Verified Web

மண்ணெண்ணெயின் விலை எழுபது ரூபாவாக குறைக்க அங்கீகாரம்

2018-06-13 03:07:14 Administrator


மண்­ணெண்­ணெயின் விலையை 70 ரூபா­வாக  குறைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை  அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெற்­ற­போது   இந்த  தீர்­மானம்  எடுக்­கப்­பட்­டது.

அண்­மையில் எரி­பொ­ருட்­களின்  விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது  மண்­ணெண்­ணெயின் விலை 57 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.   ஒரு லீற்றர்  மண்­ணெண்ணெய் 101 ரூபா­வாக  விற்­பனை செய்­யப்­பட்­டது.  இதனால்  தாம்  பெரும் பாதிப்­புக்­குள்­ளா­வ­தாக  மீன­வர்கள்  மற்றும் விவ­சா­யிகள்   எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர்.  பல இடங்­களில் மீனவ சங்­கங்கள் போராட்­டங்­களை  நடத்­தி­வந்­தன.   இந்த  நிலை­யி­லேயே மண்­ணெண்­ணெயின் விலை­யினை குறைப்­ப­தற்கு அர­சாங்கம்  தீர்­மா­னித்­த­துடன்   நேற்று அமைச்­ச­ரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli