Verified Web

தினம் 15 கோடி ரூபா நஷ்டம்

2018-06-17 23:25:44 ARA.Fareel

தபா­ல் ஊழியர் சங்­கங்கள் ஆரம்­பித்­துள்ள வேலை­நி­றுத்தம் கார­ண­மாக தபால் திணைக்­க­ளத்­துக்கு தினம் 15 கோடி ரூபா நஷ்­டம் ஏற்­ப­டு­வ­தாக தபால்­ அமைச்சின் செய­லாளர் ஆர்.எம்.டி­.பி.மீ­கஸ்­முல்ல தெரி­வித்­துள்ளார்.

தபால்­ தலைமையகத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்­து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தொடர்ந்தும் கருத்­து தெரி­விக்­கை­யில், “பொது நிர்­வாக சுற்றுநிருபம் 6/2006 மூலம் உரு­வா­­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­மாறு தொழிற்சங்க­ங்கள் கோரு­வது நியாயம் என்­றா­லும் அதற்­காக வேலை நிறுத்­தத்­தி­ல் ஈடு­ப­டு­வது தவ­றாகும்.

அமை­ச்­ச­ரவை உப­கு­ழு மூல­ம் தபால் ஊழி­யர்­களின் பிரச்­சினைகளுக்­கு 14 நாட்­க­ளுக்­­கு­ள் தீர்வு வழங்­கு­வ­­தா­க அறிவிக்­கப்­­பட்­டி­­ரு­­ந்த நிலையில் வேலை நிறுத்தம் ஆரம்­பி­க்­கப்­பட்­டதால் தபா­ல் திணைக்­க­ளம் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. சர்வ­தேச தபால் சேவை­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ள­ன.

தொழிற்­சங்­க­ங்கள் முன்வைத்­துள்­ள 5 பிரச்­சி­னை­களில் 4 பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. சேவைத்­த­ரங்கள் தொடர்பில் சிக்கல்கள் ஏற்­பட்­டுள்­ளது. என்­றாலும் சில தினங்­களில் அனைத்­துப் பிரச்­சி­னை­களும் தீர்த்து வைக்­கப்­படும். அதனால் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­­ள­வர்கள் வேலைக்குத் திரும்ப வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்டார்.

தபா­ல் அதிபர் ரோஹண அப­ய­ரத்ன கருத்து தெரி­விக்­கை­யில், “வேலை நிறுத்தம் கார­ண­மாக நாட்­டி­லுள்ள 4610 தபால் நிலை­யங்­கள் மூடப்­பட்­டு­ள்­ளன. கட்­டு­நா­யக்க வெளிநாட்டு தபால் சேவை பிரிவில் மாத்­தி­ர­ம் 10 லொறி அள­வி­லான தபால்கள் குவிந்­துள்­­ளன” என்­றார். நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்­து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தொடர்ந்தும் கருத்­து தெரி­விக்­கை­யில், “பொது நிர்­வாக சுற்றுநிருபம் 6/2006 மூலம் உரு­வா­­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­மாறு தொழிற்சங்க­ங்கள் கோரு­வது நியாயம் என்­றா­லும் அதற்­காக வேலை நிறுத்­தத்­தி­ல் ஈடு­ப­டு­வது தவ­றாகும்.

அமை­ச்­ச­ரவை உப­கு­ழு மூல­ம் தபால் ஊழி­யர்­களின் பிரச்­சினைகளுக்­கு 14 நாட்­க­ளுக்­­கு­ள் தீர்வு வழங்­கு­வ­­தா­க அறிவிக்­கப்­­பட்­டி­­ரு­­ந்த நிலையில் வேலை நிறுத்தம் ஆரம்­பி­க்­கப்­பட்­டதால் தபா­ல் திணைக்­க­ளம் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. சர்வ­தேச தபால் சேவை­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ள­ன.

தொழிற்­சங்­க­ங்கள் முன்வைத்­துள்­ள 5 பிரச்­சி­னை­களில் 4 பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. சேவைத்­த­ரங்கள் தொடர்பில் சிக்கல்கள் ஏற்­பட்­டுள்­ளது. என்­றாலும் சில தினங்­களில் அனைத்­துப் பிரச்­சி­னை­களும் தீர்த்து வைக்­கப்­படும். அதனால் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­­ள­வர்கள் வேலைக்குத் திரும்ப வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்டார்.

தபா­ல் அதிபர் ரோஹண அப­ய­ரத்ன கருத்து தெரி­விக்­கை­யில், “வேலை நிறுத்தம் கார­ண­மாக நாட்­டி­லுள்ள 4610 தபால் நிலை­யங்­கள் மூடப்­பட்­டு­ள்­ளன. கட்­டு­நா­யக்க வெளிநாட்டு தபால் சேவை பிரிவில் மாத்­தி­ர­ம் 10 லொறி அள­வி­லான தபால்கள் குவிந்­துள்­­ளன” என்­றார்.
-Vidivelli