

குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை

இதே­வேளை, யுனைட்டட் ஹஜ், ஏஜன்ஸீஸ் ஸ்ரீலங்கா அமைப்பு ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுகள் அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை. அவை போலி குற்­றச்­சாட்­டுகள் என தெரி­வித்­துள்ள அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், இன்று ஹஜ்  ஏற்­பா­டுகள் சிறந்த முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. திணைக்­க­ளத்தின் கணக்­குகள் அனைத்தும் கண்க்­காய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்றும் கூறி­யுள்ளார்.

தபால் அமைச்சில் ஊடக மாநா­டொன்­றினை நடத்­தியே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார்.

மேலும் அவர் 2015 ஆம் ஆண்டு முஸ்லிம் விவ­கார அமைச்சைப் பொறுப்­பேற்­றதும் ஹஜ் செயற்­பா­டு­களில் மாற்­றங்­களைச் செய்ய விரும்­பினேன். ஹஜ் கட்­ட­ணங்­களைக் குறைப்­பதும் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைப் பேணு­வ­துமே எனது இலக்­காக இருந்­தது.

ஹஜ் முக­வர்­களை கலந்­து­ரை­யா­டினேன். கட்­ட­ணங்­களை குறைப்­ப­தற்கு சில முக­வர்கள் உடன்­பட்­டனர். பலர் ஏற்றுக் கொள்­ள­வில்லை. இத­னை­ய­டுத்தே புதிய கோட்டா முறை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இதனால் ஹஜ் கட்­டணம் 7 இலட்­சத்­தி­லி­ருந்து 4 ½ இலட்சம் ரூபா­வா­கவும் 5 இலட்சம் ரூபா­வா­கவும் வீழ்ச்­சி­ய­டைந்­தது.

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் 1500 பேருக்கே திணைக்­களம் கடிதம் அனுப்­பி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாடும் தவ­றா­ன­தாகும். திணைக்­களம் 6500 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு பய­ணத்தை உறுதி செய்­யும்­ப­டி­கோரி கடி­தங்கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

நானோ, திணைக்­க­ளமோ, எனது உத்­தி­யோ­கத்­தர்­களோ ஹஜ் யாத்­தி­ரிர்­களின் பணத்தை கையா­ட­வில்லை. அதற்­கான தேவையும் எனக்­கில்லை. இது புனி­த­மான ஒரு கட­மை­யாகும். இதில் உழைக்க வேண்­டு­மென்ற தேவை எமக்­கில்லை.

உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள Guide lines அனைத்தும் பின்­பற்­றப்­பட்­டுள்­ளன. ஒரு சிலர் ஹஜ் குழுவின் தலைமைப் பத­வியைப் பெற்­றுக்­கொள்ள ஜனா­தி­ப­திக்கு கடிதம் வழங்­கி­னார்கள். ஆனால், பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் என்­மீது கோபம் கொண்டு நான் ஒரு முஸ்லிம் இல்லை என்­கி­றார்கள். நாம் எவ­ருக்கும் பயப்­ப­டப்­போ­வ­தில்லை. அல்­லாஹ்­வுக்கு மாத்­தி­ரமே பயப்­ப­டு­கிறேன் என அமைச்சர் ஹலீம் குற்­றச்­சாட்­டு­களை வன்­மை­யாக மறுத்­துள்ளார்.

அரச ஹஜ் குழு வெளிப்­ப­டை­யாக செயற்­பட வேண்டும்

ஹஜ் ஏற்­பா­டு­களில் முக்­கிய பங்­கினை வகிக்கும் அரச ஹஜ் குழு வெளிப்­ப­டை­யாக செயற்படவேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஹஜ் விவகாரம் ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ் தவிர்ந்த ஏனைய மொழி ஊடகங்கள் தெளிவற்றத்தன்மையிலேயே இருக்கின்றன. இந்நிலைமை கடந்த செவ்வாய்க்கிழமை தபால் அமைச்சரின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஹலீம் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் உறுதியாகியது.

சிங்கள பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் அமைச்சரிடம் ஹஜ் விவகாரம் குறித்து அர்த்தமற்ற கேள்விகளைத் தொடுத்தார். அவர் ஹஜ் ஏற்பாடுகளில் கோடிக்கணக்கான ரூபா ஊழல் நிகழ்ந்துள்ளது என்ற நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்.

எதிர்வரும் காலங்களில் அரச ஹஜ் குழு ஊடக மாநாடுகளை நடத்தவேண்டும். தமது செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் பகிரங்கமாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

மசூராக்கள் அவசியம்

அமைச்சர் ஹலீம், அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் சங்கங்கள் என்பனவற்றுக்கு இடையில் மசூராக்கள் தேவை. கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும்.

ஒரு புனித பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள அனைவரும் புனிதர்களாக இருக்க வேண்டும். குறுகிய மனப்பான்மை கொண்டோராகவும் இலாபத்தை ஈட்டுவதை மாத்திரம் குறியாகக் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடாது.

ஹஜ் முகவர்கள், அமைச்சர் ஹலீம், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள், திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் என பலர் ஒவ்வொரு வருடமும் ஹஜ் சீசனில் கஃபாவைத் தரிசிக்கிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். பலவகையான அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே ஹஜ் ஏற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

அப்படியென்றால் ஒரு புனித பணிக்காக முரண்பாடுகளைக் களைந்து ஏன் இவர்களால் ஒன்றிணைய முடியாது? இதுதான் இன்று எமக்குள் தோன்றியுள்ள பிரச்சினை.

அல்லாஹ் இவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்ய வேண்டும். ஹஜ் யாத்திரிகர்கள் தங்களது கடமைகளை பிரச்சினைகளின்றி நிறைவேற்றுவதற்கு துணை நிற்க வேண்டும். நாமும் பிரார்த்திப்போம்.
-Vidivelli