Verified Web

ஷவ்வால் தலைப்­பிறை மாநாடு வெள்­ளிக்­கி­ழமை

2018-06-14 00:58:43 Administrator


ஷவ்வால் மாதத் தலைப்­பிறை பற்றித் தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ள­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.

பிறைக்­குழு  நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் ஆகி­யோரின் பங்­கு­பற்­று­த­லுடன் மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் தலைப்­பிறை மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாக உறுப்­பி­னர்கள் அதன் பிறைக்­குழு அங்­கத்­தினர், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை உறுப்­பி­னர்கள், அதன் பிறைக்­குழு அதி­கா­ரிகள் ஆகியோர் முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்­திற்­கி­ணங்­கவே மேற்­படி மாநாடு இடம்­பெ­று­கி­றது.

இம் மாநாட்டில் தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் ஏக­ம­ன­தாக தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டா­கவும் ஏனைய ஊட­கங்கள் மூல­மா­கவும் மாநாட்டு தலை­வ­ரினால் நாட்டு மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக உத்­தி­யோ­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும்.

எனவே ஷவ்வால் மாதத் தலைப்­பிறை சம்­பந்­த­மான ஊர்­ஜி­த­மற்ற தவ­றான தக­வல்­க­ளையோ வதந்­தி­க­ளையோ பகி­ரா­மலும் அவற்றை நம்பி வழி­த­வ­றா­மலும் அவதானத்தோடு இருக்குமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றும் பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli