Verified Web

மன்னாரில் மீலாத் விழா

2018-05-17 04:20:52 ARA.Fareel


இவ்­வ­ருடம் தேசிய மீலாத் தின விழா­வினை மன்னார் மாவட்­டத்தில் நடாத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­நி­கழ்வு மன்னார் முஸ்லிம் தேசிய பாட­சா­லையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

யுத்­தத்தின் கார­ண­மாக நீண்­ட­காலம் அகதி முகாம்­களில் தங்­கி­யி­ருந்து மீண்டும் தமது கிரா­மங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் அடிப்­படைத் தேவை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கவே தேசிய மீலாத் விழா­விற்கு மன்னார் மாவட்டம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அரச செலவில் இம்­மா­வட்­டத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பல அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன. இப்­ப­குதி மக்­களின் பொதுத்­தேர்­தலைப் பூர்த்தி செய்­வ­தற்கு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், மத்­திய அரசு, வட­மா­காண சபை மற்றும் தொடர்­பு­டைய ஏனைய நிறு­வ­னங்­களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-Vidivelli