Verified Web

தர்காநகர் அளுத்கம பேருவளை வன்முறைகள் 185 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்படும்

2018-06-12 21:40:30 ARA.Fareel

 

2014 ஆம் ஆண்டு தர்காநகர், அளுத்­கம, பேரு­வளை பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வீடு­களின் உடை­மை­க­ளுக்கும் வர்த்­தக நிலை­யங்­களின் வர்த்­தக பொருட்­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டாக 185 மில்­லியன் ரூபாய் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக புனர்­வாழ்வு அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

அளுத்­கம, பேரு­வளை பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 272 சொத்­து­க­ளுக்கே 185 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது.

அளுத்­கம, பேரு­வ­ளையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் உட­ன­டி­யாக மீள்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டன. நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­பட்­டன. ஆனால் அண்­மையில் கண்டிப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான மற்றும் சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள், மீள்­நிர்­மாணம் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இப்தார் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு தெரி­வித்த கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே புனர்­வாழ்வு அமைச்சின் மேல­திக பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் இத்­த­க­வலைத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;

அளுத்­க­மயில் வன்­செ­யல்கள் இடம்­பெற்­ற­போது, அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டில் இருந்தார். அவர் வெளி­நாட்டில் இருந்து நாடு திரும்­பி­யதும் உட­ன­டி­யாக செயலில் இறங்­கினார். பாதிக்­கப்­பட்ட வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் என்­ப­ன­வற்றை இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் மீள்­நிர்­மாணம் செய்தார்.

வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களின் பொருட்கள் தள­பா­டங்கள் போன்­ற­வற்றின் சேத­வி­ப­ரங்­களை மதிப்­பீடு செய்­வ­தற்கு அர­சாங்க அதி­ப­ரினால் கமிட்­டி­யொன்று நிய­மிக்­கப்­பட்டு மதிப்­பீடு செய்­யப்­பட்­டது. அவற்­றுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போது அர­சாங்­கத்தில் மாற்றம் ஏற்­பட்­டது. இத­னா­லேயே சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வதில் தாமதம் ஏற்­பட்­டது. இந்நிலையில் 272 சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டாக 185 மில்­லியன் ரூபாய்கள் வழங்­கு­வ­தற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்படும்.

கண்டி வன்செயல்கள் தொடர்பான நஷ்டஈடுகள் சில பல தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் தாமதமாகின்றது. நஷ்டஈடு வழங்குவதற்கு புனர்வாழ்வு அதிகாரசபை தயார் நிலையிலேயே உள்ளது என்றார்.
-Vidivelli