Verified Web

பிணைமுறி மோசடி விவகாரம்: குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க தயார்

2018-06-13 04:09:42 Administrator


எம்.ஆர்.எம்.வஸீம்

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்­டப்­படும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் அதற்கு முகம்­கொ­டுக்க தயா­ரா­கவே இருக்­கின்­றனர்.  அத்­துடன் அர­சாங்கம் ஊட­கங்­க­ளுக்கு பூரண சுதந்­திரம் வழங்­கி­யுள்­ளதால் சில ஊட­கங்கள் பொய்ப் பிர­சா­ரங்­களை பரப்­பி­வ­ரு­கின்­றன என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

இரத்­தி­ன­புரி கஹ­வத்த பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் வேலைத்­திட்­டங்கள் பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஊட­கங்­களும் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை மக்­க­ளுக்கு காட்­டு­வ­தற்கு பதி­லாக குறை­க­ளையே பெரி­து­ப­டுத்தி காண்­பிக்­கின்­றன. நாட்டில் நல்­லாட்சி இடம்­பெ­று­வதால் ஊட­கங்­க­ளுக்கு பூரண சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதனை பயன்­ப­டுத்­திக்­கொண்டு சில ஊட­கங்கள் அர­சாங்கம் தொடர்பில் பொய் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை அவ­ம­திக்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றன.

மேலும் தற்­போது மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நாங்கள் தயா­ராவே இருக்­கின்றோம். ஊழல் மோசடி இல்­லாமல் நாட்டை மாற்றும் பொறுப்பை நாங்கள் ஏற்­றுக்­கொண்­டுள்ளோம். என்­றாலும் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் சிலர் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பொய் குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். விகாரை அமைப்­ப­தற்கும் சர்­வ­மத குழுவின் அனு­மதி பெற­வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்து வரு­கின்றார். அவ்­வா­றான முறை ஒன்று இருப்­பது எங்­க­ளுக்கு தெரி­யாது.

மேலும் ராஜபக் ஷ் அர­சாங்கம் 20வரு­டங்­களில் மேற்­கொண்ட வேலைத்­திட்­டங்­க­ளை­விட பாரிய வேலைத்­திட்­டங்­களை நாங்கள் அதி­கா­ரத்­துக்கு வந்து 3வரு­டங்­களில் மேற்­கொண்­டி­ருக்­கின்றோம். என்­றாலும் நாங்கள் அவற்றை விளம்­ப­ரப்­ப­டுத்­த­வில்லை. சிறிய வேலைத்­திட்­டங்­க­ளுக்கு பாரிய பதாதைகளை அமைக்கும் செயற்பாடுகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அத்துடன் 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.  சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்றார்.
-Vidivelli