Verified Web

மியன்மாருக்கு திரும்பிச் செல்ல ஆயிரம் ரோஹிங்யர்களுக்கு மாத்திரம் அனுமதி

2018-05-17 01:13:45 M.I.Abdul Nazar

மியன்மார் நான் பிறந்த இடம், நான் அங்கு செல்­லவே விரும்­பு­கின்றேன் என தனது குடும்­பத்­துடன் பங்­க­ளா­தேஷின் கொக்ஸ் பஸார் மாவட்­டத்தில் அமைந்­துள்ள குடு­பலாங் முகாமில் வசித்­து­வரும் 38 வயது ரோஹிங்ய அக­தி­யான அபுல் ஹாஷெம் தெரி­விக்­கின்றார். எனினும் அவ்­வாறு மியன்­மா­ருக்கு திரும்பிச் செல்­வ­தற்கு முன்­ன­தாக தனக்கு மியன்மார் குடி­யு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் எனவும் கோரு­கின்றார்.

எமக்கு உணவு, உடை, உறை­விடம், கல்வி மற்றும் மருத்­துவம் ஆகிய அடிப்­ப­டை­யான ஐந்து மனித உரி­மை­க­ளுக்கும் உத்­த­ர­வாதம் வழங்­கப்­பட வேண்டும் எனக் கோரு­கின்றோம். அவ்­வா­றில்­லா­விட்டால் நாம் மியன்­மா­ருக்கு திரும்பிச் செல்­வதில் என்ன பிர­யோ­சனம் இருக்­கி­றது எனவும் அபுல் ஹாஷெம் வினா எழுப்­பினார்.

சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் பங்­க­ளா­தேஷும் மியன்­மாரும் ரோஹிங்ய அக­தி­களை திருப்பி அனுப்­பு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டன.

திரும்பிச் செல்­வ­தற்­கான எட்­டா­யிரம் பேர்­கொண்ட பட்­டி­யலில் மூன்று மாதங்­களின் பின்னர் ஆயிரம் பேருக்கு மாத்­திரம் மியன்மார் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. மியன்­மா­ரினால் ஏழு கட்ட பகுப்­பாய்வின் பின்­னரே இந்த ஆயிரம் பேருக்கும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

திருப்பி அனுப்­பு­வ­தற்­கான அடி­மட்டச் செயற்­பா­டு­க­ளுக்­கான ஆயத்­தங்கள் எம்மால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன, இது தொட­ரான முன்­னெ­டுப்­பாகும் என அக­திகள் நிவா­ரணம் மற்றும் திருப்பி அனுப்­பு­வ­தற்­கான ஆணை­யாளர் அபுல் கலாம் தெரி­வித்தார்.

இடைத் தங்கல் முகாம் ஒன்­றிற்­கான பௌதீகக் கட்­ட­மைப்­புக்கள் ஏற்­க­னவே பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. மற்­று­மொரு முகாம் அடுத்த மூன்று மாதங்­களில் பூர்த்தி செய்­யப்­படும். இந்த இடைத் தங்கல் முகாம்­களில் திரும்பிச் செல்லும் இறுதிக் கட்­டத்­தின்­போது சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு அல்­லது சில நாட்­க­ளுக்கு ரோஹிங்ய அக­திகள் தங்க வைக்­கப்­ப­டுவர் எனவும் அபுல் கலாம் தெரி­வித்தார்.

உண்­மையில், திருப்பி அனுப்பும் செயற்­பா­டுகள் மிகவும் மந்த கதி­யி­லேயே நடை­பெற்று வரு­கின்­றன. அதற்குக் காரணம் குறிப்­பாக இந்த விடயம் தொடர்பில் மியன்மார் உரி­ய­வாறு பதி­ல­ளிக்­க­ாமை­யாகும். 

திரும்பிச் செல்வோர் பட்­டி­யலில் உள்ள தெரிவு செய்­யப்­ப­டாத ஏழா­யிரம் பேரின் நிலை என்ன என்­பது தொடர்பில் பங்­க­ளாதேஷ் அதி­கா­ரிகள் நிச்­ச­யமற்­ற­தன்­மையில் இருக்­கின்­றனர். இன்­றைய தினம் (மே 17) இரு நாடு­களும் தமது இணைச் செயற்­குழுக் கூட்­டத்தை டாக்காவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன.

எமது முதன்மையானதும் பிரதானமானதுமான இலக்கு ரோஹிங்ய அகதிகளை துரிதமாகத் திருப்பி அனுப்புவதாகும் என பங்களாதேஷ் வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli