Verified Web

இறை விசுவாசியின் ஆயுதம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-06-29 04:48:41 T.M.Mufaris Rashadi

மனி­தர்­க­ளுக்கு அல்லாஹ் பல அருள்­களை வழங்­கி­யுள்ளான். அந்த அருள்­க­ளெல்லாம் அவ­னி­ட­மி­ருந்து நாம் இல­வ­ச­மாகப் பெற்றுக் கொண்­ட­வை­களே என்­ப­தனால் அவற்றின் பெறு­மதி உண­ராது நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். அவனை நாம் ஞாப­கப்­ப­டுத்த, அவ­னோடு நாம் பிரார்த்­த­னைகள் மூலம் உரை­யா­டு­வ­தற்குக் கூட நேர­மின்றி வாழ்­கிறோம். எனினும் அவன் அரு­ளாளன், அன்­பாளன் என்ற வகையில் எமக்கு அவ­னோடு உரை­யா­டு­வ­தற்கு அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் அனு­மதி வழங்­கி­யுள்ளான். அதன் மூலம் நாம் எமது தேவை­களை கேட்கும் படியும் அதற்கு அவன் பதி­ல­ளிப்­ப­தா­கவும் வாக்­க­ளித்­துள்ளான்.

''என்­னிடம் கேளுங்கள் நான் உங்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கிறேன்'' (அல்­குர்ஆன் 40:60)

"மேலும், நிச்­ச­ய­மாக நாம் மனி­தனைப் படைத்தோம், அவன் மனம் அவ­னிடம் என்ன பேசு­கி­றது என்­ப­தையும் நாம் அறிவோம். அன்­றியும், (அவன்) பிடரி நரம்பை விட நாம் அவ­னுக்கு நெருக்­க­மாக இருக்­கின்றோம்".(அல்­குர்ஆன் 50:16)

''அல்­லாஹ்­விடம் (துஆ) பிரார்த்­த­னையை விட மதிப்­பிற்­கு­ரி­யது எது­வு­மில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (நூல்கள்- திர்­மிதி, இப்­னு­மாஜா)

"பிரார்த்­தனை ஒரு வணக்­க­மா­கும்”­என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். பிறகு, "என்னை அழை­யுங்கள்! உங்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கிறேன்; எனது வணக்­கத்தை விட்டும் பெரு­மை­ய­டிப்போர் நர­கத்தில் இழிந்­தோ­ராக நுழை­வார்கள் என்று உங்கள் இறைவன் கூறு­கிறான்” என்ற (40:60) வச­னத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்­டி­னார்கள். அறி­விப்­பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்: திர்­மிதீ 3372

நமக்கு ஏதும் தேவைகள் இருந்தால் மாத்­தி­ரம்தான் அவ­னிடம் நாம் கையேந்த வேண்டும் என்ற நிர்ப்­பந்தம் கிடை­யாது. நாம் அவ­னது அன்பைப் பெறவும் அவ­னோடு அதிகம் உரை­யாட வேண்டும். நாம் அல்­லாஹ்வை பல வழி­களில் நெருங்க முடியும். அவனை நாம் நெருங்க நெருங்க அவன் எம் பக்கம் மிக வேக­மாக விரைந்து வரு­கிறான். அவன் எம்மை நேசிக்க ஆரம்­பித்து விட்டால் நமது தேவை­களை அவனே பொறுப்­பேற்றுக் கொள்­கிறான்.

வல்­ல­மையும் மாண்­பும்­மிக்க அல்லாஹ் கூறு­கிறான், ''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்­கி­றானோ அதற்­கேற்ப அவ­னிடம் நான் நடந்­து­கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்­போது நான் அவ­னுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்­ளத்தில் நினை­வு­கூர்ந்தால் நானும் அவனை என் உள்­ளத்தில் நினை­வு­கூ­ருவேன். அவன் ஓர் அவையோர் மத்­தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்­க­ளை­விடச் சிறந்த ஓர் அவை­யி­ன­ரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அள­வுக்கு என்னை நெருங்­கினால் நான் ஒரு முழ­ம­ள­வுக்கு அவனை நெருங்­குவேன். அவன் ஒரு முழம் அள­வுக்கு என்னை நெருங்­கினால் நான் (வலதும் இட­து­மாக விரித்த) இரண்டு கைகளின் நீள அள­வுக்கு அவனை நெருங்­குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். அறி­விப்­பவர் அபூ­ஹு­ரைரா (ரலி), (நூல்கள் - புகாரி 7405, 7505. முஸ்லிம் 5195)

அல்­லாஹ்வை நாம் நெருங்­கவும் அவ­னது உத­வி­கொண்டு நமது எதி­ரி­களை நாம் வீழ்த்­தவும் அவன் எமக்கு வழங்­கிய மிகப்­பெரும் ஆயு­தமே பிரார்த்­த­னை­யாகும். அவனை நாம் அடிக்­கடி தொடர்­பு­கொள்­ளவும் அவ­னோடு நாம் அதி­க­ம­திகம் உரை­யா­டவும் பிரார்த்­த­னையே மிகச்­சி­றந்த ஊட­க­மாகும்.

உங்­க­ளு­டைய இறைவன் கூறு­கின்றான். நீங்கள் என்­னையே அழைத்துப் பிரார்த்­தி­யுங்கள். நான் உங்­க­ளு­டைய பிரார்த்­த­னைக்குப் பதி­ல­ளிப்பேன். நிச்­ச­ய­மாக என்னை வணங்­கு­வதை விட்டும் பெரு­மை­ய­டிப்­ப­வர்கள் இழி­வ­டைந்­த­வர்­க­ளாக நரகில் புகு­வார்கள். (அல்­குர்ஆன் 40:60)

 நாம் எந்­த­வொரு பிரார்த்­த­னையை கேட்­ப­தா­யினும் அல்­லாஹ்­விடம் நேர­டி­யாகக் கேட்கும் படியே அல்லாஹ் எமக்கு கட்­ட­ளை­யிட்­டுள்ளான்.

(நபியே!) என்­னு­டைய அடியார் என்னைப் பற்றி உம்­மிடம் கேட்டால் நிச்­ச­ய­மாக நான் அவர்­க­ளுக்கு மிகச் சமீ­ப­மாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்­ப­வரின் அழைப்­பிற்கு நான் பதி­ல­ளிக்­கிறேன். அவர்கள் நேர்­வழி பெறு­வ­தற்­காக என்­னையே அழைக்­கட்டும், என்­னையே விசு­வாசம் கொள்­ளட்டும்.(அல்­குர்ஆன் 2:186) என்­ப­தாக குறிப்­பி­டு­கிறான்.

 கஷ்­டத்­திற்­குள்­ளா­னவன் அவனை அழைத்தால் அவ­னுக்கு பதில் கொடுத்து, அவன் துன்­பத்தை நீக்­கு­ப­வனும், உங்­களை இப்­பூ­மியில் பின்­தோன்­றல்­க­ளாக ஆக்­கி­ய­வனும் யார்? அல்­லாஹ்­வுடன் (வேறு) நாயன் இருக்­கின்­றானா? (இல்லை) எனினும் (இவற்­றை­யெல்லாம் பற்றி) நீங்கள் சிந்­தித்துப் பார்ப்­பது மிகக் குறை­வே­யாகும். (அல்­குர்ஆன் 27:62)

மனி­தர்கள் அல்­லாஹ்­விடம் கேட்கும் பிரார்த்­த­னை­க­ளுக்கு நிச்­ச­ய­மாக அவன் பதி­ல­ளிக்­கிறான்.

நிச்­ச­ய­மாக உங்கள் இறைவன் நித்­திய ஜீவன், கொடை­யாளன். அவ­னு­டைய அடி­மை­களில் யாரேனும் அவ­னிடம் (எதை­யேனும் கேட்டு) கையேந்­தி­விட்டால் அதனை வெறுங்­கை­யாகத் திருப்­பி­விட அவன் வெட்­கப்­ப­டு­கிறான். (அறி­விப்­பவர்: ஸல்மான் அல் பார்ஸி ரழி, நூல்: அபூ­தாவூத், திர்­மிதி)

பிரார்த்­த­னை­களை அவ­ச­ரப்­ப­டாமல் பணி­வாக, பல முறை திரும்பத் திரும்பக் கேட்­பதன் மூலமே அல்­லாஹ்வின் பதிலை மிக விரை­வாகப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

(ஆகவே, முஃமின்­களே!) உங்­க­ளு­டைய இறை­வ­னிடம் பணி­வா­கவும், அந்­த­ரங்­க­மா­கவும் பிரார்த்­தனை செய்­யுங்கள். வரம்பு மீறி­ய­வர்­க­ளை நிச்­ச­ய­மாக அவன் நேசிப்­ப­தில்லை. (அல்­குர்ஆன்7:55)

உங்­களில் எவ­ரேனும் பிரார்த்­தனை செய்தால் அதனை வலி­யு­றுத்திக் கேட்­கட்டும். நீ விரும்­பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்­பந்தம் செய்வோர் எவ­ரு­மில்லை. (அறி­விப்­பவர் : அனஸ் ரழி, நூல் : புகாரீ)

 ஒரு தடவை பிரார்த்­தனை செய்­து­விட்டு நான் கேட்டேன், கிடைக்­க­வில்லை என்ற முடி­வுக்கு நாம் வந்­து­விடக் கூடாது. இத்­த­கைய நிலை­யி­லி­ருந்து கொண்டு கேட்­ப­வர்­களின் துஆக்கள் அல்­லாஹ்­விடம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை.

அல்­லாஹ்­விடம் நாம் கெஞ்சிக் கேட்­ப­துவும் அவ­னது அருளை எம் பக்கம் மிக அவ­ச­ர­மாகக் கொண்­டு­வந்து சேர்த்­து­விடக் கூடி­ய­தாகும், எனினும் ஒரு காலமும் நாம் அவ­ச­ரப்­பட்­டு­விடக் கூடாது, ஒரு­முறை, இரு முறை பிரார்த்­தனை செய்­து­விட்டு அல்­லாஹ்வை குறை சொல்­வ­தி­லி­ருந்து நம்மை நாம் பாது­காத்துக் கொள்ள வேண்டும்.

"நான் பிரார்த்­தனை செய்தேன்; அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை' என்று கூறி அவ­ச­ரப்­ப­டா­த­வரை உங்­க­ளது துஆக்கள் அங்­கீ­க­ரிக்­கப்­படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி­யுள்­ளார்கள்.

அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி), நூல்: புகாரி 6340

எமது பிரார்த்­த­னைகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான அடிப்­படைத் தகை­மையை நாம் அவ­தா­னித்து அதனை சீர்­செய்­து­விட்டு அல்­லாஹ்­விடம் அடிக்­கடி மன்­றாடி எமது தேவை­களைக் கேட்­பதன் மூலமே எமது பிரார்த்­த­னை­களை பல­னுள்­ள­வை­க­ளாக ஆக்­கிக்­கொள்ள முடியும்.

"உறவைத் துண்­டிக்­கா­மலும் பாவ­மான காரி­யத்தில் அல்­லா­மலும் எந்த ஒரு பிரார்த்­த­னையை ஒரு முஸ்லிம் செய்­தாலும் அவ­ரது அந்தப் பிரார்த்­த­னைக்கு விரை­வாகப் பதில் அளிக்­கப்­படும். அல்­லது அதை அல்லாஹ் மறு­மையில் ஒரு­சே­மிப்­பாக ஆக்­கு­கின்றான். அல்­லது அந்தப் பிரார்த்­த­னைக்குத் தக்­க­வாறு அவ­னது பாவத்தை அழிக்­கின்றான். இவ்­வாறு மூன்று விதங்­களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதி­ல­ளிக்­கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். "நாங்­கள்­அ­தி­க­மாகப் பிரார்த்­தனை செய்தால் என்ன?” என்று நபித்­தோ­ழர்கள் கேட்­டனர். அதற்கு "அல்லாஹ் அதி­க­மாக்­குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: அஹ்மத் 11150

பிரார்த்தனை இறைவிசுவாசியின் ஆயுதமாகும். அதன்மூலம் அவன் தனது மனோ இச்சையையும் ஷைத்தானையும் வெற்றிகொண்டு சுவனத்தை நோக்கி நகர வேண்டும். சுவனத்தை அடைந்துகொள்ள அல்லாஹ்வோடு அவன் அடிக்கடி உரையாட வேண்டும். அவனோடு தொடர்பை சீராக்கி அவனிடம் கெஞ்சிக்கதறி மன்றாடி அவனது அன்பைப்பெற வேண்டும். இவையனைத்தையும் சாத்தியமாக்க எந்நேரமும் அவன்பால் எம் இரு கரங்களையும் உயர்த்திப் பிரார்த்திப்பதுவே ஒரே வழியாகும். எமது வாழ்வே பிரார்த்தனையாகிவிட்டால் வல்லவன் ரஹ்மானின் அன்பும் அருளும் எமது வாழ்வை எந்நேரமும் அலங்கரித்துக் கொண்டிருக்கும்.
-Vidivelli