Verified Web

ரமழானின் உணரப்படாத சுவைகள்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-05-18 05:04:43 T.M.Mufaris Rashadi


ஒவ்­வொரு வரு­டமும் அருள்மிகு ரமழான் மாதம் அனைத்து அருள்­க­ளையும் சுமந்தே வண்­ணமே எம்மை நோக்கி வரு­கி­றது. 

   அது  நோன்பின் மாத­மாகும்,
   அது அல்­குர்­ஆனின் மாத­மாகும்,
   அது பொறு­மையின் மாத­மாகும்,
   அது ஆன்­மாக்­களின் அழுக்­க­கற்றும் மாத­மாகும், அது ஏழை­க­ளுக்கு வாரி வழங்கும் மாத­மாகும்,அது இரவு வணக்­கத்தின் மாத­மாகும், அது ஆயிரம் மாதங்­களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாத­மாகும்.

ரம­ழா­னுக்­கென்று பல சுவைகள் உள்­ளன. அந்த ரம­ழானின் உண்­மை­யான சுவை­களை சுவைக்­கா­த­வர்­களால் அதன் முழுப்­ப­ல­னையும் அடைந்துகொள்ள முடி­வ­தில்லை. சுவ­னத்தின் வாயில்கள் திறந்து வைக்­கப்­பட்டும் அதற்குள் நுழைந்துகொள்ள முடி­யாத துர்ப்­பாக்­கியவான்­களே அதன் உண்­மை­யான சுவை­களை உணர்ந்து கொள்ள முயற்­சிப்­ப­தில்லை.

அதன் சுவை­களை உணர்ந்துகொள்ள வேண்­டி­யதன் நியா­யங்­களை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

1-. அல்­குர்ஆன் அரு­ளப்­பட்ட மாதம்:
'ரமழான் மாதம் எத்­த­கை­யது என்றால் மனி­தர்­க­ளுக்கு நேர்­வழி காட்­டக்­கூ­டிய, சத்­தி­யத்­தையும் அசத்­தி­யத்­தையும் பிரித்துக் காட்­டக்­கூ­டிய அல் குர்ஆன் அருளப் பெற்ற மாத­மாகும். உங்­களில் எவர் அம்­மா­தத்தை அடை­வாரோ அவர் அம்­மா­தத்தில் நோன்பு நோற்­கட்டும்' (அல்­ப­கரா 2: 185).

2.  அல்­குர்­ஆனை கற்றுக் கொள்ளும் மாதம்
ரம­ழானின் ஒவ்­வொரு இர­விலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்­களை சந்­தித்து அல்­குர்­ஆனை ஓதிக்­காட்­டு­வார்கள்' (புஹாரி).

3-  சுவன வாயில்கள் திறந்து வைக்­கப்­படும் மாதம்.
ரமழான் மாதம் வந்­து­விட்டால் சுவர்க்­கத்­தின வாயில்கள் திறக்­கப்­பட்டு நர­கத்தின் வாயில்கள் மூடப்­படும். ஷைத்­தான்கள் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர்' என நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (புஹாரி, முஸ்லிம்) 

4-. நரக விடு­த­லையை பரி­சாகத் தரும் மாதம். 
ரம­ழா­னு­டைய ஒவ்­வொரு இர­விலும் பக­லிலும் நர­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். இன்னும் ஒவ்­வொரு முஸ்­லி­முக்கும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க ஒரு பிரார்த்­தனை இருக்­கி­றது' என நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (அஹ்மத்).

5-. பாவக்­க­றை­களைப் போக்கும் மாதம். 
ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்­ஆ­வி­லி­ருந்து மற்­றொரு ஜும்ஆ, ஒரு ரம­ழா­னி­லி­ருந்து மற்­றொரு ரமழான் அவை­க­ளுக்கு மத்­தியில் நிகழ்ந்த பாவங்­க­ளுக்கு பரி­கா­ர­மாகும். பெரும் பாவங்­களைத் தவிர' என நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். 
'தன் குடும்­பத்தார், தன் செல்வம், தன் குழந்­தைகள், தன்னில், தன் அண்டை வீட்டார் ஆகியோர் விஷ­யத்தில் ஒரு மனிதன் செய்யும் தவ­று­க­ளுக்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்­மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகி­யவை பரி­கா­ர­மாக அமை­கின்­றன' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (அறி­விப்­பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).

6-. நன்­மை­களை களஞ்­சி­யப்­ப­டுத்தும் மாதம். 
ரம­ழானின் முதல் இரவு வந்து விடு­மானால் ஷைத்­தான்­களும், அட்­டூ­ழியம் புரியும் ஜின்­களும் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர். நர­கத்தின் அனைத்து வாயில்­களும் மூடப்­படும். அதில் ஏதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது. சுவர்க்­கத்தின் அனைத்து வாயில்­களும் திறக்­கப்­படும் அதில் ஏதும் மூடப்­ப­ட­மாட்­டாது. ஓர் அழைப்­பாளர் நன்­மையை விரும்­பு­ப­வர்­களே அதிகம் நன்மை செய்­யுங்கள், பாவங்­களை விரும்­பு­ப­வர்­களே பாவங்­களை நிறுத்­திக்­கொள்­ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்­வொரு இரவும் நர­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் (அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி), ஆதாரம்: திர்­மிதி, இப்­னு­மாஜா).

7-. ஆயிரம் மாதங்­களை விட சிறந்த மாதம். 
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்­கி­றது, அது ஆயிரம் மாதங்­களை விடச் சிறந்­த­தாகும். (சூரா அல்கத்ர்)

மேற் சொல்­லப்­பட்ட இந்த ஏழு நியா­யங்­க­ளையும் அதன் சிறப்­புக்­க­ளையும் புரிந்­த­வர்கள் அதன் சுவையை பல்­வேறு கோணங்­களில் சுவைக்க முடியும். 

சுவை­களின் மொழி­பெ­யர்ப்­புக்கள் வரு­மாறு.. 

1-. ஆன்­மாக்­களின் அழுக்கை துடைத்­தெ­றிந்து அல்­லாஹ்வின் விருப்­பங்­களை களஞ்­சி­யப்­ப­டுத்தும் களஞ்­சிய அறை­க­ளாக ஆன்­மாக்கள் மாற்­றப்­ப­டுதல். 
இறை­வி­சு­வா­சி­களே! உங்­க­ளுக்கு முன்­னி­ருந்­த­வர்கள் மீது எப்­படி நோன்பு விதி­யாக்­கப்­பட்­டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதி­யாக்­கப்­பட்­டுள்­ளது நீங்கள் அதன் மூலம் தக்வா உடை­ய­வர்­க­ளாக ஆகலாம்' (அல்­ப­கரா 2:183).

2-. அல்­லாஹ்வின் பாவ­மன்­னிப்பில் ஆர்வம் கொண்டு அவ­னது அருளை ஆசிக்கும் தூய உள்­ளங்­களைப் பெறல். 

எவர் இறை­நம்­பிக்­கை­யு­டனும் மறு­மையின் நற்­கூ­லியைப் பெறு­கின்ற எண்­ணத்­து­டனும் ரமழான் மாதத்தின் நோன்­பு­களை நோற்­பா­ராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்­னிக்­கப்­படும். எவர் ரம­ழானின் இர­வுக்­கா­லங்­களில் இறை­நம்­பிக்­கை­யு­டனும் மறு­மையின் நற்­கூ­லியைப் பெற்­றுக்­கொள்ளும் எண்­ணத்­து­டனும் நின்று வணங்­கு­வா­ராயின் அவர் முன் செய்த பாவங்கள் மன்­னிக்­கப்­படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்). 

3.- அல்­லாஹ்வின் அன்­பெனும் உல­கத்து சுவ­னத்தில் உல்லா­ச­மாக உலா­வரும் இத­யங்­களைப் பெற்­றுக்­கொள்­ளுதல். 
ஆத­மு­டைய மகனின் ஒவ்­வொரு அம­லுக்கும் (செய­லுக்கும்) பத்­தி­லி­ருந்து எழு­நூறு மடங்கு வரை கூலி பெருக்கிக் கொடுக்­கப்­ப­டு­கி­றது, நோன்பைத் தவிர. நிச்­ச­ய­மாக அது எனக்­கு­ரி­ய­தாகும், நானே அதற்கு கூலி வழங்­குவேன்' என அல்லாஹ் கூறு­வ­தாக நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். ( புஹாரி, முஸ்லிம்) 

4-. ரய்யான் எனும் பிரத்­தி­யேக சுவ­னத்து வாயிலை தன்­வ­சப்­ப­டுத்திக் கொள்ளும் புனி­த­னாக மாறி­வி­டுதல்.
நிச்­ச­ய­மாக சுவர்க்­கத்தில் ஒரு வாயில் இருக்­கி­றது, அதற்கு ரய்யான் என்று சொல்­லப்­படும். அவ்­வாயில் வழி­யாக நோன்­பா­ளிகள் மாத்­திரம் நுழை­வார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்­வ­ழியே நுழைய மாட்­டார்கள், அவர்கள் நுழைந்­த­வுடன் அவ்­வாயில் மூடப்­பட்டு விடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-. அல்­லாஹ்வின் விருப்­பங்­களை வாழ­வைக்கும் இத­யங்­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­னாக ஆகி­வி­டுதல். 
'மனி­தனின் அனைத்து செயல்­களும் அவ­னுக்­கு­ரி­யதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்­கு­ரி­ய­தாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறு­கிறான்.' (அறி­விப்­பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

6-. அல்­லாஹ்வின் அன்­பைப்­பெற்ற இத­யங்­களைச் சுமந்­துள்ள உடல்­களில் ஏற்­படும் மாற்­றங்­களும் சுகந்­தங்­க­ளாக மாறி­வி­டுதல். 
'எனது உயிர் எவன் கை வசம் இருக்­கி­றதோ அவன் மீது சத்­தி­ய­மாக நோன்­பா­ளியின் வாயி­லி­ருந்து வரக்­கூ­டிய வாடை அல்­லாஹ்­வி­டத்தில் கஸ்­தூ­ரியை விட சிறந்­த­தாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (புஹாரி, முஸ்லிம்).

7-. உட­லுக்­கான மகிழ்ச்­சி­யையும் ஆன்­மா­வுக்­கான மகிழ்ச்சியையும் பெறுவதில்  ஏற்படும் திருப்தியைப் பெற்றுக்கொள்ளுதல். 
'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு துறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்).
ரமழானின் சுவைகளை சுவைத்து சுவனத்து சுகந்தங்களிலே உச்சகட்ட சுவையுடைய அல்லாஹ்வை சந்தித்தல், அவனது திருமுகத்தைப் பார்த்து இன்பமுறுதல் போன்ற உயர்ந்த இன்பங்களை அடைந்து கொள்வதனை இலக்காகக் கொண்டு ரமழானை முழுமையாக சுவைக்க முயற்சிப்போம்.
-Vidivelli