Verified Web

சவூதியிலிருந்து சூடானுக்கு 458 தொன் மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவி

8 days ago M.I.Abdul Nazar

சூடான மக்­க­ளுக்கு உத­வு­மாறு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் ஆகி­யோ­ரினால் விடுக்­கப்­பட்ட பணிப்­பு­ரைக்­க­மை­வாக இவ்­வு­த­விகள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சூடானின் செங்­கடல் பிராந்­தி­யத்­தி­லுள்ள இரண்டு மாகா­ணங்­க­ளிலும் வடக்கு கொர்­டோபான் மாகா­ணத்­திலும் உணவுப் பொட்­ட­லங்­களை விநி­யோ­கத்தை கலா­நிதி அப்­துல்லாஹ் அல்-­ரபீஹ் தலை­மையின் கீழ் சவூதி அரே­பிய நிவா­ரண நிலையம் மேற்­கொள்­ள­வுள்­ளது.

 சவூதி அரே­பிய உத­வியின் கார­ண­மாக 50,000 சூடா­னி­யர்கள் நன்­மை­ய­டை­வார்கள் என்ற நம்­பிக்­கையில் சவூதி அரே­பிய நிவா­ரண நிலையம் 40 சுகாதார மத்திய நிலையங்களுக்கு மருந்துப் பொருட்களையும் வழங்கவுள்ளது.   
-Vidivelli