Verified Web

பிணை முறி விவகாரம்: பொன்சேகாவிடம் சி ஐ டி விசாரணை

2018-06-13 02:43:54 MFM.Fazeer

 

 

மத்­திய வங்­கியின் பிணை முறி மோசடி விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் பட்­டி­யலில் உள்ள பேப்­பர்­சுவல் ட்ரசரீஸ்  நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான டப்­ளியூ.எம். மெண்டிஸ் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பணம் பெற்­றமை தொடர்பில், பிர­சித்­த­மாக  கருத்து வெளி­யிட்ட அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை நடாத்­தி­யுள்­ளது. இந்த விசா­ர­ணைகள் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை விசா­ரணை செய்­வ­தற்கு முன்­னைய தினங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

' கண்டி அஸ்­கி­ரிய, மல்­வத்து மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்­து­விட்டு வெளியே வந்த அமைச்சர் சரத் பொன்­சேகா, அலோ­சியஸ் தனக்கும் பணம் தந்­த­தா­கவும் தான் அதனை பெற்­றுக்­கொள்­ள­வில்லை எனவும், தேர்­தல்கள் செல­வுக்கு வேறு ஒரு­வ­ருக்கு அதனை கைய­ளித்­த­தா­கவும்  ஊட­கங்­க­ளிடம் கூறி­யி­ருந்தார்.

 இந் நிலையில் அது தொடர்பில் விசா­ரணை செய்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு மத்­திய வங்­கியின் பிணை முறி மோசடி விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் பட்­டி­யலில் உள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ்  நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான டப்­ளியூ.எம். மென்டிஸ்  நிறு­வனம் ஊடா­கவே அப்­பணம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­மையை கண்­ட­றிந்­துள்­ள­துடன் அது தொடர்­பி­லேயே சரத் பொன்­சே­கா­விடம் விசா­ரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ளது.

இத­னி­டையே மூன்று சந்­தர்ப்­பங்­களில் தலா ஒரு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான மூன்று காசோ­லை­களைப் பெற்­றுக்­கொண்ட இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்­கவை விசா­ரிக்க குற்றப் புல­னாய்வுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது. அவரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அடுத்து வரும் சில நாட்­களில் அழைக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இரா­ஜாங்க அமைச்­ச­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுஜீவ சேன­சிங்­க­வுக்கு பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் துணை நிறு­வ­ன­மான டப்­ளியூ. எம் மென்டிஸ்  ஊடாக  2015 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஒரு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான காசோலை வழங்­கப்­பட்­டுள்­ளது. அதனை அவ­ரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் ஈ.ஜி. பிரி­யந்த விபுல சம்பத் ஊடாக  மாற்­றி­யுள்ளார். அது குறித்து உப பொலிஸ் பரி­சோ­தகர் வாக்கு மூலம் வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன் அந்த காசோலை பொலிஸ் அதி­கா­ரியால் 2015 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கொம்­பனித் தெரு லேக்விச் இலங்கை வங்­கிக்­கி­ளையில் மாற்­றப்­பட்­டுள்­ளது.  கடந்த மே 28 ஆம் திகதி உப பொலிஸ் பரி­சோ­த­கரின் வாக்குமூலம் பெறப்­பட்­டுள்­ளது. அத்­துடன்   அந்தக் காசோ­லையும் மீட்­கப்­பட்­டுள்­ளது.

 2016.03.31 அன்று  மற்­றொரு ஒரு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான காசோலை குறித்த இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது.  அக்­கா­சோ­லை­யா­னது சுஜீவ சேன­சிங்­கவின் தேர்­தல்கள் கடமை ஒருங்­கி­ணைப்­பாளர் அமல் ரவீந்­ரநாத் டய­ஸுக்கு கொடுக்­கப்­பட்டு சுஜீ­வவின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான  பொலிஸ் கான்ஸ்­டபிள் பீ.ஆர். குண­சே­கர ஊடாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

 அத்­துடன் 2015.11.12 ஆம் திக­தியும் ஒரு மில்­லியன் காசோ­லை­யொன்று  சுஜீவ சேன­சிங்­க­வுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் தேர்­தல்கள் கடமை ஒருங்­கி­ணைப்­பாளர் ஊடாக பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளிடம் கொடுத்து மாற்­றப்­பட்­டுள்­ளது.  இவை தொடர்பில்  அந்த கான்ஸ்­டபிள் சி.ஐ.டியிடம் வாக்கு மூல­ம­ளித்­துள்ள நிலை­யி­லேயே சுஜீவ சேன­சிங்க விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார். சுஜீ­வவின் தேர்­தல்கள் கடமை ஒருங்­கி­ணைப்­பா­ளரான அமல் ரவீந்­ரநாத்  டய­ஸிடமும் சி.ஐ.டி. விசா­ரணை நடாத்­தி­யுள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­முல்ல ஆகியோரின் பணிப்­புக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் பிய­சேன அம்­பா­வ­லவின் ஆலோசனைக்கு அமைய   குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணை அதிகாரியுமான பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ, உப பொலிஸ் பரிசோதகர் விமல் ஜயவீர  உள்ளிட்ட குழுவினர்  இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli