Verified Web

இந்து மத விவகார பிரதியமைச்சராக: முஸ்லிம் இருப்பதில் பிரச்சினையில்லை

2018-06-14 04:29:20 ARA.Fareel

 


முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இந்து விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பானபிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதில் எந்தப் பிரச்­சி­னை­க­ளு­மில்லை. இன­வாதம் பேசு­ப­வர்கள் அவ­ரது நிய­ம­னத்தை எதிர்க்­கி­றார்கள். கடந்த காலத்தில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக சிங்­க­ளவர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­ததை நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். அமைச்சர் ஒரு­வரின் செயற்­பா­டுகள் தான் மதம் சார்­பாக அமை­யாது அவ­ரது மனதைப் பொறுத்­ததே என சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்­சரும் அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். காதர் மஸ்தான் இந்து சமய விவ­கார பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு சிவா­ஜி­லிங்கம் போன்றோர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்­களே? என வின­வி­ய­தற்கு அமைச்சர் ராஜித தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், இன­வாதம் எங்கும் இருக்­கி­றது. தெற்­கிலும் இருக்­கி­றது. சில ஊட­கங்­களும் இன­வா­தத்தைப் போஷிக்­கின்­றன.

இன­வாதம் பேசு­ப­வர்கள் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­ப­டுவர். இன­வாதம் பேசும் சிவா­ஜி­லிங்­கமும் விக்­னேஸ்­வ­ரனும் மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளார்கள். விக்­னேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­போது நான் மிகவும் மகிழ்ந்தேன்.

ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் என்று. இன்று அவரும் பேவ்மன்ட் அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

சில நிகழ்வுகளுக்கு சிவாஜிலிங்கம் அனுமதிக்கப்படுவதுமில்லை. இவ்வாறானவர்களின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்வதுமில்லை என்றார்.
-Vidivelli