Verified Web

பணம் பெற்ற எம் பிக்களை பாதுகாக்கிறதா அரசாங்கம்

2018-06-06 01:26:17 Administrator

மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டைய பேர்­பெச்­சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்து அர­சி­யல்­வா­திகள் பலர் பணம் பெற்ற விவ­காரம் தற்­போது சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளது.

முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர குறித்த நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 1 மில்­லியன் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்­டமை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களைத் தொடர்ந்தே இந்த விடயம் சூடு­பி­டித்­துள்­ளது.

குறித்த குற்­றச்­சாட்டை ஏற்றுக் கொண்­டுள்ள தயா­சிறி ஜய­சே­கர, தேர்தல் செல­வு­க­ளுக்­கா­கவே தான் அப் பணத்தைப் பெற்­ற­தா­கவும் இப் பணக் கொடுக்கல் வாங்­க­லுக்கும் மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­துக்கும் எந்­த­வித தொடர்­பு­மில்லை என்றும் தெரி­வித்­துள்ளார். அது மாத்­தி­ர­மன்றி அர்ஜுன் அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்து பணம் பெற்ற மேலும் 118 பேரின் பெயர் விப­ரங்­களை விரைவில் அம்­ப­லப்­ப­டுத்­துவேன் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

 “கோப் குழுவின் விசா­ர­ணை­களை, அர்ஜுன் அலோ­சி­ய­ஸுக்கு சாத­க­மாக்­கிக்­கொள்ளும் நோக்­கி­லேயே இந்த 118 பேரும் அவ­ரிடம் பணம் பெற்­றுக்­கொண்­டனர். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இவர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அந்த விப­ரங்­களை அம்­ப­லப்­ப­டுத்­துவேன்” என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதற்­காக தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் விண்­ணப்­பித்து குறித்த அறிக்­கையில் உள்ள சக­ல­ரது பெயர் விப­ரங்­க­ளையும் வெளிப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதி­லி­ருந்து பிணை முறி மோசடி  விவ­கா­ரத்தை மூடி­ம­றைப்­ப­தற்கு அர்ஜுன் அலோ­சியஸ் பல பில்­லியன் ரூபா பணத்தை செல­விட்­டுள்­ள­மையும் இதற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அதி­கா­ரிகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் என பலரும் துணை­போ­யுள்­ள­மையும் தற்­போது வெளிச்­சத்­துக்கு வர ஆரம்­பித்­துள்­ளது.

இலங்­கையைப் பொறுத்­த­வரை தேர்தல் காலங்­களில் அர­சி­யல்­வா­திகள் பிர­பல வர்த்­த­கர்­க­ளிடம் பணம் பெற்றுக் கொள்­வதும் பின்னர் அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர் குறித்த வியா­பா­ரி­களின் மோச­டி­க­ளுக்கு ஒத்­தா­சை­யாக இருப்­பதும் வழக்­க­மாகும். இதன் ஓர் அங்­க­மா­கவே பிணை முறி உள்­ளிட்ட மேற்­படி நிறு­வ­னத்தின் மோச­டி­க­ளுக்குத் துணை போகும் வகையில் இந்த பணக் கொடுக்கல் வாங்­கல்கள் இடம்­பெற்­றுள்­ளமை வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

இது உண்­மையில் மிகவும் பார­தூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும். பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களின் பல பக்­கங்கள் இன்னும் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அவை ஜனா­தி­பதி வசமே உள்­ளன. பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டாத அந்த அறிக்­கையில், கோப் குழு விசா­ர­ணை­யின்­போது பேர்­பெச்­சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்­றுக்­கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் 118 பேரின் பெயர் பட்­டியல் உள்­ள­தாக தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வா­றெனில் ஜனா­தி­பதி உட­ன­டி­யாக மேற்­படி எம்.பி.க்களின் பெயர் விப­ரங்­களை உட­ன­டி­யாக பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

குறித்த அறிக்கையில் 10 பக்கங்கள் மாத்திரமே தனக்குக் கிடைத்துள்ளதாக நேற்று சபாநாயகர் சபையில் அறிவித்திருந்தார். அதில் எம்.பி.க்கள் எவரதும் பெயர்கள் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் அரசாங்கம் பணம் பெற்ற 118 பேரினதும் பெயர் விபரங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறதா எனும் சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்திலும் பலத்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது.

அந்த வகையில் அரசாங்கம் ஒருபோதும் இதனை மூடிமறைக்க முயற்சிக்கக் கூடாது. ஜனாதிபதியிடமுள்ள குறித்த அறிக்கையை முழுமையாகப் பெற்று சகலரதும் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே ஊழல் மோசடிக்குத் துணைபோனவர்களை மக்களால் இனங்கண்டு கொள்ள முடியுமாகவிருக்கும்.
-Vidivelli