Verified Web

பதினாறு பேரையும் சந்திக்கமாட்டேன் கோத்தா தெரிவிப்பு

2018-06-13 03:49:33 Administrator

 

அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தன்னை ஜூன் 12 ஆம் திகதி சந்­திக்­க­வுள்­ள­தாக பல்­வேறு ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த போதிலும், அவ்­வா­றா­ன­தொரு சந்­திப்­பிற்­கான வேண்­டுகோள் தன்­னிடம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

அர­சாங்­கத்திலிருந்து வில­கிய 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தன்னை சந்­திக்­க­வுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த போதிலும், அவ்­வா­றா­ன­தொரு சந்­திப்­பிற்­கான வேண்­டுகோள் தன்­னிடம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தொழில் அதி­பர்கள், வர்த்­த­கர்கள், கல்­வி­மான்கள், அர­சி­யல்­வா­திகள் உள்­ளிட்ட பலர் தன்னை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வது சாதா­ரண விடயம் என்ற போதிலும், ஊட­கங்­களில் வெளி­யா­னது போன்ற உத்­தி­யோ­க­பூர்வ சந்திப்பு எதுவும் இடம்பெறப் போவதில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli