Verified Web

பிறை விவகாரம்: அ இ ஜ உ சபைக்கு சில ஆலோசனைகள்

2018-06-13 04:55:32 Administrator

அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத்

இம்­முறை (2018) பிறை விட­யத்தில் சில சுவா­ரஷ்­யங்கள் நிகழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாகத் தோன்­று­கி­றது. உலகப் பொதுச் சூழல் மாத்­தி­ர­மன்றி கால­நிலை மாற்­றங்­களும் கூட அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவை சில நிர்ப்­பந்­தங்­க­ளுக்குத் தள்­ளி­விடும் நிலை ஏற்­பட்டு வரு­வ­தாக எண்ணத் தோன்­று­கி­றது. பிறைக் குழுச் செய­லாளர் ஷெய்க் முக்ஷித் அஹ்­மதின்  அறிக்­கையும் ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் ஷெய்க் ரிஸ்வி முப்­தியின்  ஜும்ஆ பிர­சங்க தெளி­வு­ரையும் இத­னையே குறித்து நிற்­கின்­றன. ரமழான் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வதில் நடை­பெற்ற அனைத்து நட­வ­டிக்­கை­களும் ஷரீஆ வரை­ய­றை­க­ளுக்கு உட்­பட்­டுத்தான் நடை­பெற்­றுள்­ளன என்ற தர்க்­கம்தான் பிர­தா­ன­மாக அவற்றில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதன் கார­ண­மாக,  இங்கு நிகழும் தவ­றுகள் மார்க்­கத்தில் குற்­ற­மாகக் கரு­தப்­பட மாட்­டாது. இது உண்­மைதான் ஏலவே பிறை­பார்த்தல் தொடர்­பாக ஜம்­இய்­யதுல் உலமா எடுத்­துள்ள ஐந்து அடிப்­ப­டை­களின் பிர­காரம் மேலே பேசப்­பட்ட தர்க்­கத்தில் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. ஆனால் இங்கு எங்கள் கவ­னத்தைப் பெற­வேண்­டிய முக்­கி­ய­மானதொரு விடயம் இருக்­கி­றது. பிறை தொடர்­பான ஜம்­இய்­யதுல் உல­மாவின் அடிப்­ப­டைகள் ஷரீஆ வரம்­பு­க­ளுக்­குள்ளே இருந்­துதான் பெறப்­பட்­டுள்­ளன,  ஆனால் அந்த ஐந்து அடிப்­ப­டை­களும் மாத்­தி­ரம்தான் ஷரீஅத்,  அவற்­றிற்கு வெளியில் ஷரீஅத் என்று சொல்­வ­தற்கு எதுவும் கிடை­யாது என்று நாம் நினைத்தால் அங்­குதான் முக்­கி­ய­மாக நாம் தவறு விடு­கின்றோம். அந்­த­வ­கையில் அந்த அடிப்­ப­டை­க­ளுக்கு வெளி­யிலும் பிறை தொடர்பில் ஷரீ­அத்­துக்­குட்­பட்டு தீர்­மா­னங்கள் பெறு­வ­தற்கு இடம் இருக்­கி­றது என்­பது உண்மை. இங்­குதான் ஜம்­இய்­யதுல் உலமா தனது பிறை அடிப்­ப­டைகள் குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்­கான இடம் உரு­வா­கி­றது. அதற்­கான காலமும் கனிந்­தி­ருக்­கி­றது என்றே நான் நினைக்­கின்றேன்.

இவ்­வ­ருடம் (2018) ஏற்­பட்­டுள்ள புதிய சூழ்­நி­லை­களைக் கருத்தில் கொண்டு 28 நாட்­களில் ரமழான் நிறை­வு­பெறும் நிலை வந்­தாலும் அதனை எதிர்­கொள்­வ­தற்­கான சாத­க­மான நிலைப்­பாட்டை ஜம்­இய்­யதுல் உலமா பெற்­றுள்­ளது. இது வர­வேற்­கத்­தக்­கது. எனினும் இந்த இடத்­துடன் மாத்­திரம் ஜம்­இய்­யதுல் உலமா நின்­று­விடக் கூடாது. இதற்கு அப்பால் சென்று இது போன்ற அசௌ­க­ரி­ய­மான சூழ்­நி­லை­களில் இருந்து நிரந்­த­ர­மாக வெளி­வ­ரு­வ­தற்­கான வழிகள் பற்றி சீரி­ய­ஸாக சிந்­திக்க வேண்டும் என்று நினைக்­கிறேன். இந்த அசௌ­க­ரி­ய­மான சூழ்­நி­லைக்கு இம்­முறை பெரிதும் கால­நிலை மாற்றம் கார­ண­மாக அமைந்­தது. இதன் பின்­னரும் கால­நிலை மாற்­றங்கள் இவ்­வி­ட­யத்தில் பாதிப்புச் செலுத்த மாட்­டாது என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை. மாத்­தி­ர­மன்றி, சில நம்­பத்­த­குந்த துறை­சார்ந்­த­வர்­க­ளது அவ­தா­னங்­களின் படி எதிர்­கால கால­நிலை மாற்­றங்கள்,  பிறை­பார்க்கும் வழி­மு­றையில் இப்­போது கடைப்­பி­டிக்கும் வெற்றுக் கண்ணால் பார்த்தல் விதியை தொடர்ந்தும் பிர­யோ­கிக்க முடி­யாத நிலை தோன்­றலாம் என்றும் கருத்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. இது ஒரு காரணம்.

இந்தக் கார­ணத்­திற்கு அப்பால் கடந்த காலங்­களில் பெரிதும் கண்டு கொள்­ளப்­ப­டாமல் கடந்து சென்ற மற்­றொரு கார­ணமும் இருக்­கி­றது. அதுதான் “மக்கள் எதிர்­பார்ப்பு” எனும் காரணம். இந்த மக்கள் எதிர்­பார்ப்பு என்ற காரணம் நியா­ய­மான அடிப்­ப­டைகள் மீது எழு­கின்­ற­போது அதற்கு இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் ஒரு பெறு­மானம் இருக்­கி­றது. பத்­வாக்கள் மாற்­ற­ம­டை­வ­தற்­கான நியா­ய­மாக அது மாறு­கி­றது. இத­னைத்தான் இமாம் இப்னுல் கையிம் போன்­ற­வர்கள் கால, இட சூழ்­நிலை மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப பத்வா மாறுதல் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­னார்கள். இன்று இந்த மக்கள் எதிர்­பார்ப்பு என்ற காரணி எவ்­வாறு உரு­வா­கி­யி­ருக்­கி­றது எனின்,  இன்­றைய நவீன அறி­வியல் கண்­டு­பி­டிப்­புக்­களும்,  தொலைத் தொடர்பு சாத­னங்­களின் வளர்ச்­சியும்,  தகவல் வெடிப்பும் மனி­த­னது அறி­விலும் சிந்­திப்­பிலும் உற­வு­க­ளிலும் பெரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. உலகம் முழு­வதும் ஒரு கிரா­ம­மாக மாற்றம் பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் நோன்பை ஆரம்­பித்தல் என்­பதும் பெரு­நாளைக் கொண்­டா­டுதல் என்­பதும் உலகில் எந்த மூலையில் நிகழ்ந்­தாலும் அனை­வரும் அறிந்து கொள்ளும் நிலை மாத்­தி­ர­மன்றி தாமும் அதில் பங்­கு­கொள்ள வேண்டும் என்ற மன­நி­லையும் பெரிதும் வளர்ந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக நோன்பும் பெரு­நாளும் முழு முஸ்லிம் உம்­மத்தும் பங்கு கொள்ளும் முக்­கிய இரு இபா­தத்கள் என்ற வகையில் சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டு உணர்வு பெரிதும் மக்கள் மனங்­களில் வளர்ந்­தி­ருப்­பதைக் காணலாம். இந்த மன­நிலை மாற்­றத்தின் கார­ண­மா­கத்தான் உள்­நாட்டில் பிறை காண்­பதில் ஏற்­படும் தாம­தங்கள் பல கேள்­வி­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி விடு­கின்­றன. இது உலகின் புதிய சூழ்­நிலை. கடந்த காலங்­களில் காணப்­ப­டாத புதிய சூழ்­நிலை. இந்தப் புதிய சூழ்­நி­லைக்கு ஏற்­ற­வ­கையில் பத்­வாக்­க­ளிலும் மார்க்க நிலைப்­பா­டு­க­ளிலும் மாற்­றங்கள் தேவை. அதிலும் குறிப்­பாக நோன்பு மற்றும் பெருநாள் போன்ற நட­வ­டிக்­­கைகள் தனி­ம­னித நட­வ­டிக்­கைகள் அன்றி எல்லா மக்­களும் இணைந்து பங்கு கொள்ளும் பொது நட­வ­டிக்­கைகள். எனவே மக்­க­ளது எதிர்­பார்ப்­புக்கள் அங்கே பெரிதும் தாக்கம் செலுத்­து­கின்­றன. அந்த எதிர்­பார்ப்­புக்கள் நேர­டி­யாக ஷரீ­அத்தின் விதி­க­ளு­டனோ மகா­ஸி­து­க­ளு­டனோ முரண்­ப­ட­வில்லை எனின் அவை கருத்தில் கொள்­ளப்­பட வேண்டும் என்­பது இமாம்­களின் பொதுக் கருத்­தாகும்.

அந்­த­வ­கையில் ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறை அடிப்­ப­டை­களில் முக்­கி­ய­மாக முதல் இரண்டு அடிப்­ப­டை­க­ளான உள்­நாட்டில் பிறை­பார்த்துச் செயற்­ப­டுதல் என்­பதும் வெற்றுக் கண்­களால் பிறை­பார்த்தல் என்­பதும் மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாய நிலையில் இருப்­ப­தா­கவே நான் நினைக்­கிறேன். தொழி­நுட்பம் வளர்ச்­சி­ய­டை­யாத ஒரு காலத்தில் இந்த அடிப்­ப­டைகள் மிகவும் பொருத்­த­மா­ன­வை­யா­கவும் சரி­யா­ன­வை­யா­கவும் இருந்­தி­ருக்­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால் தற்­போ­தைய புதிய சூழ்­நி­லை­களை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய காலப்­பொ­ருத்தம் இவற்­றுக்கு இருப்­ப­தாக இன்னும் எண்­ணு­வ­தற்­கில்லை. இங்கு மீண்டும் ஒரு விட­யத்தை நினை­வு­ப­டுத்திக் கொள்­கிறேன். இங்கு வலி­யு­றுத்­தப்­ப­டு­வது காலம் மாறு­வ­தற்கு ஏற்ப மார்க்­கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்­பது அல்ல. மாற்­ற­மாக மார்க்கம் அனு­ம­தித்த ஒரு நிலைப்­பாட்­டி­லி­ருந்து மார்க்கம் அனு­ம­தித்த மற்­றொரு நிலைப்­பாட்டை நோக்கிச் செல்­வ­துவே இங்கு நாடப்­ப­டு­கி­றது. அதிலும் மார்க்கம் அனு­ம­தித்த ஒரு கார­ணத்­திற்­கா­கவே அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

அதே போல்,  இங்கு மாற்­றீ­டாக சர்­வ­தேச பிறை எனும் பத்­வா­வுக்குச் செல்ல வேண்டும் என்ற பரிந்­து­ரை­யையும் நான் செய்­ய­வில்லை. காரணம், சர்­வ­தேச முஸ்லிம் உம்­மத்தின் அர­சியல் ரீதி­யான முரண்­பா­டுகள் கார­ண­மாக இந்த விட­யத்தில் முஸ்லிம் உம்­மத்­தினர் அனை­வரும் கடைப்­பி­டிப்­ப­தற்­கு­ரிய பொது முறைமை ஒன்று இல்லை. முழு உம்­மத்­தையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இப்­ப­ணியை யார் மேற்­கொள்வார்? என்ற கேள்­விக்கு தெளி­வான ஒரு பதிலைப் பெற்றுக் கொள்­வது சிர­ம­மா­னது.

அர­சியல் ரீதி­யான கார­ணங்கள் அதற்கு உண்டு. உதா­ர­ண­மாக வானியல் கணிப்­பீட்டின் அடிப்­ப­டையில் சர்­வ­தேச ஹிஜ்ரி காலண்டர் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான சர்­வ­தேச அறி­ஞர்கள் ஒன்­றி­யத்தின் முன்­மொ­ழிவு, இன்னும் அர­சியல் தலை­மை­களின் ஆசிர்­வாதம் கிடைக்­கா­ததால் முடி­வில்­லாமல் இருக்­கி­றது. இது போன்­ற­தொரு சர்­வ­தேச உடன்­பாடு எட்­டப்­ப­டும்­போது அத­னோடு இலங்கை முஸ்லிம் சமூ­கமும் இணைந்து பய­ணிப்­பது எமது பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வாக அமைய முடியும். அதற்­கான காலம் இன்னும் கனி­ய­வில்லை என்று நினைக்­கிறேன்.

அதுபோல்,  வானியல் கணிப்­பீட்டு முறை,  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறை அடிப்­ப­டை­களைப் பார்க்­கின்ற பொழுது,  வானியல் கணிப்­பீட்டு முறையை அவர்கள் முழு­மை­யாக மறு­த­லிக்­க­வில்லை என்­பது விளங்­கு­கி­றது. ஏனெனில் பிறை அடிப்­ப­டை­களில் பிந்­திய மூன்று அடிப்­ப­டை­களும் வானி­ய­லுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளையே பேசு­கின்­றன. பொது­வாக வானியல் கணிப்­பீட்டு முறை தொடர்பில் இஸ்­லா­மிய உலகின் அறி­ஞர்கள் மத்­தியில் பிர­தா­ன­மாக மூன்று வகை­யான நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. ஒன்று, கணிப்­பீட்டு முறையை முழு­மை­யாக ஏற்கும் நிலைப்­பாடு. இரண்டு, முழு­மை­யாக மறுக்கும் நிலைப்­பாடு. மூன்­றா­வது, பிறையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக கணிப்­பீட்டைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை.

ஆனால் பிறையை மறுப்­ப­தற்­காகப் பயன்­ப­டுத்த முடியும் என்ற நிலைப்­பாடு. அதா­வது, கணிப்­பீட்­டின்­படி பிறை தென்­பட முடியும் என்­றி­ருக்­கி­றது,  ஆனால் வெற்றுக் கண்­களால் யாரும் பிறையைக் காண­வில்லை, இப்­பொ­ழுது கணிப்­பீட்டை மாத்­திரம் வைத்து பிறை தீர்­மா­னிக்­கப்­பட மாட்­டாது. மாற்­ற­மாகக் கணிப்­பீட்டின் படி பிறை தென்­பட முடி­யாது என்­றி­ருக்­கின்ற பொழுது எவ­ரேனும் வெற்றுக் கண்­களால் பிறையைக் கண்­ட­தாக அறி­வித்தால் கணிப்­பீட்­டின்­படி பிறை தென்­பட முடி­யாது என்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவ­ரது சாட்­சியம் மறுக்­கப்­படும். இந்த மூன்­றா­வது நிலைப்­பாட்­டில்தான்  ஜம்­இய்­யதுல் உலமா இருக்­கி­றது என்­பது தெளி­வா­னது. சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் கிண்­ணியா பிறை மறுக்­கப்­பட்­ட­மையும் இந்த அடிப்­ப­டையை வைத்தே நடை­பெற்­றுள்­ளது.

இங்கு கணிப்­பீட்டு முறையை முழு­மை­யாக ஏற்க வேண்டும் என்றும் நான் ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்குச் சொல்­ல­வில்லை. எனது தனிப்­பட்ட கருத்­தின்­படி தற்­கா­லத்தில் கணிப்­பீட்டு முறைதான் மிகவும் சரி­யான ஷரீஅத் முடிவு.  அதுதான் தற்­கா­லத்தில் குர்­ஆ­னையும் ஹதீ­ஸையும்  இவ்­வி­ட­யத்தில் பின்­பற்­று­வ­தற்­கான மிகச்­ச­ரி­யான வடிவம் என்று நம்­பு­கிறேன். இருந்த போதிலும் அதனை நான் முழு­மை­யாக அவர்­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­க­வில்லை. காரணம், இஸ்­லா­மிய உலகின் ஓயாத கருத்து வேறு­பாட்டுப் பரப்­புக்­களில் ஒன்­றாக இதுவும் இருப்­ப­தனால் எவ­ரையும் குறித்த ஒரு கருத்தின் மீது நிர்­பந்­திக்க முடி­யாது,  இது விசா­ல­மாக அணுக முடி­யு­மான ஒரு இடம். அந்த வகையில் மிகவும் சாலப்­பொ­ருத்­த­மா­னது எது என்ற தேடல்தான் இங்கு முக்­கி­ய­மா­னது. அந்த திறந்த கலந்­து­ரை­யாடல் ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு  உள்­ளேயே இருந்­துதான் கருக்­கொள்ள வேண்டும்,  வெளி நிர்ப்­பந்­தங்­களை விடவும்,  என்று நினைக்­கிறேன்.

ஆனால் இங்கு நான் வலி­யு­றுத்த விரும்­பு­வது,  ஜம்­இய்­யதுல் உலமா,  கணிப்­பீட்டு முறை தொடர்பில் தற்­போ­தி­ருக்கும் நிலைப்­பாட்­டி­லி­ருந்து இன்னும் ஒரு­படி மேலே வர வேண்டும் என்­ப­துதான். அவர்கள் மேலே வர வேண்­டிய இடம் எது என்­பதை அடுத்து பேச­வுள்ள கருத்­தோடு விளங்­கப்­ப­டுத்­து­கிறேன். ஏனெனில் அத­னுடன் இணைத்­துதான் இது விளங்கிக் கொள்­ளப்­பட வேண்டும்.

இன்று உள்­நாட்டுப் பிறையா? சர்­வ­தேசப் பிறையா? என்ற ஒரு கருத்து வேறு­பாடு இருக்­கி­றது. இன்று உண்­மையில் உள்­நாடு,  சர்­வ­தேசம்  போன்ற சொல்­லா­டல்கள் மூலம் இன்­றைய அர­சியல் ரீதி­யான நில எல்­லை­களே நாடப்­ப­டு­கின்­றன. இந்த நில எல்­லைகள் நவீன காலத்தில் தோற்றம் பெற்­றவை. ஆனால் ஆரம்ப கால இமாம்­களின் இது தொடர்­பான கருத்து வேறு­பாடு உள்­நாடு, சர்­வ­தேசம் என்ற நில எல்லைப் பிரிப்பை மையப்­ப­டுத்தி அமை­ய­வில்லை. மாற்­ற­மாக ஓரி­டத்தில் பிறை தென்­பட்டால் அப்­பி­ர­தே­சத்­திற்கும் அதனை அண்­மித்த பிர­தே­சங்­க­ளுக்கும் மாத்­திரம் உரி­யதா? அல்­லது பிறை தென்­ப­டாத எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் உரி­யதா? என்ற கருத்து வேறு­பாடே பிர­தா­ன­மாக நில­வி­யது. இதில் ஜும்ஹுர் எனும் பெரும்­பா­லான அறி­ஞர்­களின் நிலைப்­பா­டாக இரண்டாம் நிலைப்­பாடே இருந்­தது. அதா­வது, ஓரி­டத்தில் பிறை தென்­பட்டால் அது எல்லா இடங்­க­ளுக்கும் உரி­யது என்ற நிலைப்­பாடு. முதலாம் நிலைப்­பாடு பெரும்­பா­லான ஷாபி மத்­ஹ­பி­னரின் கருத்­தாகும். அதா­வது ஓரி­டத்தில் பிறை கண்டால் அது அண்­மித்­துள்ள எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் உரி­ய­தாகும் என்ற நிலைப்­பாடு. இமாம் நவவி அவர்கள் ஷாபி மத்­ஹ­புக்­குள்ளே இந்த நிலைப்­பாடே மிகவும் சரி­யா­னது என்­கிறார்.

(1). ஆனால், ஷாபி மத்­ஹ­புக்­குள்ளே இந்த அண்­மித்த பிர­தே­சத்தை வரை­யறை செய்­வது எவ்­வாறு என்­பதில் கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது. அவற்றில் மிகவும் பிர­ப­ல­மான கருத்து எது­வெனின்,  “ஓரி­டத்தில் பிறை தென்­படும் போது,  அதே பிறை தென்­பட முடி­யு­மான ஏனைய பிர­தே­சங்கள்” என்­ப­தாகும். இக்­க­ருத்தை ஷாபி மத்­ஹபின் பிர­பல இமாம்­களில் ஒரு­வ­ரான இமாம் தகிய்­யுத்தீன் சுப்கி அவர்கள் ராஜி­ஹா­ன­தாகக் கரு­து­கி­றார்கள் (2). மாத்­தி­ர­மன்றி இக்­க­ருத்தை பிர­யோ­கத்­திற்கு எடுக்கும் போது,  அங்கு கணிப்­பீட்டு முறை­யையும் கருத்தில் கொள்ள வேண்­டிய ஒரு நிலமை ஏற்­ப­டு­கி­றது,  ஏனெனில் பிறை தோன்ற முடி­யு­மான ஏனைய பிர­தே­சங்­களை அடை­யாளம் காண்­பது கணிப்­பீட்டின் மூலமே சாத்­தி­யப்­ப­டு­கி­றது என்றும் ஆனால் இங்கு கணிப்­பீட்டு முறையைப் பயன்­ப­டுத்­து­வ­தா­னது கண்­களால் பிறையைப் பார்த்தல் என்ற வழி­மு­றையை முழு­மை­யாக இல்­லாமல் செய்து விட மாட்­டாது என்றும் விளக்­க­ம­ளிக்­கி­றார்கள். (கணிப்­பீடு தொடர்பில் இமாம் சுப்­கியின் இந்த நிலைப்­பாட்­டுக்கு ஜம்­இய்­யதுல் உலமா வரு­வதே சிறந்­தது) இமாம் நவவி அவர்­களும் இந்த நிலைப்­பாடே சரி­யா­னது என்­கி­றார்கள்(3).

ஓரி­டத்தில் பிறை கண்டால் அது,  அதனை அண்­மித்த பிர­தே­சங்­க­ளுக்கும் செல்­லு­ப­டி­யாகும் என்ற நிலைப்­பாடு உண்­மையில் ஷாபி மத்­ஹ­பி­ன­ருடன் மாத்­திரம் மட்­டுப்­பட்ட ஒரு நிலைப்­பாடு அல்ல. மாற்­ற­மாக ஏனைய மூன்று மத்­ஹ­பு­க­ளிலும் பலர் இந்த நிலைப்­பாட்டைப் பேசி­யுள்­ள­மையைக் காணலாம். உதா­ர­ண­மாக ஹனபி மத்­ஹபில் இமாம் இப்னு நுஜைம் அல்­மிஸ்ரி,  இமாம் ஸைலஇ,  இமாம் தஹாவி போன்ற பலர் இந்த நிலைப்­பாட்டில் இருந்­துள்­ளனர். அது போல் மாலிகி மத்­ஹபில் இமாம் மாலி­கி­னு­டைய இரு கருத்­துக்­களில் ஒன்­றா­கவும். இமாம் கரா­பி­யு­டைய கருத்­தா­கவும் காணப்­பட்­டி­ருக்­கி­றது. ஹன்­பலி மத்­ஹபில் இமாம் தகிய்­யுத்தீன் போன்­ற­வர்கள் இக்­க­ருத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்(4).

 மேற்­கூ­றப்­பட்ட சட்ட விளக்­கங்கள் விரி­வான ஆய்­வு­க­ளாக முன்­வைக்­கப்­பட வேண்­டி­யவை என்­றி­ருப்­பினும் இங்கு முக்­கி­ய­மாக இது குறித்த கவ­ன­யீர்ப்பை ஏற்­ப­டுத்­து­வ­துதான் நோக்கம் என்­ப­தாலும்,  விரி­வான ஆய்­வு­க­ளுக்­கு­ரிய இடம் இது­வல்ல என்­ப­தாலும் சுருக்­க­மா­கவே தக­வல்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன. இங்கு முக்­கி­ய­மாக ஒரு விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். இலங்­கையில் பொது­வா­கவும்,  ஜம்­இய்­யதுல் உல­மாவில் குறிப்­பா­கவும் ஷாபி சட்டப் பாரம்­ப­ரி­யத்தை மையப்­ப­டுத்­தியே அதி­க­மான பத்­வாக்­களும் மார்க்க நிலைப்­பா­டு­களும் பெறப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் ஷாபி சட்டப் பாரம்­ப­ரி­யத்­துக்­குள்ளே இருந்து கொண்டே மேற்­படி பிறை விவ­கா­ரத்தில் தற்­போது எதிர்­கொள்ளும் சிக்­கல்­க­ளி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்­கான ஒரு வாயில் இருக்­கின்­றது என்­ப­துவே இங்கு சுட்டிக் காட்­டப்­படும் முக்­கிய விட­ய­மாகும்.

மேற்­படி விளக்­கங்­க­ளி­லி­ருந்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கவ­னத்தில் எடுக்க முடி­யு­மான சில விட­யங்கள் இருக்­கின்­றன. அதில் முக்­கி­ய­மா­னது,  உள்­நாட்டில் பிறை காண்­பதன் மூலமே பிறை பற்­றிய தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் என்ற நிலைப்­பாட்டில் மாற்றம் கொண்­டு­வர வேண்டும்.  அதா­வது, உள்­நாட்டில் மாத்­திரம் என்று வரை­ய­றுக்­காமல் பிறை தென்­பட முடி­யு­மான வல­யத்தில் அமைந்­துள்ள நாடு­களில் ஏதேனும் ஒன்றில் பிறை தென்­பட்டால் அது செல்­லு­ப­டி­யாகும் என்ற நிலைப்­பாட்­டுக்கு வர­மு­டியும். ஏனெனில் இது இஸ்­லா­மிய சட்டப் பாரம்­ப­ரி­யத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள ஒரு சிந்­த­னை­யாகும். அதிலும் குறிப்­பாக ஷாபி மத்­ஹபில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் இதுவும் ஷரீ­ஆ­வுக்­குட்­பட்­ட­தாகும்.

மேற்­கு­றித்த அடிப்­படை மாற்­றத்தில் உடன்­பாடு எட்­டப்­ப­டு­மாக இருப்பின் அத­னை­யொட்டி நடை­பெற முடி­யு­மான இன்னும் சில விட­யங்கள் இருக்­கின்­றன.

முத­லா­வது,  வெற்றுக் கண்­களால் பார்த்தல் என்ற நிலைப்­பாடு இல்­லாது செய்­யப்­படத் தேவை­யில்லை. ஆனால் இலங்­கையில் உள்­ள­வர்­க­ளது கண்­க­ளுக்குப் புலப்­பட்டால் மாத்­தி­ரம்தான் அது ஏற்றுக் கொள்­ளப்­படும் என்ற நிலைப்­பா­டன்றி,  இலங்­கையில் வெற்றுக் கண்­க­ளுக்குப் புலப்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பி­ருக்­கி­றது என்­பது வானியல் கணிப்­பீட்டின் மூலம் நிரூ­பிக்­கப்­ப­டு­கின்ற பொழுது,  இலங்­கையில் உள்­ள­வர்கள் காண­மு­டி­யாத சூழல் இருந்­தாலும் பிறை தென்­பட முடி­யு­மான இந்த வல­யத்­தி­லுள்ள ஏதேனும் ஒரு நாட்டில் வெற்றுக் கண்­களால் பிறை பார்க்­கப்­ப­டு­கின்ற பொழுது,  அது இலங்­கைக்கும் செல்­லு­ப­டி­யாகும் என்ற நிலைப்­பாட்­டுக்கு வர முடியும்.

இரண்­டா­வது,  கணிப்­பீட்டு முறையை பிறையை மறுப்­ப­தற்கு மாத்­தி­ர­மன்றி பிறையை ஏற்­ப­தற்கும் பயன்­ப­டுத்தல்.  அதா­வது, மேற்­கு­றிப்­ப­டப்­பட்­டது போன்று இலங்கை எல்­லை­யினுள் பிறை தென்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­றது என்­றி­ருப்பின்,  அதற்கு ஒரு பெறு­மானம் வழங்­கப்­படல் வேண்டும். ஏனெனில் இலங்கை எல்­லையில் பிறை இருக்­கி­றது. ஆனால் காண்­ப­தற்­கான வாய்ப்பு கால­நிலை மாற்­றங்­களால் இல்­லாது இருக்­கின்­றது. எனவே இலங்கை எல்­லை­யினுள் காண முடி­யாத போதும்,  குறித்த வல­யத்­தினுள் பிறை தென்­ப­டு­மாக இருப்பின் அது கருத்தில் கொள்­ளப்­படல் வேண்டும்.

மூன்­றா­வது,  இலங்­கையின் நிலப்­ப­ரப்பில் மாத்­தி­ர­மன்றி கடல் பரப்­பிலும் பிறை பார்ப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளுக்கு வர முடியும். (இது அண்­மையில் சில சகோ­த­ரர்­களால் முன்­வைக்­கப்­பட்ட பய­னுள்ள ஒரு ஆலோ­சனை).

நான்­கா­வது,  மேற்­கூ­றப்­பட்ட ஆலோ­ச­னை­களை நடை­முறை சாத்­தி­யப்­ப­டுத்தும் வகையில் பிராந்­தி­யத்தில் காணப்­படும் நாடு­களின் பிறை தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக இருக்­கின்ற சபை­க­ளுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மான உடன்­பா­டு­க­ளுக்கு வர முடியும். இங்கு உண்­மையில் எல்லா நாடு­களின் சபை­களும் இணைந்து பொது முடி­வு­க­ளுக்கு வர வேண்டும் என்­பதை விடவும் குறைந்­த­பட்சம் ஒவ்­வொரு நாட்­டிலும் காணு­கின்ற பிறை­யையும் அல்­லது காணு­வ­தற்­கான சாத்தியப்பாட்டையும் ஏனைய நாடுகளுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஒழுங்கு இருப்பது கூட போதுமானதாகும். இது நாட்டு சட்டங்களுடன் கூட முரண்படும் ஒரு விடயமல்ல.

ஐந்தாவது,  இவை அனைத்துக்காகவும் ஜம்இய்யதுல் உலமா பல இடங்களில் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை ஒன்று திரட்டி,  அவை குறித்து கலந்துரையாடுவதற்காக பலதரப்பினரை இணைத்த அமர்வு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வது நல்லது.

இறுதியாக முடிக்கு முன்னர் ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்கிறேன். இவ்வருடம் ரமழான் 28இல் நிறைவுறும் வகையில் எங்கேனும் பிறை தென்பட்டால் மறுநாள் நோன்புப் பெருநாள் கொண்டாடும் தீர்மானத்திற்கு வருவதில் எந்தத் தடையுமில்லை என்பதை ஜம்இய்யதுல் உலமாவும் பிறை சம்பந்தப்பட்டவர்களும் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தலின் நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் நாளை வியாழக்கிழமை அனைவரும் பிறை பார்க்க வேண்டும் என்ற அறிவித்தலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படல் வேண்டும். மாத்திரமன்றி அன்றைய தினம் வழமை போன்று பிறை தொடர்பான அனைத்துத் தரப்பினரும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடி இதுபற்றிய தீர்மானத்தைப் பெற வேண்டும். அந்தத் தீர்மானம் நியாயமான ஆதாரங்களின் அடிப்படையில் எந்த வடிவில் அமைந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் கட்டுப்படுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். அல்லாஹ் எங்களை அங்கீகரிக்கட்டும்.

அடிக்குறிப்புக்கள்:

(1) அந்நவவி,  அபூஸகரிய்யா,  முஹ்யுத்தீன் இப்னு ஷரப். கிதாபுல் மஜ்மூஃ ஷரஹுல் முஹத்தப். ஜத்தா, சவூதி அரேபியா: மக்தபதுல் இர்ஷாத். பாகம் 06,  பக்கம் 280,  281.

(2) அஸ்ஸுப்கி,  தகிய்யுத்தீன் அலி இப்னு அப்துல் காபி. (ஹி 1329). கிதாபுல் இல்மில் மன்சூர் பீ இஸ்பாதிஷ் ஷுஹுர். எகிப்து: குர்திஸ்தான் அல்இல்மிய்யா. பக்கம் 14,  15.

(3) மேலது.

(4) அர்ரஹ்மானி,  ஸைபுல்லாஹ் காலித். கழாயா பிக்ஹிய்யா பில் அகல்லிய்யாதில் முஸ்லிமா. இந்தியா: முஅஸ்ஸஸது ஈபா லித்தபஃ வந்நஷர். பக்கம் 69, 70,  71.

-Vidivelli