Verified Web

கண்டி வன்முறைகள்: வர்த்தகக் கடன் தொகை 10 இலட்சமாக அதிகரிப்பு

2018-05-17 00:24:54 ARA.Fareel


கடந்த மார்ச் மாதம் கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள வர்த்­த­கங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஆகக்­கூ­டிய கடன் தொகை­யாக ஒரு மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தற்கு நேற்று முன்­தினம் கூடிய அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இந்தக் கடன் 2 வீத சலு­கைக்­கடன் அடிப்­ப­டை­யிலே வழங்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கங்­களை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்கு சில நிபந்­த­னை­களின் கீழ் 2 வீத சலுகை வட்­டியில் ஆகக்­கூ­டிய கடன் தொகை­யாக 5 இலட்சம் ரூபா வழங்­கு­வ­தற்கு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யது.

சேதங்­க­ளுக்­குள்­ளான வியா­பா­ரங்­களை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்கு வழங்­கப்­படத் தீர்­மா­னிக்­கப்­பட்ட 5 இலட்சம் ரூபா போதாக்­கு­றை­யாக இருப்­ப­தா­கவும் அக்­கடன் தொகை 10 இலட்சம் ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அரச தொழில் முயற்­சிகள் மற்றும் கண்டி நகர அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல அமைச்­ச­ர­வையில் முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ரவையில் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டுள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து இக்கடன் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli