Verified Web

காணி மீட்புப் போராட்டம்

2018-05-17 04:14:45 Administrator


ரீ.கே.றஹ்­மத்­துல்லா

அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட அஷ்ரப் நகர் மக்­களின் காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி நேற்­றை­ய­தினம் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கம்­ முன்­பாக ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­ட­துடன் தமது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரொன்­றையும் பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளித்து வைத்­தனர்.

காணி உரி­மைகள் அபி­வி­ருத்தி கூட்­டு­றவு சங்கம் ஏற்­பாடு செய்த இவ்­வார்ப்­பா­ட்டத்தில் காணி­களை இழந்த குடும்­பத்­த­வர்கள் பலர் பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு கோஷ­மிட்டு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

1956 ஆம் ஆண்டு குடி­யே­றிய 69 குடும்­பங்கள் காடு­வெட்டி அதற்­கான சுமார் 600 ஏக்­க­ருக்­கான காணிப்­பத்­தி­ரங்­க­ளையும் பெற்­றி­ருந்­தனர். இதன் பின்னர் கடந்த கால இராணுவ யுத்த நட­வ­டிக்­கை­யினால் இங்­கி­ருந்த மக்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு அவ்­வி­டத்தில் இரா­ணுவ முகாம் அமைத்­துக்­கொண்­டுள்­ளது.

இது­வி­ட­ய­மாக பல போராட்­டங்­களை மேற்­கொண்டும், முறைப்­பா­டு­களைத் தெரி­வித்தும் இது­வ­ரையில் எந்­த­வித பலனும் கிடைக்­காத நிலையில் அர­சி­யல்­வா­தி­களும் தங்­களை கைவிட்­டுள்­ளனர் என ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்டோர் தெரி­வித்­தனர்.

வீட்­டுத்­தோட்டம் மற்றும் சேனைப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்டு தங்­க­ளுக்­கான ஜீவ­னோ­ப­ாயங்­களை மேற்­கொண்டு வந்த எமக்கு இராணுவத்­தி­னரின் பிர­சன்­னத்­தினால் அதனை மேற்­கொள்ள முடி­யாது எந்­த­வித வரு­மா­னமும் இன்றி உறவி­னர்­களின் வீடு­க­ளிலும், பொது இடங்­க­ளிலும் பல்­லாண்டு கால­மாக வாழ்ந்­து­வரும் அவலம் தொடர்­கின்­றது எனவும் தெரி­விக்­கின்­றனர்.

நல்­லாட்­சியில் எமக்­கான தீர்வு கிடைக்கும் என்ற ஆவ­லுடன் ஆட்­சிக்கு ஆத­ரவு வழங்­கிய நாம் அந்த அரசாங்கத்­தினால் தொடர்ந்தும் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்றோம்.  எமக்­கான காணியை மீட்­டுத்­தா­ருங்கள் அல்­லது அதற்­கான இழப்­பீட்டை வழங்­குங்கள் அல்­லது பொருத்­த­மான மாற்­றுக்­கா­ணியை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளுங்கள் என்ற கோரிக்கை இதன்­போது முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இறு­தியில் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சயெ­லாளர் ரீ.ஜே. அதி­ச­ய­ரா­ஜிடம் தங்­க­ளது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரை காணி உரி­மைகள் அபி­வி­ருத்தி கூட்­டு­றவு சங்­கத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.மிஸ்பாஹ் கையளித்து வைத்தார். இதற்கான தீர்வினை உரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்கு தெரிவித்து நடவடிக்கை முன்னெடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததனையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த காணியுரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.
-Vidivelli