Verified Web

சவூதி இள­வ­ர­ச­ருக்கு அல்­கைதா எச்­ச­ரிக்கை

2018-06-04 01:49:30 M.I.Abdul Nazar


பெண்­களை கார் ஓட்ட அனு­ம­தித்தல், திரை­ய­ரங்­கு­களில் திரைப்­படம் பார்க்க அனு­ம­தித்தல் போன்ற பாவ­மான காரி­யங்­களைச் செய்­யா­தீர்கள் என்று சவூதி அரே­பிய இள­வ­ரசர் முகம்­மது பின் சல்­மா­னுக்கு அல்­கைதா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் இள­வ­ரசர் முகம்­மது பின் சல்மான் ஆட்­சிக்குப் பின் பல்­வேறு புதிய சீர்­தி­ருத்­தங்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இவர் சமீ­பத்தில் பெண்கள் கார் ஓட்­டு­வ­தற்கும், ஓட்­டுநர் உரிமம் பெற்­றுக்­கொள்­ளவும் அனு­மதி அளித்தார். அது­மட்­டு­மல்­லாமல், பெண்கள் திரை­ய­ரங்­கு­களில் சென்று சினிமா பார்க்­கவும் அவர் அனு­ம­தித்தார்.

இந்தக் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்திச் செய்­யப்­பட்ட சீர்­தி­ருத்­தங்கள் அல்­கைதா இயக்­கத்­துக்கு ஆத்­தி­ரத்­தையும், கோபத்­தையும் வர­வ­ழைத்­துள்­ளது. முஸ்லிம் நாடுகள் கட்­டுப்­பாட்­டுடன் இருக்க வேண்­டிய நிலையில், பெண்­க­ளுக்கு அதி­க­மான சுதந்­திரம் அளிப்­பதை அல்­கைதா அமைப்பு கண்­டித்­துள்­ளது.

இது தொடர்­பாக யெமனில் உள்ள அல்­கைதா அமைப்பு சவூதி இள­வ­ர­ச­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது, அதில் கூறப்­பட்டு இருப்­ப­தா­வது: ''சவூதி அரே­பிய இள­வ­ரசர் முகம்­மது பின் சல்மான் ஆட்­சியில் ஏரா­ள­மான மாற்­றங்கள் வரு­கின்­றன. பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் சினிமா தியேட்­டர்­க­ளாக மாறு­கின்­றன. பெண்கள் கார் ஓட்ட அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள், இமாம்­க­ளுக்கு மாற்றுப் புத்­த­கங்கள் தரப்­ப­டு­கின்­றன. மேற்­கத்­திய மற்றும் கிழக்கு நாடு­களில் இருந்து ஆத்­தி­க­வா­தி­களும், மதச்­சார்­பின்­மை­யா­ளர்­களும் வந்து கருத்­து­களைப் பரப்­பு­கி­றார்கள். ஒழுக்கக் குறைவு ஏற்­ப­டவும், ஊழல் நடை­பெ­றவும் கத­வுகள் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

புனித மக்கா நக­ருக்கு அருகே அமைந்­தி­ருக்கும் கடற்­கரை நக­ரான ஜித்­தாவில் டபிள்யு டபிள்யு இ எனப்­படும் ராயல் ரம்பிள் மல்­யுத்தப் போட்­டிகள் நடத்த அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் போட்­டியைப் பார்க்க வந்­தி­ருந்த முஸ்லிம் இளம் பெண்கள், ஆண்கள் மத்­தியில் ஆண், பெண் போட்­டி­யா­ளர்கள் தங்கள் உடலைக் காட்­டிக்­கொண்டும், மறைக்க வேண்­டிய உடற்­ப­கு­தி­களை மறைக்­காமல் விளை­யா­டி­னார்கள். இதைப் பார்­வை­யா­ளர்­களும் ரசித்­தார்கள். இரவு நேரங்­களில் இசைக் கச்­சே­ரிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. திரையரங்களும், சர்க்கஸ் காட்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஊழல்வாதி அரசு அதிகாரிகள் எதையுமே தடுக்கவில்லை. இதுபோன்ற மார்க்கத்துக்கு விரோதமான பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள்.'' என அல்கைதா கடுமையாக எச்சரித்துள்ளது.
-Vidivelli