Verified Web

நோன்புகள் மூலம் வாழ்க்கையை அலங்கரிப்போம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-06-25 05:36:23 T.M.Mufaris Rashadi

புனி­த­மிகு ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நாம் நோற்­கவும், தொழுகை, குர்ஆன் திலாவத், பிரார்த்­தனை, திக்ர், தர்மம் போன்ற ஸாலி­ஹான அமல்­க­ளையும் செய்ய வாய்ப்­ப­ளித்த அல்­லாஹ்­விற்கே எல்லா புகழும். சிறப்­பு­மிகு ரமழான் மாதம் முடிந்து இப்­போது ஷவ்வால் மாதம் ஆரம்­பித்து விட்­டது. ரமழான் மாதத்தில் பள்­ளி­க­ளெல்லாம் நிறைந்­தி­ருந்­தன, நல்­ல­மல்கள் செய்­வதில் மக்கள் ஆர்வம் காட்­டி­னார்கள். பாவங்­க­ளி­லி­ருந்து மக்கள் மிகத்­தூ­ர­மாக இருந்­தார்கள், அனைத்து வித­மான நன்­மை­க­ளிலும் அதிக ஈடு­பாடு காட்­டி­னார்கள், அல்­ஹம்­து­லில்லாஹ்.

ரமழான் மாதம் சென்­று­விட்­டாலும் கூட வணக்க வழி­பா­டு­களை விட்டும் ஓர் இறை­நம்­பிக்­கை­யாளன் ஒர­ுபோதும் தொடர்­பற்­றுப்­போக மாட்டான். ஓர் உண்­மை­யான முஸ்­லிமின் அமல்­களை மர­ணம்தான் முடி­வுக்குக் கொண்­டு­வரும் என்­ப­தாக ஸலபுஸ் ஸாலி­ஹீன்கள் கூறி­யுள்­ளார்கள்.

யார் மர­ணிக்கும் வரை தன் வாழ்க்­கையை அல்­லாஹ்­வுக்கு கட்­டுப்­பட்டு வாழ்ந்து மர­ணிக்­கின்­றாரோ அவரின் மரண நேரத்தில் வான­வர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்­கிற நற்­செய்­தியை சொல்­லு­மாறு அல்லாஹ் எங்­களை உன்­னிடம் அனுப்­பி­யி­ருக்­கின்றான். ஆகவே, நீ உன் மறுமை நிலை­பற்றி பயப்­ப­டாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்­க­ளைப்­பற்­றியும் கவ­லைப்­ப­டாதே! நாங்கள் இரு உல­கத்­திலும் உனக்கு உத­வி­யா­ளர்­க­ளாக இருப்போம் என அம்­ம­லக்­குகள் யாராலும் ஆறுதல் வார்த்­தைகள் கூற­மு­டி­யாத நேரத்தில் அம்­ம­னி­த­னுக்கு ஆறுதல் வார்த்­தைகள் கூறு­வார்கள்.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் இவ்­வாறு கூறு­கின்றான்: "நிச்­ச­ய­மாக எவர்கள், எங்கள் இறைவன் அல்­லாஹ்தான்" என்று கூறி, (அதன்­மீது) உறு­தி­யாக நிலைத்து நின்­றார்­களோ, நிச்­ச­ய­மாக அவர்­கள்பால் மலக்­குகள் வந்து, "நீங்கள் பயப்­ப­டா­தீர்கள்; கவ­லைப்­ப­டவும் வேண்டாம் - உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட சுவர்க்­கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறி­ய­வாறு) இறங்­கு­வார்கள். "நாங்கள் உலக வாழ்­விலும், மறு­மை­யிலும் உங்­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள்; மேலும் (சுவர்க்­கத்தில்) உங்கள் மனம் விரும்­பி­ய­தெல்லாம் அதில் உங்­க­ளுக்கு இருக்­கி­றது, அதில் நீங்கள் கேட்­ப­தெல்லாம் உங்­க­ளுக்குக் கிடைக்கும். "மிகவும் மன்­னிப்­பவன், மிக்க கிரு­பை­யு­டை­யவன் தரும் விருந்­தாகும்" (இது என்று கூறு­வார்கள்) (அல்­குர்ஆன் 41: 30-32)

நான் நபி(ஸல்) அவர்­க­ளிடம் அல்­லாஹ்வின் தூதரே! நான் உங்­க­ளைத்­த­விர வேறு யாரி­டமும் கேட்­டு­விட முடி­யாத அத்­த­கைய ஒரு சொல்லை இஸ்­லாத்தில் எமக்குக் கூறு­வீர்­க­ளாக! எனக்­கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்­லாஹ்வைக் கொண்டு நான் ஈமான் கொண்டேன் எனக் கூறு­வீ­ராக! பின்னர் (அதன்­மீதே) உறு­தி­யாக நிற்­பீ­ராக! எனக் கூறி­னார்கள். அறி­விப்­பவர்: அபூ அம்ரா ஸுப்யான் பின்­அப்­தில்லாஹ் (ரலி). (முஸ்லிம்)

மேலுள்ள அல்­குர்ஆன் வச­னமும் நபி­மொ­ழியும் அமல்­களில், வழி­பா­டு­களில் நிலைத்­தி­ருத்தல் பற்­றிய மகத்­து­வத்தை தெளிவு படுத்­து­கின்­றன. அந்த வகையில் ரம­ழானில் பெற்ற பயற்­சி­யோடு ஷவ்­வா­லுக்குள் நுழையும் நாம் அப்­ப­டியே நோன்­புக்கு விடு­முறை கொடுத்­து­வி­டாது அந்­த­மா­தத்தில் பிடிக்­கும்­படி வலி­யு­றுத்திச் சொல்­லப்­பட்ட ஸுன்­னத்­தான நோன்­பு­களை நோற்­ப­தி­னூ­டாக உச்­ச­கட்ட பலனை அடைந்­து­கொள்ள முடியும் என்­பதை பின்­வரும் செய்­திகள் விளக்­கு­கின்­றன.

"ஒருவர் ரம­ழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்­வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்­பு­வைத்தால், காலம் முழு­வதும் நோன்பு வைத்­தவர் போலாவார்" என நபி (ஸல்)அவர்கள் கூறி­னார்கள்.

அறி­விப்­பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்.

இந்­நபி மொழிக்கு மார்க்க அறி­ஞர்கள் மூன்று வித­மான விளக்­கங்­களை வழங்­கி­யுள்­ளனர்.

1. பெரு­நாளை அடுத்து வரு­கின்ற தொடர்ச்­சி­யான ஆறு நாட்கள்.

 2. ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்­சி­யான ஏதா­வது ஆறு நாட்கள்.

 3. ஷவ்வால் மாதத்தில் ஏதா­வது ஆறு நாட்கள். இம்­மூன்று கருத்­துக்­க­ளிலும் நாம் விரும்­பிய முறைப்­படி அமல் செய்­ய­மு­டியும்.

"ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்­புக்குச் சம­மா­னது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்­க­ளுக்குச் சம­மா­னது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

அறி­விப்­பவர்: ஸஃப்வான் (ரலி)

நூல்: இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி.

இங்கு எல்லா நன்­மை­களும் ஒன்­றுக்குப் பத்து என்ற அளவில் கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. ரம­ழானில் நோற்ற 30 நோன்­பு­களும் பத்து மாதத்­திற்கு சம­மாகி விடு­கின்­றது. ஆறு நோன்பு அறு­பது நோன்­புக்கு சம­மாகி விடு­கின்­றது. இதனால் வருடம் முழு­வதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்­கி­றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்­கி­யுள்­ளார்கள்.

ஒன்­றுக்குப் பத்து என்ற நன்­மையை அடை­வ­துதான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்­வாலில் எந்த ஆறு நாட்­களில் நோற்­றாலும் இந்த நன்மை கிடைத்­து­விடும். 

இப்­ப­டிப்­பட்ட மிக சிறப்­பு­மிக்க நோன்பை பலர் நோற்­ப­தில்லை, ரமழான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்­பு­களை நோற்­பது சிர­ம­மான ஒன்­றல்ல. இந்த ஆறு நோன்­பு­க­ளையும் தொடர்ந்து நோற்­க­மு­டி­யா­த­வர்கள் விட்டு விட்­டா­வது நோற்­கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடி­வ­தற்கு முன் நோற்­றுக்­கொள்ள வேண்டும்.

அதே நேரம் யார் ரமழான் மாதம் விடு­பட்ட நோன்­பு­களை நோற்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றார்­களோ அவர்கள், அவர்­களின் கட­மை­யான ரமழான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்­புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்­பு­களை நோற்­க­வேண்டும்.

ஷவ்­வா­லோடு நோன்­பு­களை முடித்துக் கொள்­ளாமல் உப­ரி­யான நோன்­பு­க­ளி­னூ­டாக ரம­ழானில் பெற்ற பயிற்­சி­க­ளையும் தொடர முயற்­சிப்போம்.

ஒவ்­வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்­பதும் ரமழான் காலங்­களில் ரமழான் நோன்பு நோற்று வரு­வதும் காலமெல்லாம் நோன்­பி­ருப்­ப­தாகும். அறி­விப்­பாளர்: அபூ­ஹூ­ரைரா (ரழி) நூல் : அஹ்மத், முஸ்லிம்

எனது நேசர் முஹம்­மது(ஸல்) அவர்கள் மூன்று காரி­யங்­களை எனக்கு உப­தே­ச­மாக செய்­தார்கள்

1. ஒவ்­வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்­பது,

2.  ழுஹா நேரத்தில் இரண்டு ரக்­கஅத் தொழு­வது,

3. நான் உறங்கும் முன் வித்ரு தொழு­வது.

அறி­விப்­பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்­களில் நோன்பு வைப்­பீ­ராக’ என்று நபி (ஸல்) கூறி­னார்கள். அறி­விப்­பாளர்: அபூதர் (ரழி), நூல்: திர்­மிதீ, அஹ்மத், நஸாயி.

அரபா நாளில் நோன்பு வைப்­பது பற்றி நபி (ஸல்) அவர்­க­ளிடம் கேட்­கப்­பட்­டது. ‘சென்று போன மற்றும் வர­வி­ருக்கும் வரு­டங்­களின் பாவங்­களை அது அழித்­து­விடும் என பதில் கூறி­னார்கள். அறி­விப்­பாளர்: அபூ கதாதா (ரழி) நூல் : முஸ்லிம்.

முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி நபி­க­ளா­ரிடம் கேட்­கப்­பட்­டது அதற்கு அவர்கள் சொன்­னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக ஆகி­றது. அறி­விப்­பாளர்: அபூ கதாதா (ரழி) நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்­க­ளிடம் கேட்­கப்­பட்­டது: ரமழான் மாதத்­திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபி­ய­வர்கள் சொன்­னார்கள், ரமழான் மாதத்­திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு. அறி­விப்­பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

திங்­கட்­கி­ழ­மையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்றுதான் நான் பிறந்தேன். அன்றுதான் என்மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்:முஸ்லிம்.

நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரழி), நூல்:
-Vidivelli