Verified Web

பாலியல் வன்புணர்வினால் உருவான குழந்தைகளைப் பிரசவிக்குவுள்ள ரோஹிங்ய அகதிப் பெண்கள்

2018-06-04 02:58:19 M.I.Abdul Nazar

மியன்­மா­ரி­லி­ருந்து வன்­முறை கார­ண­மாக தப்­பி­வந்த ரோஹிங்ய அக­திகள் புதிய பிரச்­சி­னை­யொன்றை எதிர்­கொள்­ள­வுள்­ளனர். அதுதான் பாலியல் வன்­பு­ணர்­வினால் உரு­வான குழந்தைப் பிர­சவங்கள் விரைவில் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யாகும்.

பங்­க­ளா­தே­ஷி­லுள்ள விசா­ல­மான அக­தி­மு­காமில் ஆகஸ்ட் 2017 இற்கும் பெப்­ர­வரி 2018 இற்கும் இடைப்­பட்ட காலத்தில் பாலியல் வன்­பு­ணர்வின் கார­ண­மாகக் கரு­வுற்ற 160 பெண்கள் எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்­பினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

சுமார் 13,500 ரோஹிங்ய பெண்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றிய சந்­தர்ப்­பத்­திலும், பங்­க­ளா­தேஷை நோக்கி வந்த சந்­தர்ப்­பத்­திலும் பாலியல் வன்­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக ஐக்­கிய நாடுகள் சனத்­தொகை நிதியம் குறிப்­பிட்­டுள்­ளது.

பாலியல் வன்­பு­ணர்வுச் சம்­ப­வங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்­தி­லேயே உச்ச அளவில் காணப்­பட்­டன. எனவே (ஒன்­பது மாதங்கள் கடந்த நிலையில்) இந்த மாதத்தில் அதி­க­மான பெண்­க­ளுக்கு பிள்­ளைகள் பிறக்­கு­மென நாம் எதிர்­பார்க்­கின்றோம் என மகப்­பேற்றுத் தாதியும் எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்­புடன் செயற்­படும் பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைகள் தொடர்­பான தலைமை இணைப்­பா­ள­ரு­மான டேனி­யல்லா காஸ்­ஸியோ தெரி­வித்தார்.

உதவிப் பொருட்­களின் தட்­டுப்­பாடு, எதிர்­வரும் நாட்­களில் வர­வுள்ள பருவப் பெயர்ச்­சிக்­கால மழை வெள்ளம் ஆகி­ய­வற்­றி­னி­டையே அதி­க­ரித்­து­வரும் ரோஹிங்ய சனத்­தொ­கையின் அடிப்­படை வச­தி­க­ளைக்­கூட பூர்த்தி செய்­வ­தற்கு போரா­டி­வரும் நிலையில் எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பு மற்றும் சேவ் த சில்ரன் அமைப்பு போன்­றவை புதிய மகப்­பே­று­க­ளுக்­கான ஆயத்­தங்­களில் மிகுந்த சிர­மத்­திற்கு மத்­தியில் துரி­த­மாக ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொக்கம் சுமார் 700,000 ரோஹிங்­யர்கள் பர்மா என அறி­யப்­பட்ட மியன்­மா­ரி­லி­ருந்து பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பி வந்­தனர். முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ரான ரோஹிங்ய முஸ்­லிம்கள் பல தசாப்த கால­மாக கொடூ­ர­மான அடக்­கு­மு­றை­க­ளுக்குள் வாழ்ந்து வந்­தனர். கடந்த வருடம் வன்­மு­றைகள் மிகவும் அதி­க­ரித்­தன.

இதன்­போது மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் கிரா­மங்கள் முழு­மை­யாக தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­தா­கவும், பொது­மக்கள் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும், பெண்­களும் சிறு­மி­களும் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும் அக­திகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

13 வய­திற்கும் 25 வய­திற்கும் இடைப்­பட்­டோ­ரையே அவர்கள் இலக்கு வைத்­தனர் என பாலியல் வன்­மு­றைக்­குள்­ளாக்­கப்­பட்டோர் தொடர்­பான விட­யங்­களில் நிபு­ணத்­துவம் பெற்ற எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்­புடன் பணி­யாற்றும் மகப்­பேற்றுத் தாதி­யான றொ­க் ஷானா அக்தர் தெரி­வித்தார். நவம்பர் மாதத்தில் மியன்மார் இரா­ணுவம் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தமது பாது­காப்புப் படை­யினர் கொலைகள் மற்றும் பாலியல் வன்­பு­ணர்வின் ஈடு­பட்­டமை தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்­தி­ருந்­தது.

தான் பங்­க­ளா­தேஷை வந்­த­டைந்­த­வுடன் கர்ப்­ப­முற்­றி­ருப்­பதை உணர்ந்­த­தாக 25 வய­தான மதீனா ஹாத்தூன் தெரி­வித்தார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் அவ­ரது கணவர் அவர்­க­ளது கிரா­மத்­தி­லி­ருந்து கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்தார். தான் வித­வை­யாக இருந்­தது என்னை பாலியல் வன்­பு­ணர்­வுக்­குள்­ளாக்­கிய `இரா­ணுவ சிப்­பாய்க்கு' வச­தி­யாகப் போய்­விட்­டது என அவர் குறிப்­பி­டு­கின்றார்.

குடும்­பத்­தி­ன­ரதோ அல்­லது மகப்­பேற்றுத் தாதி­யி­னதோ உத­வி­யின்றி சன­நெ­ரி­சல்­மிக்க முகாமில் அவர் தனது பெண் குழந்­தை­யான ரோசி­னாவைப் பெற்­றெ­டுத்தார். `இது நினைத்­து­ப் பார்க்க முடி­யாத வேத­னையும் வெட்­க­மு­மாகும்'என அவர் தெரி­வித்தார்.

தான் மட்­டு­மல்ல இன்னும் ஏரா­ள­மான பெண்கள் தன்­னைப்போல் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர் என்­பதே ஹாத்­தூ­னுக்கு ஒரே­யொரு ஆறு­த­லாகும். `இது எனது தலை­விதி மாத்­தி­ர­மல்ல' என அவர் குறிப்­பி­டு­கின்றார்.

உலகின் மிகவும் நெருக்­க­மான அக­தி­மு­கா­மான தெற்கு பங்­க­ளா­தேஷில் அமைந்­துள்ள குடு­பலோங் ரோஹிங்ய அக­தி­மு­காமில் ஹாத்துன் வசித்து வரு­கின்றார். இங்கு நிலை­மைகள் மிகவும் மோச­மாகக் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அதிக பிள்­ளைகள் உள்ள குடும்­பத்­தினர் போதிய உணவு கிடைக்­கா­த­தனால் மிகவும் கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில் முகாம்­களில் எதிர்­பா­ராத அளவில் குழந்தைப் பிறப்­புக்கள் அதி­க­ரித்­துள்­ளன. 2018 ஆம் ஆண்டு 50,000 குழந்­தைகள் பிறக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது மிகவும் மந்த நிலை­யி­லுள்ள சுகா­தார சேவை­க­ளுக்கு மேலும் சுமை­யாக மாறி­யுள்­ளது.

அதி­க­ரிக்­க­வுள்ள பாலியல் வன்­பு­ணர்­வினால் உரு­வான குழந்தைப் பிர­சவங்கள் சுகா­தாரப் பரா­ம­ரிப்புப் பிரச்­சி­னை­களை மேலும் சிக்­க­லாக்­கி­விடும் என காஸ்­ஸியோ தெரி­வித்தார்.

அதி­க­ரிக்­க­வுள்ள குழந்தைப் பிறப்­புக்­க­ளுக்கு தயா­ரா­குவ­தென்­பது மிகவும் சிக்­க­லான விட­ய­மாகும். திரு­ம­ண­மா­கத பெண்­ணொ­ருவர் கருத்­த­ரிப்­ப­தி­லுள்ள அகெ ள­ரவ நிலை கார­ண­மாக பாலியல் வன்­பு­ணர்­வினால் எத்­தனை பெண்கள் கரு­வுற்­றி­ருக்­கி­றார்கள் என்­பதை எமது அமைப்­பினால் மிகச் சரி­யாக கணக்­கீடு செய்ய முடி­யாமல் இருக்­கின்­றது. முகாம்­க­ளி­லுள்ள பாலியல் வன்­பு­ணர்­வுக்­குள்­ளான பெண்கள் தாம் கரு­வுற்­றி­ருப்­பதை மறைப்­பது சாதா­ரண விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 80 வீத­மான ரோஹிங்ய கர்ப்­பிணிப் பெண்கள் தமது வீடு­க­ளி­லேயே குழந்­தை­களைப் பிர­ச­வித்­த­வர்­க­ளாவர். எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பின் கூற்­றுப்­படி அதி­க­மான பிர­ச­வங்கள் பதி­வா­காமல் விடப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புக்கள் அதிகம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்த சமூ­கத்­தி­லுள்ள குடும்­பங்கள் தேவை­யற்ற குழந்­தை­களை உற­வி­னர்­க­ளுக்கோ அல்­லது அய­ல­வர்­க­ளுக்கோ அல்­லது விஷே­ட­மாக குழந்­தை­க­ளற்ற தம்­ப­தி­யி­ன­ருக்கோ கொடுத்து விடு­கின்­றனர் என தெரி­வித்­தி­ருக்கும் எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பு, ஐக்­கிய நாடுகள் சனத்­தொகை நிதியம் மற்றும் சேவ் த சில்ரன் அமைப்பு ஆகி­யன சில குழந்­தைகள் வாயில் படி­களில் கைவி­டப்­ப­டு­கின்­றன எனவும் தெரி­வித்­துள்­ளன.

பல கைவி­டப்­பட்ட சிறு­வர்கள் கடு­ப­லோங்கில் அமைந்­துள்ள எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பின் மகப்­பேற்று சிகிச்சை நிலை­யத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளனர். `அவ்­வா­றான குழந்­தை­களை வைத்­தி­ருப்­ப­தற்­கான இடமோ அல்­லது வச­தியோ எம்­மிடம் இல்லை' என காஸ்­ஸியோ தெரி­விக்­கின்றார். சில நாட்­க­ளுக்கு அங்கு தங்க வைக்­கப்­படும் குழந்­தைகள் பின்னர் சேவ் த சில்ரன் அமைப்­பிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்கள் ஏனைய ரோஹிங்ய குடும்­பங்­க­ளிடம் அக்குழந்­தை­களை ஒப்­ப­டைக்கக் கூடிய முறை­சாரா பரா­ம­ரிப்பு முறை­மை­யொன்­றினை செயற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இம்மாதம் அதி­க­ரிக்­க­வுள்ள குழந்­தைகள் தொடர்பில் இந்த முறை­மை­யினை நிலை­பே­றா­ன­தாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு பங்­க­ளா­தேஷின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மாகும் என சேவ் த சில்ரன் அமைப்பின் பெண் பேச்­சாளர் டப்னீ குக் தெரி­வித்தார்.

விருப்­ப­மில்­லாத கருவைச் சுமக்கும் ரோஹிங்யப் பெண்­க­ளுக்கு முகாம்­களில் மிகச் சொற்­ப­மான தெரி­வு­களே உள்­ளன. உட­லு­றவில் ஈடு­பட்­டதன் பின்னர் ஐந்து நாட்கள் வரை­யான அவ­சர கருத்­த­டை­யி­னையும் 12 வாரங்­க­ளுக்கு முன்­ன­தான கருக்­க­லைப்­பி­னையும் சிகிச்சை நிலை­யங்கள் வழங்­கு­கின்­றன. பெரும்­பா­லான பெண்கள் இவ்­வா­றான சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு வரு­வ­தில்லை, அவ்­வாறு வரு­ப­வர்கள் காலம் பிந்­திய பின்­னரே வரு­கின்­றனர். இதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் குறித்த பெண்ணின் குடும்­பத்­தி­னரே சுய­மாக சில கருக்­க­லைப்பு வழி­மு­றை­களைக் கையாள்­கின்­றனர். இதனால் உயி­ரா­பத்து ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

மகப்­பேற்றுத் தாதி­யான அக்தர் ஒரு நோயா­ளியின் சம்­ப­வத்தை நினை­வு­கூ­ரு­கின்றார். குறித்த பெண்ணின் குடும்­பத்­தினர் அப்­பெண்ணை சிகிச்சை நிலை­யத்­திற்கு அழைத்து வந்து அவ­ருக்கு வயிற்று வலி எனத் தெரி­வித்­தனர். அப்பெண் திரு­ம­ண­மாவர் எனவும் அக்­த­ரிடம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். அப் பெண்ணைப் பரீட்­சித்­துப்­பார்த்­த­போது அப்பெண்ணின் கர்ப்­பப்­பை­யினுள் உடைந்த குச்­சி­யொன்று இருப்­பதைக் கண்­ட­றிந்தார். இரண்டு நாட்­களின் பின்னர் அப்பெண் உயி­ரி­ழந்தார்.

பின்னர் அப் பெண்ணின் குடும்­பத்­தினர் அவர் திரு­ம­ண­மா­கா­தவர் எனவும் அவர் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு இலக்­கா­னவர் எனவும், அவரைக் காப்­பாற்­று­வ­தற்­காக உள்ளூர் பெண்­ணொ­ரு­வ­ருக்கு பணம் செலுத்தி கருக்­க­லைப்பு செய்ய முயன்­ற­தா­கவும் தெரி­வித்­த­தாக அக்தர் குறிப்­பிட்டார்.

மருத்­துவச் சிக்­கல்­க­ளுக்கு மேல­தி­க­மாக பாலியல் வன்­பு­ணர்­வுக்கு இலக்­காகி கரு­வுற்­றி­ருக்கும் கர்ப்­பிணிப் பெண்கள் எண்­ணி­ல­டங்­காத வேறு பல ஆபத்­துக்­க­ளையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

திரு­ம­ண­மா­காத ஒரு­வ­ராக இருந்து பாலியல் வன்­பு­ணர்­வுக்கும் இலக்­கா­கி­யி­ருந்தால் சமூக அங்­கீ­காரம் என்ற வகையில் அப் பெண்ணின் எதிர்­காலம் சூனி­ய­மா­கி­வி­டு­கின்­றது என ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­காக முகவர் நிலை­யத்தின் பெண் பேச்­சாளர் கரோலின் கிளக் தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக, பல குடும்­பங்கள் திரு­ம­ண­மா­காத பாலியல் வன்­பு­ணர்­வுக்கு இலக்­காகி கரு­வுற்­றி­ருக்கும் பெண்­க­ளுக்கும் சிறு­மி­க­ளுக்கும் அவ­சர அவ­ச­ர­மாகத் திரு­மண ஏற்பாடுகளைச் செய்கின்றனர். இதனால் சிறுவயதுத் திருமணங்கள் முகாம்களில் அதிகரித்துள்ளதாக சேவ் த சில்ரன் அமைப்பும் யுனிசெப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நிலை­யினைத் தவிர்ப்­ப­தற்கு உதவிக் குழுக்கள் முகாம்­களில் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. பாலியல் வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக அவர்கள் இல­கு­வாக முன்­னி­லை­யா­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

குடும்­பங்­களால் ஒதுக்­கப்­பட்­டுள்ள, வன்­மு­றை­க­ளுக்­குள்­ளாகும் சாத்­தி­ய­முள்ள அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­படும் சாத்­தி­ய­முள்ள பாலியல் வன்­பு­ணர்­வுக்கு இலக்­காகி கரு­வுற்­றி­ருக்கும் பெண்கள் பாது­காப்பு இல்­லங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்கள் அங்கு தமது மகப்­பேறு முடி­வ­டையும் வரை தங்­கி­யி­ருக்க முடியும்.

அத்­தோடு அவர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் முற்­றுப்­பெற்­று­ வி­டு­வ தில்லை. `அவர்கள் மிகவும் முக்­கி­ய­மாக உள­வள ஆத­ரவு அவ­சி­ய­மான பெண்­க­ளாவர்' எனத் தெரி­விக்கும் எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பின் உளவியல் நிபுணரான அல்லிசன் பொக் `அவர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்' எனவும் தெரிவித்தார்.
-Vidivelli