Verified Web

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க யுத்த விமானங்கள் தாக்குதல் டசின் கணக்கானோர் பலி

2018-06-13 04:22:00 M.I.Abdul Nazar


ஐ.எஸ்.தக்­பீரி பயங்­க­ர­வாதக் குழு­வுக்கு எதி­ராக என்று கூறிக் கொள்ளும் அமெ­ரிக்க தலை­மை­யி­லான இரா­ணுவ அணி­யினர் சிரி­யாவின் வட­கி­ழக்கு மாகா­ண­மான ஹஸ்­காவில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் ஒரு டசி­னுக்கும் மேற்­பட்ட ஈராக்­கிய அக­திகள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான படை­யினர் குஹு­வெல்­பிரா கிரா­மத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றை இலக்கு வைத்துத் தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும் அதில் 18 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் சிரி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ ஊடக முக­வ­ர­க­மான சனா­வுக்கு தம்மை அடை­யாளம் காட்­டிக்­கொள்ள விரும்­பாத வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

உய­ிரி­ழந்­த­வர்கள் வன்­மு­றை­க­ளி­லி­ருந்தும் ஐ.எஸ். அமைப்பின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளி­லி­ருந்தும் தப்­பித்துக் கொள்­வ­தற்­கா­கவும் அண்­மையில் அமைந்­துள்ள ஈராக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வந்­த­வர்­க­ளாவர் எனவும் அவ் வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. பலி­யா­ன­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.

டமஸ்கஸ் அர­சாங்­கத்தின் அனு­ம­தியோ அல்­லது ஐக்­கிய நாடுகள் சபையின் அங்­கீ­கா­ரமோ இன்றி 2014 ஆம் செப்­டம்பர் மாதம் தொடக்கம் சிரி­யா­வினுள் ஐ.எஸ். அமைப்பின் இலக்­குகள் எனக் கூறிக்­கொண்டு அமெ­ரிக்கா தலை­மை­யி­லான படை­யினர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

பொது­மக்­களை இலக்கு வைத்து கொல்­வ­தாக இந்த இரா­ணுவ அணி­யினர் மீது தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஐ.எஸ். அமைப்பை அழிப்­பதே இலக்கு எனக் கூறிக்­கொள்ளும் குறித்த படை­யி­னரால் அதனை அடைய முடி­யா­ம­லேயே உள்­ளது.  

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி சிரி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் புலம்­பெ­யர்ந்தோர் அமைச்சு ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்ரெஸ் மற்றும் ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையின் சுழற்­சி­முறை தலை­வ­ரான வசிலி நெபென்­ஸியா தனித்­த­னி­யாக முக­வ­ரி­யிட்டு எழு­தி­ய­னுப்­பிய கடி­தத்தில் அப்­பாவி சிரிய மக்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா தலை­மை­யி­லான படை­யி­னரால் தொட­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­க­ளையும், இறைமை, ஒற்­றுமை மற்றும் ஆள்­புல ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்­றிற்கு எதி­ரா­கவும் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோ­த­மான அமெ­ரிக்க தலை­மை­யி­லான படை­யி­னரால் இலக்கு வைக்­கப்­பட்­டுள்ள கிரா­மங்­களில் சிரியப் பொது­மக்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­து­வ­தா­கவும், கடந்த சில தினங்களாக வயோதிபர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், வீடுகள், பொதுமக்கள் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
-Vidivelli