Verified Web

மீள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஈராக் பிரதமர் மறுப்பு

7 days ago M.I.Abdul Nazar

பாரா­ளு­மன்றத் தேர்தல் மீள நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யினை நிரா­க­ரித்­துள்ள ஈராக் பிர­தமர் ஹைதர் அல்-­அ­பாதி, யாரா­வது அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தினால் அவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

தேர்தல் நடந்து முடிந்­து­விட்­டது, இதில் மீளத் திரும்ப முடி­யாது. புதிய அர­சாங்கம் ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் முன்­னோக்கிப் பய­ணிக்க வேண்டும் எனவும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அல்-­அ­பாதி தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வாக்குப் பெட்­டிகள் வைக்­கப்­படும் பக்­தாதின் மிகப் பெரும் களஞ்­சி­ய­சா­லையில் தீ ஏற்­பட்­டதைத் தொடர்ந்து தேர்தல் முடி­வுகள் இரத்துச் செய்­யப்­பட்டு புதிய தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என சில ஈராக்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளளால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை தொடர்­பி­லேயே இக் கருத்­தினை அபாதி வெளி­யிட்டார்.

தீச் சம்­பவம் வேண்­டு­மென்றே மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டாகும் எனத் தெரி­வித்த அவர், அர­சியல்  முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டமா அதிபர் குற்­றச்­சாட்­டுக்­களை சமர்ப்­பிப்பார் எனவும் தெரி­வித்தார்.

ஷியா மத­கு­ரு­வான முக்­ததா அல்-சத்ர் அணி வெற்றி பெற்­றுள்ள இத் தேர்­தலை ரத்துச் செய்து மீண்டும் தேர்­த­லுக்கு செல்­வதா இல்­லையா என்­பது தீர்­மா­னிப்­பது உச்ச நீதி­மன்றம் மாத்­தி­ர­மே­யாகும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வாக்குப் பெட்­டிகள் வைக்­கப்­பட்­டி­ருந்த களஞ்­சி­ய­சாலை தீப்­பி­டித்­ததைத் தொடர்ந்து அர­சியல் கொதி­நி­லை­யினைத் தடுக்கும் நோக்கில் மீண்டும் தேர்தல் நடத்­து­வது தொடர்பில் நாம் வாதி­டு­வதைத் தவிர்த்து ஈராக்­கி­யர்கள் ஒன்­று­பட வேண்டும் என சத்ர் கோரிக்­கை­வி­டுத்தார்.

களஞ்­சி­ய­சா­லைக்கு தீ வைத்த குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் நான்கு பேரைக் கைது செய்யுமாறு ஈராக்கிய நீதிமன்றமொன்று கட்டளையிட்டுள்ளது. இவர்களுள் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர், மற்றுமொருவர் சுதந்திர உயர்நிலை தேர்தல் ஆணைக்குழுவின் பணியாளராவார்.
-Vidivelli