Verified Web

மாகாண சபைகளுக்கு டிசம்பரில் தேர்தல்

2018-06-20 22:16:14 ARA.Fareel

 

மாகாண சபைத் தேர்தல் வருட இறு­தியில் டிசம்பர் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பழைய தேர்தல் முறை­மையின் கீழ் விருப்பு வாக்கு முறை­யாக தேர்தல் நடத்­தப்­படும். இதற்­கான சட்­டத்­தி­ருத்தம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்துக் கொள்­ளப்­படும் என சுகா­தாரம் போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்­சரும் அமைச்­ச­ர­வையின் இணை ஊடகப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; அர­சியல் கட்­சிகள் மாகாண சபைத் தேர்­தலை பழைய விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்த வேண்­டு­மென்றே பிர­த­ம­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் கோரி­யுள்­ளன என்றார்.

கிழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய மாகாண சபை­களின் பத­விக்­காலம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் காலா­வ­தி­யா­கி­ய­மையை அடுத்து அவற்றின் நிர்­வாகம் ஆளு­நர்­களின் அதி­கா­ரத்தின் கீழ் வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வடமேல், வடக்கு மற்றும் மத்­திய மாகாண சபை­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் காலா­வ­தி­யா­க­வுள்­ளது. மேலும் மேல்­மா­காணம் மற்றும் தென்­மா­காண சபை­களின் பத­விக்­காலம் 2019 ஏப்ரல் மாதம் காலாவதியா கவுள்ளன. ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2019 செப்டெம்பர் மாதம் காலாவதியா கவுள்ளது.
-Vidivelli