Verified Web

சிறுபான்மையின் தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா

2018-06-07 05:03:33 Administrator

 

வை. எல். எஸ். ஹமீட்

 

தமிழர்­களின் வாக்­க­ளிப்பை முதலில் பார்ப்போம்.

வடக்கு

யாழ் மாவட்டம்

சந்­தி­ரிக்கா- 16,943 வாக்­குகள்

ஸ்ரீமா திசா­நா­யக்க- 341 வாக்­குகள்

வன்னி மாவட்டம்

சந்­தி­ரிக்கா-33,585 வாக்­குகள்

ஸ்ரீமா- 4,493 வாக்­குகள்

சந்­தி­ரிக்கா- மொத்த வாக்­குகள் - 50,519

இது அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 1.07% ஆகும்.

 

கிழக்கு

மட்­டக்­க­ளப்பு மாவட்டம்

சந்­தி­ரிக்கா- 144,725

ஸ்ரீமா- 14, 812

இங்கும் தமி­ழர்­களின் வாக்­க­ளிப்பு விகிதம் குறை­வாக இருப்­பதை ஊகிக்­கலாம். இதில் அண்­ண­ள­வாக பாதி வாக்­குகள் முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளாகும்.

திரு­கோ­ண­மலை மாவட்டம்

சந்­தி­ரிகா-75,242

ஸ்ரீமா- 26,860

இது மூன்று சமூ­கங்­களும் இணைந்து அளித்த வாக்­குகள். இங்கு முஸ்­லிம்­களின் வாக்­கு­களே அதி­க­மாக சந்­தி­ரிக்­கா­வுக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதைப் புரிந்­து­கொள்­ளலாம்.

திகா­ம­டுல்ல மாவட்டம்

சந்­தி­ரிகா- 168,289

ஸ்ரீமா- 59,074

இங்கும் மூன்று சமூ­கங்கள். மு.கா. சந்­தி­ரி­க்காவை ஆத­ரித்த நிலையில் முஸ்லிம் வாக்­கு­களே இவற்றில் அதிகம் என்­பதைப் புரிந்து கொள்­ளலாம்.

இந்­நி­லையில் மொத்தக் கிழக்கில் இருந்தும்  ஏறக்­கு­றைய ஒரு இலட்சம் தமிழ் வாக்­குகள் அளிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். இது சுமார் 2% ஆகும்.

எனவே, வட கிழக்கில் ஓட்­டு­மொத்த தமிழ் வாக்­குகள் சுமார் 3% சந்­தி­ரிக்­கா­வுக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

முஸ்லிம் வாக்­குகள்

மு. கா. சந்­தி­ரிக்­காவை ஆத­ரித்­த­தனால் கிழக்கில் பெரும்­பான்மை முஸ்லிம் வாக்­குகள் சந்­தி­ரிக்­கா­வுக்கு அளிக்­கப்­பட்­டன. வட- கிழக்­கிற்கு வெளியே பாரம்­ப­ரி­ய­மாக ஐ.தே. கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் முஸ்­லிம்கள் சந்­தி­ரிக்­கா­வுக்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

புள்­ளி­வி­பர ரீதி­யாக இதனை தெளி­வாகக் கூற­மு­டி­யாது. ஏனெனில், இன ரீதி­யாக தேர்தல் முடி­வுகள் வெளி­யி­டப்­ப­டு­வ­தில்லை. மொத்த முஸ்­லிம்­களில் 50% சந்­தி­ரிக்­கா­வுக்கு வாக்­க­ளித்­த­தாகக் கரு­தி­னாலும் அது 4 தொடக்கம் 5 வீதத்­திற்கு உட்­பட்­ட­தா­கத்தான் இருக்கும். மலை­யகத் தமி­ழர்­களின் வாக்­குகள் ஒரு மூன்று வீதம் என்று வைத்­துக்­கொண்­டாலும் மொத்த சிறு­பான்மை வாக்­குகள் சுமார் பத்து வீதமே. எஞ்­சிய இரண்டு வீதத்­தையும் சிறு­பான்மை வாக்­கு­க­ளாகக் கரு­தி­னாலும் 50% சிங்­க­ள­வர்­க­ளு­டைய வாக்­குகள் என்­பது தெளி­வாகும்.

எனவே, சிறு­பான்­மை­களின் வாக்­கு­களின் தேவை­யில்­லாமல் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனா­தி­பதித் தேர்தல் இது­வாகும். இத்­தேர்தல் முடிவு, ஒருவர் சிறு­பான்­மை­களின் வாக்­குகள் இல்­லாமல் ஒரு­போதும் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட முடி­யாது என்ற கரு­து­கோளை பொய்­யாக்கி, சிறு­பான்­மை­களின் வாக்­குகள் இல்­லாமல் தெரி­வு­செய்­யப்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­களும் சாத்­தி­ய­மா­னதே! என்­பதை நிரூ­பித்­தது.

அதா­வது, பெரும்­பான்மை சமூகம் தேவைப்­படின் 50% வாக்­கு­களை வழங்­கு­வ­தற்கு ஒற்­று­மைப்­பட முடி­யா­த­வர்கள் அல்ல. கார­ணங்கள் எது­வா­யி­ருந்த போதிலும் என்­பதை முத­லா­வது நிரூ­பித்த தேர்தல் இது­வாகும்.

நான்­கா­வது ஜனா­தி­பதித் தேர்தல்

இது 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடை­பெற்­றது.

பிர­தான போட்­டி­யா­ளர்கள்- சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க, ரணில் விக்­ர­ம­சிங்க

வாக்­க­ளிப்பு வீதம்- 73.31

சந்­தி­ரிக்கா- 4,312,157 (51%,) ரணில்- 3,602,748 (42.71%)

மு. கா. சந்­தி­ரிக்­காவை ஆத­ரித்­தது.

சந்­தி­ரிக்கா 50% ஐ சொற்ப அளவே தாண்­டி­யி­ருப்­பதால் சிறு­பான்மை வாக்­கு­களின் முக்­கி­யத்­துவம் புலப்­ப­டு­கின்­றது.

ஐந்­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல்

இது 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடை­பெற்­றது.

பிர­தான போட்­டி­யா­ளர்கள்- மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்கி­ர­ம­சிங்க.

வாக்­க­ளிப்பு வீதம்- 73.73

மஹிந்த- 4,887,152 வாக்­குகள் (50.29%)

ரணில்- 4, 706,366 வாக்­குகள் (48.43)

இங்கு கவ­னிக்க வேண்­டி­யது- விடு­த­லைப்­பு­லி­களின் உத்­த­ரவின் கார­ண­மாக தமிழ் மக்கள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. முஸ்­லிம்கள் வழ­மை­போன்று பெரும்­பான்­மை­யாக ஐ. தே. கட்­சிக்கே வாக்­க­ளித்­தார்கள். (மு. கா.வும் ரணி­லையே ஆத­ரித்­தது).

இங்கு கவ­னிக்­க­வேண்­டிய ஏனைய விட­யங்கள்

1)இரு வேட்­பா­ளர்­க­ளுக்கும் இடை­யே­யுள்ள வித்­தி­யாசம் 2% இற்கும் குறை­வாகும். தமிழ் மக்கள் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கு வாக்­க­ளித்­தி­ருந்தால் அவர் இல­கு­வாக வெற்றி பெற்­றி­ருப்பார். எனவே, மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பி­டத்­தக்­க­ளவு சிறு­பான்மை வாக்­கில்­லாமல் கிட்­டத்­தட்ட பெரும்­பான்மை சமூ­கத்தின் வாக்­கு­களைக் கொண்டே வெற்­றி­பெற்ற போதிலும் சிறு­பான்மை ஒற்­று­மைப்­பட்டு ஒரு பக்கம் வாக்­க­ளித்தால் அங்கு சிறு­பான்மை வாக்­கிற்கு ஒரு பலம் இருக்­கின்­றது என்­ப­தாகும்.

2)சிறு­பான்மை சமூ­கங்கள் பிரிந்து வாக்­க­ளித்­தாலோ, ஒரு சமூகம் வாக்­க­ளிப்­பி­லி­ருந்து ஒதுங்­கி­னாலோ, தனித்து சிறு­பான்­மையின் ஒரு பிரிவின் வாக்­குப்­பலம் பெரி­ய­தொரு தாக்­கத்தைச் செலுத்­தாது சில நேரங்­களில் விதி­வி­லக்­காக இருந்­தாலும் கூட என்­ப­தாகும். அதே­நேரம் சகல சிறு­பான்­மை­களும் எல்­லா­நே­ரங்­க­ளிலும் ஒரு­மித்த நிலைப்­பாட்­டையே எடுக்கும் என்­ப­தற்கும் உத்­த­ர­வா­த­மில்லை; என்­ப­தையும் இத்­தேர்தல் நிரூ­பிக்­கின்­றது.

3)அவ்­வாறு சகல சிறு­பான்­மை­களும் ஒன்­று­பட்டு வாக்­க­ளித்­தி­ருந்­தாலும் வெற்­றி­பெ­றத்­தே­வை­யான 50% விகி­தத்தை வழங்­கு­வ­தற்கு கிட்­டத்­தட்ட சிங்­கள மக்கள் ஒற்­று­மைப்­பட்ட ஒரு தேர்தல் இது என்­ப­தையும் இத்­தேர்தல் நிறு­வு­கின்­றது.

6ஆவது ஜனா­தி­பதித் தேர்தல்

இத்­தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜன­வரி 26ஆம் திகதி நடை­பெற்­றது. பிர­தான போட்­டி­யா­ளர்கள்- மஹிந்த ராஜபக் ஷ, சரத்­பொன்­சேகா

மஹிந்த- 6,015,934 (57.88); பொன்­சேகா- 4,173,185 (40.15)

(மு. கா. பொன்­சே­காவை ஆத­ரித்­தது)

இது யுத்த வெற்­றியைத் தொடர்ந்து நடை­பெற்ற தேர்தல்.

இத்­தேர்­தலில் தமிழ் மக்கள் மஹிந்­த­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் வழ­மை­யை­விட சற்று அதி­க­மாக மஹிந்­த­வுக்கு (ஸ்ரீ. சு. கட்­சிக்கு) யுத்த வெற்­றிக்கு நன்­றிக்­க­ட­னாக வாக்­க­ளித்­தார்கள் என்று அப்­பொ­ழுது கூறப்­பட்­டது. இருந்­தாலும் மு. கா, ஐ.தே. கட்­சியை ஆத­ரித்த நிலை­யிலும் வட கிழக்­கிற்கு வெளி­யே­யுள்ள முஸ்­லிம்­களின் பரம்­ப­ரை­யான ஐ.தே.கட்சி சார்­பான நிலைப்­பாட்­டி­னாலும் பெரும்­பான்மை முஸ்லிம் வாக்­குகள் பொன்­சே­கா­வுக்கே கிடைத்­தன.

மஹிந்த பெற்ற வாக்­குகள் 57.88% எனில் மேல­திக வாக்­குகள் 7.88, கிட்­டத்­தட்ட 8% ஆகும். இதில் முஸ்லிம் வாக்­குகள் இரண்டு அல்­லது மூன்று விகிதம் என்­றாலும் மலை­யக வாக்­குகள் ஒரு 4% என்­றாலும் (இவை அப­ரி­மித எடு­கோ­ளாகும்) தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­காத நிலையில் 50% விகி­தத்­திற்கு மேல் தனிச் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­பெற்ற தேர்­த­லாகும் காரணம் எது­வாக இருந்­த­போ­தி­லும்­கூட.

எனவே, நாம் இது­வரை பார்த்த 6 ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் இரண்டு தேர்­தல்­களில் ( 1994- சந்­தி­ரிக்கா, 2010- மஹிந்த) சிறு­பான்­மை­களின் வாக்­கு­களின் தேவை­யின்றி ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

7ஆவது ஜனா­தி­பதித் தேர்தல்

இதுதான் இறு­தி­யாக 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி நடை­பெற்ற தேர்­த­லாகும். பிர­தான போட்­டி­யா­ளர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ.

வாக்­க­ளிப்பு வீதம் 81.52

மைத்­திரீ- 6,217,162 (51.28%);

மஹிந்த -5,768,090 (47.58%)

2011ஆம் ஆண்டின் குடி­சன மதிப்­பீட்­டின்­படி இலங்­கையில் இன ­ரீ­தி­யாக,

சிங்­க­ள­வர்கள் -74.9

இலங்கைத் தமி­ழர்கள்-11.2

இலங்கைச் சோன­கர்கள் -9.2

இந்­தியத் தமிழர் -4.2

ஏனை­ய­வர்கள் -0.5 வாழ்­கி­றார்கள்.

மத ரீதி­யாக,

பௌத்­தர்கள்- 70.2

இந்­துக்கள்- 12.6

முஸ்­லிம்கள்- 9.7

ரோமன் கத்­தோ­லிக்­கர்கள்- 6.1

ஏனைய கிறிஸ்­த­வர்கள்-1.3

மஹிந்­தவின் ஆட்­சியில் பல­சே­னாக்கள் சகல மதத்­த­லங்­க­ளையும் தாக்­கி­யி­ருந்­தார்கள். மொத்த மத­ரீ­தி­யான சிறு­பான்­மையும் மஹிந்­தவை எதிர்த்­தது. இந்­நி­லையில் 30% மத ரீதி­யான சிறு­பான்மை கிட்­டத்­தட்ட முழு­மை­யாக ஒற்­று­மைப்­பட்டு மஹிந்­த­வுக்­கெ­தி­ராக வாக்­க­ளித்தும் மைத்­தி­ரியால் 51.28% வாக்­கு­க­ளைத்தான் பெற­மு­டிந்­தது. அதா­வது 50% ஐ ஒரு சிறிய வித்­தி­யா­சத்­தி­னால்தான் தாண்­ட­மு­டிந்­தது.

மொத்த சிறு­பான்­மையும் எப்­பொ­ழுதும் இவ்­வாறு ஒற்­று­மைப்­ப­டு­வார்கள் எனக் கூற­மு­டி­யாது. அடுத்த தேர்­த­லில்­கூட இவ்­வா­றான ஒரு ஒற்­று­மையை எதிர்­பார்க்க முடி­யாது. மறு­புறம் இவ்­வாறு சிறு­பான்­மையின் ஒற்­று­மைக்கு மத்­தி­யிலும் மஹிந்த ராஜபக் ஷவினால் 47.58% வாக்­கு­க­ளைப்­பெற முடிந்­தது.

மாது­லுவே சோபித தேரர் போன்ற சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் மிகவும் செல்­வாக்­குப்­பெற்ற பௌத்த மத­கு­ருக்கள் மைத்­தி­ரியை ஆத­ரித்­தது ஓர­ளவு மித­வாத சிங்­கள மக்­களை மைத்­தி­ரியின் பக்கம் திருப்­பி­யது. இல்­லை­யெனில் சில­வேளை தேவை­யான மேல­திக 2.42% வாக்­கு­க­ளையும் சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து மஹிந்த பெற்­றி­ருக்­கலாம்.

அவ்­வாறு பெற்­றி­ருந்தால் ஒட்­டு­மொத்த சிறு­பான்மை எதிர்த்தும் தனிச்­சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த இருந்­தி­ருப்பார். இன்று சிறு­பான்­மை­களின் நிலை மிகவும் மோச­மாக இருந்­தி­ருக்கும்.

இங்கு சுட்­டிக்­காட்ட விளை­வது என்­ன­வென்றால் சிறு­பான்­மையின் ஆத­ரவு இல்­லாமல் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வரவே முடி­யாது; எனவே, ஜனா­தி­பதிப் பதவி சிறு­பான்­மை­க­ளுக்கு சாத­க­மா­னது; என்ற ஒரு மாயை முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் இருக்­கின்­றது; அது சில­வேளை உண்­மை­யாக இருந்­தாலும் எல்லா நேரங்­க­ளிலும் உண்­மை­யில்லை; என்­ப­தே­யாகும்.

குறிப்­பாக, இன்று இன­வாதம் உச்­சக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்ற ஒரு கால­கட்­டத்தில்,சிங்­க­ள­வர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நாட்டின் ஆட்­சி­யா­ளரைத் தீர்­மா­னிப்­பது சிறு­பான்­மையா? என்ற இன­வாத உணர்வு கிளர்ந்­தெ­ழுந்­தி­ருக்­கின்ற ஒரு கால­கட்­டத்தில்,

சிறு­பான்மை இல்­லாமல் வெற்­றி­பெற முடியும் என தேசப்­பற்­றுள்ள இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­தாச போன்­ற­வர்கள் வெளிப்­ப­டை­யாக பேசி பிர­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்ற ஒரு கால­கட்­டத்தில்,

ஒரு காலத்தின் நட்­சத்­திர அர­சியல் தலை­வர்­க­ளான காமினி திசா­நா­யக்க, லலித் அத்­து­லத்­மு­தலி போன்­ற­வர்­க­ளா­லேயே இந்­நாட்டின் இரு கட்சி ஆட்சி முறைக்கு வேட்­டு­வைக்க முடி­யா­மல்­போ­ன­நி­லையில் கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் இரு கட்சி ஆட்­ட­சி­மு­றைக்கு மஹிந்­த­வினால் வேட்­டு­வைக்க முடியும் என நிரூ­பிக்­கப்­பட்ட ஒரு கால­கட்­டத்தில்

சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளின்றி கோட்­டாவோ இன்­னு­மொ­ரு­வரோ தெரி­வு­செய்­யப்­பட்டால் நம் நிலைமை என்­ன­வாகும்.

அதே­நேரம் வெற்­றி­பெறப் போகின்­றவர் இன­வாதி எனத்­தெ­ரிந்­தி­ருந்தும் அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்து அவர் வெற்­ற­பெற்­றபின் இன­வாத செயற்­பாட்டில் இறங்­கி­விட்டால் நிலைமை என்ன?

எனவே, ஜனா­தி­ப­திப்­ப­தவி ஒழிப்பு தொடர்­பாக நாம் முடி­வெ­டுக்­கும்­போது இவற்­றையும் இவற்­றோடு தொடர்­பு­பட்ட இன்னும் பல­வற்­றையும் கவ­னத்தில் எடுத்­துத்தான் ன் முடிவெடுக்க வேண்டுமே தவிர கண்மூடித்தனமாக ஜனாதிபதிப் பதவி சிறுபான்மைகளுக்கு பாதுகாப்பானது என்று கூறிக்கொண்டு வாளாவிருக்க முடியாது.
(தொடரும்)
-Vidivelli