Verified Web

ஹஜ்: வரவேற்கத் தக்க மாற்றங்கள்

2018-06-19 04:35:31 Administrator

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களில் புதிய வர­லாற்றுப் பதி­வொன்று இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மனம் பெற்ற 95 ஹஜ் முக­வர்­களில் 12 முக­வர்­களை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் நிரா­க­ரித்­துள்­ளார்கள்.

இவ்­வ­ருடம் ஹஜ் முக­வர்கள் தெரி­வுக்­கென நிய­மிக்­கப்­பட்ட 95 முக­வர்­களின் பெயர் விப­ரங்கள் மற்றும் அவர்­க­ளது ஹஜ் கட்­டணம் என்­பன பத்­தி­ரிகை ஊடாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டன. ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்து அவர்­க­ளூ­டாக பயண ஏற்­பா­டு­களைச் செய்து கொள்­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் 12 ஹஜ் முக­வர்­களை நிரா­க­ரித்­துள்­ளார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஹஜ் முக­வர்­களின் கடந்­த­கால சேவை வர­லா­றுகள், ஊழல்கள் என்­பன தொடர்பில்  தீர ஆராய்ந்த பின்னே ஹஜ் முக­வர்­களை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­துள்­ளார்கள்.

பல வரு­டங்கள் அனு­பவம் வாய்ந்த, தொட­ராக பத்­தி­ரி­கை­களில் ஹஜ் விளம்­ப­ரங்­களை பிர­சு­ரித்­து­வரும் சில முக­வர்­களும் இவ்­வ­ருடம் பய­ணி­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு 50 வரை கோட்டா வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் 5 க்கும் குறை­வான ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களே அவ்­வா­றா­ன­வர்­களைத் தெரிவு செய்­துள்­ளார்கள்.

புதிய கோட்டா பகிர்வு முறை­யினால் தாம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் புதிய கோட்டா பகிர்வு மூலம் உப­மு­க­வர்­களின் ஆதிக்கம் மேலெ­ழுந்­துள்­ள­தா­கவும் ஹஜ் முக­வர்கள் பலர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீ­மிடம் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள்.

இதே­வேளை புதிய கோட்டா பகிர்வு முறையே சிறந்­தது. ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு சுய­மாக சிறந்த ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­வ­தற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ்­வ­கை­யான போட்டித் தன்­மை­யினால் ஹஜ் கட்­ட­ணங்­களில் வீழ்ச்­சி­யேற்­பட்­டுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி.எம்.ரி.சியாத் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வ­ருடம் சவூதி ஹஜ் அமைச்­சினால் இலங்­கைக்கு 3000 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டுள்­ளது. இதில் 2800 ஹஜ்­ஜா­ஜிகள் பய­ணிக்­க­வுள்­ளனர். எஞ்­சிய 200 கோட்டா ஹஜ் வழி­காட்­டி­க­ளுக்­கா­கவும் சமை­யற்­கா­ரர்­க­ளுக்­கா­கவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ரு­டமும் இலங்­கைக்கு மேல­திக  ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. என்­றாலும் இறுதி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா கிடைத்தால் பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்­துள்ளார். கடந்த வருடம் இறுதி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா கிடைத்­த­மை­யினால் பல ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஏமாற்­றப்­பட்­ட­மை­யையும் அவர் நினைவு கூர்ந்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் இறுதி நேரத்தில் கிடைக்கும் ஹஜ் கோட்­டாவை முகா­மைத்­து­வப்­ப­டுத்த வேண்­டி­யது ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கட­மை­யாகும்.

ஹஜ் விவகாரத்தில் பொதுமக்கள் தற்போது உரிய தெரிவுகளைப் பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. இவ்வருடம் 12 முகவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை இதற்கு உதாரணமாகும்.

ஏனைய ஹஜ் முகவர்கள் தமது பொறுப்பினை சிறப்பான முறையில் நிறைவேற்றாது விட்டால், ஹஜ் பயணிகளின் நலன் பேணப்படாவிட்டால் அவர்களுக்கும் இதே கதியே ஏற்படும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
-Vidivelli