Verified Web

இன்புளுவன்ஸா வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

2018-06-14 03:46:18 ARA.Fareel

தெற்கில் பர­வி­வந்த இன்­பு­ளுவென்சா வைரஸ் நோய் 95 வீதம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்­டது. இந்த வைரஸ் நோய் நாட்டின் எந்தப் பகு­திக்கும் பர­வ­மாட்­டது என சுகா­தாரம் போசனைமற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; "மழைக்­கா­லங்­க­ளிலே இலங்­கையில் வைரஸ் நோய் பர­வு­கி­றது. இந்த வைரஸ் நோய்த்­தொற்று. ஒவ்­வொரு வரு­டமும் வேறு­பட்ட வைரஸ்­கி­ரு­மி­க­ளி­னாலே பர­வு­கின்­றன. இதன் கார­ண­மா­கவே கடந்த வருடம் இறக்­கு­மதி செய்த தடுப்­பூ­சிகள் இந்­த­வ­ருடம் உப­யோ­கத்­துக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இன்­பு­ளு­வன்ஸா வைரஸ் நோய் எந்த வைர­ஸினால் பர­வு­கி­றது என்­பதை கண்­ட­றி­வ­தற்­காக விசேட வைத்­திய நிபுணர் குழு ஆய்­வு­களை மேற்­கொண்டு அறிக்­கை­யினை சமர்ப்­பித்­துள்­ளது.

இந்த இன்­பு­ளு­வன்ஸா வைரஸ் நோய் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பரவாது தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
-Vidivelli