Verified Web

மாகாண சபை தேர்தல் முறையும் முஸ்­லிம்­களும்

2018-06-29 03:49:49 Administrator

கிழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான காலம் ஏலவே நிறை­வ­டைந்­து­விட்ட நிலையில் மத்­திய, வடமேல் மற்றும் வட மாகா­ணத்தின் பதவிக் காலமும் நிறை­வ­டை­ய­வுள்­ளது.  இந்­நி­லையில் எந்த முறை­மையில் தேர்தல் நடத்­து­வது என்­பது  தொடர்பில் கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாடு இல்­லாத நிலை­மையும் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது சிறு­பான்மை இன கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளான அமைச்­சர்­க­ள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகி­யோரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­தி­ரனும் டக்ளஸ் தேவா­னந்­தாவும் புதிய முறை­மைக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

புதிய முறை­மையில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அம்­மு­றை­மை­யினை திருத்தி தேர்­தலை வைப்­ப­தற்கு போது­மான கால அவ­காசம் இல்­லா­மை­யினால் பழைய முறை­மையின் கீழ் உடன் தேர்­தலை நடத்­து­மாறும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்­தினர். எனினும் புதிய முறை­மையின் பிர­காரம் தேர்தல் நடத்த வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருப்­ப­தாக அமைச்சர் பைசர் முஸ்­தபா கட்சி தலைவர் கூட்­டத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­கப்­பாடு இல்­லாத கார­ணத்­தினால் இது தொடர்­பாக எதிர்­வரும் 6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்த கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக ஆராயும் நோக்கில்  அர­சியல் கட்சி பிர­தி­நி­தி­க­ளுக்கும் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் இடையில் முக்­கி­ய­மான சந்­திப்­பொன்று நடந்­துள்­ளது.  இதனைத் தொடர்ந்து மாகாண தேர்தல் முறைமை குறித்து இணக்­கப்­பாட்­டுக்கு வரு­வ­தற்­கான முயற்சி முன்­னெ­டுக்­கப்­படும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதற்­கி­டையில்  மாகாண சபைத் தேர்­தல்­களை உரிய காலத்தில் நடாத்­து­வ­தற்கு  நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­குழு ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர் மற்றும் அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­தத்­திற்கு எடுத்து, தாம­தி­யாது அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­ப­டியும் தேர்­தல்கள் ஆணைக்­குழு, அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்­களைக் கோரி­யுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை சாய்ந்­த­ம­ருதில் நடை­பெற்ற வாக்­காளர் தின நிகழ்வில் கலந்து கொண்ட தேர்தல் ஆணைக்­குழுத் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, மாகாண சபைத் தேர்­தல்­களை உரிய காலத்தில் நடத்­தாது காலத்தை இழுத்­த­டிப்­பது ஜன­நா­யக விரோத செயல் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலையில் அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை விரை­வாக நடாத்த முன்­வர வேண்டும். அத்­துடன் தேர்தல் முறை தொடர்பில் சிறு­பான்மை கட்சித் தலை­வர்கள் முன்­வைத்த கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் கண்­டிப்­பாக செவி­சாய்க்க வேண்டும். இது விட­யத்தில் ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொள்வார் என்றும் எதிர்­பார்க்­கிறோம்.

அதே­போன்­றுதான் முஸ்­லிம்­களை பாதிக்­காத வகையில் மாகாண சபை தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்­ணயம் தொடர்பில் அர­சாங்கம் போதிய உத்­த­ர­வா­தங்­களை வழங்க வேண்டும் எனும் கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அதேபோன்றுதான் முஸ்லிம்களை பாதிக்காத வகையில் மாகாண சபை தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசாங்கம் போதிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றியும் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
-Vidivelli