Verified Web

வெலிக்கடை ஆர் சிறை விடுதியில் ஞானசார தேரர்

2018-06-18 03:52:26 ARA.Fareel

சசி­றைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சேகா சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த விஷேட சிறைக்­கூ­டத்­துக்கு அரு­கா­மை­யி­லுள்ள ‘ஆர்’ சிறை­வி­டு­தியில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 14 ஆம் திகதி மாலை ஞான­சார தேரர் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­போது அவ­ரது பெயர் அங்கு பதிவு செய்­யப்­பட்டு காவி உடை அகற்­றப்­பட்டு அணிந்து கொள்­வ­தற்­காக வெள்­ளை­நிற புடவை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஞான­சார தேர­ருக்கு அணிந்து கொள்­வ­தற்­காக சிறைச்­சாலை சீருடை அவ­ரது அளவில் அங்கு இல்­லா­மையால் புதி­தாக அவ­ரது அள­வி­லான சீருடை தயா­ரித்துக் கொள்ள வேண்­டி­யேற்­பட்­ட­த­னாலே வெள்ளை துணி வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரது சிறைத் தண்­ட­னைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளதால் வெள்ளை பனியன் P/A என அடை­யா­ள­மிட்டு வழங்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட ‘ஆர்’ சிறை­வி­டு­தியில் அவ­ருடன் மேலும் சுமார் 8 கைதிகள் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஞான­சார தேரர் வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி பெறு­வ­தற்கோ அல்­லது விஷேட சலு­கைகள் பெற்­றுக்­கொள்­வ­தற்கோ விரும்­ப­வில்லை எனவும் மறுப்புத் தெரி­வித்­துள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு கார­ணங்கள் கருதி ஞான­சார தேரர் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள சிறை­வி­டுதி எது என்­பதை தெரி­விப்­ப­தற்கு சிறைச்­சாலை ஆணை­யா­ளரின் ஊடகப்பேச்சாளர் துசார உபுல் தெனிய மறுப்புத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் மேன்முறையீட்டு சிறைக்கைதி என்பதால் கடூழிய வேலைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரு­கா­மை­யி­லுள்ள ‘ஆர்’ சிறை­வி­டு­தியில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

-Vidivelli