Verified Web

ஸகாத்துல் பித்ர் சம்பந்தமான மார்க்கத் தெளிவு

2018-06-14 05:20:42 Administrator

எ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)
கனிஷ்ட உதவி ஒருங்கிணைப்பாளர் - ஃபத்வா

 

ஸகாத்துல் பித்ர் என்றால் என்ன?

ஸகாத்துல் பித்ர் என்­பது ஸத­கத்துல் பித்ர் என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. இஸ்­லா­மிய வழக்கில் ஸகாத்துல் பித்ர் என்ற பெயர் ரமழான் மாதத்தில் இறு­தியில் கொடுக்­கப்­ப­டு­கின்ற தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. ஸத­கத்துல் பித்ர் என்­பது ஆண் பெண் மற்றும் சிறியோர் பெரியோர் என்ற வேறு­பா­டின்றி ஒவ்­வாரு முஸ்­லிமின் மீதும் கட்­டாயக் கட­மை­யாகும். நபி ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் நோன்­பா­ளியின் வீணான பேச்­சுக்கள் மற்றும்  வீணான நடத்­தை­களை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக வேண்­டியும் ஏழை­க­ளுக்கு உண­வுக்­கா­கவும் ஸகாத்துல் பித்ரைக் கட­மை­யாக்­கினார். (அறி­விப்­பவர்: இப்னு அப்பாஸ் (ரழி).நூல் அபூ­தாவூத்)

ஸகாத்துல் பித்ர் எப்­போது கடமை­யாக்­கப்­பட்­டது?

ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு  கட­மை­யாக்­கப்­பட்­டது.

ஸகாத்துல் பித்ர் கட­மை­யா­கு­வ­தற்­கு­ரிய நிபந்­த­னைகள்:

ஸகாத்துல் பித்ரை நிறை­வேற்­று­வ­தற்கு பின்­வரும் மூன்று நிபந்­த­னைகள் இருத்தல் வேண்டும்.

1.ஸகாத்துல் பித்ரை நிறை­வேற்­று­பவர் முஸ்­லி­மாக இருத்தல் வேண்டும்.

2.ஸகாத்துல் பித்ரை நிறை­வேற்­று­வ­தற்கு ஷவ்வால் மாதப் பிறை தென்­ப­டுதல்.

3.பெருநாள் தினத்தில் (இரவு பகல் அடங்­க­லாக) தனக்­கா­கவும் தன் பரா­ம­ரிப்பில் உள்­ள­வர்­க­ளுக்­கா­கவும் உணவு, உடை. இருப்­பிடம் மற்றும் கடன் தேவைகள் போக மேல­தி­க­மா­னதைப் பெற்­றி­ருத்தல்.

யாருக்­காக இதனை வழங்குவது கடமை?

தனக்­கா­கவும் தனது பரா­ம­ரிப்­பி­லுள்­ள­வர்­க­ளுக்கும்  இதை வழங்­கு­வது கட­மை­யாகும். (ரமழான் மாதத்தின் சூரிய அஸ்­த­ம­னத்­திற்கு முன்னால் மணம் முடித்த மனைவி, பிறந்த குழந்தை மற்றும் சூரிய அஸ்­த­ம­னத்­துக்கு பின்னால் மர­ணித்­தவர் ஆகி­யோர்­க­ளுக்­கா­கவும் கொடுக்­கப்­படல் வேண்டும்.)

யாருக்கு இதனை வழங்­கு­வது கடமை?

அல்­குர்­ஆனில் கூறப்­பட்­டுள்ள ஸகாத் பெறத் தகு­தி­யு­டைய  பகீர்கள், மிஸ்­கீன்கள், அதன் உத்­தி­யோ­கத்­தர்கள், புதி­தாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொண்­ட­வர்கள், அடி­மை­களை விடு­தலை செய்­வ­தற்கும், கடனில் மூழ்­கி­ய­வர்கள், அல்­லாஹ்­வு­டைய பாதையில் போரா­டு­ப­வர்கள், வழிப் போக்­கர்கள் ஆகி­யோ­ருக்கு வழங்­கு­வது கட­மை­யாகும்.

எப்­போது வழங்­கப்­படல் வேண்டும்?

ஸகாத்துல் பித்ர் என்­பது ஷவ்வால் பிறை கண்­டது முதல் பெருநாள் தொழுகை நிறை­வேற்­றப்­படும் வரை, அன்­றைய நாளு­டைய தேவைக்கு மேல­தி­க­மாக உள்ள சொத்­தி­லி­ருந்து கட்­டாயம் கொடுக்­க­வேண்­டிய ஒரு இபா­தத்­தாகும். றமழான் பிறை கண்­டது முதல் இதைக் கொடுக்­கவும் முடியும். என்­றாலும் ஒருவர் ரம­ழானில் நிறை­வேற்­றா­விட்டால் பிறகு கழா செய்ய வேண்டும்.

எவ்­வ­ளவு வழங்­கப்­பட வேண்டும்? எப்­பொ­ருளில் வழங்­கப்­ப­ட­வேண்டும்?

ஒரு நப­ருக்கு தலா 2400 கிராம் வீதம் பிர­தான உண­வாக உட்­கொள்­ளப்­படக் கூடிய அரிசி, கோதுமை போன்ற தானிய வகை­க­ளி­லி­ருந்தே ஸக்­காத்துல் பித்ர் கொடுக்­கப்­பட வேண்டும் என்றும் அதன் பெறு­ம­தியைக் கொடுப்­பது கூடாது என்றும் பெரும்­பா­லான மார்க்க அறி­ஞர்கள் கூறு­கின்­றனர்.

இதற்கு ஆதா­ர­மாக நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்­க­ளது காலத்தில் தீனார், திர்ஹம் போன்ற நாண­யங்கள் புழக்­கத்­தி­லி­ருந்தும் கூட தாணி­யங்­க­ளி­லி­ருந்தே ஸக்­காத்துல் பித்ர் கொடுக்­கும்­படி கூறி­யுள்­ளார்கள்.

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்­லது ஒரு ஸாஃ அளவு வாற்­கோ­து­மையை ஸகாத்துல் பித்­ராகக் கொடுக்­கும்­படி கட்­ட­ளை­யிட்­டார்கள் என இப்னு உமர் றழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள்  அறி­விக்­கின்­றார்கள்.

மேலும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்­க­ளிடம் ஸகாத்துல் பித்ரை திர்­ஹ­மாகக் கொடுப்­பது சம்­பந்­த­மாகக் கேட்­கப்­பட்ட போது 'நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­களின் வழி­மு­றைக்கு மாற்­ற­மாகக் கொடுத்தால் அது ஸகாத்துல் பித்­ராக நிறை­வேற மாட்­டாதோ என்று நான் அஞ்­சு­கின்றேன்' என்று கூறி­னார்கள்.

என்­றாலும், இமாம் அபூ­ஹ­னீபா ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் சில ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து ஸகாத்தல் பித்ரை நிறை­வேற்றும் பொழுது அதன் பெறு­ம­தியைக் கொடுக்­கலாம் என்று கூறு­கின்­றார்கள். என்­றாலும், இக்­க­ருத்து ஆதா­ரங்கள் அடிப்­ப­டையில் பலம் குறைந்­த­தாக உள்­ளது.

ஆகவே, ஸக்­காத்துல் பித்ர் தானி­ய­மா­கவே கொடுக்­கப்­ப­ட­வேண்டும் என்­றுள்ள ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்தும், பெரும்­பான்­மை­யான மார்க்க அறி­ஞர்­களின் கருத்­தினை அடிப்­ப­டை­யாக வைத்தும், ஸகாத்துல் பித்ரை நிறை­வேற்­றும்­போது , இலங்­கையின் பிர­தான உண­வாக உட்­கொள்­ளப்­படும் அரி­சி­யையே ஸக்­காத்துல் பித்­ரா­க­வாகக் கொடுத்தல் வேண்டும். மேலும், இது ஓர் இபா­தத்­தாக இருப்­பதால் நபி ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் எவ்­வாறு செய்­ய­தார்­களோ அவ்­வாறே அதை நிறை­வேற்­று­வது அவ­சி­ய­மாகும்.

இன்னும், மேல­திக உத­விகள் செய்ய நாடினால் கட­மை­யான ஸக்­காத்துல் பித்ரை அரி­சாகக் கொடுப்­ப­துடன், சதகா மற்றும் அன்­ப­ளிப்­பி­லி­ருந்து பொருட்­க­ளா­கவோ அல்­லது பண­மா­கவோ விரும்­பி­ய­வற்றைக் கொடுக்­கலாம்.

மேலும், ஸக்­காத்துல் பித்ர் கொடுப்­ப­தற்குக் கடமையானவர்கள் இன்னும் ஒருவரைக் கொடுப்பதற்குப் பொறுப்பாக்கவும் முடியும். இச்சந்தர்ப்பத்தில் ஸக்காத்துல் பித்ரைக் கொடுப்பவர்கள் தாம் பொறுப்பாக்குபவர்களுக்குப் பணமாக அனுப்பி அவர்கள் அரிசியை வாங்கி உரியவர்களுக்கு ஸக்காத்துல் பித்ராக விநியோகிப்பார்கள். 

எனவே, மார்ககத்தை அதன் தூயவடிவில் அறிந்து செயற்படுவதற்கும் ஏழை எளியோர்களின் உள்ளத்தில் பெருநாள் தினத்தில் மகிழ்ச்சியை எற்படுத்தவும் நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
-Vidivelli