Verified Web

கோதாவுடன் உலமா சபை 2 மணிநேர பேச்சுவார்த்தை

7 days ago ARA.Fareel

பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­பவர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்ளன.

எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ கடந்த திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கொழும்­பி­லுள்ள தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு வருகை தந்தார். உலமா சபைத் தலைவர், செய­லாளர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுடன் சிநே­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டார்.

முஸ்லிம் சமூகம் இன்று பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. சட்­டமும் ஒழுங்கும் நாட்டில் நிலை­நாட்­டப்­பட வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிலர் தவ­றான கருத்­து­களைப் பரப்­பு­கி­றார்கள். இவை தடை செய்­யப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­று­டை­ய­வர்கள். எமது தாயகம் இதுவே என உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் தெரி­வித்தார்.

முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்­புக்கு ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு  காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நி­கழ்வில் கலந்து கொண்டேன் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெளி­வு­ப­டுத்­தினார்.

உலமா சபையின் பிர­தி­நி­திகள் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அமெ­ரிக்க விஜயம் உட்­பட அர­சியல் நிலை­மை­க­ளையும் கேட்டு அறிந்து கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள், வெளி­நாட்டு பிர­மு­கர்கள், துறைசார் நிபு­ணர்கள் என அனைவரையும் எப்போதும் வரவேற்கிறது. கோத்தாபய ராஜபக் ஷ எம்மைச் சந்திக்க விரும்பினார். அழைத்தோம். சந்திப்பு சிநேகபூர்வமாகவே அமைந்தது என ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
-Vidivelli