Verified Web

கடும்­போக்கு சக்­தி­களை திருப்­திப்­ப­டுத்­து­வது ஆபத்து

2018-05-31 04:20:36 Administrator

இலங்­கையின் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்த அர­சியல் தலை­வர்கள் கடும்­போக்­கா­ளர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே கிரி­ச­னை­யாக உள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ள எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நாடு தற்­போது பய­ணிக்கும் பாதை தமக்கு திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள அமெ­ரிக்க காங்­கிரஸ் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

''பெரும்­பான்­மை­யான மக்கள் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு நிரந்­த­ர­மாக இருக்­க­வேண்டும் என்று விரும்­பு­கி­றார்கள், ஆனால் புதிய அர­சியல் யாப்பின் தேவை­யையும் அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­க­ளையும் சிங்­கள தலை­வர்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லாமல் இருப்­ப­துதான் இங்கு காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­யாகும். சில சிங்­கள தலை­வர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியா­ய­மாக சமத்­து­வ­மாக நோக்­கு­வ­தனை விடுத்து கடும்­போக்­கா­ளர்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே ஆர்­வ­மாக உள்­ளனர். இந்­நிலை தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்­னோக்கிச் செல்ல நேரிடும்'' என்றும் இரா.சம்­பந்தன் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நாட்டில் காணப்­படும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினைக் கண்டு  நாட்டை முன்­னேற்றிச் செல்­வ­தற்கு ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் சேர்ந்து பய­ணிக்­க­வேண்­டி­யது முக்­கி­யத்­து­வ­மு­டை­ய­தாகும். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இதய சுத்­தி­யுடன் சிங்­கள மக்­க­ளிடம் சென்று புதிய அர­சியல் யாப்­பிற்­கான தேவை­யினை எடுத்­துக்­காட்ட வேண்டும். குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் சில விட­யங்கள் இடம்­பெ­றாமல் போகின்­ற­பட்­சத்தில், நாமும் தமிழ் மக்­களும் எமது நிலைப்­பாடு குறித்து மீளாய்வு செய்ய நிர்ப்­பந்­திக்­கப்­ப­டுவோம் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

சம்­பந்­தனின் இந்தக் கருத்­துக்கள் ஊன்றிக் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என வலி­யு­றுத்தி சிறு­பான்மை மக்­களின் அதிக வாக்குப் பலத்­துடன் ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய அர­சாங்கம், இனப்­பி­ரச்­சினைத் தீர்வின் ஓர் அங்­க­மான அர­சியல் யாப்புத் திருத்­தத்தை இழுத்­த­டிப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

மறு­புறம் யாப்புத் திருத்த விட­யத்தை சிங்­கள கடும்­போக்கு சக்­திகள் நாட்டை இரண்­டாகப் பிரிப்­ப­தற்­கான முயற்சி என சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. குறிப்­பாக கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் இந்தக் கருத்தே சிங்­கள மக்கள் மத்­தியில் விதைக்­கப்­பட்­டது. இதனை நம்­பியே பெரும்­பான்மை சிங்­கள மக்கள் தமது வாக்­கு­களை புதிய அர­சியல் கட்­சி­யொன்­றுக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­று­க­ளுக்­க­மைய இந்த நாட்டில் சிங்­கள மக்கள் மத்­தியில் கடும்­போக்கு கருத்­துக்­களை முன்­வைப்­ப­வர்­க­ளுக்கே ஆத­ர­வுண்டு எனும் அபிப்­பி­ராயம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது. இதனை உணர்ந்­துள்ள தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களும் கூட, தமது அர­சியல் நலன்­க­ளுக்­காக கடும்­போக்கு சக்­தி­களைத் திருப்­திப்­ப­டுத்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இது மிகவும் அபா­ய­க­ம­ரான சமிக்­ஞை­யாகும்.

இந்த நிலை தொட­ரு­மானால் நாடு மீண்டும் அதல பாதா­ளத்­திற்கே செல்லும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தி­ருக்க முடி­யாது. இத­னையே நாட்டின் தற்­போ­தைய பாதை திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்லை என எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரி­க­ளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவேதான் அரசாங்கம் இந்த யதார்த்தத்தை உணர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்படும் கடும்போக்கு இனவாத சிந்தனைகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தெளிவுபடுத்த முன்வர வேண்டும். மாறாக கடும்போக்கு சக்திகளைத் திருப்திப்படுத்த அவர்கள் பின்னாலேயே செல்வது நிச்சயமாக நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli