Verified Web

மருமகனை கத்தியால் குத்திய மாமனார் காதியார் முன்னிலையில் கொடூரம்

2018-06-08 04:29:36 ARA.Fareel


முஸ்லிம்  பெண்­களின் தனித்­து­வத்தை  பேணு­வ­தற்­காக   நாட்டில்  அமை­யப்­பெற்­றுள்­ளதே காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்­பாகும்.  இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள  கௌர­வ­மாகும்.

காதி நீதி­மன்­றுக்குள்  காதி­ நீ­திவான் முன்­னி­லையில்  தலாக்  வழக்­கொன்றின்  கவுன்­சிலிங்  நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கையில்  கத்­திக்­குத்து  சம்­பவம் ஒன்று   களுத்­து­றையில்  இடம்பெற்­றுள்­ளது. இதி­லி­ருந்து  எமது சமூகம்  நாட்டின்  சட்­டத்தை  எந்­த­ள­வுக்கு  மதிக்­கி­றது என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

முஸ்லிம் சமூகம்  எமது நாட்­டி­லுள்ள  ஏனைய நீதி­மன்­றங்­க­ளுக்கு  வழங்கும்  கௌர­வமும்,  மரி­யா­தையும்   காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கு­வ­தில்லை.  காதி நீதிமன்ற  அழைப்­பா­ணை­க­ளைக்­கூட சிலர் கவ­னத்தில்   கொள்­வ­தில்லை. எத்­த­னையோ காதி ­நீ­தி­மன்­றங்­களின்  அமர்­வு­க­ளின்­போது வாதி, பிர­தி­வா­திகள்  மற்றும் அவர்கள் சார்ந்தோர்  தூஷண வார்த்­தை­களைப் பிர­யோ­கிப்­பது  இடம் பெறு­கி­றது.

காதி­ நீ­தி­மன்­றங்கள்  பலரால்  அவ­ம­திப்புச்  செய்­யப்­ப­டு­கின்­றன.  இவற்­றை­யெல்லாம்  மீறி  களுத்­துறை  காதி நீதி­மன்றில் கத்­திக்­குத்துச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தென்றால்  இவ்­வி­வ­காரம்  தொடர்பில்  கடு­மை­யான  சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மாகும்.

கடந்த 2 ஆம் திகதி  களுத்­துறை காதி நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் இருக்கும்  தலாக்  வழக்­கொன்று  தொடர்­பான  கவுன்­சிலிங் இடம்பெற்­றது.  கவுன்­சி­லிங்­கிற்கு  வாதி­யான  கண­வரும்  பிர­தி­வா­தி­யான  மனை­வியும்  அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.  கவுன்­சிலிங்  காலை 10.30 மணி முதல்  11.30 மணி­வரை  நடை­பெற்­றது.

கவுன்­சிலிங்  களுத்­துறை பிர­தேச  காதி நீதி­ப­தியின்  தலை­மையில் நடை­பெற்­றது. இக்­கு­ழுவில்  அப்­பி­ர­தேச பள்­ளி­வா­சலின்  பேஷ்­ இமாம், பாட­சா­லை­யொன்றின்  பெண் அதிபர்,  டாக்டர் ஒரு­வரும் அடங்­கி­யி­ருந்­தனர். கவுன்­சிலிங்  களுத்­துறை  காதி நீதி­மன்றில் நடந்து கொண்­டி­ருந்­த­போது  வாதி, பிர­தி­வா­திகள் தரப்­பினர் வெளியில்  இருந்­தனர்.

கவுன்­சிலிங் நடந்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென  பிர­தி­வா­தி­யான பெண்ணின்  தந்தை உட்­பி­ர­வே­சித்து வாதி­யான  கண­வரை  கத்­தி­யினால், குத்­தி­யுள்ளார். இச்­சம்­பவம் காதி­நீ­திவான் மற்றும்  மூவ­ர­டங்­கிய  கவன்­சிலிங்  குழு­வி­னரின் முன்­னி­லை­யிலே இடம்பெற்­றுள்­ளது. மாம­னாரின்  கத்­திக்­குத்­தினால்  மரு­ம­க­னான   கணவர்  படு­கா­ய­முற்ற  நிலையில் அம்­புலன்ஸ் வண்­டியில்  நாகொடை  வைத்­தி­ய­சா­லைக்கு  அனுப்பி வைக்­கப்­பட்டார்.

அவர்  நாகொட  வைத்­தி­ய­சா­லையில்  அதி­தீ­விர  சிகிச்சைப்  பிரிவில்  அனு­ம­திக்­கப்­பட்டு பின்பு  வைத்­தி­ய­சா­லையின் சாதா­ரண விடு­திக்கு  மாற்­றப்­பட்டு  தற்­போது  சிகிச்­சையின்   பின்பு வெளி­யே­றி­யுள்ளார்.  கத்­திக்­குத்து மேற்­கொண்ட  மாம­னாரை  களுத்­துறை  தெற்கு  பொலிஸார்  கைது செய்து  களுத்­துறை  நீதிவான்  நீதி­மன்றில்  ஆஜர் செய்­தனர்.  களுத்­துறை  நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் பந்­துல வீர­சிங்க  சந்­தே­க­ந­பரை  எதிர்­வரும்  11 ஆம்  திகதி வரை  விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

குறிப்­பிட்ட  தலாக் வழக்கு  பேரு­வளை  காதி நீதி­மன்றில்  தாக்கல்  செய்­யப்­பட்­ட­தாகும்.  இவ்­வ­ழக்கு  சுமார்  மூன்று  தட­வைகள்   பேரு­வளை   காதி­நீ­தி­மன்றில்  விசா­ரணை  நடந்த பின்பு வாதி­யினால்  இவ்­வ­ழக்­கினைத்  தொடர விஷேட காதி நீதி­ப­தி­யொ­ரு­வரை  நிய­மிக்­கும்­படி நீதிச்­சேவை  ஆணைக்­கு­ழு­விடம்  கோரி­யி­ருந்­ததையடுத்தே   களுத்­துறை பிர­தேச  காதி ­நீ­திவான் நீதிச்­சேவை  ஆணைக்­கு­ழு­வினால் விஷேட  காதி ­நீ­தி­ப­தி­யாக  நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது.

இவ்­வ­ழக்கு  2017  ஆம் ஆண்டு  பேரு­வளை காதி நீ­தி­மன்றில் தாக்கல்  செய்­யப்­பட்­ட­தாகும். 2018  பெப்­ர­வ­ரி­யிலே  களுத்­துறை   காதி­ நீ­திவான் இவ்­வ­ழக்­கிற்­கான  விஷேட   காதி ­நீ­தி­ப­தி­யாக    நிய­மிக்­கப்­பட்டு வழக்கு கோவை பேரு­வளை   காதி­ நீ­தி­மன்­றி­லி­ருந்து  களுத்­துறை  காதி­ நீ­தி­மன்­றுக்கு  அனுப்பி வைக்­கப்­பட்­டது.

களுத்­துறை  காதி­ நீ­தி­மன்றம்  இவ்­வ­ழக்­கினை விசா­ரணை  செய்­து­கொண்­டி­ருந்த  நிலையில்  இரு தரப்­பி­ன­ரையும்  சமா­தானம்  செய்து வைப்­ப­தற்­காக   கவுன்­சி­லிங்கை  ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கடந்த  ஏப்ரல்  மாதமும்   கவுன்­சிலிங்  இடம்பெற்­றது.  அத­னை­ய­டுத்து  இரண்­டா­வது   கவுன்­சி­லிங்கே கடந்த 2 ஆம் திகதி இடம்­பெற்­ற­தாகும்.  இச்­சந்­தர்ப்­பத்­திலே  கத்­திக்­குத்துச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது.

 இவ்­வ­ழக்கின்  வாதி,  பிர­தி­வா­திகள் திரு­மணம் செய்து  5 வரு­டங்கள்  கடந்து விட்ட நிலையில்  4 வயதில்  ஓர் குழந்­தையும்  இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தலாக்  வழக்கின்  வாதி­யான (விண்­ணப்­ப­தாரி)  கணவன் தனியார் துறை­யிலும்  பிர­தி­வா­தி­யான  மனைவி  அர­சாங்­க­து­றை­யிலும்  பணி­பு­ரி­ப­வர்­க­ளாகும்.

எம் சமூ­கத்தில்  படித்­த­வர்கள்  தரப்பினர்  நீதிவழங்கும்  நீதிமன்றங்களில் அத்துமீறிப் பிரவேசித்து இவ்வாறான  அடாவடித்தனங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

காதி நீதி­மன்­றங்­களில்  இவ்­வா­றான உயி­ரா­பத்­து­மிக்க  சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்­காக பொலிஸ்  பாது­காப்­பினைப்  பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு விசா­ர­ணை­களின்  போது பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென  நீதிச்­சேவை  ஆணைக்­குழு பொலிஸ்மா அதி­பரை வேண்­டி­யுள்­ளதை யடுத்து பொலிஸ் பாது­காப்பு ஏற்­க­னவே  வழங்­கப்­பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli