Verified Web

ரமழானின் கண்ணியம் பேணி நடப்போம்

2018-05-17 02:47:57 Administrator


அல்­லாஹ்வின் உத­வியால் இந்த வரு­டமும் புனித ரமழான் மாதத்தை நாளை முதல் அடைந்து கொள்ளக் காத்திருக்கிறோம். நேற்றைய தினம் நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்படாததால் ஷ பானை 30 ஆக பூர்த்தி செய்து ரமழானை நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்தது.

அந்த வகையில் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தின் கண்­ணி­யத்தைப் பேணு­கின்ற வகை­யிலும் நாட்டில் வாழு­கின்ற ஏனைய சமூ­கங்­க­ளுடன் முரண்­பா­டு­களைத் தோற்­று­வித்துக் கொள்­ளாத வகை­யிலும் கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக ரம­ழானில் தோற்றம் பெறும் பிறை சர்ச்சை, தராவீஹ் தொழுகை சர்ச்சை, இஸ்­லா­மிய பிர­சார குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் என்­ப­ன­வற்றை இய­லு­மா­ன­ளவு தவிர்த்துக் கொள்­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இதே­வேளை ரமழான் காலத்தில் முஸ்­லிம்­களை வழி­ந­டாத்­து­வதில் ஊட­கங்­களின் பங்கு பிர­தா­ன­மா­ன­தாகும். வானொலி மற்றும் தொலைக்­காட்சி சேவை­களில் இக் காலப்­ப­கு­தியில் இஸ்­லா­மிய நிகழ்ச்­சி­க­ளுக்கு அதிக நேரம் ஒதுக்­கப்­ப­டு­கி­றது. அதிலும் குறிப்­பாக  வானொலிகளை முஸ்­லிம்கள் அதி­க­மாக செவி­ம­டுக்­கி­றார்கள்.

இப்தார் மற்றும் சஹர் வேளை­களில் பெரும்­பான்­மை­யானோர் முஸ்லிம் நிகழ்ச்சிகளையே நாடு­கி­றார்கள். எனினும் ஒலி­ப­ரப்­பாகும் நிகழ்ச்­சிகள் மக்­களின் அமல்­களை பாதிக்­காத வகை­யிலும் தனி நபர்­க­ளி­னதோ அர­சி­யல்­வா­தி­க­ளி­னதோ பிர­சார களங்­க­ளாக மாறா­தி­ருப்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக இப்தார் நிகழ்ச்­சி­களை பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து நேரடி ஒலி­ப­ரப்புச் செய்­வதால் அச் சமயம் குறித்த பிர­தே­சத்­திலும் பள்­ளி­வா­ச­லிலும் இடம்­பெற வேண்­டிய அமல்கள் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றன. தொழுகை நேரம் தாம­திக்­கப்­ப­டு­கி­றது. சில இடங்­களில் அர­சி­யல்­வா­தி­களை அழைத்து வந்து அவர்கள் உரை­யாற்­றவும் அவர்­களைப் பற்றி புகழ்­பா­டவும் வழி செய்­யப்­ப­டு­கி­றது. இவை புனித ரம­ழானின் நோக்­கத்­தையே பாழ்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­வி­டு­கின்­றன.இது தொடர்பில் சகல வானொலி சேவைகளும் கவனத்தில் கொள்வது சிறந்ததாகும்.

அதே­போன்று பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் தமது பொறுப்­புக்­களை உணர்ந்து செயற்­பட வேண்டும். ரம­ழானின் பெயரால் பள்­ளி­வாசல் சொத்­துக்­களை வீண் விரயம் செய்­யவோ இப்தார்களுக்காக பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை செலவு செய்து ஆடம்பர ஏற்பாடுகளைச் செய்யவோ கூடாது. இதுவிடயத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும்.

புனித ரமழான் மாதத்தில் நல்லமல்கள் செய்ய அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
-Vidivelli