Verified Web

கத்தியால் குத்த முயன்ற குற்றச்சாட்டில் பலஸ்தீன நபர் இஸ்ரேல் படையால் கைது

2018-06-13 05:08:58 M.I.Abdul Nazar


காணி அப­க­ரிப்பு தொடர்பில் டெல் அவிவ் அர­சாங்­கத்­திற்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக இஸ்­ரே­லியப் படை­யி­ன­ருக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் இடை­யே­யான பதற்ற நிலை உக்­கி­ர­ம­டைந்­து­வரும் நிலையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட வட­ப­குதி ஆள்­புலப் பிர­தே­சத்தில் பலஸ்­தீன நபர் ஒரு­வரை இஸ்ரேல் படை­யி­னர் கைது செய்­துள்­ளனர்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரை நக­ரான ஜெனினைச் சேர்ந்த இனந்­தெ­ரி­யாத பலஸ்­தீன நப­ரொ­ரு­வ­ரினால் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அபுலா நகரில் 18 வய­தான பெண்­ணொ­ருவர் படு­கா­யத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக இஸ்­ரே­லிய ஊட­கங்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அபு­லாவில் வசிக்கும் குறித்த பெண் மிகவும் சிர­மப்­பட்டு சில அடி­களை எடுத்­து­வைத்து நடந்­து­வந்து அருகில் அமைந்­தி­ருந்த அரோமா தேனீர்க் கடைக்கு முன்னால் விழுந்­துள்ளார். பலஸ்­தீன நப­ரொ­ருவர் தன்னை கத்­தியால் குத்­தி­விட்­ட­தாக அந்த இடத்தில் நின்­றி­ருந்­த­வர்­க­ளிடம் குறித்த பெண் தெரி­வித்­தள்ளார்.

குறித்த நபரை நிற்­கு­மாறு கோரிய பின்னர் பொலிஸார் குறித்த நபரின் காலில் துப்­பாக்கிச் சூட்­டினை மேற்­கொண்டு சந்­தேக நபர் தன் வசம் கத்­தி­யொன்றை வைத்­தி­ருந்த நிலையில் கைது செய்­யப்­பட்டார் என பெயர் குறிப்­பி­டப்­ப­டாத இஸ்­ரே­லிய பொலிஸ் போச்­சாளர் தெரி­வித்தார்.

18 வய­தான பெண்ணின் உடலின் மேல் பகு­தியில் பார­தூ­ர­மான பல கத்­திக்­குத்துக் காயங்­க­ளுடன் ஹீமெக் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக இஸ்­ரேலின் மாஜென் டேவிட் அடொம் அவ­ச­ர­கால மருத்­துவ சேவை தெரி­வித்­தது.

கடந்த 2017 டிசம்பர் மாதம் ஆறாந் திகதி அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூச­லத்தை அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும், அமெரிக்கத் தூதரகத்தை அங்கு மாற்றப்போவதாகவும் அறிவித்ததைதைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பதற்ற நிலை தீவிரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli