Verified Web

உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-05-25 02:03:08 T.M.Mufaris Rashadi

நீங்கள் அல்­லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்­பிக்கை கொள்­ளுங்கள். மேலும் அவன் உங்­களை (எந்த சொத்­துக்கு) பின்­தோன்­றல்­க­ளாக ஆக்­கி­யுள்­ளானோ அதி­லி­ருந்து (அல்­லாஹ்­வுக்­காக) செலவு செய்­யுங்கள். ஏனெனில் உங்­களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்­லாஹ்­வுக்­காகச்) செலவும் (தானம்) செய்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு (அவ­னிடம்) மகத்­தான கூலி இருக்­கி­றது. (57:7)

அபூ­மூஸா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: ஒவ்­வொரு முஸ்­லிமின் மீதும் தர்மம் செய்­வது அவ­சி­ய­மா­கி­றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­போது ஒரு மனிதர் அல்­லாஹ்வின் தூதரே எப்­பொ­ரு­ளையும் காண­வில்­லை­யாயின் என்று வினவ அவன் தன் கரங்­களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்­யட்டும் என்­றார்கள். அதற்கும் முடி­ய­வில்­லை­யெனில் என வினவ அதற்கும் முடி­ய­வில்­லை­யெனில் என்று கேட்­ட­போது தீமை செய்­வதை விட்டு தவிர்த்து கொள்­ளட்டும் அதுவே தர்­ம­மாகும் என்­றார்கள். (ஆதாரம் :புகாரி, நஸாயி)

தர்மம் செய்தல் என்­பது நமது பணத்தால் பொரு­ளா­தா­ரத்தால் பிற­ருக்கு வழங்­கு­வது மாத்­தி­ர­மல்ல. அதையும் தாண்டி நமது சமூ­கத்தில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பொரு­ளா­தார, அறிவு, ஆன்­மீக, பண்­பாட்டு வறுமை போன்­ற­வற்றை நீக்க உழைப்­பதும் மிகப்­பெரும் தர்­ம­மாகும், எல்­லோரும் எல்லா நேரங்­க­ளிலும் இறைவன் தமக்கு வழங்­கிய அருட்­கொ­டை­களை அவ­னுக்­காக பயன்­ப­டுத்­த­வது, அதனை பிற­ருக்கு பகிர்ந்­த­ளிப்­பது மிகப்­பெரும் தர்­ம­மாகும்.

கொடை கொடுப்­ப­திலே மிகச் சிறந்த கொடை கற்ற கல்­வியை பிற­ருக்கு கற்றுக் கொடுப்­ப­தாகும், செல்­வத்தைக் கொடை­யாக கொடுப்­பதை விடவும் பிற­ருக்கு கல்­வி­யூட்­டு­வதே மிகச் சிறந்த கொடை­யாகும் என ஷைஹுல் இஸ்லாம் இப்னுல் கையிம் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் கூறி­யுள்­ளார்கள்.

(மதா­ரிஜுஸ் ஸாலிஹீன் - (2/281)

ஏனெனில், செல்­வங்­களில் மிகப் பெரும் செல்வம் கல்விச் செல்­வமே. அதி­லி­ருந்து எமக்கு முடி­யு­மான வழி­மு­றை­க­ளி­னூ­டாக பிற­ருக்கு வழங்க முயற்­சிக்க வேண்டும்.

பிற­ருக்கு கற்­பிக்­கப்­படும் ஒவ்­வொரு அம்­சமும் அவர்­க­ளது அறி­வியல் வறு­மையை போக்­கு­மாயின் அது அறிவுக் கொடையே.

இது போலவே அறி­வியல் வறுமை மட்­டு­மல்ல, ஆன்­மீக வறுமை நீக்­கப்­பட்டு அதற்­கான தர்­ம­மா­கிய வணக்க வழி­பா­டு­களில் இன்­பத்தை ஊட்­டு­கின்ற பிர­தான பணியும் காலத்தின் அவ­சி­யாகும்.

நம்மை வந்­த­டைந்­தி­ருக்­கின்ற ரம­ழா­னு­டைய மாதம் இதற்­கு­ரிய பயிற்­சியைப் பெறு­கின்ற, அதனை பிர­யோ­கிக்­கின்ற சிறந்த பரு­வ­கா­ல­மாகும். இந்தக் காலங்­களில் அறி­வியல் வறுமை நீக்­கப்­பட்டு ஆன்­மீக வறு­மையும் போக்­கப்­பட்டால் மாத்­திரம் எமது பணி முடிந்து விட்­ட­தாகக் கருதிவிட முடி­யாது ஏழை எளிய குடும்­பங்கள், வாய் திறந்து தமது தேவை­களை பிற­ரிடம் கேட்க வெட்­கப்­ப­டு­ப­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளது  கஷ்­டங்­களை ஒழிக்க முயற்­சிப்­பதும் ரமழான் எமக்கு சொல்ல வரும் செய்­தி­களில் மிகப் பிர­தா­ன­மா­ன­தாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள். நபி(ஸல்) அவர்கள் நல்­லதை வாரி வழங்­கு­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். ஜிப்­ரயீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்­வொரு இரவும் ரமழான் முடியும் வரை சந்­திப்­பார்கள். அவ்­வே­ளையில் புயல் காற்றை விட வேக­மா­கவும் அதி­க­மா­கவும் வாரி வழங்­கு­வார்கள். (ஆதாரம்:புகாரி)

நோன்பு நோற்­ப­திலும் குர்­ஆனை ஓது­வ­திலும் இரவு வணக்­கங்­களில் திளைத்து இருப்­ப­திலும் இன்பம் காண்­கின்ற பலர் வறிய மக்­களின் துயர் துடைப்­பதில் இன்பம் காண முயற்­சிப்­ப­தில்லை, அதற்­கி­ருக்­கின்ற கீர்த்­தி­யையும் மகி­மை­மையும் உணர்ந்து கொள்­வ­தில்லை. ஏனைய காலங்­களை விட ரம­ழானில் வரிந்து கட்டிக் கொண்டு புயல்­காற்றை விட பல்­வேறு நன்­மை­களில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொள்ளும் நபி­க­ளாரின் உம்மத் தன்­னு­டைய ரப்பின் உண்­மை­யான அன்பு எதி­லி­ருக்­கி­றது என்­ப­தனை கண்­ட­டை­வதில் அலட்­சியப் போக்­கிலே உள்­ளனர்.

ரம­ழானில் ஐந்­தா­வது விடுத்தம் உம்ரா செய்யச் செல்லும் மனிதர் பக்­கத்து வீட்டில் உண்ண உண­வின்றி வாடிக் கொண்­டி­ருக்கும் குடும்­பத்­திற்கு ஒரு வேளை உணவு கொடுக்க மனதில் அவ­ருக்கு இட­மில்­லை­யென்றால் அவ­ரது ஈமானில் பலத்த கோளாறு உள்­ளது என்­ப­தா­கவே நாம் புரிந்துகொள்ள முடி­கி­றது, சூரா மாஊன் இதன் உண்­மைத்­தன்­மையை மார்க்­கத்தை பொய்ப்­பிப்­பவன் எவனோ அவனே அநா­தை­க­ளுக்கும் ஏழை எளி­ய­வ­ருக்கும் உண­வ­ழிக்கத் தூண்­டு­வ­தில்லை என்ற தோர­ணையில் தெளி­வா­கவே எமக்கு எடுத்­து­ரைக்­கி­றது..

தர்மம் செய்ய முடி­யாது என்று எவரும் சொல்ல முடி­யாத அள­வுக்கு இஸ்லாம் அதனை மிக இல­கு­வா­கவே ஆக்கி வைத்­தி­ருக்­கி­றது.

"உன் சகோ­த­ரனின் முகத்தைப் பார்த்து புன்­னகை புரி­வது உனக்கு நல்­ல­ற­மாகும். நீ நன்­மையை ஏவு­வதும் தீமையைத் தடுப்­பதும் நல்­ல­ற­மாகும். பாதை தவ­றிய மனி­த­ருக்குப் பாதையைக் காட்­டு­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும். பார்­வை­யி­ழந்­த­வ­ருக்குப் பார்­வை­யாக நீ ஆவதும் உனக்கு நல்­ல­ற­மாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்­ற­வற்றை நீ அகற்­று­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும். உனது வாளியில் உள்ள தண்­ணீரை உனது சகோ­த­ரரின் வாளியில் ஊற்­று­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (திர்­மிதீ, இப்னு ஹிப்பான்)

ஜாபிர் பின் அப்­தில்லாஹ் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள் அறி­விக்­கி­றார்கள் : நான் அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளுடன் பெருநாள் தொழு­கையில் கலந்து கொண்­டுள்ளேன். அப்­போது அவர்கள் உரை நிகழ்த்­து­வ­தற்கு முன்பே தொழுகை நடத்­தி­னார்கள். பாங்கோ இகா­மத்தோ இல்லை. பிறகு பிலால் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்­கள்­மீது சாய்ந்­து­கொண்டு, இறை­யச்­சத்தைக் கடைப் பிடிக்­கு­மாறும் இறை­வ­னுக்குக் கீழ்ப்­ப­டிந்து நடக்­கு­மாறும் வலி­யு­றுத்தி மக்­க­ளுக்கு அறி­வு­ரையும் நினை­வூட்­டலும் வழங்­கி­னார்கள். பிறகு அங்­கி­ருந்து புறப்­பட்டு, பெண்கள் பகு­திக்குச் சென்று அவர்­க­ளுக்கு (மர்க்க நெறி­மு­றை­க­ளையும் மறுமை நாளையும்) நினை­வூட்டி அறி­வுரை பகர்ந்­தார்கள். மேலும், பெண்­களை நோக்கி, 'தர்மம் செய்­யுங்கள். உங்­களில் அதிகம் பேர் நர­கத்தின் விறகு ஆவீர்கள்" என்று கூறி­னார்கள்.

அப்­போது பெண்கள் நடு­வி­லி­ருந்து கன்­னங்கள் கறுத்த ஒரு பெண்­மணி எழுந்து 'அது ஏன், அல்­லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீங்கள் அதி­க­மாகக் குறை கூறு­கின்­றீர்கள் (நன்றி மறந்து) கண­வனை நிரா­க­ரிக்­கி­றீர்கள்" என்று கூறி­னார்கள். அப்­போது அப்­பெண்கள் தம் காத­ணிகள், மோதி­ரங்கள் உள்­ளிட்ட அணி­க­லன்­களை (கழற்றி) பிலால் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்­களின் ஆடையில் போட்­டனர். (நூல் : முஸ்லிம் 1607.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்­க­ளிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் உடனே எங்­களில் ஒருவர் கடைத்­தெ­ரு­வுக்குச் சென்று கூலி வேலை செய்து இரு­கை­ய­ளவு தானியம் சம்­பா­தித்து அதை தர்­ம­மாக வழங்கி விடுவார். ஆனால் இன்றோ எங்­களில் சில­ரிடம் ஒரு தீனார் திர்ஹம் வரை உள்­ளன என்­றார்கள். (ஆதாரம்: புகாரி) இந்­நி­கழ்­வுகள் யாவுமே ஈமா­னிய இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வெளிப்­படும் தர்ம உணர்வை தெளி­வாக படம்­பி­டித்துக் காட்­டு­கி­றது. ஸஹா­பாக்கள், ஸஹா­பிய பெண்­க­ளிடம் காணப்­பட்ட தர்ம உணர்­வினை நம்­மி­டமும் ஏற்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிக்­க­வேண்டும்.

ரமழான் காலங்­களில் தாய்­மார்கள் மிக இல­கு­வாக செய்ய முடி­யு­மான, கணவன், மனைவி இரு­வ­ரது நன்­மையின் தட்­டுக்­க­ளையும் கனக்கச் செய்­யக்­கூ­டிய மன­ிதர்­களால் அலட்­சி­ய­மாக கரு­தப்­ப­டு­கின்ற ஓர் அம­லையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்; ஒரு பெண் தனது விட்­டி­லுள்ள உணவை வீணாக்­காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்­மையை பெறுவாள். அதை சம்­பா­தித்த கார­ணத்தால் தர்­மத்தின் நன்மை அவ­ளது கண­வ­னுக்கும் கிடைக்கும். அது­போ­லவே கரு­வூலக் காப்­பா­ள­ருக்கும் கிடைக்கும். (ஆதாரம்: புகாரி)

தர்மம் செய்­வ­தனால் எமக்குக் கிடைக்கும் மகத்­தான கூலி­க­ளையே பின்­வரும் நபி­மொ­ழியும் அல்­குர்ஆன் வசனும் தெளிவு படுத்­து­கி­றது. அபூ­ஹு­ரைரா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்­லாத மஹ்ஷர் மைதா­னத்தில் தன்­னு­டைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கையால் தர்மம் செய்ததை அவரது இடதுகை அறிந்து கொள்ளாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

யார் தங்கள் பொருள்களால் (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)

இந்த புனிதமிகு மாதத்தில் நாமும் தான தர்மங்கள் செய்து அடுத்தவரையும் செய்யத்தூண்டி அதனை இம்மைக்குரிய பாதுகாப்பாகவும் மறுமையின் வெற்றிக்கு வழியாகவும் ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
-Vidivelli