Verified Web

பிறையாலும் பிளவா

2018-06-07 04:49:30 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

சமூ­கங்­க­ளுக்குள் பிரச்­சி­னை­களும், முரண்­பா­டு­களும் பிள­வு­களும் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ணங்கள் பல காணப்­பட்ட போதிலும் இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த சனத்­தொ­கையில் 9.7 வீத­மா­க­வுள்ள முஸ்­லிம்கள் அர­சியல், ஆன்­மீக கொள்கை கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் முரண்­பட்டு பிரச்­சி­னை­களுக்கும் பிள­வு­க­ளுக்கும் உள்­ளாகி வரு­கின்­றனர்.

இவ்­வாறு பிள­வு­ப­டு­வ­தா­னது முஸ்­லிம்­க­ளிலும்  அதிக விகி­தா­சார­ங்­க­ளை­யு­டைய ஏனைய சமூ­கங்­க­ளி­டையே காணப்­படும் முரண்­பா­டுகள் மற்றும் பிள­வு­களை விடவும் ஒப்­பீட்­ட­ளவில்; முஸ்­லிம்­க­ளி­டையே அதி­க­மாகக் காணப்­ப­டு­வதை அண்­மைக்­கா­ல­மாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடந்த இரு தசாப்த கால முஸ்லிம் அர­சி­யலை நோக்­கு­கின்­ற­போது, முஸ்லிம் சமூ­கத்தின் பேரில் உரு­வான அர­சியல் கட்­சி­க­ளுக்­குள்ளும் கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் முரண்­பா­டு­களும், பிரச்­சி­னை­களும் உரு­வாகி சமூக நலன்­களை விடவும் கட்சி நலன்கள் மேலா­ன­தாகக் கரு­தப்­பட்டு பிள­வு­களால் பிரிந்து செயற்­படும் நிலை காணப்­ப­டு­கி­றது. அதனால், சமூக அர­சியல் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு எடுப்பார் கைப்­பிள்­ளை­க­ளாக அர­சியல் தலை­மைகள் மாறி வரு­கின்­றன.

இவ்­வாறே, இறை­வழி அழைப்­பா­ளர்கள் எனக் கூறிக்­கொண்டு இயக்­கங்­களை ஆரம்­பித்­த­வர்கள் காலத்­திற்குக் காலம் தங்­க­ளுக்குள் ஏற்­ப­டு­கின்ற கருத்து முரண்­பா­டு­க­ளினால் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளாகி பல பிரி­வு­க­ளாகப் பிரிந்து புதிய புதிய இயக்­கங்­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். ஆன்­மீக அமைப்­புக்­க­ளுக்­கி­டை­யி­லான கொள்கை முரண்­பா­டு­களும், கருத்­து­வா­தங்­களும் தொடர்ந்து கொண்­டி­ருக்கும் சூழலில், முஸ்லிம் சிவில் அமைப்­புக்­க­ளுக்­கி­டை­யிலும் ஒன்­று­பட்ட செயற்­பா­டுகள் இதய சுத்­தி­யோடு இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­யா­துள்­ளது.

பல்­வேறு அமைப்­புக்கள் இணைந்து சிவில் அமைப்­புக்­களின் கூட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்ள போதிலும் இருக்­கின்ற அமைப்­புக்­க­ளோடு இணைந்து சமூக முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யா­த­வர்­களால் மேலும் அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு உதா­ர­ண­மாக அண்­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் தலை­மைத்­துவ சபையைக் குறிப்­பி­டலாம்.

முஸ்­லிம்­களின் நலன்­களை வென்­றெ­டுக்கும் இலக்­கு­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்ட பல சிவில் அமைப்­புக்கள் தலை­மைத்­துவ போட்­டி­களின் நிமித்தம் பிள­வு­பட்டு வெவ்­வேறு பெயர்­களில் புதிய அமைப்­புக்­க­ளாக உரு­வாகி செயற்­பட்­டு­வ­ரு­கின்­ற­மை­யையும் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் காணப்­படும் பிள­வு­களை அதி­கப்­ப­டி­யாக்­கி­யி­ருக்­கின்­றன.

அவற்­றோடு,. முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கொண்டு உரு­வான ஊடக அமைப்­புக்­களும் கால­வோட்­டத்தில் பிள­வு­களால் பிரிந்து புதிய ஊடக அமைப்­புக்­களை உரு­வாக்கி செயற்­ப­டு­வ­தையும் காண முடி­கி­றது. இத்­தனை பிள­வு­களும் சமூக, இயக்க ஒற்­று­மைக்கும் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­து­வத்­துக்கும் முத­லிடம் வழங்­காது கருத்து மற்றும் கொள்கை முரண்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கு­வ­தனால் ஏற்­படும் விப­ரீதம் என்­பது இன்னும் விளங்கிக் கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

ஒன்­றி­ணைக்­கப்­ப­டாத ஒரு சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்து பய­ணிக்­கு­மாயின், சமூ­கம்­சார்ந்த அத்­தனை விட­யங்­க­ளிலும் பாத­க­மான சூழலை எதிர்­நோக்க வேண்டி ஏற்­ப­டு­வ­துடன், இத்­த­கைய நிலை­யா­னது எதிர்­கால சமூ­கத்தின் வளர்ச்­சிக்கும் சமூகக் கட்­ட­மைப்­புக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்­காது.

இன­வாத அர­சி­ய­லாலும், இன­வா­தி­க­ளி­னாலும், கடும்­போக்கு மத­வா­தி­க­ளி­னாலும் காலத்­திற்குக் காலம்; முஸ்லிம் சமூகம் நெருக்­க­டி­க­ளையும், அழி­வு­க­ளையும் சந்­தித்­த­தாலும் அவற்றின் பின்­ன­ணி­களை உணர்ந்து ஒற்­று­மைப்­ப­டு­வதில் காட்டும் அக்­க­றையை விட, முரண்­ப­டு­வதன் மூலம் பிள­வு­பட்டு ஒரு­வரை ஒருவர் விமர்­சிப்­பதில் காட்டும் அக்­க­றை­யா­னது அர­சியல், ஆன்­மீக இயக்­கங்­களை வழி­ந­டத்தும் தலை­மைகள், செயற்­பாட்­டா­ளர்­க­ளி­டையே அதி­க­மா­கவே காணப்­ப­டு­வதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இத­னை­யொட்­டி­ய­தா­கவே நோன்பை ஆரம்­பிப்­ப­திலும், பெரு­நாட்­களைக் கொண்­டா­டு­வ­திலும் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்­க­ளுக்­கான தலைப் பிறையைக் காண்­பதில் கடந்த பல வரு­டங்­க­ளாக முரண்­பா­டு­களும், பிள­வு­களும், பிரச்­சி­னை­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன. அர­சியல், கொள்­கைகள்,கோட்­பா­டுகள் இன்னும் பல்­வேறு விட­யங்­களில் பிள­வு­பட்டு ஒற்­று­மையைச் சிதைப்­ப­வர்­க­ளாக  சமூ­கத்தின் மத்­தியில் காணப்­படும் சில குழு­வினர்,  தலைப் பிறையைக் காண்­ப­திலும், நோன்பை ஆரம்­பிப்­ப­திலும், பெரு­நாட்­களைக் கொண்­டா­டு­வ­திலும் பரஸ்­பர விமர்­ச­னங்­க­ளையும்;, மறுப்­ப­றிக்­கை­க­ளையும், கண்­ட­னங்­க­ளையும், கேலிப் பேச்­சுக்­க­ளையும், ஏள­னங்­க­ளையும் ஊட­கங்கள் வாயி­லாக முன்­வைத்து வரு­வ­தா­னது பிள­வு­க­ளுக்கு வழி­கோ­லு­கி­றது. அத்­துடன். கடந்த காலங்­களில் இவ்­வி­ட­யங்­களில் ஏனைய சமூ­கங்­களின் மத்­தியில் முஸ்லிம் சமூ­கத்தின் மத, கலா­சார, விட­யங்கள் குறித்து பல்­வேறு கேள்விக் கணை­களும், விமர்­ச­னங்­களும் உரு­வா­ன­தையும் ஞாப­க­மூட்ட வேண்­டி­யுள்­ளது.

 

தலைப்­பி­றையும் கடந்த காலங்­களும்

இந்­நாட்டில் வாழும் சிங்­க­ள­வர்கள் பொசன், விசாக, புத்­தாண்டு என்­ப­வற்றைக் கொண்­டா­டு­வதில் அவர்­க­ளுக்குள் முரண்­பட்­ட­தாக இல்லை, அவ்­வாறு தைப்­பொங்கல், தீபா­வளி, போன்றை திரு­நாட்­களைக் கொண்­டா­டு­வதில் தமி­ழர்கள் தங்­க­ளுக்குள் முரண்­ப­ட­வில்லை, கிறிஸ்­ம­ஸையோ கிறிஸ்­தவ புத்­தாண்­டையோ, பெரிய வெள்­ளி­யையோ கொண்­டா­டு­வதில் கிறிஸ்­த­வர்கள் அவர்­க­ளுக்குள் கருத்து வேறு­பாட்டைக் கொள்­வ­தில்லை, ஆனால், சாந்­தி­யையும், சமா­தா­னத்­தையும், சகோ­த­ரத்­து­வத்­தை­யும், ஒற்­று­மை­யையும், வலி­யு­றுத்தும் பூரண வாழ்க்கைத் திட்­ட­மான இஸ்­லாத்­தைப் பின்­பற்­று­கின்ற முஸ்­லிம்கள் ஒரு தலைப்­பிறை பார்ப்­பதில் சர்­வ­தேச பிறை சரியா, உள்­ளூரில் காண்­பது சரியா என எதில் எதையோ பிடுங்கிக் கொண்டு நோன்பு நோற்­ப­திலும் பெரு­நாட்­களைக்  கொண்­டா­டு­வ­திலும் முரண்­பட்டுக் கொள்­கி­றார்கள்.

வட்­டி­யுடன் தொடர்­பு­படும் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­டுதல், லீசிங்கில் வாக­னங்கள் கொள்­வ­னவு செய்தல், பணக்­கார பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்தல், ஆடம்­பர மாளி­கைகளைக் கட்­டுதல், வீண் விர­யங்கள் நிறைந்த திரு­ம­ணங்­களை ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் நடாத்­துதல் என இறை­வனும், நபியும் விரும்­பாத பல்­வேறு விட­யங்­களில் பலர் செயற்­பட்­டாலும் அவற்­றி­லுள்ள பாதக சாதகங்கள் குறித்து விமர்­சிக்­கா­த­வர்­களும், முரண்­ப­டா­த­வர்­களும், நோன்பை நோற்­ப­தற்கு அல்­லது பெரு­நாளைக் கொண்­டா­டு­வ­தற்­கு­ரிய பிறையைக் காண்­பதில் அல்­லது அது­கு­றித்­தான அறி­விப்பில் முரண்­பட்டு விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வாறு கடந்த பல வரு­டங்­க­ளாக, பெரு­நாட்­க­ளுக்கும் நோன்­புக்கும் தலைப்­பிறை பார்க்கும் விட­யத்தில் ஒரு­சாரார் தொடர்ச்­சி­யாக கருத்து வேறு­பாடு கொண்­ட­வர்­க­ளாவும், விவாதம் புரி­கின்­ற­வர்­க­ளா­கவும், இவ்­வி­டயம் தொடர்பில் மறுப்­ப­றிக்கை விடு­கின்­ற­வர்­க­ளா­கவும் செயற்­பட்டு முஸ்லிம் சமூ­கத்தைச் சந்தி சிரிக்கச் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அர­சி­ய­லுக்­காகத் தொப்­பி­ய­ணிந்தும் தாம் கொண்ட இயக்க கொள்­கைக்­காக தொப்பி கழற்­றியும் தங்­களை மார்க்க அறி­ஞர்கள் என்று விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்­கின்­ற­வர்கள், வெற்று ஊடக விளம்­ப­ரங்­க­ளுக்­காகக் கூறு­கின்ற கருத்­துக்கள் சமூ­கத்தின் பெரும்­பா­லானோர் மத்­தியில் நகைச்­சு­வை­யாக நோக்­கப்­ப­டு­வ­துடன் சமூ­கத்தை கேவ­லத்­திற்கு மேல் கேவ­லப்­ப­டுத்­து­வ­தா­கவும்  பிற சமூ­கத்தின் பார்­வையில் ஏள­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்து விடு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

தலைப்­பிறை பார்ப்­ப­திலும், பெருநாள் கொண்­டா­டு­வ­திலும் அதற்­கான அறி­விப்பைச் செய்­வ­திலும், முக்­கிய வகி­பாகம் செய்யும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, அதன் பிறைக்­குழு, முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் அல்­லது அமைச்சு ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் முன்­னுக்குப் பின் முர­ணான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­ய­தான குற்­றச்­சாட்­டுகள் கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்­ட­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

2005, 2012, 2013ஆம் ஆண்­டு­களில் பெருநாள் கொண்­டா­டு­வதில் பாரிய சர்ச்சை ஏற்­பட்­ட­தையும் இதனால் பிறைக்­குழு மீது முஸ்­லிம்­களில் ஒரு பகு­தி­யினர் நம்­பிக்கை இழந்­த­மை­யையும் இங்கு பதிய வேண்­டிள்­ளது. 2013ஆம் ஆண்டு கிண்­ணி­யாவில் பிறை கண்­ட­தாக கிண்­ணியா மக்­களும் கிண்­ணியா உலமா சபையும் அறி­வித்தும் அவற்றை பிறைக்­குழு ஏற்றுக் கொள்­ளா­த­தனால் கிண்­ணியா உலமா சபையின் தீர்­மா­னத்­திற்கு ஏற்ப கிண்­ணியா உட்­பட கிழக்கின் பல பிர­தே­சங்­களில் வியா­ழக்­கி­ழமை பெருநாள் கொண்­டா­டி­யதும்,  பிறைக்­கு­ழுவின் தீர்­மா­னத்­திற்கு ஏற்ப ஏனைய பிர­தேச முஸ்­லிம்கள்; வெள்­ளிக்­கி­ழமை பெருநாள் கொண்­டா­டி­ய­மையும் பிறை பார்க்கும் மற்றும் அறி­விப்புச் செய்யும் விட­யத்­திற்­கான பெரும் தவ­றென்றே கூறலாம்.

தவ­று­க­ளுக்­காக மன்­னிப்புக் கேட்­பதை மற்றும் வருத்தம் தெரி­விப்­பதை விடவும் தவ­றுகள் இடம்­பெ­றாமல் பாது­காப்­பது மேல் என்­பதை கடந்த 2013இல் ஷவ்வால் தலைப்­பிறை தொடர்­பாக அறிவிப்­பதில் ஏற்­பட்ட சார்­சையும் அதன் பின்னர் அகில இலங்கை ஜம­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் வானொ­லியில் இச்­சர்ச்சை தொடர்பில் ஆற்­றிய உரையும் பெரும் விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யி­ருந்­தன என்­பதைக் குறிப்­பிட்­டாக வேண்டும்.

இச்­சர்ச்சை தொடர்பில் தனது கிண்­ணியா மற்றும் திரு­கோ­ண­மலை உலமா சபை­யுடன் இணைந்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை தவ­றையும். திருத்­தத்­தையும்  நன்கு தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தன.

மேற்குச் சிந்­தனை அல்­லது அறிவு மேலா­திக்க சிந்­த­னைதான் 2013இல் ஒரு நாட்­டுக்குள் முஸ்­லிம்கள் இரு தினங்­களில் பெருநாள் கொண்­டாடும் நிலையை உரு­வாக்­கி­யது. ஒரு அர­சியல் கட்­சிக்கு அல்­லது முக்­கிய சபை­க­ளுக்குத் தலைமை வழங்கி வழி­ந­டத்தும் தலை­மைகள் மேலா­திக்க சிந்­த­னை­க­ளி­லி­ருந்து விடு­ப­டாது செயற்­ப­டு­வார்­க­ளாயின் சமூ­கத்­திற்குள் முரண்­பா­டு­களும், பிரச்­சி­னை­களும்,  பிள­வு­களும் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது.

தலை­வர்கள், உண்­மைத்­தன்மை, நம்ப­கத்­தன்மை, தூர­நோக்குச் சிந்­தனை, தொடர்­பாடல் திறன், ஏனை­ய­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவு, செல்­வாக்கு செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்­மா­னிக்கும் ஆற்றல், திட்­ட­மிடல். கலந்­து­ரை­யாடல் போன்ற பண்­பு­டை­யவர்க­­ளாக இருத்தல் அவ­சியம். இப்­பண்­பு­க­ளி­லி­ருந்து தலை­மைகள் தவ­று­கின்­ற­போது தலை­மைகள் தொடர்பில் விமர்­ச­னங்­களும் நம்­பிக்­கை­யீ­னங்­களும் மேலெ­ழு­வதைத் தவிர்க்க முடி­யாது. சம­கால அர­சியல் தலை­மைகள் தொடர்பில் சமூ­கத்தில் காணப்­படும் விமர்­ச­னங்கள் இதற்குச் சான்­றா­க­வுள்­ளன.

 

ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்கள்

விமர்­சனம் என்­பது மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­பட்டு முன்­வைக்­கப்­படும் கருத்­தாகும். அதில் நேர், எதிர் மறைத் தன்­மைகள் காணப்­படும்.  விமர்­ச­னங்கள் குறிப்­பாக ஒரு தனி­ந­பரை, செய­லாக்­கத்தை, படைப்பை,  அமைப்பை, அர­சியல் கட்­சியை என பல்­வேறு விட­யங்­களில் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்கள் எதிர்­பார்ப்­புக்­களை அடைந்­து­கொள்­வ­தற்­கான பாதை­களைத் திறக்க வழி­கோலும்.

சம­கா­லத்தில் அர­சியல் பிர­மு­கர்­களின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும், இலங்கை வாழ் முஸ்­லிம்­களை சமய, கலா­சார பண்­பாட்டு விட­யங்­களை ஒழுங்­கு­ப­டுத்தி நெறிப்­ப­டுத்தும் உலமா சபை தொடர்­பிலும் சமூக மட்­டத்தில் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதைக் காண­மு­டி­கி­றது.  இவ்­வி­மர்­ச­னங்கள் நாக­ரி­க­மற்ற முறையில்  அமை­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளன.

விமர்­சனம் என்ற போர்­வையில்  ஒரு தரப்பை பாதிக்கும் நோக்­குடன் முன்­வைக்­கப்­படும் விமர்­ச­னங்கள் ஆரோக்­கி­ய­மற்­ற­தாகும். மொழிப்­பு­லமை உள்­ளது என்­ப­தற்­காக வெற்று விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதால் எவற்­றையும் அடைந்­து­கொள்ள முடி­யாது. அவை எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றாது.

மாறாக, மக்கள் பிர­தி­நி­தி­களின் அல்­லது கட்­சி­க­ளி­னதும், அமைப்­புக்­க­ளி­னதும் தலை­மை­களின் செயற்­பா­டுகள் மக்­க­ளுக்கு நன்மை பயக்கக் கூடி­ய­தாக அமைய வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­போது அவை ஆரோக்­கி­ய­மாக  அமையும். அவர்­களின் கண்­களைத் திறக்­கவும் செய்யும்.

இணை­யத்­தள சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாக தங்­க­ளது மொழி­யாற்­ற­லையும் கருத்­தி­யியல் வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்ற சில­ரினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற  விமர்­ச­னங்­களில் சமூக நோக்கைக் காண்­பது அரி­தா­கவே உள்­ளது. அவற்றில் சுய­ந­லன்கள் மலிந்து கிடக்­கின்­றன. விமர்­ச­னங்கள் ஆரோக்­கி­ய­மாக அமையும் போதுதான் அவை அர்த்­த­முள்­ள­தாக அமையும். சமூக எழுச்­சிக்கு வழி­கோலும்.  அல்­லாத பட்­சத்தில் அவை வெற்று விமர்­ச­னங்­க­ளாக மாத்­தி­ர­மின்றி சமூ­கத்­திற்குள் வீணான சர்ச்­சை­க­ளையும், பிள­வு­க­ளை­யுமே ஏற்­ப­டுத்தும்.

இருப்­பினும், அர­சியல் கட்சித் தலை­மைகள், செயற்­பாட்­டா­ளர்கள் குறித்தும், உலமா சபை தொடர்­பிலும்  முன்­வைக்­கப்­ப­டு­கின்ற ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்­களை அவ­மா­னப்­ப­டுத்­தாது அவற்­றுக்கு மதிப்­ப­ளிப்­பது சம்­பந்­த­ப­பட்­ட­வர்­களின் தார்­மீகக் கடப்­பா­டாகும். அத்­தோடு அவ்­வி­மர்­ச­னங்கள் தொடர்பில் சுய­வி­மர்­ச­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு அவற்­றுக்கு தகுந்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதும் அத்­த­கை­ய­வர்­களின் சமூகப் பொறுப்­பாகும்.

தொலைக்­காட்சி, வானொலி நிகழ்ச்­சி­க­ளி­னூ­டா­கவும். பத்­தி­ரிகைகள், சஞ்­சி­கை­கள் மற்றும் இணை­யத்­தள செய்திச் சேவைகள், வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாகவும் சமூக அபி­வி­ருத்தி, சமூக நலன்கள், சமூக எழுச்சி மற்றும் சமூக மாற்­றங்கள் தொடர்பில் ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

அவ்­வாறு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற  அவ்­வி­மர்­ச­னங்கள் தமது கட்­சியை அல்­லது சபை­களின் தலை­மையின் செயற்­பா­டு­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வ­தாகக் கருதி அவ்­வி­மர்­ச­னங்­களை முன்­வைக்கும் நபர்­களின் கருத்துச் சுதந்­தி­ரங்­களைப் பறிக்கும் செயற்­பா­டு­களும் சம­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கிது.

இந்­ந­ட­வ­டிக்­கைகள் அவர்­களின் சமூக நல­னற்ற தன்­மை­களை மேலும் விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­கோலும் என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வ­தோடு ஆரோக்­கி­ய­மான விமா­ச­னங்கள் உள்­வாங்­கப்­ப­டு­வது அவசிம் என்­ப­தையும் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

அந்­த­வ­கை­யில்தான் இந்­நோன்பு காலத்தில் நோன்­புக்­கான தலைப்­பிறை அறி­விப்பு செய்த விட­யத்தில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற விமர்­ச­னங்கள் போன்று பெரு­நா­ளுக்­கான தலைப்­பி­றையை அறி­விப்­பதில் விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­விடக் கூடாது என்­பதில் பிறைக்­குழு அதிக அக்­க­றையும் கரி­ச­னையும் கொள்ள வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

 "உங்­களில் எவரும் ஒரு காரி­யத்தை செய்தால் அதனை கன­கச்­சி­த­மாக அவர் செய்­வ­தையே அல்லாஹ் விரும்­பு­கின்­றான்” எனவும் “அல்லாஹ் கச்­சி­த­மாகச் செய்­வதை ஒவ்­வொரு விட­யத்­திலும் கட­மை­யாக்­கி­யுள்ளான்” என்றும் ஹதீஸ்­களில் காண முடி­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் பிறை­பார்க்கும் விட­யத்­திலும், பிறை கண்­ட­வர்கள் அறி­விக்கும் விட­யத்­திலும் நோன்பு மற்றும் பெரு­நா­ளுக்­கான தீர்­மா­னத்தை நிறை­வேற்றும் விட­யத்­திலும் அல்­லாஹ்வைப் பயந்­த­வர்­க­ளாக விமர்­ச­னங்­களும் . வீண் முரண்­பா­டு­களும் உரு­வா­காத தீர்­மா­ன­மாக  பொறுப்­பு­தா­ரி­க­ளினால்  வெளி­வர வேண்டும்.

பிறை­பார்த்­தலும் பிறைக்­கு­ழுவும்

இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்குச் சரி­யான வழி­காட்­டல்­களை வழங்கி வரும் உலமா சபையின் சேவை இந்­நாட்டில் கடந்த 90 வரு­டங்­க­ளுக்கு மேலாக இடம்­பெற்று வரு­கின்­றமை குறித்து முஸ்­லிம்கள் பெரு­மைப்­பட வேண்டும்.

புனித மக்கா நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்­கி­வரும் இஸ்­லா­மிய உலக ஒன்­றியம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு 3 தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகக் குறிப்­பிடும் உலமா சபை உள்­நாட்டுத் தேவை­களை பூர்த்தி செய்யும் வகை­யிலும் சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கிலும் உரு­வாக்­கப்­பட்­ட­தா­கவும் சிலர் சுட்­டிக்­காட்­டு­வது போன்று வெளி­நாட்டு நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல என்­ப­தையும் உலமா சபை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

இவ்­வாறு 9 தசாப்­தங்­க­ளாக இந்­நாட்டில் செயற்­படும் பழைமை வாய்ந்த அமைப்­பான உலமா சபை பல உப குழுக்­களைக் கொண்­டுள்­ளது. இக்­கு­ழுக்­களில் ஒன்­றுதான் பிறைக்­கு­ழு­வாகும். இப்­பி­றைக்­குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுடன் இணைந்து ஒவ்­வொரு மாதத்­துக்­கான பிறை பார்த்து ஹிஜ்ரி கலண்­ட­ரையும் வெளி­யிட்டு வரு­கி­றது. இவ்­வா­றான பணி­யினைச் செய்­து­வரும் இப்­பி­றைக்­கு­ழுவும், உலமா சபையும் நோன்பு மற்றும் பெரு­நா­ளுக்­கான பிறை­பார்த்து அறி­விப்­பதில் சர்ச்­சைக்கும் முகம்­கொ­டுத்து வரு­கி­றது.

அந்­த­வ­கை­யில்தான் இந்­நோன்பின் தலைப்­பி­றைக்­கான அறி­விப்பு தொடர்பில் விமர்­ச­னங்கள் பிறைக்­குழு மீது முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலையில்  இந்­நோன்பு பெரு­நா­ளுக்­கான தலைப்­பிறை காணுதல் மற்றும் அதற்­கான அறி­விப்பு எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது என்ற கேள்­வி­களும் எழுப்­பப்­பட்டு வரு­வ­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இம்­முறை 28 நோன்­பு­க­ளையே நோற்க நேரி­டு­மென்றும், நோன்­புக்­கான பிறையை அறிப்­பதில் உலமா சபையும் பிறைக்­கு­ழுவும் மோசடி செய்­து­விட்­ட­தென்றும் பெரும் குற்­றச்­சாட்­டுகள் சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளி­னூ­டாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் ரமழான் தலைப்­பிறை தீர்­மா­னித்­தமை குறித்து தெளி­வு­ப­டுத்தும் அறிக்­கை­யொன்­றினை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வெளி­யிட்­டுள்­ள­துடன், இந்த ரம­ழானில் 28 நோன்­புகள் மாத்­திரம் கிடைக்கும் நிலை ஏற்­பட்டால், இதற்கு ஷரீ­ஆவில் அழ­கிய வழி­காட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன. இது குறித்­தான வழி­காட்­டல்கள் விரைவில் வெளி­யி­டப்­ப­டு­மெ­னவும் அறி­வித்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில், ரமழான் மாதம் 28 நோன்­பா­கவோ அல்­லது 29ஆகவோ அல்­லது 30ஆகவோ எது­வாகக் கிடைக்கப் பெற்­றாலும், ஒற்­று­மைக்கும், இஸ்­லா­மிய சகோ­த­ரத்­து­வத்­திற்கும் பங்­க­மேற்­ப­டாது, இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்பட்ட இஸ்லாம் மார்க்­கத்­திற்கு சொந்­தக்­கா­ரர்­க­ளா­கிய முஸ்­லிம்கள் பிறையால் பிள­வு­படும் சமூ­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும், மாற்று சமூ­கத்­தினர் இந்­நாட்டு முஸ்­லிம்­களின் மார்க்க விட­யங்­க­ளுக்­கான தீர்­மா­னங்­களை விமர்­ச­னத்­திற்கும், ஏளனத்திற்கும் உட்படுத்தாமல் இருக்கவும் பிறையால் பிளவுபட்டு இரு தினங்கள் பெருநாளை கொண்டாடாது ஒரே தினத்தில் ஒட்டுமொத்த இந்நாட்டு முஸ்லிம்களும் கொண்டாடி சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தவும் வல்ல இறைவன் துனணபுரிவானாக!
-Vidivelli