Verified Web

சிறைச்சாலை சட்டம் அனைவருக்கும் சமம்

2018-06-20 21:46:00 MFM.Fazeer

 

நீதி­மன்றம் ஊடாக குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­படும் எவரும் சிறைச்­சா­லைகள் சட்­டத்தின் கீழ் சம­மா­கவே கரு­தப்­ப­டு­வ­தா­கவும்,  சிறைச்­சாலை சட்­டத்தின் 106 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய அவர்­க­ளுக்கு அங்கு சிறைச்­சாலை சீரு­டையே அணி­விக்­கப்­படும் எனவும்  நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­துள்ளார். தேரர் ஒரு­வரின் காவி உடையை அகற்றும் உரிமை, அத்­தேரர் உப சம்­பதா பெற்ற சங்க சபைக்கே உரி­யது  என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் அது சாதா­ர­ண­மாக  மத ரீதி­யி­லான அங்­கீ­கா­ரமே தவிர நாட்டின் சட்டம் அல்ல எனவும், நாட்டின் சட்­டத்­துக்கு அனை­வரும் மதிப்­ப­ளிக்க வேண்டும் எனவும்  அவர் தெரி­வித்­துள்ளார்.

ஞான­சார தேர­ருக்கு கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட நிலையில், அவ­ரது காவி உடை சிறைச்­சாலை சட்­ட ­திட்­டங்­களின் படி அகற்­றப்­பட்டு அவ­ருக்கு வெள்ளை சீருடை வழங்­கப்­பட்­டமை தொடர்பில், ஞான­சார தேரர் உப சம்­பதா பெற்ற கோட்டே ஸ்ரீ கல்­யானி  மகா சங்க சபையின் அனு­நா­யக்க தேர­ரான  பேரா­சி­ரியர்  கொட்­ட­பிட்­டியே ராஹுல தேரர், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் விளக்கம் கோரி கடிதம் ஒன்­றினை கடந்த 16 ஆம் திகதி அனுப்பி இருந்தார். அக்­க­டி­தத்­துக்கு நேற்று அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள பதி­ல­ளித்தே மேற்­படி விட­யத்தை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

 "ஞான­சா­ர தேரரின் காவி­யு­டை ­க­ளை­வது தொடர்­பாக தாங்­களால் அனுப்­பப்­பட்ட கடிதம் கிடைக்­கப்­பெற்­ற­மையை கௌவ­ரத்­துடன் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விடயம் தொடர்­பான தீர்ப்பு ஹோமா­கம நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டது என்­ப­தையும் அறி­யத்­த­ரு­கிறேன்.

உங்கள் கடி­தத்தில் இலங்­கையில் உள்ள சட்­டத்­திற்­க­மைய பௌத்த பிக்கு ஒருவர் தன் புனி­தத்­து­வத்தை இழப்­பா­ராயின் அவ­ரது காவி­யு­டையைக் களையச் செய்யும் அதி­காரம் அந்த பிக்­குவால் பின்­பற்­றப்­படும் சங்க சபைக்கே உரியதாகும். அத்­துடன் பௌத்த விவ­கார ஆணை­யாளர் நாய­கத்தால் கூட அதனை அமுல்­ப­டுத்த இய­லாது. ஆனால், குறித்த நிக்­கா­யவின் மகா­நா­யக்­கரால் பொறுப்புச் சாட்­டப்­பட்டால் மாத்­தி­ரமே பௌத்த விவ­கார ஆணை­யாளர் நாய­கத்தால் அதனை நிறை­வேற்ற முடியும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள்.

தங்­களால் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்ள விட­யங்கள் எமது நாட்டின் சட்­டத்தில் உள்­ள­தொன்­றல்ல என்­பதை மிகவும் மரி­யா­தை­யுடன் தெரி­வித்துக் கொள்­கிறேன். அது பௌத்த சம­யத்தில் காவி­யுடை களையச் செய்யும் விதத்­தி­லான சீலப் பண்பை துஷ்­பி­ர­யோகம் செய்­த­வ­ருக்கு பௌத்த தர்­மத்தில் உள்ள விதி­மு­றை­யாகும். அதற்­க­மைய தம்­ம­னச்­சாட்­சிப்­படி குறித்த நபரால் காவி­யு­டையைக் களைந்து கொள்­ளலாம்.

இந்த அடிப்­ப­டையில் அதனைப் பின்­பற்­று­வ­தற்கு எடுத்து நடப்­ப­தற்கு, சம்­பந்­தப்­பட்ட நிகா­ய­வுக்கோ அதன் தலை­வ­ருக்கோ முடியும். இதில் தலை­யிட எந்த அர­சுக்கோ நாட்டு நிரு­வா­கி­க­ளுக்கோ அரசை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிரி­வி­ன­ருக்கோ உரி­மை­யில்லை என்­ப­தையும் நான் அறிவேன்.

விடயம் இவ்­வா­றி­ருக்க சுயா­தீ­ன­மாக இயங்கும் நீதி­மன்­றத்­திற்குள் நாட்­டி­லுள்ள சகல பிர­ஜை­களும் நாட்டில் அமு­லி­லுள்ள சட்­ட­திட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்டு நடக்­கவும் அதனை மதித்து நடக்­கவும் உடன்­பா­டு­டை­யவர் என்­பதை மேலும் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

 

நீதி­மன்றத் தீர்ப்பில் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டவர் யாரா­னாலும் சரி அவர் சிறைச்­சா­லைகள் சட்­ட­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள படியே வழி­ந­டத்­தப்­ப­டு­வதே எமது நாட்டின் சட்­ட­மாகும்.

எனவே சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் அதே சட்­டத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு அரச மட்­டத்தில் பொறுப்­பு­தா­ரி­யாவார். அதற்­கி­ணங்க சிறைச்­சா­லைகள் சட்­ட­மூ­லத்தின் 106 ஆவது உறுப்­பு­ரைக்­க­மைய நீதி மன்­றத்தால் சிறைத் தண்­டனைத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள எவ­ரா­னாலும் சிறைக் கைதி­க­ளுக்­கு­ரிய சீரு­டையை அணி­விக்கச் செய்ய பணிப்­புரை விடுப்­பது ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்.

பௌத்த தர்ம போதனைகளில் ஈடுபடுவோர் பௌத்த கொள்கையை பின்பற்றி நடப்பது, சமூகத்தில் நற்பண்புகளை மதித்து வாழ்வது, இதர இன மதங்களுக்கும் கௌரவமளித்தல், அனைவருக்கும் வாழக்கூடிய உரிமைகளை வழங்கல், எந்த வகையிலும் அழுத்தங்களோ தடைகளோ பிரயோகிக்காது அனைவரும் வாழக்கூடிய விதத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளல் போன்ற பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிகவும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-Vidivelli