Verified Web

நஷ்டஈடு வழங்குவதில் நீதி நிலைநாட்டப்படவில்லை

2018-06-13 01:54:39 ARA.Fareel

 

நாம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பேரு­வ­ளையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தினால் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் உட­ன­டி­யாக நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கினோம். வீடு­களை மீள்­நிர்­மாணம் செய்து முன்­னரை விட நன்­றாகப் பூர்த்தி செய்து வழங்­கினோம். ஆனால் கண்டிப் பகு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய நஷ்­ட­ஈ­டுகள் முழு­மை­யாக இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

பிய­கம, மாவ­ர­மன்­டியில் நடை­பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். மல்­வானை உட்­பட பிய­கம தேர்தல் தொகு­தியைச் சேர்ந்த முஸ்­லிம்கள் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். பிய­கம பிர­தேச சபையின் தலைவர் ஆனந்த கனே­பொல இந்­நி­கழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

கண்டிப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள், அச் சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை காலம் நீதி நிலை­நாட்­டப்­ப­டாமை குறித்து நாங்கள் கவ­லைப்­ப­டு­கிறோம். இந்­நி­கழ்வின் மூலம் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள எமக்கு இடை­யி­லான இணைப்பை நாம் தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். இன, மத பேதங்­க­ளின்றி நாம் ஒன்­று­பட்டு எமது பய­ணத்தைத் தொடர்வோம் என அனை­வ­ரி­டமும் வேண்­டுகோள் விடுக்­கிறேன்.

அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பற்றி பெரி­தாகப் பேசி­னாலும் அது தொடர்­பாக தேவை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளதா என்­பதில் எமக்குச் சந்­தேகம் நில­வு­கி­றது. நாங்கள் இது போன்ற சமய நிகழ்­வுகள் மூலம் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்த முயற்­சிக்­கின்றோம். அத­னாலே அர­சியல் தலை­வர்­களும் உறுப்­பி­னர்­களும் இவ்­வா­றான நிகழ்­வு­களில் கலந்­து­கொண்டு முஸ்­லிம்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­கிறோம். நல்­லி­ணக்­கத்தின் பங்­கா­ளர்­க­ளா­கிறோம்.

அன்று முஸ்­லிம்கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து விரட்­டப்­பட்­டார்கள். கிண்­ணி­யா­வி­லி­ருந்து விரட்­டப்­பட்­டார்கள். அவர்கள் மீண்­டும் தமது சொந்த இடங்­க­ளுக்குச் சென்று குடி­யேறும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தினோம். இன்று எவரும் நாட்டின் எந்தப் பிர­தே­சத்­துக்கும் சென்று வாழக்­கூ­டிய நிலைமை எங்­க­ளா­லேயே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

அன்று பேரு­வ­ளையில் சிறிய சம்­பவம் ஒன்றே இடம்­பெற்­றது. இதனை பெரி­யதோர் சம்­ப­வ­மாக பிர­சாரம் செய்து சில அர­சியல் தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கும் எமக்கும் இடையில் இருந்த நல்­லு­ற­வினை இல்­லாமற் செய்­தார்கள். இதன் பின்­ன­ணியில் யார் இருந்­தார்கள் என்­பது முஸ்லிம் மக்­க­ளுக்­குத்­தெ­ரியும்.

இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்­க­ளுடன் ஒன்­றாக இருப்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­தமை தொடர்பில் நான் மகிழ்­கிறேன். எமது காலத்தில் மக்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­பத்­து­வ­தற்கு நாம் பல முயற்­சிகள் எடுத்தோம்.

இந்த நிகழ்வில் இவ்­வா­றான விட­யங்­களை முன்­வைத்து நான் விருப்­ப­மின்­றியே பேசு­கிறேன். ஏனென்றால் இதுவோர் சமய நிகழ்­வாகும். நான் பேசு­வ­தற்கு விரும்­பவும் இல்லை. இவ்­வா­றான நிகழ்­வு­களில் இதற்கு முன்பு பேசியும் இல்லை. முஸ்­லிம்கள் ஏழை, பணக்­காரர் என்ற பேத­மில்­லாமல் நோன்பு நோற்று நோன்பை துறக்கும் நிகழ்வு இது. இந்த நிகழ்வின் மூலம் எமது சமய நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த சந்­தர்ப்பம் கிடைத்­தமை குறித்து மகிழ்­கிறேன் என்றார்.

நிகழ்வில் பியன்­வில சோம­வர்­தன ராமா­தி­பதி கோன­ஹேனே விம­லா­னந்த தேரர், கம்பஹா மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.எச்.எம். லாபீர், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, துலீப் விஜேசேகர, சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் குணசிரி ஜயனாத், சஹன் பிரதீப் உட்பட பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
-Vidivelli