Verified Web

பாகிஸ்தானில் இம்ரான்கானை எதிர்த்து களமிறங்கும் நூறு வயதான மூதாட்டி

2018-06-14 05:12:37 M.I.Abdul Nazar

எதிர்­வரும் ஜூலை மாதம் இடம்­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் பாகிஸ்தான் தெஹ்­ரீக்-­இ-­இன்சாப் கட்­சியின் தலைவர் இம்­ரான்கான் போட்­டி­யி­ட­வுள்ள தொகு­தியில் அவரை எதிர்த்து நூறு வயது மூதாட்­டி­யொ­ருவர் போட்­டி­யி­ட­வுள்ளார்.

பன்னு மாவட்­டத்தின் ஹைபர் பாக்­ஹுட்­டுன்­க­ஹாவா பகு­தியைத் தழு­விய வகையில் அமைந்­துள்ள தேர்தல் தொகு­தியில் பாகிஸ்தான் தெஹ்­ரீக்-­இ-­இன்சாப் கட்­சியின் தலைவர் இம்­ரான்­கானை எதிர்த்து 100 வய­தான ஹஸ்ரத் பீபி சுயேச்சை வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­கின்றார்

சட்ட மன்­றத்தில் நுழை­வ­தற்கு இது அவர் போட்­டி­யிடும் முத­லா­வது தேர்தல் அல்ல, இவர் இதற்கு முன்­ன­தாக ஐந்து தட­வைகள் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருக்­கின்றார் எனினும் அதில் ஒன்றில் கூட அவர் வெற்றி பெற­வில்லை.

தனது தொகு­தியில் தான் வெற்­றி­யீட்டும் பட்­சத்தில் தனது தொகுதி மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வுள்­ள­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

நான் தெரிவு செய்­யப்­பட்டால் பெண்கள் கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்­துவேன் எனத் தெரி­வித்­தி­ருக்கும் பீபி தனிப்­பட்­ட­ரீ­தியில் அவ­ரது தொகு­தியில் பிர­ப­ல­மா­ன­வ­ராகக் காணப்­ப­டு­கின்றார்.

பாகிஸ்தான் தெஹ்­ரீக்-­இ-­இன்சாப் கட்­சியின் மாவட்டத் தலைவர் மதி­யுல்லாஹ் கான் மற்றும் மற்­று­மொரு தலை­வ­ரான மாலிக் காலிட் கான் ஆகியோர் இம்ரான் கானின் வேட்பு மனு­வினை கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று உள்ளூர் தெரி­வத்­தாட்சி அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இத் தொகுதி 1,167,892 பேர் வசிக்கும் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசமாகும். 
-Vidivelli