Verified Web

நடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்

2018-05-24 02:06:06 Administrator


முஹிடீன் இஸ்­லாஹி

கஹட்­டோ­விட்ட

தனி­ம­னித நடத்­தைகள் சீர் செய்­யப்­ப­டு­மாக இருந்தால், நல்ல குடும்­பத்தை உரு­வாக்­கலாம். நல்ல குடும்­பங்கள் சேரும்போதே சமூகம் உரு­வா­கின்­றது. சிறந்த தனி­ம­னி­தர்­க­ளினால் உரு­வாக்­கப்­படும் குடும்­பமே சீரிய சமு­தா­ய­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நபி (ஸல்) அவர்­க­ளு­டைய சீரிய சமூக உரு­வாக்க வர­லாறு இவ்­வா­றுதான் காணப்­பட்­டுள்­ளது. சிறந்த உள்­ளத்தைக் கொண்ட தனி­ம­னி­தர்­களை அவர்கள் மக்­கா­வு­டைய காலத்தில் இலக்கு வைத்­தார்கள். அந்த மனி­தர்­களின் நடத்­தை­களில் ஆழ­மான உள்­ளங்­களின் உண்மை நிலை வெளிப்­பட்­டது.

நபி­ய­வர்கள் அவர்­க­ளது மனங்­களில் விதைத்த மறுமை நம்­பிக்கை, அவர்­க­ளது மனப்­பாங்­கு­களில் தாக்கம் செலுத்­தி­யது. அவர்கள் சுவர்க்­கத்­தி­லி­ருந்து இவ்­வு­லகைப் பார்க்கும் பக்­குவம் பெற்­றார்கள். இந்த மனப்­பாங்கே அவர்­க­ளு­டைய இவ்­வு­லக நடத்­தைகள் அத்­த­னை­யையும் தியா­கங்­க­ளாக மாற்­றி­யது. அவர்­க­ளது அடி மனங்­களில் பதிந்த சுவர்க்கம் பற்­றிய ஆழ­மான நம்­பிக்­கை­கள்தான், அவர்­க­ளது நடத்­தை­களை தீர்­மா­னிக்கும் மனப்­பாங்­காக மாறி­யது.

இன்று நவீன உள­வி­யலில் மனப்­பாங்கு நடத்­தையைத் தீர்­மா­னிக்கும் அடிப்­படை மூலம் எனப் பேசப்­ப­டு­கின்­றது. ஒரு பொருள் அல்­லது ஒரு நிகழ்வைப் பற்­றிய ஒரு­வரின் பார்­வையே மனப்­பாங்கு என நபி­ய­வர்­களின் சுன்­னாவை பார்க்கும் போது விளங்க முடி­கின்­றது. இந்த உலகம் பற்­றிய மனப்­பாங்கு ஸஹா­பாக்­க­ளி­டத்தில் காணப்­பட்ட விதத்தை வைத்­துத்தான் அவர்­க­ளது நடத்­தைகள் எவ்­வாறு அமைந்­தி­ருந்­தன என்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அவர்­க­ளது உள்­ளத்தில் விதித்த ஆழ­மான நம்­பிக்­கை­கள்தான் அவர்­க­ளது மனப்­பாங்கை தீர்­மா­னி­த்தது எனலாம். இந்த மனப்­பாங்கை ஒன்றைப் பற்­றிய “புரிதல்” எனவும் குறிப்­பிட்டால் அது பிழை­யா­காது.

இன்­றைய முஸ்­லிம்கள் சில விட­யங்­களைப் பற்றி புரிந்து வைத்­துள்­ளனர். அதா­வது, இபா­தத்தை எடுத்துக் கொண்டால், தொழுகை கட­மை­யா­னது. அதனை விடக் கூடாது என நன்­றாக புரிந்து வைத்­துள்­ளனர். இதற்கு மாற்­ற­மாக யாரா­வது கருத்துத் தெரி­வித்­தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயா­ரில்லை.

இதற்கு பிர­தா­ன­மான காரணம், இன்­றைய முஸ்­லிம்­களின் அடி மனத்தில் அவர்­க­ளுக்கு இந்த தொழுகை பற்றி கொடுக்­கப்­பட்ட விளக்கமாகும். அத்­துடன், சூழ­லி­லி­ருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட அது தொடர்­பான காட்­சி­யு­மாகும். இவையே அவர்­க­ளது நடத்­தையில் தொழு­கையை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான மனப்­பாங்­காக அமைந்­துள்­ளது.

இத­னையே நாம் ஒரு­வரை தொழ வைப்­பதை விடவும், தொழு­வ­தற்கு நினைக்கச் செய்ய வேண்டும் என வேறு ஒரு வார்த்­தையில் பிர­யோ­கிக்­கின்றோம். தொழுகை தொடர்­பி­லான நம்­பிக்கை சரி­யாக உள்­ளத்தில் பதி­யப்­ப­டாமல் அது தொடர்பில் நேர் மனப்­பாங்கு அவ­னி­டத்தில் இருக்­காது. இப்­ப­டி­யான ஒரு­வரை தொழ வைத்தால் அது அந்த சந்­தர்ப்­பத்தில் நிகழும் ஒரு காரி­ய­மா­கவே இருக்கும். 

இன்­றைய நவீன உள­வி­ய­லா­னது, மனித நடத்­தையில் மனப்­பாங்கின் செல்­வாக்கு குறித்த விகி­தா­சா­ரத்தை முன்­வைக்­கின்­றது. ஒரு மனி­த­னு­டைய செயற்­பாட்டை 100 வீதம் பார்க்க முடி­யாது என அது கூறு­கின்­றது.

மாறாக, 10 வீதத்­தையே ஏனையோர் கண்­களால் பார்க்க முடி­கின்­றது. அந்த நடத்­தையின் 90 வீத­மா­னவை மறைந்தே காணப்­ப­டு­வ­தாக இன்­றைய நவீன உள­வியல் கோட்­பா­டுகள் விளக்­கு­கின்­றன. இந்த நடத்தை விகி­தா­சா­ரத்தை “ஐஸ்பேர்க்” எனும் மனித நடத்தை பற்­றிய உள­வியல் கோட்­பாடு விளக்கிக் காட்­டு­கின்­றது.

மேற்­படி கோட்­பாடு, மனி­த­னு­டைய ஒரு நடத்தை அல்­லது செயற்­பாடு என்­ப­வற்றின் முழு­மை­யான ஆதிக்கம் உள்­ளத்­திடம் தான் இருக்­கின்­றது என்­பதை எடுத்துக் காட்­டு­கின்­றது. 

ஒரு மனி­தனின் நடத்­தையில் உள்ளம் எவ்­வ­ளவு தூரம் ஆதிக்கம் செய்­கின்­றது என்­ப­தனை இன்­றைய நவீன உள­வியல் இவ்­வாறு விளக்க முயற்­சிக்­கின்­றது.

இதே­வேளை, சுமார் 14 நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் இஸ்லாம் இந்த உண்­மையை முரண்­பா­டுகள் ஏதும் இல்­லாத வகையில் தெளி­வாக முன்­வைத்­துள்­ளதை ஆய்வு செய்யும் எவ­ராலும் கண்­டு­கொள்­ளலாம்.

“செயல்கள் அனைத்தும் எண்­ணங்­களைப் பொறுத்தே அமை­கின்­றன” என்ற ஸஹீஹ் புகா­ரியின் முத­லா­வது நபி­மொழி இந்த உண்­மையை எடுத்துக் காட்­டு­கின்­றது. இந்த நபி­மொழி இன்­றைய நவீன உள­வி­ய­லுக்கு அடிப்­ப­டை­யான மூலோ­பா­ய­மாக அமைந்­துள்­ளது என்­பதை விளங்க முடி­கின்­றது.

மனிதன், அல்­லாஹ்வின் ஒர் அற்­பு­த­மான படைப்­பாக காணப்­ப­டு­கின்றான். அவ­னது உடலில் பொதிந்­துள்ள ஒவ்­வொன்­றையும் இந்த நவீன விஞ்­ஞானம் வியப்­போடு நோக்­கு­கின்­றது.

மனி­த­னது உட­லி­லுள்ள ஐம்­பு­லன்­களும் அவ­னது நடத்­தையில் செல்­வாக்குச் செலுத்­து­ப­வை­யாக உள்­ளன என்­பது சகல துறை அறி­ஞர்­க­ளாலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட ஓர் உண்­மை­யாகும். உதா­ர­ண­மாக, ஒரு காட்­சியை ஒருவன் காணும்போது அதன் தன்­மைக்­கேற்ப அவ­னது நடத்தை வெளிப்­ப­டு­வதை கூறலாம்.

இஸ்­லாத்தின் போத­னை­களை அவ­தா­னிக்கும் போது புலன்­களின் பயன்­பாட்­டினால் மனித நடத்தை எவ்­வாறு அமைந்­துள்­ளது என்­பதை இஸ்­லா­மிய அறி­ஞர்கள் இவ்­வாறு விளக்­கு­கின்­றனர்.

ஒரு மனிதன், ஒரு காட்­சியைக் காண்­கின்ற போதோ அல்­லது ஒரு விட­யத்தைக் கேட்கும் போதோ அல்­லது ஏதா­வது ஒன்றை சுவைக்கும் போதோ அல்­லது ஒரு மணத்தை நுகரும் போதோ அல்­லது மெய்­யினால் உணரும் போதோ வரு­கின்ற தாக்­கத்தை முதலில் மூளைக்கு கொடுக்­கின்றான். இவ்­வாறு ஒவ்­வொரு உறுப்பின் தன்­மைக்கு ஏற்ப அதன் செய்தி மூளைக்கு சென்­ற­டை­கின்­றது.

பின்னர், மூளை உடனே செயற்­ப­டு­வ­தில்லை. மாறாக, மூளை உள்­ளத்­திடம் ஒரு வேண்­டு­கோளை விடுக்­கின்­றது. உள்­ளத்தின் பதிலைப் பொறுத்தே மூளை உடம்­புக்கு நடத்­தையை வெளிப்­ப­டுத்­து­மாறு கட்­ட­ளை­யி­டு­கின்­றது. இது இரு­முனைச் செயற்­பா­டாக இடம்­பெ­று­கின்­றது.

உள்­ள­மா­னது நல்­லது, கெட்­டது தொடர்பில் தெளி­வான விளக்­கத்தை பெற்­றி­ருந்தால் மாத்­தி­ரமே மூளையின் வேண்­டு­கோ­ளுக்கு சரி­யாகப் பதி­ல­ளிக்கும். இந்த நிலையில் அவ­தா­னிக்கும் போது, ஒரு­வனு­டைய உள்ளம் நல்­லுள்­ள­மாக இருந்தால், மூளையின் மோச­மான வேண்­டு­தல்­க­ளுக்கு அது மறுப்புத் தெரி­விக்கும்.

மாறாக, மோச­மான உள்­ள­மாக இருந்தால்,மூளையின் தீய வேண்­டு­கோள்­க­ளுக்கும் இசைந்து கொடுக்கும் என இஸ்­லா­மிய அறி­ஞர்கள் புலன்­க­ளுக்கும், மூளைக்கும், உள்­ளத்­துக்கும், மனித நடத்­தைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்­கு­கின்­றார்கள்.

இதற்­கான ஆதா­ரங்­க­ளாக நபி­ய­வர்­களின் பல்­வேறு ஸஹீ­ஹான ஹதீஸ்கள் காணப்­ப­டு­கின்­றன.

“அறிந்து கொள்­ளுங்கள்! உட­லிலே ஒரு சதைப்­பிண்டம் இருக்­கின்­றது. அது சீர­டையும் போது உடல் முழு­வ­துமே சீரா­கி­விடும். அது சீர்கெட்டு விடும் போது உடல் முழு­வ­துமே சீர்­கெட்­டு­விடும். அறிந்து கொள்­ளுங்கள்! அதுதான் உள்­ள­மாகும்” என நபி­ய­வர்கள் கூறி­னார்கள்

 

  (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்) 

இந்தக் கருத்தின் அடி­யா­கவே, உள்ளம் மனி­தனின் இயக்கு சக்தி என்­கின்றோம். புலன்­க­ளினால் போய், மூளையை அடையும் செய்தி எவ்­வா­றா­ன­தாக இருந்­தாலும் சரியே அதனை நடத்­தை­யாக வெளிக் கொண்­டு­வரும் அதி­கா­ரமும் சக்­தியும் உள்­ளத்­தி­டமே உள்­ளது. நல்­லுள்ளம், மோச­மான உள்ளம் என்­பதை வைத்தே மூளையின் வேண்­டு­த­லுக்கு உள்ளம் கட்­ட­ளை­யிடப் போகின்­றது.

நல்ல நடத்­தை­களை கொண்டுவர விரும்பும் மார்க்­க­மான இஸ்லாம் இத­னா­லேயே உள்­ளத்­துக்கு தக்­வாவைக் கொண்டு நிரப்ப வேண்டும் எனக் கட்­ட­ளை­யி­டு­கின்­றது. தக்வா நிறைந்த உள்­ளத்­தி­லி­ருந்தே நல்ல நடத்­தைகள் வெளிப்­படும் என இஸ்­லாத்தின் போத­னைகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.   

உள்ளம் இரு­ள­டைந்து போவ­தா­கவும் இஸ்லாம் குறிப்­பி­டு­கின்­றது. பாவ­மான செயல்­களை ஒரு­ம­னிதன் தொடர்ந்தும் புரி­கின்ற போது மனித உள்ளம் இரு­ள­டைந்து விடு­கின்­றது.

மனித உள்­ளத்தை ஒரு வெள்ளைத் துணிக்கு ஒப்­பிட்டு, ஒரு மனிதன் ஒரு தவறைச் செய்யும் போது அவ­னது உள்­ளத்தில் ஒரு கறுப்புப் புள்ளி விழு­கின்­றது. அவன் தொடர்ந்து தவறு செய்யும்போது பல கறுப்புப் புள்­ளி­க­ளாக மாறி இரு­ள­டைந்து விடு­கின்­றது. இரு­ளான ஒரு சூழலில் சரி­யான பாதையை தெரிந்து பய­ணிக்க முடி­யாத ஒரு பய­ணியைப் போன்று இரு­ள­டைந்த உள்­ளத்­தினால் சரி­யான பாதையைக் கண்டு பய­ணிக்க முடி­யாது என இஸ்லாம் குறிப்­பி­டு­கின்­றது.

உள்ளம் வெள்­ளை­யாக இருக்கும் போதே மனித நடத்­தை­களும் சீர்­பெ­று­கின்­றது என்­பதே இஸ்லாம் முன்­வைக்கும் போத­னை­யாகும்.

நபி­ய­வர்கள் நல்ல சமு­தாய உரு­வாக்­கத்­துக்கு முதலில் தனி­ம­னி­தர்­க­ளி­டத்தில் உள்­ளத்தின் ஆழத்தில் நல்ல நம்­பிக்கைக் கோட்­பா­டு­களை விதைத்­தார்கள். மறுமை வாழ்வு, சுவர்க்கம், நரகம் அல்லாஹ் பற்­றிய ஆழ­மான அறிவு, இஸ்­லாத்தின் அடிப்­ப­டைகள் மற்றும் இபா­தத்­துக்கள் என்­பன பற்­றிய விளக்கம்…. போன்ற சகல விட­யங்­க­ளையும் அடி­ம­னதில் ஆழ­மாகப் பதித்­தார்கள்.

இந்த உளப் பதி­வுகள் தான், ஸஹா­பாக்­களின் உலக நடத்­தைகள் பற்­றிய மனப்­பாங்கைத் தீர்­மா­னித்­தது. அவர்­களை மனிதப் புனி­தர்­க­ளாக   அல்­லாஹ்வும், உல­கமும் இன்று வரை போற்­று­கின்­றது.

இன்றும், முஸ்­லிம்­க­ளி­டத்தில் ஆழ­மான இஸ்­லா­மிய அறிவு அவ­சியம் வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. உள்ளத்தில் சரியான விளக்கங்கள் பதியப்படல் வேண்டும். அதனடியாக நல்ல மனப்பாங்குகள் (புரிதல்கள்) உருவாக்கப்பட வேண்டும். இதனடியாக நடத்தைகளை வெளிப்படுத்தும் முஸ்லிம் தனிநபர்களினால் தான் இந்த இஸ்லாமிய சமூகம் சீர்பெறப் போகின்றது.

நபியவர்கள் இஸ்லாத்தின் சத்தியங்களை சரியாக உள்ளத்தில் பதித்ததனால்தான் ஸஹாபாக்களினால் தியாகங்களை வெளிப்படுத்த முடியுமாக இருந்தது.

சரியான இஸ்லாமிய விளக்கத்துடன் உள்ள உள்ளத்துக்கு தக்வா எனும் இறை உணர்வு வழங்கப்படும் போதே சூழல் தாக்கத்திலிருந்து புலன்களூடாக மூளைக்கு செலுத்தும் தகவல்களிலிருந்து சரியானதையும் பிழையானதையும் கண்டறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே, தக்வாவை பிரதான நோக்கமாக கொண்ட ரமழானின் பயனாக எமது நடத்தைகளை சீர்செய்து கொள்வோம். சிறந்த விளக்கத்துடன் உள்ள எமது உள்ளங்களுக்கு தக்வா எனும் உணர்வை வழங்கி சிறந்த தனிமனிதர்களாக உருவாகுவோம்.!
-Vidivelli