Verified Web

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான ஒஸ்ரியாவின் தீர்­மானம் சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லுக்கு அச்­சு­றுத்­த­லாகும்

2018-06-14 05:25:37 M.I.Abdul Nazar

பள்­ளி­வா­சல்கள் பல­வற்றை மூடி­வி­டு­வ­தற்கும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­ய­ளிக்­கப்­படும் டசின்­க­ணக்­கான இமாம்­களை வெளி­யேற்­று­வ­தற்கும் ஒஸ்­ரி­யா எடுத்­தி­ருக்கும் தீர்­மானம் சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லுக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என விசனம் தெரி­வித்­துள்ள துருக்­கிய பிர­தமர் பினாலி இல்ரிம், தீர்­மா­னத்­தினை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஐரோப்­பிய யூனி­யனின் தலைமைப் பொறுப்­பினை ஏற்­ப­தற்கு சற்று முன்­ன­தாக வியன்­னா­வினால் எடுக்­கப்­பட்­டுள்ள இத் தீர்­மானம் பெரும் தவறு என்­ப­தோடு மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மான விட­ய­மு­மாகும் என செவ்­வாய்­கி­ழ­மை­யன்று ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய இல்ரிம் தெரி­வித்தார்.

ஒஸ்­ரிய அர­சாங்கப் பேச்­சாளர் இது தொடர்பில் கருத்து வெளி­யிட மறுத்­து­விட்டார்.

ஏழு பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­வ­தற்கும் ஐரோப்­பா­வி­லுள்ள துருக்­கிய இஸ்­லா­மிய கலாசார சங்­கத்தின் ஒன்­றிய உறுப்­பி­னர்கள் 40 பேர் உள்­ள­டங்­க­லாக 60 இமாம்­களை வெளி­யேற்­று­வ­தற்­கான திட்­டத்­தினை கடந்த வாரம் ஒஸ்­ரிய அதிபர் செபேஸ்­ரியன் குர்ஸ் அறி­வித்தார்.

மத்­திய அரசின் அதி­ப­ரான அதிபர் செபேஸ்­ரியன் குர்ஸ் தலை­நகர் வியன்­னா­வி­லுள்ள துருக்­கிய தேசிய பள்­ளி­வா­ய­லொன்­றையும் மூடு­வ­தா­கவும் ஆறு பள்­ளி­வா­சல்­களை நிரு­வ­கித்­து­வரும் அரபு சமய சமூகம் என்ற குழு­மத்தை கலைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் அறி­வித்தார்.

துருக்­கிய ஆத­ர­வுடன் இயங்­கி­வரும் பள்­ளி­வா­சல்­களில் சிறு­வர்கள் இறந்­த­துபோல் நடித்து விளை­யா­டிய விதம் மற்றும் முதலாம் உலக யுத்­தத்­தி­னை­யொத்த நாட­கங்­களை நடித்­தமை தொடர்­பான புகைப்­ப­டங்­களை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எட்­டப்­பட்­ட­தாக குடி­­வ­ர­வுக்கு எதி­ரான சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்தி அதிபர் பத­விக்கு வந்த குர்ஸ் தெரி­வித்தார்.

துருக்­கிய கொடி­களை அசைத்தும் அதன் பின்னர் சிறு­வர்கள் இறந்­த­துபோல் நடித்த கடந்த ஏப்ரல் மாதம் வெளி­யா­கிய புகைப்­ப­டங்கள் குறித்தே அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

துருக்­கிய இஸ்­லா­மிய கலாசார சங்கம் இந்தப் புகைப்­ப­டங்கள் தொடர்பில் கண்­டனம் வெளி­யிட்­டி­ருந்­த­தோடு அந்த நிகழ்வு மகவும் வருந்தத்தக்­கது எனவும் தெரி­வித்­தி­ருந்­தது.

பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­வ­தற்கும் இமாம்­களை வெளி­யேற்­று­வ­தற்கும் ஒஸ்­ரி­யா­வினால் எடுக்­கப்­பட்­டுள்ள இத் தீர்­மானம் அந் நாட்டில் காணப்­ப­டு­கின்ற இஸ்­லா­மிய எதிர்ப்­பு­ணர்வு, இன­வாத மற்றும் பாகு­பாட்டு அலையின் பிர­தி­ப­லிப்­பாகும் எனத் தெரி­வித்து துருக்­கிய அர­சாங்கம் கண்­டித்­துள்­ளது.

பல்­வேறு விட­யங்­க­ளோடு சமயக் குழு­மங்­க­ளுக்கு வெளி­நாட்டு நிதி­யு­த­வி­களை தடை செய்யும் 2015 ஆண்டு இஸ்லாம் தொடர்­பான கடு­மை­யான சட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ஒஸ்­ரிய அர­சாங்கம் பள்­ளிவா­சல்­களை மூடு­கின்­றது.

முன்­ன­தாக குர்ஸ் நல்­லி­ணக்க அமைச்­ச­ராக இருந்­த­போது குறித்த சட்­டத்தை நிறை­வேற்­று­வதில் கண்­கா­ணிப்­பா­ள­ராக இருந்தார்.

ஒஸ்ரியாவின் வலதுசாரி கூட்டணி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாத்துக்கெதிரான தப்பபிப்பிராயங்களைப் பரப்புவதை ஊக்குவித்து வருவதாக அந் நாட்டின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.  ஒஸரியாவில் ஆறு இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பான்மையினர் துருக்கியர்கள் அல்லது துருக்கிய குடும்பங்களின் வழித் தோன்றல்களாகக் காணப்படுகின்றனர்.
-Vidivelli